யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/6/18

பாடம் நடத்தும் போதே 'நீட்' தேர்வுக்கு பயிற்சி: அரசு பள்ளிகளில் புதிய திட்டம்

பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே, 'நீட்' தேர்வுக்கான பயிற்சி வினாக்களுக்கு, மாணவர்களை தயார்படுத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.பிளஸ் 2 முடிக்கும் 
மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வு கட்டாயமானதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சி முறையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.வெறும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இதுவரை மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள், திடீரென, பிளஸ் 2 அல்லாத, நீட் நுழைவு தேர்வு வினாக்களை சந்திக்கவும், சிறப்பு பயிற்சி பெற வேண்டியுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 2017-18ல்,தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக, நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக அரசின் இலவச பயிற்சி பெற்ற, 1,300 மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 20 பேர் மட்டுமே, மருத்துவ படிப்புகளில் சேரும் நிலை உள்ளது.இந்த ஆண்டு, மருத்துவ படிப்பில் சேரும், அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, நீட் சிறப்பு பயிற்சி மட்டுமின்றி, கல்வி ஆண்டு துவக்கம் முதலே, வகுப்புகளில் இருந்தே, மாணவர்களை தயார்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடம் நடத்தும் போதே, இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில், நீட் தேர்வுக்கான பழைய வினாக்கள் இடம் பெற்று இருந்தால், அது பற்றி சிறப்பு கவனம் எடுத்து, மாணவர்களுக்கு விளக்கம் தர வேண்டும்.
நீட் தேர்வு வினா வங்கியை பயன்படுத்தியும், அதிலுள்ள, எம்.சி.க்யு., என்ற, பல்வகை விடைக்குறிப்பு அடங்கிய வினாக்களின் மாதிரியை பயன்படுத்தியும், பள்ளியின் மாதிரி தேர்வுகளில் வினாக்களை இடம் பெற செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நடைமுறையை, தனியார் பள்ளிகள் ஏற்கனவே பின்பற்றுகின்றன.

பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த திட்டம் : சி.இ.ஓ.,க்களை கண்காணிக்க இணை இயக்குனர்கள்

பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த கட்டமாக, மாவட்ட வாரியாக, இணை இயக்குனர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முதன்மை கல்வி அதிகாரிகளை கண்காணிக்கும்
பணியில், இணை இயக்குனர்கள் ஈடுபடுவர்.தமிழக பள்ளிக்கல்வியில், 40 ஆண்டுகளுக்கு பின், மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்திருத்தம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக, தொடக்க கல்வி மற்றும் மெட்ரிக் இயக்குனரகத்தின் மாவட்ட அலுவலகங்கள் மூடப்பட்டன.அந்த நிர்வாகத்தில் இருந்த பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்குனரத்தின் மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வந்தன. அதிகாரம்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.க்கள், கூடுதல் அதிகாரம் மிக்கவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். பணி நியமனம், பணி மாறுதலுக்கான அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.அடுத்த சீர்திருத்தமாக, சென்னையில், தலைமையகத்தில் பணியாற்றும் இணை இயக்குனர் பதவிகள், மண்டல இணை இயக்குனர் பதவியாக மாற்றப்பட உள்ளது. இதன் படி, பள்ளிக்கல்வி தலைமையகத்தில், சில இயக்குனர்கள் மட்டும் பணியில் இருப்பர்; மற்ற இணை இயக்குனர்கள், மண்டல வாரியாக, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி, விழுப்புரம், வேலுார், தஞ்சாவூர், நாமக்கல் என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட உள்ளன. இவற்றில், ஒவ்வொரு மண்டல தலைமையகத்திலும், அருகில் உள்ள மாவட்டங்கள் இணைக்கப்படும்.அந்த மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள், நேரடியாக, இணை இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும். அரசாணைஇணை இயக்குனர்களுக்கு உதவியாக, துணை இயக்குனர்களும், மண்டல அலுவலகத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்வர்.
இதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சட்ட ஆய்வு நடத்தி, அமைச்சர் மற்றும் செயலரின் மேற்பார்வையில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவில், அரசாணை வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

பள்ளிப்பட்டில் மாணவர்கள் பாசப்போராட்டத்தின் எதிரொலி: ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் தொடர கல்வித்துறை அனுமதி

ஒரு அரசுப்பள்ளி ஆசிரியருக்காக மாணவர்கள் நடத்திய பாசப்போராட்டம் நாடு முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் பணியை தொடர கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு உயர் நிலைப் பள்ளியில்  ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்த  பகவான்  பணி நிரவலில் திருத்தணி அருகே அருங்குளம் உயர் நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். 
பகவான்  பணி மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ, மாணவிகள் 280 ேபர், 19ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

20ம் தேதி பள்ளி விடுப்புச் சான்று பெற பள்ளிக்கு வந்த ஆசிரியர் பகவானை  மாணவர்கள் சுற்றிக்கொண்டு  கதறி அழுத சம்பவத்தால் நெகிழ்ந்து போன ஆசிரியரும்  பாசம் காட்டும் மாணவர்களை  விட்டுச் செல்ல மனமின்றி  கண்ணீர் விட்டு அழுதார். மாணவர்களின் இந்த பாசப்போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசிரியர் பகவானுக்கு பிரபலங்கள் பலரும்  ஆதரவு தெரிவித்து வாழ்த்து கூறியிருந்தனர். இதனால் ஆசிரியர் பகவான்  பணிநிரவல்  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  கல்வித் துறை அதிகாரிகள்  பகவான்  வெளியகரம் பள்ளி பணியில் தொடர அனுமதி வழங்கியுள்ளனர். இதனை அடுத்து பள்ளி ஆசிரியர் வருகை பதிவேட்டில் மீண்டும் பெயர் சேர்க்கப்பட்டு தொடர்ந்து அவர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TRB - TNTET 2017 Paper -II Mark Certificate Published.

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST – 2017
PUBLICATION OF CERTIFICATE OF MARKS

Dated: 25-06-2018

Chairman

2018-19 கல்வி ஆண்டில் = தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டம்

26/6/18

MBBS - நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் 28-ல் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28-ம் தேதி வெளியிடப்படுகிறது.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், 
 பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மற்றும் தனியார் மருத்துவம் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில்கடந்த 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை வரை நடைபெற்றது. அரசு இடங்களுக்கான விண்ணப்பத்தை ரூ.500-க்கான கேட்பு வரைவோலை (டிடி) கொடுத்தும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான விண்ணப்பத்தை ரூ.1,000-க்கானகேட்பு வரைவோலை (டிடி) கொடுத்தும் நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் வாங்கினர்.
அரசு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகள் சாதிச் சான்றிதழ் நகல் கொடுத்து விண்ணப்பத்தைப் பெற்றனர். 8 நாட்கள் நடந்த விண்ணப்ப விநியோகத்தில் அரசு இடங்களுக்கு 24,933 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 13,338 விண்ணப்பங்கள் என மொத்தம் 38,271 விண்ணப்பங்கள் விற்பனையாகின.
இவைதவிர www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற சுகாதாரத்துறையின் இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்தனர். மொத்தம் 43,935 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

TRB - சிறப்பாசிரியர் தேர்வுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிட்ட நிலையில் கல்வி, சான்றிதழ்கள் சரிபார்ப்பு எப்போது?

சிறப்பாசிரியர் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிட்டு 10 நாட்கள் ஆகியும் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்படாததால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய சிறப்பாசிரியர் பதவியில் 1,325 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர்.
தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) கடந்த அக்டோபர் 13-ம் தேதி வெளியிடப்படவில்லை. வழக்கமாக உத்தேச விடைகள் வெளியிடப்பட்டதும் அடுத்த சில நாட்களிலேயே தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுவிடும்.
ஆனால், முதல்முறையாக நடத்தப்பட்ட சிறப்பாசிரியர் தேர்வில், உத்தேச விடைகள் வெளியிட்டு 8 மாதங்கள் கடந்தும் தேர்வு முடிவு வெளியிடப்படாத நிலையில், தேர்வெழுதியவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம், பள்ளிக் கல்வி அமைச்சரை சந்தித்து முறையிடுவது என தொடர்ந்து பல்வேறு நிலைகளில் போராடி வந்தனர்.
ஆன்லைனில் விடைத்தாள் நகல்
இந்த தொடர் போராட்டத்துக்குப் பின்னர் கடந்த ஜூன் 14-ம் தேதி மதிப்பெண் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதற்கு முன்பு நடத்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் விடைத்தாள் நகலை யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் பார்க்கலாம் என்றிருந்த நிலையில், சிறப்பாசிரியர் தேர்வில், அதுபோன்று இல்லாமல் அவரவர் தங்களின் விடைத்தாள் நகலை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு நேரில் வந்து கணினியில் பார்க்க மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆன்லைனில் பார்க்கக்கூடிய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில், மதிப்பெண் பட்டியல் வெளியிட்டு 10 நாட்கள் ஆகியும் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியலை வெளியிடாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம் செய்துவருவதாக தேர்வெழுதியவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டால் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்றும் விரைவில் வரும் என்று சொன்ன பதிலையே மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள் என்று தேர்வர்கள் ஆதங்கத்துடன் கூறுகிறார்கள்.
பொதுவாக, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கான முடிவுகள் 3 மாதங்கள் அல்லது 5 மாதங்களில் வெளியிடப்பட்டுவிடும். ஆனால், சிறப்பாசிரியர் தேர்வில், தேர்வு முடிவடைந்து 9 மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாதது தேர்வர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘ஒரு காலியிடத்துக்கு 2 பேர்’
சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கு ‘ஒரு காலியிடத்துக்கு 2 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட வேண்டும்.
அப்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு ஏற்ப மதிப்பெண் (அதிகபட்சம் 5) அளிக்கப்படும். அதைத்தொடர்ந்து, எழுத்துத்தேர்வு மதிப்பெண், பதிவுமூப்பு மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு இறுதி தெரிவுபட்டியல் வெளியிடப்படும்.
மதிப்பெண் வெளியிட்டு 10 நாட்கள் ஆகியும் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதிபெற்றவர்கள் பட்டியலே வெளியிடப்படாத நிலையில் எப்போது இறுதி தேர்வுபட்டியல் வெளியிட்டு பணிநியமனம் வழங்கப்போகிறார்களோ? என்று தேர்வெழுதியவர்கள் அச்சத்தில் உள்ளனர். இனியும், காலதாமதம் செய்யாமல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வுசெய்யப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி!

வீடுகளில் சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக,
மானிய விலையில் மேற்கூரை அமைக்கும் திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 1,700 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 வரும் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதியாகும்.இதுகுறித்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்பில்,மின்கட்டமைப்புடன் கூடிய சோலார் மேற்கூரை திட்டத்தின்கீழ், வீடுகளில் சோலார் மேற்கூரை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. வீடுகள், மருத்துவமனைகள், அறக்கட்டளைகள், என்ஜிஓ-க்கள் ஆகியோருக்கும் இச்சலுகை பொருந்தும். ஒரு கிலோவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிக்க ரூ.60,000 செலவாகும்.
இதில், ரூ.18,000 மானியமாக வழங்கப்படும்.ஒரு கிலோவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிக்க தேவையான சோலார் மேற்கூரை அமைக்க குறைந்தபட்சம் 100 சதுர அடி இடம் தேவைப்படும். ஒருகிலோ வாட் மேற்கூரை அமைத்தால் மாதம் ஒன்றுக்கு 250 யூனிட் வரை சோலார் மூலம் மின்னுற்பத்தி செய்ய முடியும்.5 ஆண்டு இலவச பராமரிப்புஇந்த சூரியஒளி மின்சாரத்தைக் கணக்கீடு செய்வதற்காக இருவழி பயன்பாடு மீட்டர் பொருத்தப்படும். சோலார் மேற்கூரை மின் கட்டமைப்புகள் கிரிட்டுடன் இணைக்கப்படும். மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 வரை மின்சார கட்டணம் மிச்சமாகும். அத்துடன், சோலார் மேற்கூரைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் 5 ஆண்டுகள் வரை இலவசமாக பராமரிக்கப்படும்.
இத்திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், கடந்த 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் இதுவரை 1,700 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு 12 மெகாவாட் அளவுக்கு சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு, வரும் 30-ம் கடைசி தேதியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பதவி உயர்வு கலந்தாய்வு திடீர் ரத்து : இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம்

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகலந்தாய்வு திடீரென நிறுத்தப்பட்டதால், ஏமாற்றமடைந்தனர்.

இப்பள்ளிகளில் 2003 பிப்., வரை இடைநிலை ஆசிரியர்கள்நியமிக்கப்பட்டனர். அதன்பின் பட்டதாரி ஆசிரியர்களே நியமிக்கப்படுகின்றனர். இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதலுக்கு சிக்கல் ஏற்பட்டது.தொடர் போராட்டத்தையடுத்து தமிழ் பாடத்திற்கு 66.6 சதவீதம், மற்ற பாடங்களுக்கு 50 சதவீதம் என, இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் 21 ல் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவித்த நிலையில், திடீரென நிறுத்தப்பட்டதால், இடைநிலை ஆசிரியர்கள் கொதிப்படைந்தனர்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சங்கர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் காலிப்பணியிடம் இல்லை என கூறி, கலந்தாய்வை நிறுத்திவிட்டனர்.தவறான விதிமுறை மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குறைத்ததால் இப்பிரச்னை. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கனவாகிவிட்டது. இதன்மூலம் 5 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.
தொகுப்பூதியத்தில் நியமனமான 42 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் 2006 ல் காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டனர்.அப்போதே 50 சதவீத இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்திருந்தால், இந்த குழப்பம் வந்திருக்காது.இதேபோல் அரசுஉதவி பெறும் பள்ளிகளிலும் பதவி உயர்வின்றி 13 ஆயிரம் பேர் தவிக்கின்றனர், என்றார்.

கூடுதலாக வசூலிக்கும் இன்ஜி., கல்லூரிகள் : நடவடிக்கை எடுக்க மாணவர்கள் கோரிக்கை

பள்ளிகளை போல், கல்லுாரிகளின் கட்டண விபரங்களை, இணைய தளத்தில் வெளியிட வேண்டும்; அதிகமாக வசூலிக்கும் கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உயர் கல்வித் துறைக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளின் கல்வி கட்டணத்தை, தமிழக அரசின் கல்வி கட்டண கமிட்டி நிர்ணயித்துள்ளது. கட்டண விபரங்களை, அந்தந்த பள்ளி களின் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிக கட்டணம் வசூல்அதுபோல, இன்ஜினி யரிங் சுயநிதி கல்லுாரிகளின் கட்டணத்தை நிர்ண யிக்கும் பணியை, உயர்கல்வி கட்டண நிர்ணய கமிட்டி மேற்கொள்கிறது. ஆனால், இந்த கமிட்டி, எந்தெந்த கல்லுாரிக்கு எவ்வளவு கட்டணம் நிர்ண யித்துள்ளது, அதற்கான உத்தரவுகள் என்ன என்ற விபரம், மாணவர்களுக்கோ, பெற்றோருக்கோ தெரிவது இல்லை.இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோரை ஏமாற்றி, பல கல்லுாரிகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன.அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங் வழியாக, அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெறும் மாணவர்களிடம், எவ்வளவு கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என, இன்ஜி., கவுன்சிலிங் குழு, குறிப்புகளை வழங்குகிறது.ஆனால், பெரும்பாலான கல்லுாரிகள், கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றன. சில கல்லுாரிகள், மாணவர்களிடம் வசூலிக்கும் வைப்பு தொகையை, மாணவர்கள் படித்து முடிக்கும் போது, திருப்பிவழங்குவதில்லை எனவும், புகார்கள் எழுந்துள்ளன.புகார்மேலும், பொருளாதார சூழல், குடும்ப பிரச்னை, தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக, படிப்பை சிலர் பாதியில் கைவிடுகின்றனர். சிலர் வேறு கல்லுாரிகளுக்கு மாறுகின்றனர். இவர்களிடம், முழுமை யாக, நான்கு ஆண்டுகளுக்கான கட்டணத்தை கட்டாய மாக வசூலிப்பதாகவும், கட்டணத்தை செலுத்தும் வரை, தற்காலிக சான்றிதழை நிறுத்தி வைப்பதாகவும், புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது:கவுன்சிலிங் வழியே, இன்ஜி., கல்லுாரிகளில்மாணவர்களை சேர்க்கும், உயர் கல்வித்துறை, தனியார் கல்லுாரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். மாணவர்களிடம் அத்துமீறி வசூலிக்கும் கல்லுாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க ேண்டும்.கட்டண பிரச்னையால் பல மாணவர்கள், உரிய நேரத்தில் தேர்வை எழுத முடியாமல், நிறுத்தி வைக்கப்படுகின்றனர். பல மாணவர்கள், தங்களின் மாற்று சான்றிதழ்களை கூட பெற முடியாமல் தவிக்கின்றனர்.எனவே, கட்டண பிரச்னைக்கு, தமிழக உயர் கல்வித்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

B.Ed - , கல்லூரிகள் திறப்பு எப்போது?

ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளான, பி.எட்., கல்லுாரிகள், ஜூலை, 9ல் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில்,

650க்கும் மேற்பட்ட, கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., இரண்டாண்டு படிப்புகள் நடத்தப்படுகின்றன. பி.எட்., கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, ஜூன்இரண்டாவது வாரத்தில் விடுமுறை விடப்பட்டது.இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து, ஜூலை, 9ல், அனைத்து, பி.எட்., கல்லுாரிகளையும் திறக்க வேண்டும் என, கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது. இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜூலையில் வகுப்புகள் துவங்கும் என்றும், வேலைநாட்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், பல்கலை பதிவாளர், ரவீந்திரநாத் தாகூர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பி.எட்., முதலாம் ஆண்டை பொறுத்தவரை, தற்போது விண்ணப்பங்கள் வழங்கப் படுகின்றன. ஜூலையில், கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகளை துவக்க, கல்வியியல் பல்கலை முடிவு செய்துள்ளது.

காலை, மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகளில் மாணவர்கள்வருகையை உறுதிப்படுத்தி வருகைப்பதிவேடு பராமரிக்க வேண்டும் - CEO

மாநிலம் முழுவதும் "சூப்பர்- 30' சிறப்பு வகுப்புகள்: கல்வியாளர்கள் கோரிக்கை!



பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சூப்பர்- 30 சிறப்பு வகுப்புகளை மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்னும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தால் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவம்- 30, சிறப்பு பொறியியல்- 30 ஆகிய பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, "சூப்பர்- 30' என்னும் பெயரில் சிறப்பு வகுப்புகள் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகின்றன.
இதற்காக, பெரம்பலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி, அதில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 425 மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும், 450 மதிப்பெண் பெற்ற பிற மாணவர்களும் நுழைவுத் தேர்வெழுத தகுதியானவர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு வகுப்புகளில் அரசுப் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றி வரும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். மேலும், இந்த வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு பாடத்துடன் கூடிய தன்னம்பிக்கையூட்டும் மனவளப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. மேலும், இந்த மாணவ, மாணவிகள் தமிழகத்தின் பிரதான சுற்றுலா இடங்களுக்கு கல்விச் சுற்றுலாவுக்கும் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்த சிறப்பு வகுப்புகளில் பயின்ற மாணவ, மாணவிகள் அனைவரும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 1,100 மதிப்பெண்களுக்கும் அதிகமாகப் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர். இதனால் இந்த வகுப்புகள் பெற்றோரிடமும், கல்வியாளர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் இந்த வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இதையடுத்து, இத்திட்டத்தை கொண்டுவந்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது முயற்சியால், பாடாலூர், குரும்பலூர், சு.ஆடுதுறை ஆகிய அரசுப் பள்ளிகளிலும் சூப்பர்- 30 வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த சிறப்பு வகுப்பில் சேர்ந்து பயின்ற 259 மாணவ, மாணவிகளில் இதுவரை 8 பேர் மருத்துவம், 5 பேர் செவிலியர், 2 பேர் கால்நடை மருத்துவம், அண்ணா பல்கலைக் கழகம் உள்பட அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் 104 பேரும், 70-க்கும் மேற்பட்டோர் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் பயில்கின்றனர். மேலும், அண்மையில் வெளியான நீட் தேர்வு முடிவில் சிறப்பு வகுப்பில் பயின்ற 20 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் பணியிடை மாற்றம், மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்பின்மை, நிதி பற்றாக்குறையால் குரும்பலூர், பாடாலூர், சு.ஆடுதுறை ஆகிய பள்ளிகளில் செயல்பட்டு வந்த சிறப்பு வகுப்புகள் முடங்கின.
இதேபோல, பெரம்பலூரில் சிறப்பு வகுப்பில் பயிலும் மாணவர்களும் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இன்றி சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து சூப்பர்- 30 சிறப்பு வகுப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என். ஜெயராமன் கூறியது:
பிகார் மாநிலம் பாட்னாவில் ஆனந்த்குமார் என்பவர் தனது ஐ.ஐ.டி. படிக்கும் ஆசை நிறைவேறாததால், ஆர்வம் கொண்ட மாணவர்களுக்காக சூப்பர்- 30 என்னும் பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருவதையறிந்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த தரேஸ் அகமது, சூப்பர்- 30 என்னும் உறைவிட சிறப்பு பயிற்சி வகுப்புகளை பெரம்பலூரில் தொடங்கினார்.
தமிழகத்தில் பெரம்பலூரில் சூப்பர்- 30, ராமநாதபுரத்தில் எலைட் என்னும் பெயரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற, ஏழை மாணவர்கள் பலர் பயனடைந்துள்ளனர். பெரம்பலூரில், ஒருசில நடைமுறை பிரச்னைகளால் இத்திட்டம் தொய்வடைந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இத்திட்டத்துக்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்கினால் கல்வித் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுவதோடு, கிராமப்புற ஏழை மாணவர்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில வாய்ப்பாக அமையும். தமிழக அரசின் நிதியும், மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்பும் இருந்தாலே இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் சிறப்பாகச் செயல்படுத்தலாம் என்றார் அவர்.
இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவது குறித்த கருத்துரு பெரம்பலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக அரசு, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.
- கே. தர்மராஜ்

Flash News : உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் அரசுக் கலை கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகளை துவக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2018-19-ல் அரசுக் கலை கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.ஃ.பில் , 71 பிஎச்டி படிப்புகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்கவும் மற்றும் முதற்கட்டமாக 693 பணியிடத்தில் 270 புதிய உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்பவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

DEE PROCEEDINGS-புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளித்தது-அலுவலர்களின் அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் கோருதல் சார்பு

How to use Tamilnadu school students Attendance Mobile App - Teachers Handling Video :

மகப்பேறு விடுப்பு அரசு புது உத்தரவு

இரட்டைக் குழந்தை பெற்ற, அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, இரண்டாவது மகப்பேறுக்கும் விடுமுறை வழங்கலாம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, 270 நாட்கள், மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.

இதற்கான அரசாணை, 2016 நவம்பரில் வெளியானது. அதில், திருமணமான அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, இரண்டு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பாக, தலா, 270 நாட்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.ஆனால், முதல் பிரசவத்திலேயே இரட்டை குழந்தைகள் பெற்றால், அவர்களுக்கு, இரண்டாவது மகப்பேறுக்கு விடுப்பு அளிக்க அதிகாரிகள் மறுத்தனர்.

இந்நிலையில், முதலாவது மகப்பேறில் எத்தனை குழந்தைகள் பெற்றாலும், அவர்களுக்கு இரண்டாவது மகப்பேறுக்கும், 270 நாட்கள் விடுமுறை அனுமதிக்கலாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, பணியாளர் நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள அரசாணையை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது

25/6/18

ஆசிரியர்களின் பணியை கண்காணிக்க வந்துவிட்டது அலைபேசி செயலி

பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' முறையை கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க 'சி.இ.ஓ., போர்டல்' என்ற புதிய அலைபேசி செயலியை கல்வித்துறை கொண்டு வருகிறது. பள்ளி அமைவிடம் குறித்த அட்ச, தீர்க்க ரேகை விபரங்களும் இருக்கும். அந்த செயலியை ஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போனில்' பதிவிறக்கம் செய்து பள்ளிக்குள் செல்லும்போதும், வெளியேறும்போதும் விரல்ரேகையை பதிய வேண்டும்.

அட்ச, தீர்க்க ரேகையில் அதிகபட்சம் 100 மீ., வரை வேறுபாடு இருந்தால் மட்டும் ஏற்கும். ரேகை பதியாவிட்டால், விடுப்பு விபரங்களை பதிய வேண்டும்.அதேபோல் மாணவர் வருகைப் பதிவுக்கு 'டி.என்., அட்டனென்ஸ்' என்ற செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அவரவர் அலைபேசி மூலம் மாணவர்கள் வருகைப்பதிவையும் மேற்கொள்ள வேண்டும். விடுப்பு எடுக்கும் நாட்களில், அவரது வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவை பிற ஆசிரியர்கள் பதியலாம்.

ஆசிரியர்கள் தங்களது அலைபேசி மூலம் பதிந்தால் மட்டுமே, பணிக்கு வந்ததாக கருதப்படும்.மேலும் பாடப்புத்தகத்தில் 'கியூ.ஆர்., கோடை' 'ஸ்கேன்' செய்து பாடம் எடுக்க வேண்டும். இதன்மூலம் அவர் எந்தந்த பாடங்களை அன்றைய தினம் கற்பித்தார் என்பதை கண்காணிக்கலாம். அவர் 'கியூ.ஆர்., கோடை' 'ஸ்கேன்' செய்யவில்லை எனில் பாடம் எடுக்கவில்லை என, கருதப்படும்.

தரவுகள் அனைத்தும் அதிகாரிகள் பார்வைக்கு செல்வதால் ஆசிரியர்கள் வருகை பதிவு, பாடம் நடத்தியது போன்ற விபரங்களை உடனுக்குடன் அறியலாம்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'ஏற்கனேவே 'எமிஸ்,' 'டீச்சர் புரைபைலில்' சேகரிக்கப்பட்ட மாணவர், ஆசிரியர்கள் விபரங்கள் உள்ளன. மேலும் ஆசிரியர்களின் அலைபேசி எண் விபரம் சேகரிக்கப்பட உள்ளன. இதன்மூலம் முறையாக பணிக்கு செல்லாத ஆசிரியர்கள் சிக்குவர்,' என்றார்.

பதவி உயர்வு கலந்தாய்வு திடீர் ரத்து : இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம்

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகலந்தாய்வு திடீரென நிறுத்தப்பட்டதால், ஏமாற்றமடைந்தனர்.

இப்பள்ளிகளில் 2003 பிப்., வரை இடைநிலை ஆசிரியர்கள்நியமிக்கப்பட்டனர். அதன்பின் பட்டதாரி ஆசிரியர்களே நியமிக்கப்படுகின்றனர். இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதலுக்கு சிக்கல் ஏற்பட்டது.தொடர் போராட்டத்தையடுத்து தமிழ் பாடத்திற்கு 66.6 சதவீதம், மற்ற பாடங்களுக்கு 50 சதவீதம் என, இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் 21 ல் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவித்த நிலையில், திடீரென நிறுத்தப்பட்டதால், இடைநிலை ஆசிரியர்கள் கொதிப்படைந்தனர்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சங்கர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் காலிப்பணியிடம் இல்லை என கூறி, கலந்தாய்வை நிறுத்திவிட்டனர்.தவறான விதிமுறை மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குறைத்ததால் இப்பிரச்னை. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கனவாகிவிட்டது. இதன்மூலம் 5 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.

தொகுப்பூதியத்தில் நியமனமான 42 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் 2006 ல் காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டனர்.அப்போதே 50 சதவீத இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்திருந்தால், இந்த குழப்பம் வந்திருக்காது.இதேபோல் அரசுஉதவி பெறும் பள்ளிகளிலும் பதவி உயர்வின்றி 13 ஆயிரம் பேர் தவிக்கின்றனர், என்றார்.

'பயோமெட்ரிக்" கொண்டு வருவதில் சிக்கல் - மாற்றாக Mobile App Attendance

பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' முறையை கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க 'சி.இ.ஓ., போர்டல்' என்ற புதிய அலைபேசி செயலியை கல்வித்துறை கொண்டு வருகிறது.
பள்ளி அமைவிடம் குறித்த அட்ச, தீர்க்க ரேகை விபரங்களும் இருக்கும். அந்த செயலியை ஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போனில்' பதிவிறக்கம் செய்து பள்ளிக்குள் செல்லும்போதும், வெளியேறும்போதும் விரல்ரேகையை பதிய வேண்டும்.
அட்ச, தீர்க்க ரேகையில் அதிகபட்சம் 100 மீ., வரை வேறுபாடு இருந்தால் மட்டும் ஏற்கும். ரேகை பதியாவிட்டால், விடுப்பு விபரங்களை பதிய வேண்டும்.அதேபோல் மாணவர் வருகைப் பதிவுக்கு 'டி.என்., அட்டனென்ஸ்' என்ற செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் அவரவர் அலைபேசி மூலம் மாணவர்கள் வருகைப்பதிவையும் மேற்கொள்ள வேண்டும். விடுப்பு எடுக்கும் நாட்களில், அவரது வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவை பிற ஆசிரியர்கள் பதியலாம். ஆசிரியர்கள் தங்களது அலைபேசி மூலம் பதிந்தால் மட்டுமே, பணிக்கு வந்ததாக கருதப்படும்.

மேலும் பாடப்புத்தகத்தில் 'கியூ.ஆர்., கோடை' 'ஸ்கேன்' செய்து பாடம் எடுக்க வேண்டும். இதன்மூலம் அவர் எந்தந்த பாடங்களை அன்றைய தினம் கற்பித்தார் என்பதை கண்காணிக்கலாம். அவர் 'கியூ.ஆர்., கோடை' 'ஸ்கேன்' செய்யவில்லை எனில் பாடம் எடுக்கவில்லை என, கருதப்படும்.
தரவுகள் அனைத்தும் அதிகாரிகள் பார்வைக்கு செல்வதால் ஆசிரியர்கள் வருகை பதிவு, பாடம் நடத்தியது போன்ற விபரங்களை உடனுக்குடன் அறியலாம்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'ஏற்கனேவே 'எமிஸ்,' 'டீச்சர் புரைபைலில்' சேகரிக்கப்பட்ட மாணவர், ஆசிரியர்கள் விபரங்கள் உள்ளன. மேலும் ஆசிரியர்களின் அலைபேசி எண் விபரம் சேகரிக்கப்பட உள்ளன. இதன்மூலம் முறையாக பணிக்கு செல்லாத ஆசிரியர்கள் சிக்குவர்,' என்றார்a