யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/2/18

தேர்வு கட்டணம் உயர்வு : ரயில்வே அமைச்சர் விளக்கம்

புதுடில்லி: விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே, ரயில்வே பணியாளர் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.
ரயில்வே துறையில், 90 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து,ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் அளித்த விளக்கம்: மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதால், ரயில்வே பணியாளர் தேர்வை எழுத விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. விண்ணப்பித்த அனைவரும் தேர்வு எழுதுவதில்லை. இதனால், நேரம் மற்றும் பணம் விரயமாகிறது.இதை தடுக்க, தேர்வு எழுதுவதற்கான கட்டணம், கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் விண்ணப்பதாரர்களுக்கு, இதுவரை கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இனி மேல் இவர்களுக்கு, 250 ரூபாய், முன்னெச்சரிக்கை கட்டணமாக வசூலிக்கப்படும். இதர விண்ணப்பதாரர்களுக்கான கட்டணம், 100லிருந்து, 500 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறையும். மையங்களுக்கு வந்து தேர்வு எழுதியவர்களில், இட ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் வருபவர்களுக்கு, 250 ரூபாயும், இட ஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு, 400 ரூபாயும் திருப்பி அளிக்கப்படும்.
 இதன் மூலம், தேர்வுக்கு விண்ணப்பித்து, தவறாமல் ஆஜராகி அதை எழுதுவோருக்கு, எந்த கட்டண உயர்வும் இருக்காது. அதே போல், தேர்வின் போது, ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் கையெழுத்திடுவது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளன. கம்ப்யூட்டர் வாயிலாக, 15 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு மைய வருகைப் பதிவில், விண்ணப்பதாரர்கள், தேர்வு எழுதும் மொழியிலேயே கையெழுத்திடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக