யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/2/18

அரசாணைகள் வாட்ஸ்அப்பில் அனுப்பக்கூடாது! : சித்தராமையா

வாட்ஸ்அப், பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற சமூக வலைதள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 
அரசாணைகள் அனுப்பப்படுவது சட்டப்படி செல்லாது என்று அறிவித்துள்ளார் கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா.

அரசுத்துறைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது தற்போது பரவலாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசு அதிகாரிகள் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசெஞ்சரில் குழுக்களை ஏற்படுத்திக்கொண்டு, தங்களுக்குள் தகவல் பரிமாறி வருகின்றனர். தங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தகவல்கள் தெரிவிக்க, இதனைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவ்வாறு தகவல்களைப் பரிமாறிக்கொள்வது சட்டப்படி செல்லாது என்று அறிவித்திருக்கிறது கர்நாடகா மாநில அரசு.

கர்நாடகா சட்ட மேலவை உறுப்பினரான கோட்டா சீனிவாச பூஜாரி என்பவர், அரசு அலுவலர்கள் மத்தியில் வாட்ஸ்அப் போன்ற தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, அதன் மூலமாகத் தகவல்கள் பரிமாறிக்கொள்வது பற்றிக் குழப்பம் நிலவி வருவதாகக் குறிப்பிட்டார். அரசு ஆணைகள் மற்றும் சுற்றறிக்கைகளை மெசெஞ்சர்களில் அனுப்புவது சட்டப்பூர்வமானதா என்றும், அரசுத்துறைகளில் குறிப்புகளை பரிமாறவும் அரசாணைகளைத் தெரிவிக்கவும் இவை அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அவர் விளக்கம் தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, “இதுவரை இதுபற்றி எந்த புகாரும் அரசுக்கு வரவில்லை. இதுபோன்ற தகவல்தொடர்பு சாதனங்கள் மூலமாக அரசாணைகளையோ, சுற்றறிக்கைகளையோ அனுப்புவதை அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை. அரசு அதிகாரிகளோ, அதிகாரத்தில் உள்ளவர்களோ தங்களுக்குள் குழுக்களை ஏற்படுத்தி, அதன் மூலமாகப் பேசிக்கொள்வது வெறும் தகவல் தொடர்புக்கானது மட்டுமே ஆகும். அது, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதல்ல. இம்மாதிரி அனுப்பப்படும் தகவல்கள், அதிகாரப்பூர்வமான அரசின் ஆணைகளாக ஏற்றுக்கொள்ளப்படாது” என்று விளக்கமளித்தார்.

”பல அரசு அதிகாரிகள் அரசாணைகளை வாட்ஸ் அப்பிலோ, வேறு ஆப்ஸ் மூலமாக அனுப்பி வருகிறார்கள். அதன்படி செயலாற்றுவதா அல்லது வழக்கம்போல அரசாணை வரும் வரை காத்திருப்பதா என்று புரியாமல், ஊழியர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்த விவகாரத்தில் தெளிவினை உண்டாக்கியுள்ளார் சித்தராமையா” என்று குறிப்பிட்டுள்ளார் இந்த விவாதத்தை எழுப்பிய பூஜாரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக