யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/4/18

நடப்பு நிதி ஆண்டில் 6.8கோடி பேர் வருமானவரி அறிக்கை தாக்கல்!!!

                               

ஏப்ரல் 5-ம் தமிழகம் முழுவதும் பஸ் ஸ்டிரைக்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சென்னை: ஏப்ரல் 5-ம் தேதி திமுக நடத்தும் போராட்டத்துக்கு 10 போக்குவரத்து
தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் ஏப். 5-ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. சென்னையில் நடைபெற்ற 10 தொழிற்சங்கங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பின் அறிவிக்கப்பட்டுள்ளது*

டான்செட் நுழைவு தேர்வு அறிவிப்பு!!

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் டான்செட் நுழைவுத் தேர்வு தேதி நேற்று (ஏப்ரல் 2) அறிவிக்கப்பட்டது.

தமிழக கல்லூரிகளில் எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான், எம்பிஏ, எம்சிஏ, போன்ற முதுநிலை படிப்புகளை அரசு ஒதுக்கீட்டில் படிக்க அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும், ’டான்செட்’ நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டும். டான்செட் நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, பல்கலைக்கழக துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் மற்றும் சில நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவை முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.




தேர்வு மையங்கள்

வரும் கல்வி ஆண்டில், முதுநிலை பட்டப் படிப்புக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் பட்டதாரிகளுக்கு, மே 19மற்றும் 20ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. ஏப்ரல் 23ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப முறை, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களைப் www.annauniv.edu/tancet2018 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலா

மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை - கரூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

பொறியியல் பட்டப்படிப்புக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழகத்தில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 3 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் டிப்ளமோ முடித்து பணியாற்றி வருபவர்கள் பகுதி நேரமாக பொறியியல் படிக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கூறியுள்ளதாவது

“டிப்ளமோ முடித்துவிட்டு, தற்போது அரசு மற்றும் தனியார் பணியில் உள்ளவர்கள் பகுதி நேர பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில்  ஏப்ரல் 5ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பகுதி நேர பொறியியல் படிப்புக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த பின்னர் அதனை உரிய நகல் எடுத்து உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக் கட்டணத்துடன் கோவை தொழில்நுட்ப கல்லூரிக்கு மே 12ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணமாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் 300ரூபாய் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் 600ரூபாய் செலுத்த வேண்டும். தரவரிசை பட்டியல் மே 30ஆம் தேதி வெளியிடப்படும். ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து முதலிடம் பிடிக்கும் சென்னை ஐஐடி!

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை இன்று (ஏப்ரல் 3) வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மும்பை ஐஐடி இரண்டாம் இடமும், டெல்லி ஐஐடி மூன்றாம் இடமும் பிடித்துள்ளன.

மேலாண்மை நிறுவனங்களைப் பொறுத்தவரை அகமதாபாத் ஐஐஎம் முதலிடமும், பெங்களூர் ஐஐஎம் இரண்டாமிடமும், கொல்கத்தா ஐஐஎம் மூன்றாமிடமும் பிடித்துள்ளன. பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் முதலிடமும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை இரண்டாமிடமும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மூன்றாமிடமும் பிடித்துள்ளன. சென்னை அண்ணா பல்கலைகழகம் எட்டாவது இடத்தையும், மும்பை கெமிக்கல் தொழில்நுப்ட நிறுவனம் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக் கல்லூரி மற்றும் பெங்களூர் தேசிய சட்டப் பள்ளி ஆகியவை அந்தந்த பிரிவுகளில் முதலிடம் பிடித்துள்ளன.

இந்திய கல்வி நிறுவனங்களுக்கான 2017ஆம் ஆண்டிற்கான தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்தது.

தமிழக அரசசூழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன்...

நடத்தை விதிகள் என்றால் என்ன?
அரசுப் பணியாளர்களுக்காக அரசு உருவாக்கியுள்ள
நடைமுறைகள் மற்றும் விதிகளை அவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சொத்து வாங்குதல், விற்றல், நிதி ஆதாரங்கள் உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசுக்கு முறைப்படி தெரிவித்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை பணிபுரிபவர்கள் கடைபிடிப்பதற்காக தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1976 உருவாக்கப்பட்டது.

இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதி 2(5) &  (6) ன் கீழ்க்கண்டவர்கள் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவார்கள்.

தந்தை / வளர்ப்பு தந்தை

தாய் / வளர்ப்பு தாய்

கணவன்

மனைவி

மகன் / வளர்ப்பு மகன்

மகள் / வளர்ப்பு மகள்

சகோதரன்

சகோதரி

மனைவியின் தாய் மற்றும் தந்தை

கணவரின் தாய் மற்றும் தந்தை

சகோதரனின் மனைவி

சகோதரியின் கணவர்

மகளின் கணவர்

மகனின் மனைவி

இந்த உறவுமுறைகள் அனைத்தும் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்படுவர்.

உயர்கல்வி பெறுவது தொடர்பான அரசாணை :

தொலைதூரக் கல்வி, மாலைநேரக் கல்லூரி மற்றும் தனியாக படிக்க அரசு ஊழியர், தன் துறை தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி விண்ணப்பம் கிடைத்த 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அந்த விவரங்கள் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படவில்லை என்றால் கல்வி பயில்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசு ஊழியர் கருதிக் கொள்ளலாம்.

அரசாணை எண்  Ms. No - 200, P & A. R, dt - 19.401996 ன்படி அரசுப் பணியை தவிர எந்த பணியையும் அரசு ஊழியர் ஏற்கக்கூடாது.

அரசு ஊழியர் எவரும் பகுதி நேர வேலை எதையும் செய்யக்கூடாது. ( G. O. Ms - 893,P &  A. R, dt - 22.9.1983 மற்றும்  Rule 8(1)(aa)).ஆனால் Provision 6 under Rule 8(1)(a) ல் கண்டுள்ள விலக்களிப்பின்படி அரசு ஊழியர் ஒருவர் கல்வி நிலையங்களில் விரிவுரையாற்றி அதற்கென மதிப்பூதியம் பெறலாம்.

தனியாக வகுப்பு நடத்துதல் :

எந்த ஆசிரியரும் தனிவகுப்பு(Tution) நடத்தக்கூடாது. Tution  நடத்தும் எண்ணத்துடன் மாணவரிடமோ, அவருடைய பெற்றோரிடமோ அல்லது பாதுகாவலரிடமோ எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. இருப்பினும் பணம் எதுவும் பெறாமல் மாணவர்களுக்கு Tution எடுக்க தடை ஏதும் இல்லை. (Rule 6(17)).

விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்பு :

அலுவலக வேலைக்கு பாதிப்பு ஏற்படாமல் ஒருவர் விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்கலாம். ஆனால் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அலுவலகத் தலைவர் அறிவுறுத்தினால் அதுபோன்ற
வேலைகளில் ஈடுபடக்கூடாது. (Provision 1 under rule 8(1)(a)).

அசையாச் சொத்து தொடர்பான விதிகள் :

அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் சொந்த வருவாயிலிருந்து ஒரு சொத்தை கையகப்படுத்துவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ எவருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆனால் அரசு ஊழியரே குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஒரு சொத்தை கிரையமாக பெற்றால் அதற்கு துறைத் தலைவரின் அனுமதியை பெற வேண்டும். ( G. O. Ms - 3158, Public (service - A) Dept, dt - 27.9.1974).

அரசு வேலையில் இருக்கின்ற கணவன், மனைவி இரு சேர்ந்து ஒரு சொத்தை கிரையம் வாங்கினால் அதன் விவரத்தை துறைத் தலைவருக்கு இருவரும் தனித்தனியாக தெரிவிக்க வேண்டும். ( Govt. Lr. No. 29546/80-4 P & A. R, dt - 22.10.1980).

மூதாதையர் சொத்து ஒன்று வாரிசுரிமையின் படி இறங்குரிமையின் மூலம் கிடைக்கும் தருவாயில் அந்த நிகழ்வை துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டாம். சொத்து அறிக்கையில் மட்டும் காட்ட வேண்டும். (Rule 7(3).

அரசு ஊழியர் பணிபுரியும் மாவட்டத்தில் எந்த சொத்தையும் கையகப்படுத்தக்கூடாது. முன்னர் பணிபுரிந்த மாவட்டமாக இருந்தால் இடம் மாறுதல் பெற்று 2 ஆண்டுகள் கடந்த பின்னர் தான் சொத்து ஒன்றினை கையகப்படுத்த வேண்டும் . ( Rule 7(14).

இருப்பினும் வீடு அல்லது வீட்டுமனை ஒன்றினை பணிபுரியும் அல்லது பணிபுரிந்த மாவட்டத்தில் வாங்கவே அல்லது விற்கவோ தடையில்லை. (Provision under rule 7(14)(a).

வருவாய்த்துறை அல்லது நிதித்துறையில் பணிபுரிபவர்கள் அத்துறையில் நடத்தப்படும் அசையும் அல்லது அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையகப்படுத்தக்கூடாது. (Rule 7(16).

Record Sheet அல்லது Personal File - ஐ பராமரித்து வரும் அதிகாரி ஊழியர்களின் சொத்து விவரங்களையும் ஒரு பதிவேட்டில் பதிவு செய்து ( Rule 7(9).

கீழே குறிப்பிட்டுள்ள தொகைக்கும் அதிகமாக சொத்து வாங்கினாலோ அல்லது விற்பனை செய்தாலோ துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த Rule 7(2) as amended in G. O. Ms. No - 39, P & A. R. dt - 9.3.2010.

A Group Employees may Purchase upto Rs. 80,000/-

B Group Employees may Purchase upto Rs. 60,000/-

C Group Employees may Purchase upto Rs. 40,000/-

D Group Employees may Purchase upto Rs. 20,000/-

அரசு ஊழியர்கள் ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒருமுறை, 5 ஆண்டுகள் முடிவில் சொத்து அறிக்கை ஒன்றை துறைத் தலைவரிடம் தாக்கல் செய்ய வேண்டும். ( Rule 7(3).

அரசு ஊழியரின் அரசியல் செல்வாக்கு :

அரசு ஊழியர்கள் பொதுவாக அரசியல் செல்வாக்கு கொண்டு வருதல் அல்லது அமைச்சர்களிடம் முறையிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர் எவரேனும் அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அவரை அலுவலகத் தலைவர் கூப்பிட்டு தவறு என்று அறிவுறுத்த வேண்டும். அந்த அறிவுரையை பொருட்படுத்தாமல் இரண்டாவது முறையாக ஒரு அரசு ஊழியர் திரும்பவும் அரசியல் செல்வாக்கை கொண்டு வந்தால் அவரை துறைத் தலைவர் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதற்கு பின்னரும் அரசு ஊழியர் தொடர அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அந்த அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். (Govt. Letter No  9637/A/95-1,P & A. R. (A) Dept, dt - 24.4.1995).

அலுவலக பிரச்சினை தொடர்பாக அரசு ஊழியர் ஒருவர் அமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு செய்யலாம். பின்னர் அந்த முறையீடு விவரத்தை அலுவலகத் தலைவர் வழியாக துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். (G. O. Ms. No - 9, P & A. R (A) Dept, dt - 2.10.1985).

3/4/18

4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை உயர்வு

வரி செலுத்தலையா? வருகிறது, 'கிடுக்கிப்பிடி' வருமான வரி செலுத்தாதவர்களை கண்டறிய, பல்வேறு உத்திகள் கையாளப்படஉள்ளதாக, வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2015 - 16; 2016 - 17ம் ஆண்டுகளுக்கான, வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச், 31ல் முடிந்தது. இந்த அவகாசத்தில், முன்பை விட, இரண்டு மடங்கு அதிகமான நபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.அத்துடன், 2017 - 18ம் ஆண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நேற்று முதல் துவங்கியுள்ளது. ஜூலை, 31 வரை அபராதம் இன்றி, வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.

2019 மார்ச் வரை, அபராதத்துடன் வரி செலுத்த முடியும். இந்த ஆண்டில் வரி செலுத்தாமல், அரசை ஏமாற்றுவோரை கண்டறிய, பல உத்திகளை அதிகாரிகள் செயல்படுத்த உள்ளனர்.வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: வருவாயை காண்பிக்காமல், பல்வேறு வசதிகளை அனுபவித்து வரும் நபர்களை கண்டறிந்து, அவர்களை வருமான வரி வரம்புக்குள் கொண்டு வர, இந்த ஆண்டு, பல புதிய திட்டங்களை செயல்படுத்த, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், பல ஆயிரம் ரூபாய் மின்சார கட்டணம் செலுத்துபவர்கள் பட்டியலை, சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்தபெற்று, அதற்கான வருவாய் ஆதாரம் குறித்து விளக்கம் கோரவுள்ளனர்.

இதுதவிர, வேறு சில திட்டங்களை செயல்படுத்தவும், அதன் வாயிலாக, வரி கட்டாதவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது,கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் மீண்டும் B.Ed படிப்பு:

ஆசிரியர்களின் பற்றாக்குறையுடன் இயங்கும் ஐஐடிகள்!!!

நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் 34 சதவிகித ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 23 ஐஐடி தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான கல்லூரிகளில் தேவையான ஆசிரியர்கள் இல்லாமல் இயங்குகின்றன. ஐஐடிகளில் 34 சதவிகித ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.



கோவா ஐஐடியில் 62 சதவிகிதமும், கர்நாடக மாநிலம் தாராவாட் ஐஐடியில் 47 சதவிகிதமும், கோரக்பூர் ஐஐடியில் 46 சதவிகிதமும், கான்பூர் ஐஐடியில் 37 சதவிகிதமும், டெல்லி மற்றும் மும்பை ஐஐடியில் 27 சதவிகிதமும், சத்தீஸ்கரில் உள்ள ஐஐடியில் 58 சதவிகிதமும், சென்னை ஐஐடியில் 28 சதவிகிதமும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.

இமாசலப் பிரதேசத்தில் உள்ள ஐஐடி மண்டியில் தேவைக்கு அதிகமாக 4 ஆசிரியர்கள் இருக்கின்றனர். அதுபோன்று, நாட்டிலுள்ள ஐஐடிகளில் மிக மோசமான இடத்தில் சத்தீஸ்கர் ஐஐடி இடம்பிடித்துள்ளது. புதிதாகத் தொடங்கப்பட்ட பாலக்காடு, திருப்பதி, கோவா ஐஐடிகளிலும் பேராசிரியர் பற்றாக்குறை உள்ளது

“ஐஐடி மற்றும் என்ஐடி தொழில்நுட்பக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதேவேளையில், ஆசிரியர்களின் தேவையும் அதிகரிக்கிறது. இதற்கு தகுதிவாய்ந்த மற்றும் கிடைக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையில் உயர்வு இல்லை. 50 சதவிகித பட்டதாரிகள் வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர், எஞ்சியுள்ள பெரும்பாலானவர்கள் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். சம்பள உயர்வு மற்றும் மேற்படிப்புக்கான ஊக்குவித்தல் போன்ற காரணங்களிலும் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது” எனக் கல்வி நிபுணர் சீதா ராமு கூறியுள்ளார்.

மே 8ல் கோட்டை முற்றுகை : ஜாக்டோ ஜியோ முடிவு :

கோரிக்கைகளை வலியுறுத்தி மே 8 ல் கோட்டையை முற்றுகையிட ஜாக்டோ -ஜியோ முடிவு செய்துள்ளதாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: சென்னையில் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பு உயர்மட்ட குழுக்கூட்டம் நடந்தது. அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தைஅமல்படுத்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மே 8 ல் கோட்டையில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இது குறித்து ஏப்ரல் 23 முதல் 27 ம்தேதி வரை 11 மண்டலங்களில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களை சந்திக்க உள்ளோம். ஏப்ரல் 14 ல் மாவட்ட தலைநகரங்களில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய அமைக்கப்பட்ட ஸ்ரீதர் தலைமையிலான வல்லுனர்குழு காலநீட்டிப்பு செய்வதை கண்டிக்கிறோம், என்றார்.

பெற்றோரின் பொறுப்புதான் என்ன?

பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை. தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்?
அரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்? அதுதான் கேள்விக்குறி. இத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே. இது எவ்வளவு பெரிய அவலம்?

அதிகாலையில் தன் பிள்ளையை எழுப்பவும், இரவில் தன் பிள்ளையை விசாரிக்கவும் ஆசிரியர் இருக்கிறார் என்றால் பெற்றோர் எதற்கு? ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும்? சனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா? ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா? அவர்களை யார் கவனிப்பார்கள்?

ஒரு பள்ளியில் சமீபத்தில் நடந்த விஷயம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாட்டாமை வாத்தியார் இருப்பார். அவர்தான் எல்லாமே. அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போய், ஐயா! வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள்! என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள். சனி, ஞாயிறு பள்ளி வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம்? என்றார்களாம். நாட்டாமை முகத்தில் ஈ ஆடவி்ல்லை. உண்மை அதுதான்.

தேர்ச்சிக்கான 35 மதிப்பெண்களைப் பெற ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா பகுதிகள் போதுமானது. இதை வாசிக்க முடியாத மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கம்போல் பள்ளியில் பிள்ளைகளுக்கு வரும் உதவித்தொகைக்குக் கையெழுத்து இடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

ஒரு மாணவனின் அலட்சியமான உழைப்பும், பெற்றோரின் பொறுப்பற்ற குணமும்தான் ஆசிரியர்களையும் அரசையும் பாடாய்ப்படுத்துகிறது. அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு திண்டாடுபவர்கள் கல்வி அதிகாரிகள். பாவம் அவர்கள். இதற்கு எல்லாம் யார் காரணம்? கற்க விரும்பாத மாணவனும், அவர்களின் அலட்சிய பெற்றோரும்தான்.

ஒன்றை மட்டும் நினைவுகொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களும் உடல்நலத்தில் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான நோய்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்டு. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு நோயாவது கட்டாயமாக இருக்கிறது. அதைக் கடந்து, மறந்துதான் பாடம் கற்பிக்க வருகிறார்கள்.

பெற்றோர்களுக்கு சில கேள்விகள்:

* அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படும்போது பெற்றோர்கள் ஏன் சும்மாக இருக்கிறார்கள்?

* மாணவர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு வரும் மன அழுத்தத்திற்கும், இரத்தக் கொதிப்பிற்கும் அவர்களின் பெற்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

* கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் தன் பிள்ளைகளைக் குறித்து அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்க வருவதில்லை?

* பள்ளியில் அறிவை வளர்த்துக்கொள்ள வராமல், கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் ஒழுங்குபடுத்துவதில்லை?

* பள்ளியில் தீயப் பழக்கத்துடன் வலம் வரும் கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் என்ன அறிவுரை கூறி வளர்க்கிறார்கள்?

* தினமும் பிள்ளையை அருகில் அமரவைத்து. அன்றன்று நடந்த பாடத்தில் உள்ள வினாக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? ஒப்பிக்க வைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

* பள்ளியில் பாடத்தைக் கற்பிப்பதும் புரியவைப்பதும் பயிற்சி தருவதும் ஆசிரியர் வேலை. வீட்டில் அவனை இரவில் படிக்கவைப்பதும். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு எழப்பிவிட்டு வாசிக்கவைப்பதும் பெற்றோரின் வேலை. அதை ஆசிரியர்கள் ஏன் செய்யவேண்டும்? உங்களின் பொறுப்பற்ற செயல்தான் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற சுமையாகிறது… பொறுப்பாகிறது.

அரசு தன் கடமையைச் சரியாகச் செய்கிறது. பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கோடிக்கணக்காகச் செலவழிக்கிறது. ஒரு பள்ளி தன் பணியைச் சரியாகச் செய்கிறது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் கற்பிக்கிறார்கள்... பயிற்சி தருகிறார்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அரசுக்கும் கல்வித்துறைக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்?

நன்றி
தி ஹிந்து

சிறுநீரக கற்களை கரைக்க உதவும் கரும்பு சாறு...!

ஒரு டம்ளர் கரும்புச் சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலக்கவும். உணவுக்கு பின்னர் இதை எடுத்துக் கொண்டால் ரத்தம் சுத்தமாகும். செரிமானத்தை தூண்டும்.
உடலை இளைக்க செய்வதில் கரும்பு முக்கியப்பங்கு வகிக்கிறது. கரும்பு சாறில் உள்ள இரசாயனங்கள் உடலில் சேர்ந்த தேவையற்ற கொழுப்பை கரையச்  செய்கிறது. உடல் எடை குறைவதால் ஏற்படும் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. பயன்படுத்திய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரியும். உடல் எடையை குறைக்க உதவும் கரும்பு எந்தவிதமான பாதக பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
உடலில் சிறுநீரகக்குழாய், பிறப்பு உறுப்பு செரிமான மண்டலக்குழாய் போன்ற பல இடங்களில் தொற்று நோய்களால் எரிச்சல், அரிப்பு போன்றவை உண்டாகும்.  இதனை சரிசெய்ய ஒரு தம்ளர் கரும்பு சாறு போதும். சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி  செய்வதற்கு உதவுகிறது.

வாய் துர்நாற்றம் இருப்பது சமூகத்தில் நம்மை தாழ்த்தி விடுகிறது. உங்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும் பச்சத்தில், நீங்கள் கரும்பு சாற்றை ஒரு தீர்வு  தரும் பானமாக கருதி கொள்ள வேண்டும்.

சிறுநீரக கற்களை கரைப்பது கரும்பின் பணி. பொதுவாக உடலில் ஏற்படும் வறட்சியால் இந்த கற்கள் உருவாகும். அதை தடுப்பதற்காகத்தான் அடிக்கடி தண்ணீர்  குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஏனெனில் கற்கள் ஏற்படாமல் கழிவுகளை வெளியேற்றி விடும். போதிய தண்ணீர் மட்டுமின்றி  கரும்பு சாறும் குடித்தால் இரட்டை பலன் கிடைக்கும்.

கரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்களை கொண்டிருக்கிறது, இது உங்கள் பற்களின் பற்சிப்பியை உருவாக்க உதவுகிறது. மேலும் இது  பற்சிதைவை தடுத்து உங்கள் பற்கள் வலுவடைய உதவுகிறது.

கரும்பில் உயிர்ச்சத்து (வைட்டமின்) மற்றும் கனிமச்சத்துக்களுடன் பாஸ்பரஸ், இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவையும் அதிகம் உள்ளது. இதனை உண்பதால் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். இருமல், சளி, தொண்டை வலி இருப்பவர்கள் கரும்பு சாப்பிட மாட்டார்கள். அது தவறானது. இந்த பிரச்சனைகளுக்கு கரும்பே சிறந்தது.

கரும்பு இனிப்பாக இருப்பதால் நீரழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இனிப்பானது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக  வைக்கும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி அளவோடு சாப்பிடலாம்.

EMIS NEWS: அனைத்துவகை பள்ளிகளும் நாளைக்குள் (03/04/2018) மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்தல் குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

TET - தேர்ச்சி பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் விரைவாக நிரப்ப நடவடிக்கை - தேர்வில் தேறியோர் கோரிக்கை :


உங்கள் மொபைலில் சார்ச்ஜ் இல்லையென்றாலும் Google உங்களை கண்காணிக்க முடியும்

                            

உங்களுக்கு ஒரு சிறிய ஆச்சரியம் காத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் மொபைலை அனைத்து விட்டு GPS மற்றும் ரேடார் இருந்து தப்பித்து விடலாம் என்று நினைத்தான் அது , தவறான யுகம்! இருப்பிடத் தகவல் சேவைகள் செயலற்றதாக மாற்றப்பட்டாலும், Android ஸ்மார்ட்போன்களிலிருந்து இருப்பிட தகவலை Google கண்காணிக்க முடியும் என்று சமீபத்திய அறிக்கை கண்டறிந்துள்ளது.

ஒரு ஸ்மார்ட்போனின் மதர்போர்டு மேல் ஒரு மினி ஐஆர்சி பேட்டரி அமர்ந்திருப்பதை ஒரு அறிக்கை வெளிப்படுத்துகிறது. இந்த பேட்டரி உங்கள் கண்காணிப்பு இருப்பிடத்தை செலுத்துவதற்கான பொறுப்பாகும். இருப்பினும், தொலைபேசி ஆஃப் செய்யப்படும் போது தரவு(Data) கூகிள்க்கு இடமாற்றம் செய்யப்படும், இணைப்பு இல்லை என்று கருதி கொள்ளலாம். எனவே வெளிப்படையாக, உங்கள் தகவல் அடுக்கி வைக்கப்பட்டு, மீண்டும் நீங்கள் இணையத்துடன் இணைக்கப்படும் போது, உங்கள் முழு நாளையும் கூகிள்க்கு அனுப்பப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற அறிக்கை குவார்ட்ஸ் பகிரப்பட்டு இருந்தன அதில் குறி இருபதாவது என்னதான் அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் இருப்பிடத் தகவல் சேகரிக்கும் சேவைகள் அணைக்கப்பட்டு irundhalum “பயனர் தகவல்கலை சேகரிக்க படுகின்றன நீங்க சிம் கார்டை போடவில்லை என்றாலும் உங்களின் இருப்பிட தகவல்களை சேகரித்துக் கொண்டுருக்கின்றன.

இந்த மாதிரியான தனிமனித இருப்பிட தரவுகளை கூகிள் நிறுவனம் 2017 ஆரம்பத்தில் இருந்து சேகரிக்க படுகின்றன. இது பயனர்களின் சிறந்த அனுபவத்திற்காக இந்த தரவுகளை சேகரிக்க படுகின்றன என்று கூகிள் நீட்டுவனிதின் தாய் நிறுவனமான அல்பாபெட் கூறுகிறது.


Facebook-ஐ தொடர்ந்து Whatsapp தகவல்களும் திருடப்படும் அபாயம்

ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து வாட்சாப் தகவல்களும். சாட்டிங் விவரங்களும்
திருடப்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Chatwatch எனப்படும் செயலி மூலம், தங்களின் நண்பர்களின் வாட்சப் உரையாடல்கள் உட்பட, Offline, Online Status ஆகியவற்றையும், அவர்கள் எப்போது தூங்கச் செல்கிறார், எப்போது விழிக்கிறார் உட்பட அனைத்து விஷயங்களையும் கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

Apple App Store -ல் இருந்து இந்தச் செயலி நீக்கப்பட்ட நிலையில், android play store ல் தற்போது கிடைக்கிறது. இந்த Chatwatch பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர Whatsapp ஒரு தீர்வை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடலில் விழுந்த விண்வெளி ஆய்வு நிலையம் ???



டியாங்காங்-1 எனப்படும் சீன விண்வெளி ஆய்வு நிலையம், நொறுங்கி இன்று பசிபிக் கடலில் விழுந்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடம் ‘டியாங்காங்-1’ என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா டியாங்காங்-1 (Tiangong-1) என்ற விண்வெளி ஆய்வு நிலையத்தை 2011ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பியது. அன்று முதல் 2016ஆம் ஆண்டு வரை அந்த விண்வெளி நிலையத்தைச் சீனா பராமரித்துவந்தது. ஆனால் அதன் பிறகு விண்வெளி நிலையம் தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகச் சீனா 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த டியாங்காங்-1 ஆய்வு நிலையம் மார்ச் 30ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் பூமியை நோக்கி நொறுங்கி விழும் என ஏற்கனவே விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். மேலும் வளிமண்டல உராய்வின் காரணமாக இந்த ஆய்வு நிலையம் எரிந்து சிதைந்துவிடும் என்றும், சிதைவுகள் மட்டுமே பூமியின் மீது விழ வாய்ப்பிருப்பதாகவும் விஞ்ஞானிகள் அப்போது தெரிவித்திருந்தனர்.

அதன்படி, இன்று அதிகாலை இந்திய நேரப்படி 4 மணியளவில் பூமியின் வளிமண்டலத்துக்குள் டியாங்காங்-1 விண்வெளி ஆய்வு நிலையம் வெடித்துச் சிதறியதாகவும், அதன் சிதைவுகள் தென் பசிபிக் கடலில் விழுந்துவிட்டதாகவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளி மையத்தின் பெரும்பாலான பாகங்கள் அழிந்துவிட்டதாலும், கடலில் விண்வெளி ஆய்வுக்கூட பாகங்கள் விழுந்திருப்பதாலும் பூமிக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

TNTET 2018 - தேர்வுக்கு திட்டமிடுவது எப்படி?