யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/9/18

உதயசந்திரன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் இவை தான்!


தொல்லியல் துறை - உதயசந்திரன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் இவை தான்!

தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் பாடநூல்திட்ட இயக்குநராக இருந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், தொல்லியல் துறையின் இயக்குநராக கடந்த மாதம் 25-ம் தேதி மாற்றப்பட்டார். அதையடுத்து இம்மாதம் 3-ம் தேதி தொல்லியல் துறையின் இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றப்பட்ட பிறகு, அந்தத்துறையில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினார். கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு உயிர் கொடுத்தார், தேர்வு முடிவுகளில் முதல் இடங்களை அறிவிக்கும் முறையை மாற்றினார். புதிய பாடத்திட்டம் உருவாக்குவதில் பல புதுமைகளை நிகழ்த்தினார். தற்போது, தொல்லியல் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் உதயசந்திரன், இந்தத் துறையிலும் பல புதுமைகளை, மாற்றங்களை நிகழ்த்த வேண்டும்.தமிழக தொல்லியல் துறை தொல்பொருளியல், ஆய்வியல், ஆய்வகம், நூலக ஆய்வு கையெழுத்துகள், புகைப்படம் அச்சிடும் தளம், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட தளங்களில் செயல்பட்டு வருகிறது. அதோடு, மிகப் பழைமையான கட்டடங்கள், கோயில்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் தொல்லியல் துறையின் தலையாயக் கடமை. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இவற்றுள் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்தக் கோயில்களின் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பிற்கும் தொல்லியல் துறை தான் பொறுப்பு. தற்போது பொறுப்பேற்றிருக்கும் உதயசந்திரன், பலரும் கண்டுகொள்ளாமல் விட்ட, தொல்லியல் சார்ந்த விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே தொல்லியல் அறிஞர்களின் வேண்டுகோளாக உள்ளது.

கோயில்கள் பாதுகாப்பு:


தொன்மையான கோயில்களைப் பராமரிக்க, அறநிலையத்துறையில் உள்ள அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்து வருகிறது தொல்லியல் துறை. அப்படி இருந்தாலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்கள் தொடர்ந்து சிதிலமடைந்து வருகின்றன. அந்தக் கோயில்களைப் புனரமைக்கவும் அறநிலையத்துறை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால் பல கோயில்கள் இடிந்து போகும் நிலைக்குச் செல்கின்றன.

நடுகற்கள் பாதுகாப்பு:

வேலூர் மாவட்டம், ஏலகிரி மலைப் பகுதியில் சோழர் காலத்தைச் சேர்ந்த கி.பி. 10-ம் நூற்றாண்டு நடுகற்கள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன. 2.5 அடி உயரத்தில் முதல் நடுகல் கற்திட்டை வடிவிலும், இரண்டாவது நடுகல் 4 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்டு, புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகற்கள், ஏலகிரியில் வரலாற்றுக் காலம் தொட்டு மக்கள் வாழ்ந்து வருவதையும், வரலாற்றை இம்மக்கள் நடுகற்கள் மூலம் பதிவு செய்துள்ளதையும், பதிவு செய்துள்ளவற்றையும் தற்போது அறிய முடிகிறது. இந்த நடுகற்கள் இரண்டும் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. இதுபோல தமிழகத்தில் பல நடுகற்கள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை முறையாகப் பாதுகாக்க தொல்லியல் துறை ஆவண செய்ய வேண்டும்.

செப்பேடுகள் பாதுகாப்பு:


2,300 ஆண்டுகளுக்கு முன், செப்புப் பட்டயங்களில் எழுதும் பழக்கம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. தானம் அளிக்கும் மன்னனுக்கு ஓலைச்சுவடி, தானம் பெறுவோருக்கு செப்பேடு, பொதுமக்கள் பார்வைக்கு கல்வெட்டு என, மூன்று விதங்களில் ஆவணப்படுத்தப்பட்டன. சோழர்களின் ஆட்சியில், முதலாம் பராந்தகன் முதல், மூன்றாம் ராஜராஜன் வரை, மிக நேர்த்தியான தகடுகளில், அழகான எழுத்துகளுடன், துல்லியமான எல்லைகளைக் குறிக்கும் செப்பேடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. செப்பேடுகள், அரச பரம்பரையைப் பற்றி அறிய உதவும் ஆவணங்களாக உள்ளன. பதிப்பிக்கப்படாத செப்பேடுகள் அதிகளவில் உள்ளதால், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இவற்றைப் பதிப்பிக்க வேண்டும்.

பெருங்கற்கால கல்திட்டு:

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல் திட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதைச் சுற்றி எண்கல் வட்டங்கள் அமைக்கப்பட்டன. இதன் அமைப்பை வைத்து, இது 'பெருங்கற்காலம்' என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்தப் பகுதியில், கி.மு., 1000 முதல் கி.பி. 500-ம் ஆண்டைச் சேர்ந்த மக்கள் வசித்துள்ளனர். இதில் இறந்தவர்களை அடக்கம் செய்ததன் நினைவாக கல்திட்டுக்களும் இங்கு உள்ளன. கட்டடக் கலையின் தொடக்கம் இதுபோன்ற கல்திட்டுகள் தான் என்கிறார்கள் அறிஞர்கள். இதுபோன்ற கல்திட்டுகள், இந்தப் பகுதியில் அதிகமாகக் காணப்பெறுகின்றன. இவற்றையும் கண்டெடுத்துப் பாதுகாக்க வேண்டும்.

மலை சிற்பங்கள்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழ வளவில் பஞ்சபாண்டவர் மலை உள்ளது. இங்குள்ள சிற்பங்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வருகின்றன. ஆனால், தொல்லியல் துறை இதை முறையாகப் பராமரிப்பதில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 11-ம் நூற்றாண்டு வரை சமணர்கள் இம்மலையை வழிபாட்டுத் தலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள். மிகவும் பழைமையான அரியச் சிற்பங்கள் இங்கு உள்ளன. இதுபோன்ற மலைச் சிற்பங்கள் தமிழகத்தில் எங்கெல்லாம் உள்ளதோ அவற்றைக் கண்டுபிடித்து, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து முறையாகப் பராமரிக்க வேண்டும்.


அகழ்வாராய்ச்சி:

திண்டுக்கல் அருகே பாடியூர் மேட்டுப்பகுதியில் சமூக ஆர்வலர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் 3 ஆயிரம் ஆண்டு பழங்கால ஆபரணங்கள், ஓடுகள், சிதிலமடைந்த முதுமக்கள் தாழி, செப்பேடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. இந்த இடத்தில் போர் நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்தால், இன்னும் பல பொருட்கள் கிடைக்கும் என்று நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். தமிழகத்தில் ஏற்கெனவே நடந்த அகழ்வாராய்ச்சிகள் பல பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை மீண்டும் தொடங்க வேண்டும். இன்னும் பல பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும். அதுபோல, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்வெட்டுகள் அதிக இடத்தில் தொடர்ந்து கண்டெடுக்கப்படுகின்றன. அவற்றை சேமித்து, அதைப் படியெடுத்து சேமிக்க வேண்டும்.

கீழடி:

கீழடியில் தற்போது 4ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இந்த அகழாய்வுக்கு 55 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போது 33 குழிகள் தோண்டப்பட்டு களிமண் அச்சுகள், பானை ஓடுகள், தங்க அணிகலன்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தமிழக தொல்லியல் துறை அகழாய்வு குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்க வில்லை. இதுவரை கீழடியில் நடந்த அகழாய்வு குறித்த முழு விவரத்தையும் உடனடியாக வெளியிட வேண்டும். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு, விரைவில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

வேலைக்கு தகுதியான பட்டதாரிகள் கிடைக்கவில்லை- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு:

பல பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் இல்லை என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியுள்ளார்.
வேலைக்கு தகுதியான பட்டதாரிகள் கிடைக்கவில்லை- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
கரூர்:

கரூர் க.பரமத்தி சேரன் பொறியியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கரூரில் நடந்தது. சேரன் அறக்கட்டளை தலைவர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, அம்பிகை பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு 124 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விரும்பியது கிடைப்பதே வெற்றி என்ற எண்ணம் நம்மிடம் இருக்கிறது. விருப்பத்திற்கு மாறாக கிடைப்பதும் வெற்றியே. நான் பல நேரங்களில் விரும்பாததையும் ஏற்றுக் கொண்டேன். அதனால்தான் உங்கள் முன்னால் பேசும் வாய்ப்பினை பெற்றுள்ளேன். இந்தியாவில் பல வெற்றியாளர்கள் செல்வக்குடியில் பிறந்தவர்களோ, பெரிய கல்வி கூடங்களில் பயின்றவர்களோ கிடையாது. சாதாரண பள்ளியில் தாய்மொழியில் படித்தவர்கள் வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள். 
சாதிக்கும் சந்தர்ப்பங்கள் இந்தியாவில் அதிகம் உள்ளன. அயராத உழைப்பும், உயர்ந்த லட்சியமும், தேவையான திறமைகளும் இருந்தால் நிலவுக்கு போகும் கனவு நனவாகும். பட்டதாரிகளுக்கு வேலையில்லை என்ற செய்தியை கேள்வி பட்டிருப்போம். அதே நேரத்தில் பல பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் இல்லை என்பதும் உண்மையாகும். எனவே பணிகளுக்கு தேவையான தகுதியினை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக கல்லூரி முதல்வர் மகுடேஸ்வரன் வரவேற்றார். அறக்கட்டளை செயலாளர்  மனோகரன், பொருளாளர் அப்னா தனபதி, பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நன்றி மாலை மலர் .

நாளை 11.9.18 ,சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஒன்றியங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை. இம்மானுவேல் சேகரன் நினைவு நாள். பதிலாக வேலை நாள்.15.9. 18

10/9/18

கானல் நீராகும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் -மாணவர் எண்ணிக்கை சரிவு-பயிற்சி முடித்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி -?தகுதியை வளர்கிறதா தகுதிதேர்வு ??

ஆசிரியர்கள் இந்த உலகின் பாவத்தை சம்பாதித்த அப்பாவிகள்?

வேலூர் மாவட்ட நிகழ்வைப் பார்த்திருப்பீர்கள்.
 ஓர் PG ஆசிரீயர்!
உங்களைப் போலவே படித்துவிட்டு டிஆர்பி எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டு பணியில் சேர்ந்தவர், தன்னிடம் படிக்கும் மாணவன் திறனுடையவனாக முன்னேறவேண்டும் என்ற வேட்கை கொண்டவர் இன்று அவரது பள்ளியிலேயே நிராதரவாக்கிடப்பட்டு தனித்து சூழப்பட்டு பெண்களால்! அப்பள்ளி மாணவனாலேயே அடித்து வீழ்த்தப்பட்டு மண்ணில் சாய்கிறார்.

பார்க்கும் போதே குலை நடங்குகிறது.


Mass violence! என்றோ!Public rampage!என்றோ சிலரது கருத்துக்களாக மாறிப்போகும்.
நாள்பட மறந்தும் போகும்.


தான் பணியாற்றிய பள்ளியிலேயே தாக்கப்படும் ஆசிரியருக்கு பணிப்பாதுகாப்பு எங்கே?

பேருந்து ஓட்டுநர் எங்கேயாவது மோதிவிட்டால் இறங்கி ஓட்டம் எடுப்பதுபோல் இனி ஆசிரீயர்களும் ஓட வேண்டுமா?
இருநாட்கள் முன் ஆசிரியர் தினமென்று வாழ்த்திவிட்டு அடுத்த இரு நாட்களிலேயே அடிக்கும் காணொளியைப் போடுகிறார்கள்.



மாணவன் எழுதியதாக சொல்லப்படும் கடிதத்தின் உண்மைத்தன்மை உறுப்படும் முன்னரே கற்பிக்கும் ஆசானைஅடித்து துவைக்கிறார்கள்.மாணவனின் கடிதத்தில் எல்லோர் மேலுமே வெறுப்படைந்ததாக உள்ளதற்கு காரணம் யார்?அனைவரின் மேலுமே குற்றம் சொல்லிடும் அவனது மனநிலை என்ன?

இதற்கிடையே குறைந்தது தேர்ச்சியாவது பெற வைத்திட முடியாத நீங்கள் வாங்கும் சம்பளம் தர்மமா?எனவும் அதிகாரிகள் கேட்டுவிடுகிறீர்கள்.


தாக்கப்பட்ட ஆசிரியரின் மனநிலை என்னவாக இருக்கும்?அவர் தாக்கப்படுவதைப்பார்க்கும் அவரது குழந்தைகளும்,மனைவியும்,பெற்றோரும் இனி என்ன அவருக்கு சொல்லப்போகிறார்கள்?


கத்தியால் குத்திய மாணவனுக்கு தண்டனை இல்லை.அவனுக்கு கவுன்சலிங் கொடுத்து ராஜமரியாதையோடு அடுத்த பள்ளிக்கு கூட்டிச் சென்று சேர்த்து விடுகிறீர்கள்.ஆனால் அடிபட்ட ஆசிரியருக்கு என்றைக்காவாவது ஆறுதல் சொன்னதுண்டா?


எங்களின் பாதுகாப்பு யாரிடம் இனி கேட்பது?

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இந்த உலகின் பாவத்தை சம்பாதித்த அப்பாவிகள்?

TNPSC.-க்கு கை கொடுத்த "ஆன்-லைன்': 7 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் பணம் சேமிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.) ஆன்-லைன் முறை காரணமாக ரூ.100 கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் முறை வழியாக 139-க்கும் அதிகமான தேர்வுகளின் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு அவை நடத்தப்பட்டுள்ளன.

 குரூப் 1, குரூப் 2 உள்பட பல முக்கிய அரசுத் துறைத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுகளுக்கு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் காகிதத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வந்தன.

 இந்த விண்ணப்ப முறையில் ஓ.எம்.ஆர். எனப்படும் கணினி வழி ஆய்வு செய்யும் காகிதமும் இணைக்கப்பட்டு தேர்வர்களுக்கு அளிக்கப்பட்டன. இதனால், குரூப் 2, குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் போன்ற தேர்வுகளை நடத்தும் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன.
 ஆன்-லைன் முறை: காகித முறையிலான விண்ணப்ப முறைக்கு மாறாக, ஆன்-லைன் முறையில் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியது. இந்த முறை கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரியில் செயலாக்கத்துக்கு வந்தது.


 ஆன்-லைன் தேர்வு முறை காரணமாக, தேர்வர்கள் அனைத்துத் தேர்வுகளையும் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தின் வழியாக விண்ணப்பம் செய்து வருகிறார்கள். இந்தத் தேர்வு முறையால் தேர்வர்கள் எளிமையான முறையில் விண்ணப்பிப்பது மட்டுமின்றி, அரசுக்கும் பெருமளவு செலவுகள் குறைந்துள்ளன.

 இது குறித்து டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் கூறியதாவது:-டி.என்.பி.எஸ்.சி. தேர்வு வரலாற்றில் மைல்கல்லாக கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஆன்-லைன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் 139 தேர்வுகளுக்கான அறிவிக்கைகளும், அதற்கான விண்ணப்பங்களும், தேர்வு முடிவுகளும் இணையதளத்திலேயே வெளியிடப்பட்டன.

ராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம் குறிப்பிடப்படும் - சென்னையில் ராகிங் தடுப்புக்குழு ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றபின் அமைச்சர் அன்பழகன் பேட்டி

கிருஷ்ணகிரி அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்!; ஆசிரியர் மீதான நடவடிக்கையை எதிர்த்து மாணவர்கள் 'நீல் டவுன்' போராட்டம்

கிருஷ்ணகிரி அருகே அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியரை முதன்மைக் கல்வி அலுவலர் எந்தவித விசாரணையுமின்றி சஸ்பெண்ட் செய்துள்ள சம்பவம்
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கணித பாட ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெயபிரகாஷ் (55). கடந்த 5 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, திடீரென்று ஆசிரியர் ஜெயபிரகாஷை இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், பெற்றோர் ஆசிரியர் கழகம், மாணவர்கள், ஊர்மக்கள் அளித்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ஆனால், புகார் மனுக்களின் உள்விவகாரங்கள் குறித்து விரிவான விளக்கம் சொல்லப்படவில்லை. மேலும், புகார்கள் தொடர்பாக அவரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்படவில்லை. விளக்கம் கேட்டு குற்றச்சாட்டு குறிப்பாணைகளும் வழங்கப்படவில்லை. வழக்கமான சம்பிரதாயமான நடவடிக்கைகளை தவிர்த்துவிட்டு, திடீரென்று ஆசிரியர் ஜெயபிரகாஷை சஸ்பெண்ட் செய்துள்ளதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.


இதற்கிடையே, ஆசிரியர் ஜெயபிரகாஷ் மீதான நடவடிக்கையை எதிர்த்தும், அவரை மீண்டும் பள்ளியில் சேர்க்கக் கோரியும் பள்ளி மாணவ, மாணவிகள் முட்டிக்காலிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறப்பாசிரியர்கள் சம்பளம் நிறுத்தம்

கல்வித்துறையில் சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் மாநில அரசின் பங்களிப்பு முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளதாக சர்ச்சை
எழுந்துள்ளது.


பள்ளி கல்வியில் அனைத்து வகை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும் கல்வி பயிற்றுவிக்கும் வகையில் அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில் ஒருங்கிணைந்த உள்ளடக்கிய இடைநிலை கல்வித்திட்டம் (ஐ.இ.டி.,) 2009 -10ல் துவக்கப்பட்டது. இதில் 13,115 மாணவர் படிக்கின்றனர். இவர்களுக்காக 202 சிறப்பாசிரியர் தொகுப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் 60:40 சதவீதம் அடிப்படையில் சம்பளம் வழங்க நிதி ஒதுக்கப்படுகிறது. நிர்வாக சீரமைப்பிற்காக எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் ஆசிரியர் கல்வி பயிற்சி மையம் (டயட்) ஆகியன ஒன்றிணைக்கப்பட்டு எஸ்.எம்.எஸ்.ஏ., (சமஹ சிக்ஷான் அபியான்) என மாற்றம் செய்யப்பட்டது.

இதை காரணம் காட்டி ஓராண்டாக சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மாநில அரசின் 40 சதவீதம் பங்களிப்பு சம்பளம் நிறுத்தப்பட்டது. இதனால் 34,148 ரூபாய் என்ற சம்பளம் 25 ஆயிரமாக குறைந்து விட்டது. இதனால் சிறப்பாசிரியர்கள் கடும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுகலை சிறப்பாசிரியர்கள் சங்க மாநில செயலாளர் சரவணன் கூறியதாவது:ஓராண்டாக மாநில அரசின் பங்களிப்பு சம்பளம் முன்னறிவிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர 2012 - 13ம் ஆண்டு முழுவதும் சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் 2013 - 2014 மற்றும் 2014 -2015ம் ஆண்டுகளில் 10 மாதம் என 22 மாதங்கள் சம்பளம் 'அரியர்ஸ்' வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. கல்வி செயலாளர், இயக்குனரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் அதிருப்தியடைந்த பலர் வேலையை விட்டு சென்றனர். இதில் ஏற்பட்ட காலியிடங்களில் 59 பேர் டி.ஆர்.பி., மூலம் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு 41 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பணியில் உள்ள பிற ஆசிரியர்களுக்கும் இதுபோல் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

அரசுப் பள்ளியை தத்தெடுத்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி...

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் அரசுப் பள்ளியை தத்தெடுத்து அதற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்.

* வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த நெரிஞ்சந்தாங்கல் கிராமத்தில்அரசு துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 1958 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பள்ளி , சரியாக சீரமைக்கப்படாததால் 44 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.

* பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் மாணவர்கள் வேறு பள்ளிக்கு செல்லும் நிலையும் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் இந்த பள்ளியை தத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ரவி.

* சோளிங்கர் பேருந்து நிலையத்தில் இனிப்பு கடை நடத்தி வரும் ரவி, இந்த அரசுப் பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முன்வந்தார். போஸ்டர்கள், விளம்பர பேனர்கள் வைப்பதற்கு ஆகும் செலவை பள்ளிக்கு கொடுக்க முன் வந்தால் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்பதை உணர்ந்த அவர் அதற்கான முயற்சியில் இறங்கினார்.

* மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதிகள், விளையாட்டு பூங்கா உள்ளிட்டவற்றை அவர் செய்து கொடுத்தார்.  வகுப்பறையில் மின்விசிறி போன்றவற்றை செய்து கொடுத்துள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்..

* பள்ளியின் பக்கம் செல்லாததால் படிப்பின் அருமையை உணர்ந்ததாக கூறிய ரவி, மாணவர்களின் நலனே தனக்கு முக்கியம் என்றும் கூறியுள்ளார்.5 லட்ச ரூபாயில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து  கொடுத்த ரவிக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் ரூ.16 கோடியில் முன்மாதிரி பள்ளிகள் : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் ரூ.16 கோடியில் முன்மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் முதற்கட்டமாக ரூ.50 லட்சம் மதிப்பில் முன்மாதிரி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்தான் மாணவர் நலன் கருதி இலவச பேருந்து அட்டை, மிதிவண்டி, சீருடை வழங்கப்பட வருவதாகவும் தெரிவித்தார்.

பள்ளி நேரத்தில் வாட்ஸ் ஆப், பேஸ்புக்கை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்!!


திறனாய்வு தேர்வுக்கு பள்ளிகளில் பயிற்சி :

9, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வுக்கான
பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களின் படிப்புக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மத்திய அரசின் உதவி கிடைக்கும். இந்த தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பலரும் பின்தங்கி இருக்கின்றனர்.

இதை தவிர்க்க, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க கல்வித்துறை முடிவு செய்தது.
அதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும் சில மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்!!

ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்!!

ஆசிரியர்கள் கியூ.ஆர் கோடு மூலம் பாடம் நடத்த மட்டுமே அனுமதி.
வாட்ஸ் ஆப், பேஸ்புக்கை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசு கலைக் கல்லூரிகளில் 1,883 ஆசிரியர்கள் நியமிக்க தமிழக அரசு அனுமதி : அரசாணை வெளியீடு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 1883 கவுர விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது.
இதுகுறித்து, உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணை:கடந்த 2017-18ம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் இடங்களில் 1683 கவுரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டது. மேலும், மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த மே மாதம் கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் 2018-19ம் கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே 2640 காலிப் பணியிடங்களில் கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அனுமதிக்கவும், அதற்கான நிதி ஒதுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்துக் கொடுக்கவும் ஆணை வெளியிட கேட்டுக் கொண்டார். கல்லூரிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமாக பரிசீலித்து 2018-19ம் கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரி, பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் முறையான உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரை 1883 கூடுதல் கவுரவ விரிவுரையாளர்களை (கூடுதல் 1) பணியமர்த்த அனுமதியும், திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை இக்கல்வியாண்டு முதல் பின்பற்றவும் அரசு ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர் மீது கொலைவெறி தாக்குதல் - வேலூர் மாவட்ட "அனைத்து ஆசிரியர் சங்க கூட்டமைப்புடன்" வேலூர் மாவட்ட "CEO" அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை விவரம்!!

தமிழக அமைச்சரவை நிறைவு - நளினி உட்பட அனைவரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்க முடிவு:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வதற்காக ஆளுநருக்கு பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அமைச்சரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
தமிழக அமைச்சரவை நிறைவு - நளினி உட்பட அனைவரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்க முடிவு


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சித்தார். ஆனால் இவர்களது விடுதலைக்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருந்தது.

இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசே முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இதையடுத்து, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, விடுதலை செய்வது குறித்து பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.



இந்நிலையில், இன்று மாலை சுமார் 4 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடியது. துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பரிந்துரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைக்கப்படும்.

அதன்பின்னர், ஆளுநர் இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கமுடியும் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் முடிவு குறித்து பலரும் எதிர்பார்த்துள்ளனர்

பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஸ்டிரைக் - கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு:

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறுவதால் தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

பெட்ரோல் - டீசலுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை பெருமளவில் குறைத்ததுடன் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது.



முழு அடைப்புக்கு தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த போராட்டம் தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்து பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சங்கமான தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறும்போது, “நாளை கடை அடைப்பு நடைபெறுமா? என்பது குறித்து வணிகர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்” என்றார்.

ஐ.என்.டி.யு.சி., தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.சி.சி.டி.யு., ஏ.ஐ.யு.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது.

முழு அடைப்பையொட்டி நாளை அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. ஆனால் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அந்த சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிக்கு வருவதைப் பொறுத்து பஸ்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போல் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள், லாரிகளும் பெட்ரோல்- டீசல் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓடாது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ரெயில்கள் வழக்கம்போல் ஓடும்.

தமிழகத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, கோவை, நெல்லை உள்பட முக்கிய நகரங்களில் ஏராளமான தனியார் பஸ்கள் ஓடுகின்றன. இந்த பஸ்கள் நாளை ஓடுமா? என்பது பற்றி இன்று மாலை ஆலோசனைக்குப்பின் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் 4½ லட்சம் லாரிகள் ஓடாது என்றும் சம்மேளனத்தின் செயலாளர் தன்ராஜ் கூறினார்.

நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் மூடப்படும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கல்விக்கு கைகொடுக்கும் ஜி.வி.பிரகாஷ் - தமிழ் சொந்தங்களுக்கு வேண்டுகோள் :

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகர்களுள் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் கல்விக்கு கைகொடுக்கும் விதமாக அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் சம்பளத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் சமூக வலைதளங்களிலும் ஆர்வமாக இருக்கிறார். அவ்வப்போது சமூக கருத்துக்களையும் பகிர்ந்து வரும் ஜி.வி. இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் அரசுப்பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது,
கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை தேவை. அது அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளது. அதற்கு நாம் இப்போது முயற்சி எடுக்க வேண்டும். ஏற்கனவே கல்வி என்பது வியாபரமாக உள்ளது. இன்னும் 5 வருடங்களில் ஏழைகளுக்கு இலவச கல்வி என்பதே சாத்தியம் இல்லாமல் போய்விடும். உலகஅளவில் சாதித்த பல தமிழர்கள், அரசு பள்ளிகளில் படித்தவர்களே. தற்போது 890 அரசுப் பள்ளிகள் மூடும்நிலையில் உள்ளது. ஏனெனில் அங்கு 50-க்கும் குறைவான அளவிலான மாணவர்களே உள்ளனர். நகர்ப்புறங்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. இதில் எனது சிறிய முயற்சியாக சென்னையில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. சொல்லித் தரும் ஒரு தனியார் ஆசிரியரின் சம்பளத்தை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். என்னை இந்த நல்முயற்சிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி, இவ்வாறு கூறினார்