யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/10/18

விலைபோட்டு வாங்கவா முடியும் கல்வி?

ஓவ்வொருவரின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த கல்வியின் நிலை இன்றைக்கு தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது? பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகி வேதனையான கட்டத்தில் பரிதவித்துக்கொண்டு அல்லவா இருக்கிறது.
விலைபோட்டு வாங்கவா முடியும் கல்வி?
கல்வி...! ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்று. கல்வி என்ற அளவுகோலே ஒருவரின் அறிவு, ஆற்றலை நிர்ணயிக்கிறது. அந்த அறிவு, ஆற்றலே வாழ்க்கையில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் தருகிறது. காரணம், கல்வித் தகுதியின் அடிப்படையிலேயே வேலை, அதை வைத்தே ஊதிய அளவும் மாறுபடுகிறது.இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த கல்வியின் நிலை இன்றைக்கு தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது? பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகி வேதனையான கட்டத்தில் பரிதவித்துக்கொண்டு அல்லவா இருக்கிறது.

ஆங்கிலம் தெரிந்திருந்தால்தான் கல்லூரியிலும், அதன் பின்பு பணிதளத்திலும் ஜொலிக்க முடியும் என்ற நிலையில், பள்ளி மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை வசதியாக பயன்படுத்திக்கொண்ட தனியார் பள்ளிகள் கட்டணம் என்ற பெயரில் பெரும் தொகை வசூல் செய்து கல்வித்துறையில் கல்லாக்கட்டத் தொடங்கிவிட்டன.

இன்னொருபுறம், தாய் மொழியிலான தமிழ் வழிக்கல்வியை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் விருப்பம் ஆங்கில வழிக் கல்வியை நோக்கி இருப்பதால், புற்றீசல் போல தனியார் பள்ளிகள் முளைக்கின்றன. தமிழ் வழியிலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் படிப்படியாக மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நேரத்தில் ஆங்கில கல்வியை மாணவர்களும், பெற்றோரும் விரும்புவதற்கான காரணங்களை புறந்தள்ளிவிடவும் முடியாது. இதற்கு நியாயமான காரணங்களும் இருக்கின்றன. அதாவது, 12-ம் வகுப்புக்கு பிறகு, உயர்கல்வி படிக்க மாணவர்கள் கல்லூரிகளை நாடும்போது, அனைத்து வகை பட்டயப்படிப்பு, பட்டப்படிப்புகளிலும் பெரும்பாலும் ஆங்கிலமே மேலோங்கி நிற்கிறது.

உயர் கல்வியில் தமிழ் மங்கிப்போய் விடுவதால், தமிழ் வழி மாணவர்கள் ஆங்கிலத்தில் பாடங்களை படிக்க கஷ்டப்படுகிறார்கள். இதை உணர்ந்த பெற்றோர், என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை என்று, கடன் வாங்கியாவது பிள்ளைகளை ஆங்கில வழி பள்ளிகளில் சேர்க்க துணிகிறார்கள். இதுதான் தனியார் பள்ளிகளின் எழுச்சிக்கும், அரசு பள்ளிகளின் வீழ்ச்சிக்கும் காரணம் ஆகும்.

இது தொடர்பாக, தமிழக பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசின் குழு ஒன்று, தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அது நமக்கெல்லாம் அதிர்ச்சி வைத்தியம் தரும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் 820 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்களை அவர்களே சொல்லிக் கொடுப்பதாகவும் அந்த குழுவின் அறிக்கை தகவல் தருகிறது.

ஆரம்ப பள்ளிகளை எடுத்துக்கொண்டால், 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், நடுநிலைப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் இருக்க வேண்டும் என்று மத்திய குழந்தைகள் கட்டாய கல்வி உரிமை சட்டம் கூறுகிறது. ஆனால், ஒரு ஆசிரியரே பள்ளி முழுவதையும் கவனித்துக்கொள்ளும் நிலை வந்ததற்கான காரணம், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துபோனது தான்.

தமிழக அரசும் இதே காரணத்தை சொல்லி, இன்றைக்கு 3 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு மூடு விழா நடத்த தயாராகிவிட்டது. காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு 1,053 பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும், மத்திய அரசின் நிதியுதவி நிறுத்தப்பட்டதால், 1,950 பள்ளிகளின் கதவுகளை அடைக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சீட்டுக்கட்டு போல ஆண்டுதோறும் சரிந்துகொண்டே செல்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 30 ஆயிரம் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

அதாவது, இங்கு சேர வேண்டிய மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வியை பெறுவதற்காக தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை தான் இந்த புள்ளி விவரம் காட்டுகிறது.

நிலைமை இவ்வாறு இருக்க, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களும், பெற்றோரும் விரும்பும் ஆங்கில வழிக்கல்வியை தொடங்குவதற்கு அரசு தயங்கிக் கொண்டு இருக்கிறது. காரணம், தமிழகத்தில் கல்வியும் அரசியல் என்ற மாய வலைக்குள் சிக்கிக் கிடக்கிறதே!

ஒருவேளை அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை தொடங்கினால், இங்குள்ள எதிர் கட்சிகளும், அரசியல்வாதிகளும் போர்க்கொடி தூக்கிவிடுவார்கள். ‘தமிழ் மடிந்துபோகுமே...!’ என்றெல்லாம் அவர்கள் கவலை தெரிவிக்க தொடங்கிவிடுவார்கள். தங்களின் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்க களம் அமைத்துக்கொள்வார்கள். அதை தடுத்து நிறுத்தும் செயலிலும் அவர்கள் குதித்துவிடுவார்கள்.

ஆனால், அவர்களின் பிள்ளைகள் தமிழ் வழிக்கல்வியில் தான் படித்தார்களா?, படிக்கிறார்களா? அல்லது படிப்பார்களா? என்று பார்த்தால், அப்படி எதுவும் இல்லை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

எனவே, முதலில் அரசியல் வலையில் சிறைபட்டு கிடக்கும் கல்வியை மீட்டெடுக்க வேண்டும். தாய் மொழி கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் பிரதானம் என்றாலும், உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் ஆங்கில வழிக்கல்வியும் அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மேலும், ஆங்கில வழிக்கல்வி படிப்பதால் தமிழ் அழிந்துவிடும் என்றில்லை. தமிழை பாதுகாத்து ஆங்கில அறிவையும் ஊட்ட அரசு முன்வர வேண்டும்.

தமிழக அரசுக்கு ஆங்கிலத்தின் அவசியம் தெரிந்தாலும், தமிழை காப்பதாக நினைத்துக் கொண்டு கண்டும் காணாமல் இருந்து வருகிறது. பெற்றோருக்குத்தான் பிள்ளைகளின் கல்வி பாரமாகிக் கொண்டிருக்கிறது. ‘நாம் அரசு பள்ளிகளில் படித்து, கல்லூரிகளில் சேர்ந்து பட்டப்படிப்பு முடித்தது வரை செலவான தொகையை, இன்றைக்கு நம் பிள்ளைக்கு எல்.கே.ஜி.யிலேயே செலவழிக்க வேண்டியது இருக்கிறது’ என்று அவர்கள் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். பிள்ளைகளை மேற்படிப்பு படிக்க வைக்கவும் பணத்திற்கு என்ன செய்வது? என விடை தெரியாமல் தினமும் திகைக்கிறார்கள்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது, தனியார் வங்கிகள் எல்லாம் அரசுடமையாக்கப்பட்டு, பொதுத்துறை வங்கிகளாக அறிவிக்கப்பட்டன. அந்த வங்கிகள் எல்லாம் இன்றைக்கு மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிக் கொண்டிருக்கின்றன. அதுபோல், தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் என்று பாகுபாடு பார்க்காமல், அனைத்து பள்ளிகளையும், கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கி, ஆங்கில வழியில் கல்வியை இலவசமாக மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால், அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.

அதற்கான நடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும். அதே நேரத்தில், தாய் மொழியான தமிழ் மொழியை காட்டாய பாடமாக்கி, பாகுபாடின்றி அனைவரும் கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ், நம் இனத்தின் அடையாளம். ஆங்கிலம், நிகழ் காலத்தின் கட்டாயம். எனவே, தாய்த்தமிழை காத்து, ஆங்கிலத்தையும் கற்பிக்க அரசு முன்வர வேண்டும்.

-ஆர்.கே. 

6/10/18

பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை: வட்டாரக் கல்வி அலுவலர் எச்சரிக்கை

பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவது தெரியவந்தால் பள்ளி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரக்கோணம் வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்.ஆர்.பால்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் பருவத்துக்கான இலவச சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள், நோட்டுப் புத்தகங்களை அரக்கோணம் வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்.ஆர்.பால்ராஜ் வழங்கினார்.
பின்னர், தினமணி நிருபரிடம் அவர் கூறியதாவது: தற்போது அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள 79 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இரண்டாம் பருவத்துக்கான இலவச சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், இரண்டாம் பருவ தொடங்க நாளான புதன்கிழமையே மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன.
மேலும், கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளி வளாகங்கள் பிளாஸ்டிக் இல்லா வளாகங்களாக மாற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் எந்த வகையிலாவது பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது தெரியவந்தால் தலைமை ஆசிரியர்கள் அவர்களுக்கு அறிவுறுத்தி அதை தடுக்க செய்ய வேண்டும். மேலும், பள்ளி வளாகங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு இருப்பது ஆய்வுகளின் போது தெரியவந்தால் பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி வளாகங்கள் புகையிலை இல்லா வளாகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு அருகில் புகையிலை பயன்பாடு குறித்து தெரியவந்தால், அது குறித்த விவரத்தை காவல் துறைக்கு நிர்வாகிகள் தெரியப்படுத்தி அவற்றை அகற்ற வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் வெண்ணிலா தலைமை வகித்தார். இதில் ஆசிரியர் வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

11-ம் வகுப்பில் அனைத்து பாடங்களும் முழுமையாக கற்பிக்கப்படுகிறதா? அதிகாரிகள் கண்காணிக்க பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-


10, 11 மற்றும் 12-ம் வகுப்பு என தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளும் அரசு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்கும் விதமாக, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 600 மதிப்பெண்கள் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 600 மதிப்பெண்கள் என பதிவு செய்து தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என ஆணை வழங்கப்பட்டது.


ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு பதிலாக தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறதேயன்றி, கற்றல் கற்பித்தலில் எவ்வித மாற்றமும் இல்லை. சில தனியார் சுயநிதி பள்ளிகளில் 11-ம் வகுப்பு பாடங்கள் முழுமையாக கற்பிக்கப்படாத நிலை உள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இதனால் மாணவர்களின் கற்றல் திறன் குறைவுபடுவதோடு அல்லாமல் அவர்களின் எதிர்கால வளர்ச்சியினையும் பாதிக்கும். எனவே 11-ம் வகுப்பிலுள்ள அனைத்து பாடங்களும் கருத்தியல் பாடத்திட்டத்தின் அடிப்படையில் முழுமையாக கற்பிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு எந்த வகையிலும் குறைவில்லாத நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் நடைபெறுவதை ஆய்வு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

தனியார் சுயநிதி பள்ளிகளின் வகுப்பறைகளில் 11-ம் வகுப்பு பாடங்கள் பாடத்திட்டத்தின்படி கற்பிக்கப்படாதபோது மட்டுமே ஒரு மாணவனின் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அந்த மாணவன் பெற்ற 11-ம் வகுப்பு மதிப்பெண்களை விட அதிக வேறுபாட்டுடன் இருக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அந்த பள்ளியில், 11-ம் வகுப்பு பாடங்கள் கற்பித்தலில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது.

இதனால் மாணவர்களின் தரம் குறையும் நிலை ஏற்படும். எனவே, அத்தகைய நிலையில் கண்காணிக்க தவறிய பள்ளியின் மீது உரிய விதிகளின்படி விளக்கம் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளி பார்வையின்போது இதனை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

மாநிலம் முழுவதும் நாளை /( 6/10/2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

அடுத்த 5 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுவதும் மிதமான மழை இருக்கும். வரும் 7 ஆம் தேதி அதிகபட்சமாக தமிழகத்தில் 25 செ.மீ வரை வரை அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் தெரிவித்தது.


தமிழகம், புதுச்சேரியில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தில் இருந்து தகவல் வந்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில், புதுச்சேரி மாநில முதல்வர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் நாளை அரசு விடுமுறை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

மொஹரம் விடுமுறையை ஈடுசெய்ய நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நாளை விடுமுறை என முதல்வர் நாராயண சாமி அறிவித்துள்ளார்.

வரும், ஏழாம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும் விடுப்பு எடுக்காமல் பணியில் இருக்க வேண்டும் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆணை பிறப்பித்துள்ளார்.

2018 - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள் (RL LEAVE)

*அக்டோபர்:*
1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.
 *நவம்பர்:*
1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.
2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.
3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.
  *டிசம்பர்:*
1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.
2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.
3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.
4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.

புதிய சீருடை தரும்போது இந்த விஷயங்களைக் கவனிப்பீர்களா?" அரசுப் பள்ளியிலிருந்து ஒரு குரல்!

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழக அரசு, பல்வேறு விலையில்லாப் பொருள்களை அளித்துவருகிறது. அவற்றில் முதன்மையானது, சீருடை. மாணவர்களுக்குள் எவ்வித ஏற்றத்தாழ்வும் இருக்கக் கூடாது என்பதற்காக உருவானதே சீருடை. சென்ற ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, புதிய வண்ணங்களில் சீருடை அளிக்கப்பட்டது.


நேற்று முன்தினம், பத்திரிகையாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ``அடுத்த கல்வி ஆண்டில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குப் பச்சை நிறத்திலும், 6 முதல் 8 வரையிலான மாணவர்களுக்குப் பழுப்பு நிறத்தில் சீருடை வழங்கப்படும்" என்றார்.

மேலும், ஒவ்வொரு மாணவருக்கும் 4 செட் சீருடைகள் வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.

``அமைச்சர் அறிவித்துள்ளவாறு சீருடைகளை அளிக்கும்போது, சில விஷயங்களைக் கவனித்துக்கொண்டால், மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அரசு திட்டத்தின் நோக்கமும் முழுமையாக நிறைவேறும்" என்கிறார் திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியர் மகாலட்சுமி.

ஆசிரியை மகாலட்சுமி 1. சீருடைத் துணியின் தரம், வழக்கமாக வழங்கப்படுவதைவிட, மேம்பட்டதாக இருந்தால் அதிக நாள்கள் மாணவர்கள் பயன்படுத்த முடியும்.

2. சீருடையில் பொத்தான்கள் சரியாகத் தைக்கப்படுவதில்லை. அதிக நேரம் விளையாடும் பருவத்தில் இருப்பவர் மாணவர்கள். சீருடை கொடுக்கப்பட்ட சில நாளிலேயே பொத்தான்கள் கழன்று விழுந்துவிடுகின்றன. கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் சட்டைகளில் வலுவாகத் தைக்கும் முறையைச் சீருடைகளிலும் பின்பற்றலாம்.

3. பொத்தான்களைப் பொருத்தும் துளைகள் பெரும்பாலும், கத்திரிகோலால் துளையிட்டதோடு விட்டுவிடுகிறார்கள். அதைச் சுற்றி `காஜா' தையல் போடுவதில்லை. இதைக் கவனித்தில்கொண்டு அடுத்த ஆண்டு சீருடைகளில் காஜா போட்டுத் தருவது நல்லது.

4. பொத்தான்களும் அதைப் பொருத்தவேண்டிய துளைகளும் நேராக இருப்பதில்லை. ஏற்றஇறக்கமாக இருப்பதால், சட்டையை அணிவதில் சிக்கலாகிறது. பொத்தான்களுக்கு நேராகத் துளைகள் இடுவது அவசியம்.

5. வழக்கமான சட்டைகளில் காலரின் தடிமனுக்கு உள்ளே ஏதேனும் வைப்பார்கள். சீருடைகளிலும் இதைப் பின்பற்றலாம்.

6. சில சீருடைகளில் துணியைத் திருப்பித் தைத்துவிடுகின்றனர். ஓர் ஆண்டுக்கு 500 செட் சீருடைகளாவது இப்படி வந்துவிடுகின்றன. இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

7. சீருடைகளின் அளவுகளுக்கு நகரத்துப் பிள்ளைகளின் உடல் அளவை வைத்தே முடிவு செய்கிறார்களோ எனத் தோன்றுகிறது. கிராமப்புற, மலைப்பகுதிகளில் சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல், வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகம். அவர்களில் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு, 1 ம் வகுப்பு மாணவர்களின் அளவுதான் சரியாக இருக்கிறது. இதனையும் கவனத்தில்கொள்வது நல்ல

01.08.2018 - அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் ( Staff Fixation ) செய்வது தொடர்பான அறிவுரைகள் - CEO செயல்முறைகள்

சொன்ன மாதிரியே நடக்குது....உலகம் அறியாத "மிரட்டும் பஞ்சாங்க அறிவியல்"..! இந்த ஆண்டு அக்டோபருக்கு பிறகு...தமிழகத்தில்..!

ஒவ்வொரு வருடமும் ஆண்டு இறுதிக்குள் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை உதாரணத்திற்கு சுனாமி, புயல்,டெங்கு காய்ச்சல், வெள்ளத்தில் மிதந்த சென்னை என சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த வரிசையில் தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் சாதாரணமாகவே வந்து விடுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, உலகம் அறியாத பஞ்சாங்க அறிவியல் முறையில் புயல் ராமச்சந்திரன் ஒரு வருடத்திற்கு முன்பாகவே சில முக்கிய நிகழ்வுகளை கணித்து உள்ளார்.



அதன்படி, .
இந்த ஆண்டு இந்த மாதம் (அக்டோபர் மாதம்) முடிந்த பிறகு தமிழகத்தில் தென்மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கும என ஒரு வருடத்திற்கு முன்பாகவே கணித்து உள்ளார்.
வடகிழக்கு பருவ மழையினால் மதுராந்தகம முதல் தென் தமிழகம் வரை பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கும் என்பதை ஆணித்தரமாக கூறுகிறார் புயல் ராமச்சந்திரன்.


இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இதை எப்படி நம்புவது..? அது உண்மை தானா..? இன்று இருக்கக்கூடிய நிலவரப்படி வானிலையை கணிக்க, நாளை முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யக்கூடும் என மட்டும் தானே கணிப்பார்கள் என பலருக்கும் யோசனைதான்.
ஆனால் இவர் சென்ற ஆண்டே கணித்தது போல சில விஷயங்கள் நடந்து தான் வருகிறது
அதன்படி,
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவும் என்று கணித்தார். அதே போன்று தான் நடந்தது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 4 - 11 வரை கேரளாவில் வெள்ளம் ஏற்படும் என கணித்து இருந்தார். அவ்வாறே நடந்தது.
அதே போன்று, அதற்கேற்றவாறு தற்போது தமிழகத்தில், பேஆப் பெங்காலில் அக் 12 முதல் அக் 16 வரையில், ஆந்திரா ஒரிசா இடையே சைக்லோன் உருவாகும் என கணித்து உள்ளார். இதனால் மதுராந்தகம் முதல் தென் தமிழகம் வரை வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வட மாவட்டங்கள் - மிதமானதாக இருக்கும் என அவர் கணித்து உள்ளார்




அதற்கேற்றவாறு தற்போது தமிழகத்தில், மழை பெய்ய தொடங்கி உள்ளது. ரெட் அலெர்ட் கூட விடுக்கப்பட்டு உள்ளது. விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் என்றும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் போது, எப்ப்போது தான் மழை நிற்குமோ என்று தெய்வங்களை வேண்டும் அளவிற்கு மனம் செல்லும் என புயல் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் தான், அவர் இவ்வாறு கணித்து உள்ளதாகவும் அறிவியல் பஞ்சாங்கம் என்பது உண்மை..ஒரு சில சமயத்தில் தான் கணிதத்தில் சில மாற்றங்கள் வரலாம். ஆனால் பெரிய மாற்றம் இருக்காது...தான் கணித்த வாறே கட்டாயம் நடக்கும். அறிவியல் பஞ்சாங்கத்தை மேலும் பல வல்லுனர்கள் கொண்டு கணித்தால் 300 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பலவற்றை கணிக்கலாம் என்று உறுதிபட கூறுகிறார் புயல் ராமச்சந்திரன்
என்ன நடக்கிறது என்பதைபொறுத்திருந்து பார்க்கலாம்.

6 அரசு பள்ளிகளுக்கு தேசிய தூய்மை பள்ளி விருது - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து :

தமிழகத்தில் 6 அரசு பள்ளிகளுக்கு தேசிய தூய்மை பள்ளி விருதும், தேசிய அளவில் தமிழகம் 2-வது இடமும் பெற்றதற்கான சான்றிதழை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி யிடம், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி 2014-ம் ஆண்டு முதல் ‘தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி’ என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், 2017-18-ம் ஆண்டில் தூய்மை பள்ளிக்கான தேசிய அளவிலான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 பள்ளிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி வழங்கிய தேசிய தூய்மை பள்ளி விருதுகளையும், தேசிய அளவில் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளுக்கு தேசிய தூய்மை பள்ளி விருதுகள் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-ம் இடம் பெற்றதற்காக வழங்கிய சான்றிதழையும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

தேசிய அளவிலான தூய்மை பள்ளிக்கான விருது தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம் டி.செல்லாண்டிப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, தேனி மாவட்டம் கொம்பைதொழு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சிவகங்கை மாவட்டம் எம்.ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருவள்ளூர் மாவட்டம் அரியப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் இ.ஆவாரம்பட்டி அரசு கே.ஆர். உயர்நிலைப்பள்ளி, அரியலூர் மாவட்டம் சிலுவைசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய 6 பள்ளிகளுக்கு கிடைத்து உள்ளது.

முதல்-அமைச்சரின் ஒப்புதலின் அடிப்படையில், வரும் கல்வி ஆண்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதிய வண்ண சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டது. புதிய சீருடைகளை அணிந்து வந்த அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.

பள்ளிக்கல்வி துறையில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் இறந்த 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, அவர்களது கல்வித்தகுதி மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கும் வகையில் 7 வாரிசுதாரர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநில திட்ட இயக்குனர் இரா.சுடலைக்கண்ணன், பள்ளிக்கல்வி துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

5/10/18

பள்ளிக்கல்வி துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன

                                      

யூடியூப் மூலம் மாணவர்கள் கல்வி கற்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அமல் : அமைச்சர் செங்கோட்டையன்


5,000 அரசுப் பள்ளிகளை மூடுவதா?" - கொட்டும் மழையில் முழங்கிய புதுக்கோட்டை அரசு ஊழியர்கள்

புதுக்கோட்டையில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள்  ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம்...


புதுக்கோட்டை,அக்.4 : அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை  புதுக்கோட்டை பொதுத்துறை அலுவலக வளாகம் முன்பு  ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு இரா.ரெங்கசாமி,மு.ராஜாங்கம்,க.சு.செல்வராசு ஆகியோர் தலைமை வகித்தனர்.

போராட்டத்தினை தொடங்கி வைத்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணைச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் பேசியதாவது: 1.4.2003 க்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டும்.

இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி,அமைச்சுப் பணியாளர்கள்,கண்காளிப்பாளர்கள் ,தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலக பல்வேறு துறைகளிலுள்ள தொழில் நுட்ப ஊழியர்கள்,ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்.சிறப்பு கால முறை ஊதியம் சத்துணவு,அங்கன்வாடி,வருவாய் கிராம உதவியாளர்கள் ,ஊராட்சி செயலாளர்கள்,ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு தொகுப்பூதியமும்,கணினி ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியமும் வழங்கப் பட வேண்டும்.21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடன் வழங்கிட வேண்டும்.5000 அரசுப் பள்ளிகள் மூடுவதை உடனடியாக கைவிட்டு சமூக நீதியினைப் பாதுகாத்திட வேண்டும்.இளைஞர்களின் வேலைவாய்ப்பினை பறிக்க கூடிய வகையில் வெளியிட்ட பணியாளர்கள் பகுப்பாய்வுக் குழுவினை ரத்து செய்திட வேண்டும்..எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அக்டோபர் 13 ஆம் தேதி சேலத்தில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடும்,நவம்பர் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் நடைபெறும் என்றார்..

போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர் குமரேசன்,தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கணேசன்,முதுகலை ஆசிரியர் சங்கம  மணிமேகலை,கல்லூரி பேராசிரியர்  சங்கம் நாகேஸ்வரன்,அங்கன்வாடி ஊழியர் சங்கம் இந்திராணி, சத்துணவு ஊழியர் சங்கம் மலர்விழி ,ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் மகேந்திரன்,கணேசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்..

கூட்டத்தில் ஏராளமான  ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள்  கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..

சொன்ன மாதிரியே நடக்குது....உலகம் அறியாத "மிரட்டும் பஞ்சாங்க அறிவியல்"..! இந்த ஆண்டு அக்டோபருக்கு பிறகு...தமிழகத்தில்..!

                                       

ஒவ்வொரு வருடமும் ஆண்டு இறுதிக்குள் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை உதாரணத்திற்கு சுனாமி, புயல்,டெங்கு காய்ச்சல், வெள்ளத்தில் மிதந்த சென்னை என சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த வரிசையில் தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் சாதாரணமாகவே வந்து விடுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, உலகம் அறியாத பஞ்சாங்க அறிவியல் முறையில் புயல் ராமச்சந்திரன் ஒரு வருடத்திற்கு முன்பாகவே சில முக்கிய நிகழ்வுகளை கணித்து உள்ளார்.


அதன்படி, .
இந்த ஆண்டு இந்த மாதம் (அக்டோபர் மாதம்) முடிந்த பிறகு தமிழகத்தில் தென்மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கும என ஒரு வருடத்திற்கு முன்பாகவே கணித்து உள்ளார்.
வடகிழக்கு பருவ மழையினால் மதுராந்தகம முதல் தென் தமிழகம் வரை பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கும் என்பதை ஆணித்தரமாக கூறுகிறார் புயல் ராமச்சந்திரன்.


இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இதை எப்படி நம்புவது..? அது உண்மை தானா..? இன்று இருக்கக்கூடிய நிலவரப்படி வானிலையை கணிக்க, நாளை முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யக்கூடும் என மட்டும் தானே கணிப்பார்கள் என பலருக்கும் யோசனைதான்.
ஆனால் இவர் சென்ற ஆண்டே கணித்தது போல சில விஷயங்கள் நடந்து தான் வருகிறது
அதன்படி,
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவும் என்று கணித்தார். அதே போன்று தான் நடந்தது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 4 - 11 வரை கேரளாவில் வெள்ளம் ஏற்படும் என கணித்து இருந்தார். அவ்வாறே நடந்தது.
அதே போன்று, அதற்கேற்றவாறு தற்போது தமிழகத்தில், பேஆப் பெங்காலில் அக் 12 முதல் அக் 16 வரையில், ஆந்திரா ஒரிசா இடையே சைக்லோன் உருவாகும் என கணித்து உள்ளார். இதனால் மதுராந்தகம் முதல் தென் தமிழகம் வரை வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வட மாவட்டங்கள் - மிதமானதாக இருக்கும் என அவர் கணித்து உள்ளார்


அதற்கேற்றவாறு தற்போது தமிழகத்தில், மழை பெய்ய தொடங்கி உள்ளது. ரெட் அலெர்ட் கூட விடுக்கப்பட்டு உள்ளது. விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் என்றும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் போது, எப்ப்போது தான் மழை நிற்குமோ என்று தெய்வங்களை வேண்டும் அளவிற்கு மனம் செல்லும் என புயல் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் தான், அவர் இவ்வாறு கணித்து உள்ளதாகவும் அறிவியல் பஞ்சாங்கம் என்பது உண்மை..ஒரு சில சமயத்தில் தான் கணிதத்தில் சில மாற்றங்கள் வரலாம். ஆனால் பெரிய மாற்றம் இருக்காது...தான் கணித்த வாறே கட்டாயம் நடக்கும். அறிவியல் பஞ்சாங்கத்தை மேலும் பல வல்லுனர்கள் கொண்டு கணித்தால் 300 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பலவற்றை கணிக்கலாம் என்று உறுதிபட கூறுகிறார் புயல் ராமச்சந்திரன்
என்ன நடக்கிறது என்பதைபொறுத்திருந்து பார்க்கலாம்.

பள்ளிகள் விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்வர்:- அமைச்சர் உதயகுமார் தகவல்!

தமிழகம் முழுவதும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழகத்தில் 4399 இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

வரும் சனிக்கிழமை (6/10/2018) பள்ளிகளுக்கு விடுமுறை


ஆரம்ப பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டும் கிராம சபை கூட்டத்தில் 2-ம் வகுப்பு மாணவி கோரிக்கை (பத்திரிகை செய்தி)

                                                         
திருவண்ணாமலை வந்தவாசி அடுத்த சளுக்கை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆரம்பப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று 2-ம் வகுப்பு மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.

காந்தி ஜெயந்தியையொட்டி, தி.மலை மாவட்டம் கீழ்பென்னாத் தூர் அடுத்த செல்லங்குப்பம் ஊராட்சியில் நேற்று முன்தினம் கிராம சபை கூட்டம் நடைபெற் றது. ஊராட்சி ஒன்றிய ஆணையா ளர் லட்சுமி நரசிம்மன் தலைமை தாங்கினார். சிறப்பு பார்வையாள ராக ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் (வளர்ச்சி) குமாரி பங்கேற்றார். கூட்டத்தில், பிளாஸ்டிக் பயன்படுத் துவதை தவிர்த்தல், குடிநீரை சிக்க னமாக பயன்படுத்துதல், சுகாதா ரத்தை கடைபிடித்தல் போன்றவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதேபோல, வந்தவாசி அடுத்த சளுக்கை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி தலைமை வகித்தார். கழிவுநீர் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தடையில்லாமல் செய்து கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவி மகாலட்சுமி,' தான் படிக்கும் ஆரம்பப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி, ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்

25/9/18

82 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தேர்வு நிலை , சிறப்பு நிலை , ஊக்க ஊதியம் பெறுவதில் சிக்கல்

மாணவர் எண்ணிக்கை குறைவா? - அரசு பள்ளிகளில் கணக்கெடுக்கும் பணியை துவக்கியது குழு

அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகதில் இயங்கி வரும் 32 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் செய்ய மத்தியஅரசு நிதி பயன்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் ஒரு வகுப்பில் ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள் என்ற விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு  தெரிவித்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை  குறைவாக இருக்கும் பள்ளிகளை கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை  உத்தரவிட்டுள்ளது. இதற்காக த னியாக குழு ஒன்றையும் பள்ளிக் கல்வித்துறை அமைத்துள்ளதாக ெதரிகிறது. மேற்கண்ட குழு கணக்கெடுப்பு பணியை தொடங்கியுள்ள நிலையில் தற்போது 500 பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.

எஸ்எஸ்ஏ சார்பில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதியில் நிறைவேற்றப்பட்ட பணிகளுக்கான செலவுக் கணக்கை சமர்ப்பிக்காத காரணத்தால் தமிழகத்துக்கு கிடைக்க  வேண்டிய நிதி நிறுத்திக் வைக்கப்பட்டுள்ளது. தற்ேபாது மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுத்து கொடுத்த பிறகே மத்திய அரசின் நிதி  கிடைக்கும் என்று தெரிகிறது.