யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/11/17

ஆதார் பதிவு இயந்திரங்கள் வங்கிகள் வாங்க அனுமதி

புதுடில்லி: நாடு முழுவதும், 10 சதவீத வங்கிகளில், ஆதார் பதிவு பணிகளுக்கான இயந்திரங்களை வாங்கவும், 'டேட்டா என்ட்ரி' வேலைகளுக்கு, வெளிநபர்களை பணியமர்த்திக் கொள்ளவும், ஆதார் அடையாள அட்டை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

ஆதார் பதிவு, திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை, தனியார் நிறுவனங்கள் மூலம், ஆதார் அடையாள அட்டை ஆணையம் நிறைவேற்றி வந்தது. 

உத்தரவு : தற்போது, 100 கோடி பேருக்கு மேல், ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதால், ஆதார் பதிவு பணிகளை நாடு முழுவதும் உள்ள வங்கிகளில், 10 சதவீத கிளைகளுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆதார் பதிவு, திருத்தம் உள்ளிட்ட பணிகளை செய்வதற்கு வசதியாக, வங்கிகள் தக்க ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணைய தலைமை நிர்வாகி, அஜய் பூஷண் பாண்டே, டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: ஆதார் பதிவு, திருத்தம் போன்ற பணிகளை மேற்கொள்ள, இயந்திரங்களை கொள்முதல் செய்யவும், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களாக, வெளிநபர்களை பணியமர்த்திக் கொள்ளவும், வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. 
பதிவு மையம்
இதனால், வங்கிகளின், 10 சதவீத கிளைகளில், விரைவில், ஆதார் பதிவு மையங்கள் திறக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.
ஆதார் பதிவு மற்றும் திருத்தல் பணிகளை முறையாக மேற்பார்வை இடும்படி, வங்கி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
இதுவரை, நாடு முழுவதும், 3,000 தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி கிளைகளில் மட்டுமே, ஆதார் பதிவு மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. ஆனால், 15,300 மையங்கள் துவக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தவறுதலாக வெளியான

தகவல்கள்
சிலரது பெயர், முகவரி உள்ளிட்ட ஆதார் தகவல்களை, மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த, 200 இணை
யதளங்கள், தவறுதலாக வெளியிட்டுள்ளது
தெரிய வந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆதார் அடையாள அட்டை ஆணையம் அளித்த பதிலில், இந்த தகவல் அம்பலமாகி உள்ளது. சில தனிநபர்களின் தகவல்கள், தவறுதலாக, மத்திய, மாநில அரசுகளின் இணையதளங்களில் வெளியானதாகவும், அவை நீக்கப்பட்டு விட்டதாகவும், ஆதார் ஆணையம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக