யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/5/18

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கை

பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் தேவையில்லை!

பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் தேவையில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சமூகத்தில் ஒரு குழந்தையை அதைப் பெற்ற தாயின் மூலம் அடையாளம் காண்பதில்லை. தந்தையின் பெயரில்தான் எந்தக் குழந்தையும் அடையாளப்படுத்தப்படுகிறது. தாயின் மகத்தான பங்களிப்புக்கு எந்த அங்கீகாரமோ அல்லது மரியாதையோ அளிக்கப்படுவதில்லை. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தந்தையின் பெயரில் ஒரு நபரை அல்லது குடிமகனை அடையாளம் காணும் ஆணாதிக்க முறைக்குப் பலத்த அடியை அளித்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்த மதுமிதா ரமேஷ் என்பவருக்கும் சரண் ராஜ் என்பவருக்கும் திருமணமானது. அவர்கள் சில காலம் கழித்து கருத்து வேறுபாடுகளின் காரணமாக பரஸ்பர சம்மதத்தின்பேரில், விவகாரத்து பெற்றுப் பிரிந்து விட்டனர். இதைத் தொடர்ந்து மதுமிதா ‘இன்ட்ராயுட்டீரைன் பெஃர்ட்டில்லி’ என்ற செயற்கை கருத்தரிப்பு முறையில் விந்து கொடையின் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார்.

2017 ஏப்ரலில் பிறந்த குழந்தைக்கு தவிசி பெராரா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தக் குழந்தைக்கு திருச்சி மாநகராட்சி ஆணையர் அளித்த பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயராக மனிஷ் மதன்பால் என்பவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. மதன்பால் என்பவர் மதுமிதாவின் சிகிச்சைக்கு உதவினார் எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து மதன்பாலின் பெயரை நீக்க வேண்டும் என திருச்சி மாநகராட்சியி்ல் மதுமிதா மனு அளித்திருந்தார். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் தந்தையின் பெயரில் திருத்தம்தான் செய்யலாம். ஆனால், நீக்க முடியாது என்று கூறி மறுத்து விட்டனர்.

இதைத் தொடர்ந்து மதுமிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த முதல் வழக்கில் தோல்வியடைந்தார். பின்னர் இரண்டாவது வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள முதல் வழக்கில் வருவாய்த் துறை அதிகாரிகள் பிறப்புச் சான்றிதழில் உள்ள தவற்றைச் சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், வருவாய்த் துறை பிறப்பு இறப்புகளைப் பதிவு செய்யும் பதிவாளர்தான் இது தொடர்பாக முடிவு எடுக்க அதிகாரம் உள்ளவர் என்று நீதிமன்றத்துக்குப் பதில் கூறி விட்டது. பின்னர் மனம் தளராமல் இரண்டாம் முறையாக வழக்கு தொடர்ந்தார் மதுமிதா.

இதற்கிடையில் மதுமிதாவின் முன்னாள் கணவர் சரண் ராஜும் மதன்பாலும் தாங்கள் குழந்தைக்கு எந்தவிதத்திலும் தொடர்புடையவர்கள் அல்ல என்று கூறி தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

வழக்கின் விசாரணை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பாக நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மதுமிதா இன்ட்ராயுட்டீரைன் பெஃர்ட்டில்லி என்ற செயற்கை கருத்தரிப்பு முறையில் விந்து கொடை மூலம் குழந்தை பெற்றுள்ளார். எனவே, இந்தக் குழந்தைக்கும் சரண் ராஜுக்கும் மதன்பாலுக்கும் சம்பந்தமில்லை. எனவே, மதுமிதாவே இந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

திருச்சி மாநகராட்சி பிறப்புச் சான்றிதழில் தந்தை என்ற பெயரில் உள்ள மதன்பாலின் பெயரை நீக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் உள்ள இடமானது வெற்றிடமாக இருக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தை பெயர் அவசியம் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது” எனத் தீர்ப்பளி்த்துள்ளார்.

புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பள்ளிகளில் 15 நாள் கூடுதல் வகுப்பு: 170 நாளுக்கு பதில் 185 நாள் பாடம் நடத்த உத்தரவு

புதிய  பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால்  ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இந்த கல்வியாண்டில் 170 நாட்களுக்கு பதில் 185 நாள் பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழக பள்ளிகளில் பழைய பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் எனப் பல்வேறு கல்வி அமைப்புகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தன. அந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையில், அனைத்து வகுப்புகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

இதற்கான வரைவுப் பாடத்திட்டத்தைக் கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி வெளியிட்டு, பாடத்திட்டம் குறித்த கருத்துகளைத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து தயார்நிலையில் உள்ளன. இதுகுறித்து கோபி அருகே உள்ள கொடிவேரியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய  பாடத்திட்டம் வருடத்துக்கு 185 நாட்கள் நடத்தும் வகையில்  அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 170 நாட்கள்தான் பாடம் நடத்தப்பட்டது.  அதனால்தான் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் மாணவர்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் ஒரு பள்ளியில் 29 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதுபற்றி  விசாரித்தபோது, அங்குள்ள மாணவர்கள் தெலுங்கு மொழி அதிகம் பேசுவதால்தான்  என்பதும், நமது ஆசிரியர்களுக்கு தெலுங்கு மொழி குறித்த பயிற்சி இல்லை  என்பதும் தெரியவந்தது. தெலுங்கு மொழி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தகுதி தேர்வில் கலந்து கொண்டால் முன்னுரிமை அளிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும். 1 முதல் 5, 6 முதல் 8, 9 மற்றும் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு நான்கு வகையான சீருடைகள் மாற்றப்பட்டுள்ளது. 

அதேபோன்று க்யூஆர் கோடு மூலம் மாணவர்கள் புத்தகங்களை செல்போனிலேயே டவுன்லோட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து, முடிவுகளை வெளியிட தயார் நிலையில் உள்ளது. அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, செப்டம்பர் மாதம் வரை சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பிளஸ் 2க்கும் இனி 600 மதிப்பெண்தான்
பிளஸ் 2 படிப்பில் 6 பாடங்களுக்கு தலா 200 மதிப்பெண்கள் என 1200  மதிப்பெண்கள் என்று மதிப்பிடப்பட்டது. இந்த மதிப்பெண் முறை இந்த ஆண்டுடன்  முடிவுக்கு வருகிறது. வரும் கல்வியாண்டில் பிளஸ் 2வில் உள்ள 6 பாடத்திற்கும் இனிமேல் தலா 100 மதிப்பெண் வீதம் 600 மதிப்பெண் மட்டுமே கணக்கிடப்படும். ஏற்கனவே பிளஸ்1 வகுப்பில் ஒரு பாடத்துக்கு 200  மதிப்பெண்கள் என்பதை மாற்றி 100 மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை கடந்த கல்வி  ஆண்டிலேயே அமல்படுத்தப்பட்டது. 

அதேபோல் பிளஸ்2 வகுப்பிலும் 2018-19ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை  திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன் பிளஸ்2க்கு  மட்டும் தனியாக மதிப்பெண் சான்றிதழ் என்பதை மாற்றி பிளஸ்1க்கு என்று  தனியாகவும், பிளஸ்2க்கு என்று தனியாகவும் மதிப்பெண் சான்றிதழ்  வழங்கப்படும். முடிவில் இரண்டு வகுப்புகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்வு, 'கட் ஆப்' மதிப்பெண் மவுசு...குறைகிறது! நுழைவு தேர்வுக்கு அதிகரிக்கும் முக்கியத்துவம்   இன்ஜி., படிப்புகளுக்கும் அதிகம் தேவையில்லை

நீட்' போன்ற, தேசிய அளவிலான நுழைவு தேர்வுகள் காரணமாகவும், அவற்றுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாலும், பிளஸ் 2 தேர்வு, 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கான மவுசு, குறைந்து வருகிறது. 
இன்ஜி., கல்லுாரிகளிலும், ஏராளமான இடங்கள் இருப்பதால், 'கட் ஆப்' மதிப்பெண்கள் அவசியமற்றதாக மாறி வருகின்றன'

தமிழகத்தில், மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில், மாணவர்களை சேர்க்க, 1984ல், நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தேர்வு, அண்ணா பல்கலை மற்றும் மருத்துவ பல்கலையால் நடத்தப்பட்டது. ஆனால், இந்த தேர்வில், கிராமப்புற மாணவர்களால், பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பாலும், உயர் நீதிமன்ற உத்தரவாலும், நுழைவு தேர்வு முறை, 2006ல், ரத்து செய்யப்பட்டது.

நாளுக்கு நாள்
இதையடுத்து, ஒற்றை சாளர கவுன்சிலிங் வழியாக, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த கவுன்சிலிங் முறைக்கு, பிளஸ் 2 தேர்வில், முக்கிய பாடங்களில், மாணவர்கள் பெறும்மதிப்பெண்களை கணக்கிட்டு, 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது. எனவே, கட் ஆப் மதிப் பெண்ணை கணக்கிட்டு, இடங்கள் ஒதுக்கப் படுகின்றன.


இந்நிலையில், மீண்டும் நுழைவு தேர்வு வந்துள்ள தால், கட் ஆப் மதிப்பெண்ணுக்கான மவுசும், நாளுக்கு நாள் குறைந்தவண்ணம் உள்ளது. மருத்துவ படிப்புக்கான, நீட் தேர்வு அமலுக்கு வந்துள்ளது. நீட் தேர்வை எழுத, பிளஸ் 2 தேர்ச்சி யுடன், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில், பொதுப் பிரிவினர், 50 சதவீதமும், பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகள், 45 சதவீதம், மற்ற இனத்தவர், 40 சதவீதமும் மதிப்பெண் பெற வேண்டும்.


'ரேங்க்' பட்டியல் தயாரிப்பில், பிளஸ் 2 தேர்வின், கட் ஆப் எவ்வளவு என்ற கேள்விக்கே இடமில்லை. நீட் நுழைவு தேர்வு மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறது. இதனால், மருத்துவத்தில், கட் ஆப் தேவை இல்லாமல் போய் விட்டது. அதேநேரம், 'பாரா மெடிக்கல்' என்ற மருத்துவ சார் படிப்புகளுக்கு, கட் ஆப் பார்க்கப்படுகிறது.

இன்ஜினியரிங்
இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க் கையை பொறுத்தவரை,மாணவர்களின் எண்ணிக் கையை விட, இரண்டு மடங்கு அதிகமாக, இடங்கள் உள்ளன. தற்போது, இன்ஜினியரிங் படிப்பிற்கு தகுதியான, கணித பாடப் பிரிவில், நான்கு லட்சம் பேர் படித்து, பிளஸ் 2 தேர்ச்சி பெறுகின்றனர். இவர்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கும், மற்ற படிப்புகளுக்கும்செல்கின்றனர். 1.50 லட்சம் மாணவர்கள், இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு படிப்பு களில், தனியார் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் சேருவர்.
மீதமுள்ள, 1.50 லட்சம் பேர் மட்டுமே, இன்ஜி., கவுன்சிலிங்குக்கு வருகின்றனர். அவர்களுக்கும், தேவையை விட பல மடங்கு அதிகமாக இடங்கள் உள்ளதால், கட் ஆப் இருந்தால் தான், இன்ஜினியரிங் இடம் கிடைக்கும் என்ற, தேவை இல்லாமல் போய்விட்டது.

மொத்தம் உள்ள, 550 கல்லுாரிகளில், முன்ன ணியில் உள்ள, 50 கல்லுாரிகளுக்கு மட்டுமே, கட் ஆப் மதிப்பெண் அதிகமாக தேவைப்படு கிறது. சிலர், கட் ஆப் அதிகம் பெற்றிருந் தாலும், தங்கள் சொந்த மாவட்டம் மற்றும் தங்களுக்கு பிடித்த கல்லுாரியை, ஏற்கனவே முடிவு செய்து, அதில் சேர்ந்து விடுகின்றனர். எனவே, கட் ஆப் மதிப்பெண்ணுக்கான மவுசு குறைந்த வண்ணம் உள்ளது.

அறிவித்தபடி, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும் அமைச்சர் திட்டவட்டம்

அறிவித்தபடி, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் 
வெளியாகும். இதில் எவ்வித மாற்றமில்லை,'' என, பள்ளிக்கல்வித்துறை 
அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை 
சார்பில், கொடிவேரி தடுப்பணை வளாகத்தில், விழிப்புணர்வு மையம் திறப்பு
 விழா நேற்று நடந்தது. மையத்தை திறந்து வைத்த அமைச்சர் 
செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், ஜூன், 1ல்
 அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். ஏனெனில், புதிய பாடத்திட்டத்தின் படி,
 குறைந்தது, 185 நாள், மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டியுள்ளது. 
அதனால், ஜூன், 1ல், பள்ளிகளை திறக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவே வியக்கும் அளவில், பாடத்திட்டம் அமைந்துள்ளது. இதை,
 அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். எழுத்துக்களின் அச்சு 
வடிவங்கள், மல்டி கலரில் படங்கள் என, மாணவர்களிடம் பயிலும் 
ஆர்வத்தை துாண்டும் வகையில், புதிய பாடத்திட்டம் அமைக்கப்
பட்டுள்ளது.சீருடைகளை மாற்றி அமைக்க, அரசு நடவடிக்கை
 மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை
 உருவாக்க, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.பத்தாம் வகுப்பு தேர்வு
 முடிவுகள், குறிப்பிட்ட தேதியில் முறையாக அறிவிக்கப்படும்.இவ்வாறு 
அவர் கூறினார்.வரும், 23ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 
வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில், மாற்றம் இருக்கும் 
என செய்திகள் வெளியானதால், மாணவர்கள், பெற்றோர் குழப்பம் 
அடைந்தனர். இந்நிலையில், 'திட்டமிட்டபடி வெளியாகும்; மாற்றமில்லை'
 என அமைச்சர் கூறியுள்ளதால், மாணவர், பெற்றோர் நிம்மதி 
அடைந்துள்ளனர்.. 

மருத்துவ மாணவர்கள் சேர்க்கை 2019ல் 'ஆன்லைன் கவுன்சிலிங்'

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, அடுத்தாண்டு முதல், 'ஆன்லைன்' முறையில் நடைபெறும்' என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.'தமிழகத்தில், முதுநிலை மற்றும் இளநிலை
மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், ஆன்லைன் முறையில் நடைபெறும்' என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள், கடந்தாண்டு அறிவித்திருந்தனர்.ஆனால், வழக்கம் போல், நேர்முக அடிப்படையில் தான், கவுன்சிலில் நடந்து வருகிறது. இதற்கு, தமிழக அரசின் குழப்ப நிலையே காரணம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:கடந்த ஆண்டே, மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை, 'ஆன்லைன்' முறையில் நடத்த திட்டமிட்டிருந்தோம்.ஆனால், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,படிப்புகளுக்கானமாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வா அல்லது பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலா என்ற குழப்பம் இருந்தது.அரசு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறும் நம்பிக்கையில் இருந்ததால், 'ஆன்லைன் கவுன்சிலிங்' முறையில் சிக்கல் இருந்தது.தற்போது, நீட் தேர்வு உறுதியாகி விட்டதால், அடுத்தாண்டு முதல், ஆன்லைன் முறையில், மருத்துவ கவுன்சிலிங் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், கவுன்சிலிங் நடத்துவதற்கான செலவு குறையும். மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கும் அலைச்சல் இருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்

18/5/18

அரசுப்பள்ளி மாணவர் நிலை - பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை - தி ஹிந்து கட்டுரை



பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை.

தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்?


அரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்? அதுதான் கேள்விக்குறி. 

இத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே. இது எவ்வளவு பெரிய அவலம்?

அதிகாலையில் தன் பிள்ளையை எழுப்பவும், இரவில் தன் பிள்ளையை விசாரிக்கவும் ஆசிரியர் இருக்கிறார் என்றால் பெற்றோர் எதற்கு? ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும்? 

சனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா? ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா? அவர்களை யார் கவனிப்பார்கள்?

ஒரு பள்ளியில் சமீபத்தில் நடந்த விஷயம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாட்டாமை வாத்தியார் இருப்பார். அவர்தான் எல்லாமே. அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போய், ஐயா! வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள்! என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள்.

சனி, ஞாயிறு பள்ளி வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம்? என்றார்களாம். நாட்டாமை முகத்தில் ஈ ஆடவி்ல்லை. உண்மை அதுதான்.

தேர்ச்சிக்கான 35 மதிப்பெண்களைப் பெற ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா பகுதிகள் போதுமானது. இதை வாசிக்க முடியாத மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கம்போல் பள்ளியில் பிள்ளைகளுக்கு வரும் உதவித்தொகைக்குக் கையெழுத்து இடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

ஒரு மாணவனின் அலட்சியமான உழைப்பும், பெற்றோரின் பொறுப்பற்ற குணமும்தான் ஆசிரியர்களையும் அரசையும் பாடாய்ப்படுத்துகிறது. அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு திண்டாடுபவர்கள் கல்வி அதிகாரிகள். பாவம் அவர்கள். இதற்கு எல்லாம் யார் காரணம்? கற்க விரும்பாத மாணவனும், அவர்களின் அலட்சிய பெற்றோரும்தான்.

ஒன்றை மட்டும் நினைவுகொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களும் உடல்நலத்தில் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான நோய்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்டு. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு நோயாவது கட்டாயமாக இருக்கிறது. அதைக் கடந்து, மறந்துதான் பாடம் கற்பிக்க வருகிறார்கள்.

பெற்றோர்களுக்கு சில கேள்விகள்:

* அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படும்போது பெற்றோர்கள் ஏன் சும்மாக இருக்கிறார்கள்?

* மாணவர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு வரும் மன அழுத்தத்திற்கும், இரத்தக் கொதிப்பிற்கும் அவர்களின் பெற்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

* கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் தன் பிள்ளைகளைக் குறித்து அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்க வருவதில்லை?


* பள்ளியில் அறிவை வளர்த்துக்கொள்ள வராமல், கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் ஒழுங்குபடுத்துவதில்லை?

* பள்ளியில் தீயப் பழக்கத்துடன் வலம் வரும் கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் என்ன அறிவுரை கூறி வளர்க்கிறார்கள்?

* தினமும் பிள்ளையை அருகில் அமரவைத்து. அன்றன்று நடந்த பாடத்தில் உள்ள வினாக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? ஒப்பிக்க வைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

* பள்ளியில் பாடத்தைக் கற்பிப்பதும் புரியவைப்பதும் பயிற்சி தருவதும் ஆசிரியர் வேலை. வீட்டில் அவனை இரவில் படிக்கவைப்பதும். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு எழப்பிவிட்டு வாசிக்கவைப்பதும் பெற்றோரின் வேலை. அதை ஆசிரியர்கள் ஏன் செய்யவேண்டும்? உங்களின் பொறுப்பற்ற செயல்தான் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற சுமையாகிறது… பொறுப்பாகிறது.

அரசு தன் கடமையைச் சரியாகச் செய்கிறது. பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கோடிக்கணக்காகச் செலவழிக்கிறது. ஒரு பள்ளி தன் பணியைச் சரியாகச் செய்கிறது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் கற்பிக்கிறார்கள்... பயிற்சி தருகிறார்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அரசுக்கும் கல்வித்துறைக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்?

நன்றி

தி ஹிந்து

உயிரியல், பொருளியலில் மதிப்பெண், 'பணால்'

பிளஸ் 2 தேர்வில், பாட வாரியான தேர்ச்சியில், உயிரியல் மற்றும் பொருளியல் பாடங்களில், மதிப்பெண் குறைந்துள்ளது.
பிளஸ் 2 பாடவாரியான தேர்ச்சியில், புவியியல் மற்றும் ஊட்டச்சத்து, உணவு பதப்படுத்துதல் பாடத்தில், அதிகபட்சமாக, 99 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொழி பாடங்கள் மற்றும் ஆங்கிலத்தில், 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இயற்பியல், கணிதம், 96; வேதியியல், 95; உயிரியல், 96.34; தாவரவியல், 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விலங்கியலில், 92 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். விலங்கியலில் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக, நமது நாளிதழில், ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது. உயிரியல் மற்றும் விலங்கியல் தேர்வில் பெரும்பாலான மாணவர்கள், 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றிருந்தாலும், 150 மதிப்பெண் வரை மட்டுமே பெற்றுள்ளனர். பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களிலும், மாணவர்களின் மதிப்பெண்ணும், தேர்ச்சி சதவீதமும் குறைந்துள்ளது. குறைவாக வணிகவியலில், 90; பொருளியலில், 91 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 

கலை, அறிவியல் கல்லூரிக்கு மவுசு

பிளஸ் 2 தேர்வில், முக்கிய பாடங்களில் மதிப்பெண் குறைந்துள்ளதால், அதிக மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர வாய்ப்புள்ளதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவில், 60 சதவீத மாணவர்கள், 800க்கும் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில், இன்ஜி., கல்லுாரிகளில் சேர்வதற்கு, தகுதியான கணித பாடப்பிரிவில், 4.22 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 50 சதவீதம் பேர் மட்டுமே, இன்ஜினியரிங் படிப்பில் சேர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. மற்றவர்கள், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் அதிக அளவுக்கு சேர வாய்ப்புள்ளது.
தேர்வு முடிவு குறித்து, கல்வி ஆலோசகர், ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:இந்த ஆண்டு, மாணவர்களின் மதிப்பெண் முறையை பார்க்கும் போது, 60 சதவீதம் பேர், 800 மதிப்பெண்ணுக்கு குறைவாக பெற்றுள்ளனர். எனவே, இன்ஜினியரிங் படிப்புக்கான, கட் - ஆப் மதிப்பெண்ணில், ஐந்து முதல் எட்டு வரை குறைய வாய்ப்புள்ளது. முதல், 10 இடங்களில் உள்ள கல்லுாரிகள் தவிர, மற்ற கல்லுாரிகளில் இடம் பெறுவதில், போட்டிகள் குறையும். கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில், அதிக மாணவர்கள் சேர வாய்ப்புள்ளது. அரசு தேர்வுத்துறை சார்பில், மாணவர்களின், 'சென்டம்' பட்டியல் வெளியிட்டிருந்தால், மாணவர்கள் உயர்கல்விக்கு திட்டமிட உதவியாக இருந்திருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங் எப்போது?

சென்னை: ''தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கவுன்சிலிங், ஜூன், மூன்றாம் வாரம் துவங்கும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, மே, 6ல், நடந்தது. இதன் முடிவு, ஜூன், 5ல் வெளியாக உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகி உள்ளதால், மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு, மாணவர்களிடம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறுகையில், ''எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங், ஜூன் மூன்றாம் வாரத்தில் நடைபெறும்,'' என்றார்.

காமராஜ் பல்கலை தேர்வில் மாற்றம்

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் தெரிவித்துள்ளதாவது:
ஜூன் 13ல் துவங்க இருந்த எம்.பி.ஏ., எம்.சி.ஏ., அல்பருவ தேர்வுகள் மாணவர் நலன் கருதி ஜூன் 6ல் துவங்குகின்றன. மேலும், மே 25ல் துவங்கும் பி.எட்., மே 31ல் துவங்கும் அனைத்து யு.ஜி., ஜூன் 6ல் துவங்கும் அனைத்து பி.ஜி., ஜூன் 13ல் துவங்கும் பி.ஜி., சான்றிதழ், டிப்ளமா படிப்பு அல்பருவத் தேர்வுக்கு, அபராதத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளைக்குள் (மே 18) சமர்ப்பிக்க வேண்டும். எம்.சி.ஏ., எம்.பி.ஏ.,விற்கு மே 21ல் சமர்ப்பிக்கலாம். தேர்வு கட்டணம் எஸ்.பி.ஐ., ஆன்லைன் பேமென்ட் மூலம் மட்டும் செலுத்த வேண்டும். www.mkudde.org இதற்கான விண்ணப்பம் பெற்று விபரம் அறியலாம், என தெரிவித்துள்ளார்.

ஊதிய முரண்பாடுகள் களையும் குழுவிடம் அறிக்கைகள் தொடர்ந்து அளிப்பு

ஊதிய முரண்பாடுகளைக் களையும் குழுவிடம் அறிக்கைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த முரண்பாடுகள் குறித்து அறிக்கைகள், கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்காக, நிதித் துறை செயலாளர் (செலவினம்) எம்.ஏ.சித்திக் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவிடம் தனிநபர்களும், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர். மனுக்களை அளிக்க மே 15 கடைசி நாள் என தமிழக அரசு அறிவித்திருந்தாலும் தொடர்ந்து மனுக்களை அளிக்கலாம் எனக் கூறியுள்ளது. மனுக்கள் அளிக்கப்பட்ட பிறகு, ஊழியர் சங்கங்களையும், கோரிக்கை மனுக்களை அளித்த தனிநபர்களையும் அழைத்துப் பேச ஒருநபர் குழு முடிவு செய்துள்ளது. 
பணி வரன்முறைக் குழு: அரசுப் பணியிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது அனைத்து அரசுத் துறைகளுக்கும் பல்வேறு கேள்விகள் அடங்கிய பட்டியலை அனுப்பி வைத்திருந்தது. இந்தப் பட்டியலை வரும் 21}ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த தலைவர்களும் கேள்விகளுக்கான பட்டியலில் பதில்களைப் பூர்த்தி செய்து நேரில் அளித்து வருகிறார்கள்.

அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்: செங்கோட்டையன்

சென்னை: ''அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தமிழகத்தில், 2,627 அரசு மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். இதில், விருதுநகர் மாவட்டத்தில், 94 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம், 93.98 சதவீதத்துடன் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து, அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆசிரியர் காலியிடங்கள், விரைவில் நிரப்பப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இலவச கல்வி உரிமை சட்டத்தில், முறையாக மாணவர்களை சேர்க்காத, 12 பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளோம். விளக்கம் கிடைத்ததும், நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்

பிளஸ்-2 தேர்வுகளில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டது ஏன்? அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

சென்னை,  சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி வருமாறு:-


கடந்த 1.3.18 முதல் 6.4.18 வரை எழுதப்பட்ட பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை ஒரு ஆண்டுக்கு முன்பே அறிவித்திருந்தோம். அதன்படி அதே தேதியில் (நேற்று) தேர்வு முடிவுகளை வெளியிடுகிறோம்.

தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசின் சார்பில் வாழ்த்துகள். அவர்கள் பல்வேறு துறைகளில் சென்று மேல்நிலைக் கல்வி கற்க அரசு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தோல்வியுற்றவர்கள் யாரும் துவண்டுபோக வேண்டாம். அவர்களுக்காக ஹெல்ப் லைன் என்ற புதிய திட்டம் உள்ளது. 14417 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டால், ஆறுதல் பெறக்கூடிய வகையில், மீண்டும் கல்வி கற்பதற்கு ஏற்ற ஆலோசனை வழங்கப்படும்.

ஜூன் 25-ந் தேதி அவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம். வெற்றி பெற்ற மாணவர்களுடன் அவர்களும் கல்லூரியில் சேர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாடப் பிரிவு வாரியாக மாணவர்களின் தேர்ச்சி வீதத்தை பொறுத்த அளவில், அறிவியல் பாடப்பிரிவில் 92.2 சதவீதம், வணிக பாடப்பிரிவில் 87.4 சதவீதம், கலைப் பாடப் பிரிவுகளில் 79.6, தொழில் பாடப்பிரிவுகள் 80.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாடவாரியாக, இயற்பியல் 96.4 சதவீதம், வேதியியல் 95, உயிரியல் 96.3, கணிதம் 96.1, தாவரவியல் 93.9, விலங்கியல் 91.9, கணினி அறிவியல் 96.1, வணிகவியல் 90.3, கணக்குப் பதிவியலில் 91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த முறை கஷ்டமான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்ததாக மாணவர்கள் தரப்பில் இருந்து கருத்து கூறப்பட்டது. இது எதற்காக என்றால், எதிர்காலத்தில் மாணவர்கள் பல்வேறு பொதுத் தேர்வுகளை சந்திக்க வேண்டியதுள்ளது.

இந்தத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள்கூட அண்ணா பல்கலைக்கழகத்தில் கணிதப் பாடத்தில் 21 சதவீதம் பேர் அரியர்ஸ் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுபோன்ற நிலை நீடிக்கக்கூடாது. எனவேதான் கேள்விகள் கடினமாக வைக்கப்பட்டன.

இந்தப் புதிய முறைப்படி எதிர்காலத்தில் பொதுத் தேர்வுகளை இங்குள்ள மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள முடியும்.

மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் முதல், இரண்டாம் ரேங்க் பற்றி விளம்பரப்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மன அழுத்தத்தை தரக்கூடாது என்பதற்காக இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒரு மார்க் குறைந்துவிட்டால்கூட, அந்த மாணவனும் அவரது பெற்றோரும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இன்னும் ஒரு மார்க் வாங்கியிருந்தால் ரேங்க் கூடியிருக்குமே என்றெல்லாம் மற்றவர்கள் கூறி மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கும் நிலை உள்ளது.

இதை நிறுத்தவே ரேங்க் முறையை தவிர்த்திருக்கிறோம். பெற்றோர், கல்வியாளர்கள், மாணவர்கள் இதை பாராட்டியுள்ளனர். எல்லோரையும் சமநிலைப்படுத்தி பாடத்தை கற்றுத் தருவதுதான் அரசின் நோக்கம்.

இதுவரை எந்தப் பள்ளியும் தங்களை முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்யவில்லை. விளம்பரம் செய்தால் அந்தப் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்படும். மீண்டும் அதைச் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்விக் கட்டணத்தைப் பொறுத்த அளவில் ஒவ்வொரு பள்ளிகளிலும் பெயர்ப் பலகை வைத்து, கல்விக் கட்டணத்தின் அளவு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இனி தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்காது. பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலர் திடீரென்று சொந்த மாவட்டங்களுக்கு பணிமாறுதல் பெற்றுவிட்டதால் வடமாவட்டங்களில் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது.

அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி வீதம், கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கூறுவதை ஒப்புக்கொள்கிறேன். இனி அந்த நிலை நீடிக்கக்கூடாது என்பதற்காக ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியோருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே கிராமங்களில் உள்ள மாணவர்களை அரசுப் பள்ளிகளுக்கு அழைத்து வரவேண்டும். இதற்கான காலவரம்பு செப்டம்பர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளியில் பணியாற்ற விரும்பினால் கூடுதலாக மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் ஏழை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதை தமிழக அரசும் மத்திய நிதியைப் பயன்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளியில் சேர வருபவர்களை தனியார் பள்ளிக்கு அனுப்பும் நிலை இல்லை.

சில இடங்களில் குறைபாடுகள் இருக்கின்றன. குறிப்பிட்ட சில பள்ளிக்கூடங்களில் அனுமதி வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. அதுபோன்ற 12 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ஆய்வு நடத்தி வருகிறோம். அருகில் வசிக்கும் ஏழை மாணவர்களை ஏன் பள்ளிகளில் சேர்க்கவில்லை என்று அவர்களிடம் கேள்வி எழுப்பி இருக்கிறோம். அவர்களின் பதில் வந்த பிறகுதான் உரிய விவரங்களை சொல்ல முடியும்.

இனிவரும் ஆண்டுகளில் அனைத்துப் பாடத்திட்டங்களையும் மாற்றிய பிறகு, தனியாரே வியக்கும் வகையில் அது இருக்கும். 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றியதை பார்த்த பிறகு, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை நடத்தும் தனியார் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகளை மூடும் நிலையை அரசு உருவாக்கி இருக்கிறதா என்றுகூட கேள்வி எழுப்பியுள்ளனர்.

அனைத்து பெற்றோர்களின் ஆசையும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ. கல்விதான். ஆங்கில அறிவை குழந்தைகள் பெறவேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகின்றனர். எனவே அந்தப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.

அதிலும் மாற்றத்தைக் கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது. இது அரசின் கொள்கை ரீதியான விஷயம். எனவே முதல்-அமைச்சர், அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

'சென்டம்' பட்டியல் முறையும் ரத்து

பிளஸ் 2 தேர்வில், 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டது போல், 'சென்டம்' என்ற நுாற்றுக்கு நுாறு பட்டியலும், ரத்து செய்யப்பட்டுள்ளது. 
பிளஸ் 2 பொது தேர்வு முடிவில், இரண்டாம் ஆண்டாக, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. 
புதிய மாற்றம் : எந்த பள்ளியும், தங்கள் பள்ளியின், 'டாப்பர்' அல்லது முதல் மூன்று இடம் என, எந்த தனிப்பட்ட மாணவரையும் குறிப்பிட்டு, விளம்பரம் செய்யக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் பட்டியலும் வெளியிடப்படவில்லை. மேலும், இந்த ஆண்டு முதல், மற்றொரு புதிய மாற்றத்தையும், அரசு தேர்வுத் துறை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, நுாற்றுக்கு நுாறு என்ற, 'சென்டம்' மதிப்பெண் பட்டியல், முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் பகுப்பாய்வு பட்டியலில், சென்டம் எடுத்த மாணவர்கள் எத்தனை பேர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவின்படி, 'சென்டம்' வழங்கும் முறையும், இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, பள்ளிக்கல்வி செயலராக, சபிதா இருந்த போது, மொழி பாடங்களுக்கு, 'சென்டம்' வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு முதல், மற்ற முக்கிய பாடங்களுக்கும், 'சென்டம்' வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆரோக்கியமற்ற போட்டி : 'தவிர்க்க முடியாத நிலையில், தேர்வில் மிக தெளிவாக விடைகளை எழுதிய மாணவர்களுக்கு மட்டுமே, சென்டம் மதிப்பெண் வழங்க வேண்டும்' என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மிக சிலர் மட்டுமே, சென்டம் பெற்றுள்ளதால், சென்டம் பட்டியல் வெளியிடுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: உயர்கல்வியில் மாணவர்கள் சேர, பிளஸ் 2வில், 50 சதவீதத்துக்கு மேல், மதிப்பெண்களை கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது; 'டாப்பர்' ஆக வந்தவர் யார்; சென்டம் எடுத்தவர்கள் யார் என, தனியாக கல்வித்தகுதி கிடையாது.'டாப்பர்' மற்றும் சென்டம் முறையால், மாணவர்களிடம் விரக்தி மற்றும் ஆரோக்கியமற்ற போட்டி ஏற்படுகிறது. இதை மாற்றும் வகையில், டாப்பர் மற்றும் சென்டம் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். 

பிளஸ் 2 மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, இன்று(மே-17) முதல், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு வேண்டும் என, கருதுவோர், தாங்கள் தேர்வு எழுதிய பள்ளி மற்றும் தேர்வு மையத்திற்கு சென்று, இன்று முதல், வரும், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மறுமதிப்பீடு தேவைப்படுவோர், முதலில், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முடிவு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, வரும், 21ம் தேதி முதல், பள்ளிகளில் பெற்று கொள்ளலாம்.மேலும்,www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.

91.1 சதவீதம் பேர் வெற்றி பெற்றனர், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் சர்வு, மாணவிகளே வழக்கம் போல சாதனை


அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க முடிவு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அரசு ஊழியர்கள் செல்போன்களில் சர்வீஸ் ரிஜிஸ்டர் பார்க்கலாம்

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு நாளை (18.05.2018) மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்