யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/2/18

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

                                       

திருச்சி, ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த தொழிற்சாலை
உதவியாளர், தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 38

பணியின் தன்மை: மூத்த தொழிற்சாலை உதவியாளர், தொழில்நுட்பவியலாளர்

வயது வரம்பு: 18 - 35 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு

கட்டணம்: ரூ.600/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைசித் தேதி: 16.03.2018

மேலும் விவரங்களுக்கு
http://aavinmilk.com/hrtry120218.html என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு!

தமிழக அரசு 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்தும்,
6 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எஸ்பி பதவியில் பணியாற்றிய 12 பேர் டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். டாக்டர் கே.ஏ.செந்தில்வேலன், அவினாஷ் குமார், அஸ்ரா கார்க், ஏ.ஜி.பாபு, செந்தில் குமாரி, துரைகுமார், மகேஸ்வரி, அசியம்மாள், ராதிகா, லலிதா லட்சுமி, ஜெயகௌரி மற்றும் காமினி ஆகியோர் டிஐஜிகளாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

கடலோரக் காவல்படை டிஐஜியாக பவானீஸ்வரி, விழுப்புரம் சரக டிஐஜியாக சந்தோஷ் குமார், கோவை சரக டிஐஜியாக கார்த்திகேயன், திண்டுக்கல் சரக டிஐஜியாக ஜோஷி நிர்மல்குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக அன்பு, சமூகநீதி மற்றும் மனித உரிமை டிஐஜியாக பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

ஏர்செல் சேவை முடக்கம் : அதிகாரி விளக்கம்!

தமிழகத்தில் ஏர்செல் சேவை முடங்கியதற்கான காரணம்
குறித்து அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஏர்செல் சேவை திடீரென முடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கேஸ் இணைப்பு, வணிக வியாபாரம் என அனைத்துமே மொபைல் நெட்வொர்க்கை நம்பியே இருப்பதால் இந்தச் சேவை முடக்கம் மக்களை கொதிப்படைய செய்துள்ளது. இதனையடுத்து ஏர்செல் சேவையில் இருந்து மற்ற செல்போன் நிறுவனங்களில் சேவையை பெறுவதில் வாடிக்கையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் அதுவும் சிக்கலாக உள்ளதால் ஏர்செல் நிறுவனங்கள் முன்பு வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் சேவை மூன்று நாட்களில் மீண்டும் சீராகும் என்று அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "செல்போன் சேவை நிறுவனத்தில் கடும் போட்டி இருப்பதால், ஏர்செல் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. எல்லா செல்போன் சேவை நிறுவனங்களைப் போன்று ஏர்செல் நிறுவனமும் டவர்களை மற்றொரு நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு எடுத்து தான் சேவையை வழங்கி வருகிறது. எங்களுக்கும், டவர் கம்பெனிக்கும் இடையே நிலுவை தொகை பாக்கி இருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் உள்ள 90 சதவீதம் டவர்களை அந்த கம்பெனி வலுக்கட்டயமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணைத்துள்ளது. அதன்படி 9 ஆயிரம் டவர்களில் 8 ஆயிரம் டவர்கள் இயங்கவில்லை. இது எங்களுக்கும், இன்னொரு கம்பெனிக்கும் உள்ள நிதி மற்றும் சட்ட பிரச்சினை என்றாலும், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் அளவுக்கு சென்றிருப்பது வருத்தம் அளிக்கிறது.

தற்போது ஏர்செல்லுக்கும், டவர் சேவை வழங்கும் நிறுவனத்துக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 2 அல்லது 3 நாட்களில் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு டவர்கள் எல்லாம் இயங்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. ஒரு வேளை பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், மற்ற சேவை நிறுவனங்களுடன் இணைந்து அந்த நிறுவனங்களின் சேவையை வாடிக்கையாளர்களுக்குப் பெற்று தரும் முயற்சியில் ஏர்செல் நிர்வாகம் தீவிரமாக ஈடுபடும்.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட மாதம் ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் ‘போர்ட் அவுட்’ முறையில் மற்ற செல்போன் சேவை நிறுவனங்களுக்குச் செல்வார்கள். இப்போது 8 ஆயிரம் டவர்கள் செயல் இழந்துள்ள நிலையில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஒரே சமயத்தில் போர்ட் சர்வரைப் பயன்படுத்த முயற்சி செய்துள்ளனர். இதனால் போர்ட் அவுட் சர்வரில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் அது சரியாகி வரும். அவரவர்களுக்கு போர்ட் அவுட் எண் கிடைக்கும். அதன் பின்னர் அவர்கள் விரும்பும் செல்போன் சேவையை பெற்றுக்கொள்ளலாம். போர்ட் அவுட் முறையைப் பயன்படுத்தி கொள்ள ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

அரசாணைகள் வாட்ஸ்அப்பில் அனுப்பக்கூடாது! : சித்தராமையா

வாட்ஸ்அப், பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற சமூக வலைதள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 
அரசாணைகள் அனுப்பப்படுவது சட்டப்படி செல்லாது என்று அறிவித்துள்ளார் கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா.

அரசுத்துறைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது தற்போது பரவலாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசு அதிகாரிகள் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசெஞ்சரில் குழுக்களை ஏற்படுத்திக்கொண்டு, தங்களுக்குள் தகவல் பரிமாறி வருகின்றனர். தங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தகவல்கள் தெரிவிக்க, இதனைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவ்வாறு தகவல்களைப் பரிமாறிக்கொள்வது சட்டப்படி செல்லாது என்று அறிவித்திருக்கிறது கர்நாடகா மாநில அரசு.

கர்நாடகா சட்ட மேலவை உறுப்பினரான கோட்டா சீனிவாச பூஜாரி என்பவர், அரசு அலுவலர்கள் மத்தியில் வாட்ஸ்அப் போன்ற தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, அதன் மூலமாகத் தகவல்கள் பரிமாறிக்கொள்வது பற்றிக் குழப்பம் நிலவி வருவதாகக் குறிப்பிட்டார். அரசு ஆணைகள் மற்றும் சுற்றறிக்கைகளை மெசெஞ்சர்களில் அனுப்புவது சட்டப்பூர்வமானதா என்றும், அரசுத்துறைகளில் குறிப்புகளை பரிமாறவும் அரசாணைகளைத் தெரிவிக்கவும் இவை அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அவர் விளக்கம் தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, “இதுவரை இதுபற்றி எந்த புகாரும் அரசுக்கு வரவில்லை. இதுபோன்ற தகவல்தொடர்பு சாதனங்கள் மூலமாக அரசாணைகளையோ, சுற்றறிக்கைகளையோ அனுப்புவதை அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை. அரசு அதிகாரிகளோ, அதிகாரத்தில் உள்ளவர்களோ தங்களுக்குள் குழுக்களை ஏற்படுத்தி, அதன் மூலமாகப் பேசிக்கொள்வது வெறும் தகவல் தொடர்புக்கானது மட்டுமே ஆகும். அது, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதல்ல. இம்மாதிரி அனுப்பப்படும் தகவல்கள், அதிகாரப்பூர்வமான அரசின் ஆணைகளாக ஏற்றுக்கொள்ளப்படாது” என்று விளக்கமளித்தார்.

”பல அரசு அதிகாரிகள் அரசாணைகளை வாட்ஸ் அப்பிலோ, வேறு ஆப்ஸ் மூலமாக அனுப்பி வருகிறார்கள். அதன்படி செயலாற்றுவதா அல்லது வழக்கம்போல அரசாணை வரும் வரை காத்திருப்பதா என்று புரியாமல், ஊழியர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்த விவகாரத்தில் தெளிவினை உண்டாக்கியுள்ளார் சித்தராமையா” என்று குறிப்பிட்டுள்ளார் இந்த விவாதத்தை எழுப்பிய பூஜாரி.

வேதாரண்யத்தில் வரும் 26ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

வேதாரண்யம் தாலுகாவில் வரும் 26ம் தேதி
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வேதாரண்யம் கோவிலில் வரும் 26ம் தேதி தேரோட்ட விழா நடைபெறுவதையொட்டி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

அரசு வேலை வேண்டுமா??

TNPSC & TET தேர்விற்கு அல்லும், பகலும்  படித்து தேர்வு எழுதிவிட்டு வேலை 
கிடைக்காதா ? என்று ஏங்கும் தமிழ்நாடு போட்டி தேர்வாளர்களே சற்று  உங்கள் பார்வையை RRB(Railway Recruitment Board)பக்கம் திருப்புங்கள்.


   1000 GroupD  பதவிகளுக்கு கூட 10 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துவிட்டு TNPSC மூலமாக ஒரு வேலை வாங்க முடியாதா என ஏங்குகிறோம். மிகவும் சிரமப்பட்டு படிக்கிறோம். நமக்கு நாமே போட்டியை ஏற்படுத்திக்கொள்கிறோம்.

      ஆனால், எந்தவித கடினமும்  இல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு பணிகளையும் வட மாநிலத்தவர்கள் தட்டிச் செல்கிறார்கள்.இதற்கு காரணம் நம்மிடையே RRB, SSC, UPSC, IBPS, SBI, SAIL, IOCL, BHEL, BEL, BEML, INDIAN POSTAL DEPARTMENT, BANKING EXAM, DEFENCE FACTORY, ISRO...... இன்னும் இது போன்ற பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே.

     இவற்றை பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.இத்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கான விளம்பரம் வரும்போது விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இத்தேர்வில் வெற்றிப்பெற பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.   
    இரயில்வே தேர்வுகளில் வெற்றிப்பெறுவது மிகவும் எளிது. அதுவும் TNPSC போட்டி தேர்விற்காக படிப்பவர்களுக்கு இது இது மிக மிக எளிது. வடஇந்திய மாநிலத்தவர்கள் அதிகமானோர் தெற்கு ரயில்வேயில் பணிப்புரிகிறார்கள். இதற்கு காரணம் நாம் நம்முடைய எதிர்ப்பு தெரிவிக்காததே. நம்முடைய எதிர்ப்பு என்பது ரயில்வே தேர்வுகளில் வெற்றிப்பெறுவது மூலமாக காட்ட வேண்டும். அனைத்து இரயில்வே தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். அதில் நாம் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று பணிக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் வட இந்திய இளைஞர்களின் வருகை தானாக குறையும்.

      இரயில்வே துறை தேர்வுகளில்
வெற்றிப்பெற எளிய வழிமுறைகள்:

1.ஏற்கெனவே நடந்து முடிந்த தேர்வுகளின் வினாத்தாள்களின் தொகுப்பை (கடந்த 5-10 ஆண்டுகள்) படித்தாலே நமது வெற்றி 60% உறுதி செய்யப்பட்டு விடும்.

மீதியுள்ள 40%
2.6முதல் 10 வகுப்பு வரையுள்ள கணிதம், அறிவியல், சமூகவியல்  புத்தகங்களை மேலோட்டாமாக படித்தாலே போதுமானது.

3.நடப்பு நிகழ்வுகள்.
    இதில் விளையாட்டு, மத்திய  மாநில துறை அமைச்சர்கள், துறை தலைவர்கள், செயலர்கள், கூட்டமைப்பு, உலக அமைப்புகள், மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் சம்மந்தமான கேள்விகள் இடம்பெறும்.

4.Mental Ability Questions.
5.இரயில்வே துறை சம்பந்தமான கேள்விகள் 1 அல்லது 2.(இது NTPC தேர்வுகளுக்கு மட்டும் பொருந்தும்)

இம்முறையில் படித்தாலே RRB  தேர்வுகளில் எளிதாக வெற்றிப்பெறலாம்.

பதினோறாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தாலும் கவலை வேண்டாம்-அமைச்சர் செங்கோட்டையன்

இன்று சென்னையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் 
கையெழுத்திடும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயம்கொள்ள வேண்டாம் தேர்வில் தோல்வியடைந்தாலும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத வழியுள்ளது என தெரிவித்தார்.

நீட் தேர்வு மனு தள்ளுபடி..!

நீட் தேர்வில் பொதுப்பிரிவினருக்கான 
கட்டுப்பாட்டை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வயது கட்டுப்பாட்டை எதிர்த்து மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்வு எழுதமுடியாது என்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடியானது.

தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தால் மட்டுமே பள்ளியில் சேர்க்கை

தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தால் மட்டுமே 
பள்ளிகளில் குழந்தையைச் சேர்க்க அனுமதிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போலியோ, அம்மை, காசநோய் உள்ளிட்டவற்றைத் தடுக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது எனவும் கூறினார்.

DGE-+1 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு -2018 தேர்வு கூட அனுமதி சீட்டுகள் பதிவிறக்கம் செய்திட தலைமையாசிரியர்களை அறிவுறுத்தக் கோருதல்!!!

22/2/18

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.149 கோடியில் கட்டடங்கள் திறப்பு!!!

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.149.58 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதல்வர்
எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் காணொலிக் காட்சி மூலம் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் திருவாரூர் வலங்கைமான் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி நாகப்பட்டினம், நாமக்கல், திருவள்ளூர், திருவாரூர், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.46.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்லத்துக்கான கூடுதல் கட்டடம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் சென்னை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 58 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.97.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் என மொத்தம் ரூ.149.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!!!

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான 
கோரிக்கைகளுக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்குக் கடந்த 26 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்காததைக் கண்டித்து ஜனவரி 23ஆம் தேதி அன்று சிஐடியு மற்றும் பிஎம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பை வெளியிட்டன. இதனையடுத்து ஜனவரி 22ஆம் தேதியன்று தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. மின்வாரிய உயர் அதிகாரிகள், தொழிலாளர்நல அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்ட இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து சிஐடியு உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் பிப்ரவரி 16ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

இதனால், பெரிதளவில் அரசுப்பணிகள் பாதிக்கப்படவில்லை என்றாலும் கோரிக்கைகள் வலுத்துக்கொண்டே சென்றது. இந்த நிலையில், தற்போது 2.57 காரணி ஊதிய உயர்வுக்கு அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. மேலும், 22ஆம் தேதி புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவித் தொகை கட்!!!

தோட்டக்கலை பதவிக்கான TNPSC தேர்வு ரத்து!!!

பள்ளி மாணவர்களுக்கு தேசிய விருது!!!

வெளியானது குரூப்2 நேர்காணல் தேர்வு இறுதி முடிவு!!!

10,+2.வகுப்பில் கேள்விகள் குறைப்பு!!!

அரசின் பணியிடங்களை தனியாருக்கு விட முடிவு-ஊழியர்கள் கடும் அதிர்ச்சி!!!

அண்ணா பல்கலை"யில் பட்டதாரிகளுக்கு வேலை!!!

Power Gridல் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை!!!