யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/2/18

பள்ளிகளில் 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் : கட்டண நிர்ணய குழு உத்தரவு'

ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, 'டிஜிட்டல்' முறையில் வழங்க வேண்டும்' என, தனியார் பள்ளிகளுக்கு, கல்வி கட்டண நிர்ணயக் குழு, உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழகம் முழுவதும்,மெட்ரிக் இயக்ககம், பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கப் பள்ளி இயக்ககத்தின் அங்கீகாரம் பெற்று, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பள்ளிகள் இயங்குகின்றன.கட்டாய கல்விஉரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சுயநிதி பள்ளிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, கல்வி கட்டண நிர்ணயக் குழு, 2009ல் அமைக்கப்பட்டது.இந்த குழுவின், தற்போதைய தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, மாசிலாமணி பணியாற்றி வருகிறார்.அவரது தலைமையிலான குழுவே, தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கிறது.

நடப்பு கல்வி ஆண்டு மற்றும் அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை, நிர்ணயிக்கும் பணிகள், தற்போது நடக்கின்றன.கட்டண நிர்ணயத்துக்காக வரும் பள்ளிகள், அங்கீகார சான்றிதழ், உட்கட்டமைப்பு வசதிகள், அரசு துறைகளின் பல்வேறு வகை சான்றிதழ்கள் என, பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்; அவற்றை எல்லாம் பரிசீலித்து, கல்வி கட்டணத்தை, குழு நிர்ணயிக்கும்.இந்நிலையில், இந்தாண்டு முதல், அனைத்து தனியார் பள்ளிகளும், தங்களது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, ரொக்கமாக வழங்காமல், இ.சி.எஸ்., எனப்படும், 'எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம்' முறையில், வங்கிகள்வாயிலாக வழங்க வேண்டும்.

கல்வி கட்டண அனுமதி பெறும் பள்ளிகள், இ.சி.எஸ்., முறைக்கு மாற வேண்டியது கட்டாயம்என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.கட்டண நிர்ணயம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் போது, குறைந்தபட்சம், கடைசி மூன்று மாதங்கள், இ.சி.எஸ்., முறையில் ஊதியம் கொடுத்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கல்வி கட்டண நிர்ணயக் குழுஉத்தரவிட்டு உள்ளது.இ.சி.எஸ்.,க்கு மாறாத பள்ளிகளுக்கு, கட்டண நிர்ணய அனுமதி  வழங்கப்படாது என்றும், கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக