யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/11/18

உலகிலேயே அதிக பெண் விமானிகளை கொண்ட விமான நிறுவனம் எது?

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் விமான பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்கும் வகையில் புதிய விமானிகளை, குறிப்பாக பெண் விமானிகளை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
கடந்த சில வருடங்களாக சுற்றுலா சார்ந்த விடயங்களில் மக்கள் அதிகளவு பணத்தை செலவழிக்கும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது.
உலக சுற்றுலா கழகத்தின் அறிக்கையின்படி, கடந்த 2010ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2017ஆம் ஆண்டு உலகளவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 350 மில்லியன் அதிகரித்துள்ளது.
எந்த விமான சேவை நிறுவனத்தில் அதிக பெண் விமானிகள் பணிபுரிகிறார்கள்?


உலகம் முழுவதுமுள்ள வர்த்தக விமானங்களின் விமானிகளில் வெறும் 5.18 சதவீதத்தினரே பெண்களாக உள்ளனர்.
உலகிலேயே இந்தியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனங்கள்தான் அதிகளவில் பெண் விமானிகளை பணியில் சேர்த்துக்கொள்கிறார்கள். அதாவது, மொத்த இந்திய விமானிகளில் 12.4 சதவீதம் பேர் பெண்களாவர்.
• 
குறிப்பாக பார்த்தோமானால், இந்தியாவை சேர்ந்த உள்நாட்டு விமான சேவை நிறுவனமான ஜூம் ஏர் உலகில் அதிக பெண் விமானிகளை கொண்ட நிறுவனமாக விளங்குகிறது. அதாவது, அந்நிறுவனத்திலுள்ள 30 விமானிகளில் ஒன்பது பேர் பெண் விமானிகள் என்று சர்வதேச பெண் விமானிகள் அமைப்பு கூறுகிறது.
எதிர்காலத்தில் விமானிகளுக்கு ஏற்படவுள்ள கடுமையான பற்றாற்குறையை சமாளிக்கும் வகையில் இந்தியா விமான சேவை நிறுவனங்கள், பெண்கள் விமானியாவதற்கு அதிகப்படியான ஊக்கத்தை அளித்து வருவதாக சர்வதேச பெண் விமானிகள் அமைப்பின் தலைவர் கேத்தி மெக்கல்லோ கூறுகிறார்.
இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் வர்த்தகரீதியான விமான பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயருமென்று போயிங் நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
விமானிகளின் சராசரி ஊதியம் என்ன?
பொதுவாக விமானிகள் ஒவ்வொரு நாளும் குறுகிய அல்லது நீண்டதூர இடங்களுக்கு பயணிகள் விமானத்தையோ அல்லது சரக்கு விமானங்களையோ இயக்குகிறார்கள்.
வர்த்தக விமானிகளின் ஊதியமானது அவர்கள் பணிபுரியும் விமான நிறுவனம், அவர்கள் இயக்கும் விமானத்தின் வகை மற்றும் அவர்களது அனுபவத்தை பொறுத்து அமையும்.
சராசரியாக 20,000 முதல் 30,000 பவுண்டுகள் வரையில் அவர்களது வருமானம் இருக்கும்.

மேற்குறிப்பிட்டுள்ள அட்டவணையில் பிரிட்டனில் விமானிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் துறை வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
மிகுந்த அனுபவம் கொண்ட விமானிகளுக்கு 1,40,000 பவுண்டுகளுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படுகிறது.
விமானிகளின் ஊதியத்தில் பாலின பாகுபாடு உள்ளதா?
பிரிட்டன் வரலாற்றில் முதல் முறையாக 250 பணியாளர்களுக்கு மேல் கொண்ட விமான நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் ஆண்-பெண்களுக்கு இடையே ஊதியத்தில் நிலவும் பாலின பாகுபாடு குறித்த அறிக்கையை வெளியிட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டது.

71.8 சதவீதத்துடன் ரியான்ஆர் நிறுவனம் அதிகளவிலான பாலின ஊதிய இடைவெளியை கொண்டுள்ளது. ஈசிஜெட் நிறுவனத்தில் 45.5 சதவீதம் பாலின இடைவெளி நிலவும் நிலையில், குறிப்பிட்ட சில பணிகளில் ஆண்கள்-பெண்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தது.
மேலும், வரும் 2020ஆம் ஆண்டிற்குள் தங்களது விமான நிறுவனத்தில் 20 சதவீத பெண் விமானிகளை கொள்வதை இலக்காக கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு

நவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கஜா புயலானது தற்போது நாகைக்கு கடகிழக்கே 770 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது சென்னை - நாகை இடையே நவம்பர்-15 அன்று கரையை கடக்கும். இதன் கரணமாக நவம்பர் 14-ம் தேதி இரவு முதல் புயல் கரையை கடக்கும் வரை கனமழை பெய்யக் கூடும்.

ஜா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் மணிக்கு 80-90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுக்கூடும். சில சமயங்களில் 100 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். 

தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். கடல் அலையின் உயரம் இயல்பை விட ஒரு மீட்டர் அதிகமாக இருக்கும். மீனவர்கள் வரும் 15-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கஜா புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்  8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  கடலூர் , விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய  8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்  இதற்கான அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

11/11/18

சுட்டி விகடன் மூலம் போட்டித்தேர்வினை நடத்துதல் -சார்பு

FLASH NEWS : NMMS தேர்வில் தேர்வாகிய மாணவர்களின் தகவல்களை பதிவேற்றுவதில் சிக்கல் பள்ளிக்கல்வித்துறை கண்டுகொள்ளுமா?

எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருடந்தோறும் டிசம்பர் மாதம் NMMS EXAM எனும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம் தேர்வு நடைபெறுகிறது.



சமீபத்தில் 2017-18 ல் நடைபெற்ற NMMS தேர்வில் தேர்வாகிய மாணவர்களின் பட்டியலை பள்ளி அளவில் பதிவேற்றம் செய்வதற்கு அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது ஆனால் 31க்குள் இணையதளம் சரிவர இயங்காததாலும்,  பல்வேறு மாவட்டங்களில் சில பள்ளிகளில் மாணவர்களின் தகவல்களை பதிவேற்றினாலும் அதில் submit என்ற ஆப்ஷன் வராததாலும் அவர்களுடைய விண்ணப்பமானது SAVE & DRAFT நிலையில் தங்கி நிற்கிறது. சில விண்ணப்பங்களில் கல்வித் தொகை பெறுவதற்கான scheme option open ஆகவில்லை.மேற்கண்ட காரணங்களால் மாணவர்களுடைய விண்ணப்பமானது மாவட்ட அளவில் FORWARD செய்யமுடியாமல் மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆனது பூர்த்தி செய்ய முடியாமல் கல்வி உதவித்தொகை பெறுவது சிக்கலாகி உள்ளது.
 பள்ளி அளவில் மாணவர்களின் தகவல் உள்ளீடு செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 31 முடிந்துவிட்டதால் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் தகவல்களை உள்ளீடு செய்வது எவ்வாறு என்று  திணறி வருகிறார்கள்.

ஆனால் இதைப் பற்றி தகவல்களை பல்வேறு மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலகங்களில் எடுத்துக்கூறியும் எந்த ஒரு தெளிவான தகவலும் கிடைக்கவில்லை என்று தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது.

NMMS தேர்வில் தேர்வாகிய மாணவர்களின் பட்டியலை மாவட்ட அளவில் இருந்து மாநில அளவில் ஃபார்வர்டு செய்வதற்கு இந்த மாதம் 15ம் தேதி இறுதி நாள் என்பதால் அவர்களுடைய ஊக்கத்தொகை கிடைக்குமா??? இதனை பள்ளிக்கல்வித்துறை கண்டுகொள்ளுமா???

மேற்கண்ட பிரச்சினைக்கான தீர்வினை விரைவில் தீர்த்து மாணவர்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிகள் அளவில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.

6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஜாக்டோ-ஜியோவில் இருந்து பிரிந்த சங்கத்தினர் மீண்டும் இணைந்தனர்: 15ம் தேதி முறையான அறிவிப்பு :

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தனித் தனியாக ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தி வந்தனர். அரசு தரப்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் நீடித்ததால்,  கடந்த 5 ஆண்டுக்கு முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் என 22க்கும் மேற்பட்ட சங்கத்தினர் ஒன்றாக இணைந்து மீண்டும் ஜாக்டோ-ஜியோ அமைப்பை புதுப்பித்தனர். அதன் மூலம் அனைத்து சங்கங்களும்  ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு எடுத்து களத்தில்  இறங்கினர்.  நகர, ஒன்றிய, வட்ட, மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்திய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 3 ஆண்டுகளாக தங்கள் போராட்ட களத்தை மாற்றி அமைத்தனர். அதன் ஒரு அம்சம்தான், தொடர் வேலை நிறுத்தப்  போராட்டம். கடந்த ஆண்டில் தீவிரம் அடைந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் அரசு கலக்கம் அடைந்தது.

வேலை நிறுத்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்த பெரும் முயற்சி எடுத்த அரசு, தனது வியூகத்தை வேறு திசையில் திருப்பியது. ஒன்று பேச்சுவார்த்தை, மற்றொன்று தனியார் மூலம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு  தொடுத்தது. ஈரோட்டில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அத்துடன் ஜாக்டோ-ஜியோவிலும் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, ஜாக்டோ-ஜியோவில் உறுதியாக நின்றவர்கள் ஒன்று திரண்டு தொடர் வேலை நிறுத்தப்  போராட்டத்தை நடத்தினர். அதன் மீது மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  ஜாக்டோ-ஜியோ பிளவு காரணமாக போராட்டம் கலகலத்துவிடும் என்று எதிர்பார்த்த அரசுக்கு இந்த ஆண்டு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்மட்டக் குழுவில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில்,  நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் மீண்டும் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்தது.
பிரிந்து சென்று சங்கங்கள் தனியாகவும், ஜாக்டோ-ஜியோ தனியாகவும் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த முயிற்சி  எடுத்தும் பலன் அளிக்கவில்லை. அதே நேரத்தில் புதிய சம்பள உயர்வை அரசு அறிவித்தது. அதில் பல அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டதால் சங்கங்கள் திகைத்து நின்றன.  இந்நிலையில்தான் மீண்டும் அனைத்து சங்கத்தினரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்ற கருத்து உருவானது. இதையடுத்து, ஒன்றாக இணைவது குறித்து கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 9ம் தேதி  பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நேற்று சென்னை வேப்பேரியில் ஜாக்டோ-ஜியோ மற்றும் பிரிந்து சென்ற சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமிழாசிரியர் கழகத்தின் சார்பில் சுப்ரமணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ரெங்கராஜன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் சேகர், தமிழக ஆசிரியர்  கூட்டணியின் சார்பில் வின்சென்ட், அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் செல்வராஜ், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மகேந்திரன், தொழில் கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் நேரு ஆகியோர் மற்றும்  ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்கள் 6 பேர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நேற்று காலை நடந்த பேச்சுவார்த்தையில், பிரிந்து சென்ற மேற்கண்ட சங்கங்கள் அனைத்தும் ஜாக்டோ-ஜியோவில் இணைந்ததாக  அறிவித்தனர்.
ஒன்றாக இணைந்தது மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து 15ம் தேதி முறையாக அறிவிப்பதாக தெரிவித்தனர். தற்போது இணைந்தவர்களும் ஜாக்டோ-ஜியோவில் ஒருங்கிணைப்பாளர்களாக  சேர்க்கப்பட்டனர். அதன்படி தற்போது 20 ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். இதுதவிர இன்னும் ஒரு சில சங்கங்களை சேர்ப்பது குறித்து 15ம் தேதி கூட்டத்தில் அறிவிக்கப்படும் என  ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்

தகவல் அறியும் சட்டத்தில் 10, பிளஸ்2 விடைத்தாள் நகல் பெற பக்கத்துக்கு 2 கட்டணம் :

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடக்கிறது. மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.  தேர்வு முடிவுகளின்படி மேற்கண்ட இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அல்லது மீண்டும் தேர்வு எழுத வேண்டிய மாணவ, மாணவியர் பட்டியல் வெளியிடப்படும்.  தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் பெற்றுள்ள மதிப்பெண்களில் சந்தேகம் இருந்தால் குறிப்பிட்ட தேதிகளில் விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும் வாய்ப்பு அளிக்கப்படுவார்கள். அதற்கென தனியாக கட்டணம்  செலுத்த வேண்டும்.
இந்த நடைமுறையில் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம் கூடுதலாக இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விடைத்தாள் நகல் பார்க்க தனியாக கட்டணம்  வசூலிக்கப்படுவதாகவும் சர்ச்சை எழுந்தது.  இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் தரப்பில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையில் விடைத்தாள் நகல் பெறுவதற்காக சிபிஎஸ்இ வைத்துள்ள  நடைமுறைகள் தனியாக உள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விடைத்தாள் நகல் பார்க்க விரும்புவோர் பக்கத்துக்கு ₹2, விண்ணப்ப கட்டணம் ₹10 செலுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி,  இரண்டு நடைமுறைகளுக்கும் தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு நீதி மன்றம் தெரிவித்துள்ளது

Lok sabha Election 2019 - Personal Polling Application Form:

ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி எப்போது?

ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு, அடுத்தகட்டமாக அரசின் நடவடிக்கை இல்லாததால், ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அரசுப்பள்ளி மாணவர்கள், குடும்பச்சூழல், பொருளாதார வசதியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மாணவர்களுக்கு, உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்க, நடமாடும் ஆலோசனை மையத்திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.

அதுபோல, ஆசிரியர்களுக்கும் மாணவர்களை கையாள்வது, கற்பித்தல் மற்றும் பள்ளிச்சூழலில் ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளுக்கு, ஆலோசனை வழங்க வேண்டுமென, ஆசிரியர் சங்கங் களின் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நடப்பாண்டில், ஆசிரியர்களுக்கும் உளவியல் ரீதியான பயிற்சி வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.
அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககம், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி திட்டத்தையும் இணைத்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமாக மாற்றப் பட்டு உள்ளது.கடந்த கல்வியாண்டு வரை அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. நடப்பாண்டில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமாக மாற்றப்பட்டதால், பயிற்சி வழங்குவதிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், '' மாணவர்களுக்கு இருப்பதுபோல், ஆசிரியர்களும், பல்வேறு உளவியல் பிரச்னைகளை பள்ளிகளில் சந்திக்கின்றனர். இதற்கான தீர்வாக இந்த பயிற்சி வகுப்புகள் இருக்கும் என, எதிர்பார்த்தோம். அறிவிப்போடு, அடுத்தகட்டமாக, பயிற்சி குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை.


இதனால், ஆசிரியர்களும் நம்பிக்கை இழந்து வருகின்றனர். பயிற்சி வழங்கும் நடவடிக்கை களை விரைவு படுத்தினால், ஆசிரியர்களுக்கு மாணவர்களை தேர்வுகளுக்கு வழிநடத்தவும், மன அழுத்தம் இல்லாமல் பணிசெய்யவும் பயனுள்ளதாக இருக்கும்,''என்றார்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு சிறப்பாசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்கள் சார்பாக சில கோரிக்கைகள் !

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்கள் சார்பாக சில கோரிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
குற்றச்சாட்டை சுட்டிக் காட்டி னால் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாங்கள் கூறிய போது தேர்வர்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய வார்த்தையாக கருதினார்கள் ஆனால் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறுவிதமான குளறுபடிகள் குறித்து செய்தி ஊடகங்களிலும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திலும் நூற்றுக்கணக்கானதேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் தயாறித்து வெளியிட்ட உத்தேச பட்டியலில் உள்ள குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அதுவும் குறிப்பாக ஓவிய ஆசிரியர்பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் free hand out line model drawing highergreade என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும் என்று முறைகேடாக தனியார் நிறுவனங்கள் மூலம் தமிழ்வழி சான்றிதழ் பெற்று தகுதி யற்ற நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு 1325 பணி இடங்கள் முழுமையாக பட்டியல் வெளியீடு செய்யாமல் தகுதிவாய்ந்த நபர்கள் மதிப்பெண் பெற்று அடுத்த நிலையில் இருக்கும் நிலையில் RESERVED என்று நிரப்பாமல் நிறத்தியுள்ளது.போன்ற பல்வேறு குளறுபடி நிலவிவரும் நிலையில் இன்று பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஒன்றுமே தெரியாதவர் போல் பேட்டி அளித்துள்ளார் என்பதை நினைக்கும் போது தேர்வர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியமே தமிழ் வழி சான்றிதழில் குழப்பத்தில் உள்ளதை ஏற்றுக்கொண்டு பரிசீலனை செய்து பதிலளிக்க தேர்வு வாரியம் கூடி முடிவு எடுக்கும் என்று சொல்லும்போது ஒரு பொறுப்புள்ள பள்ளி கல்வி துறை அமைச்சர் இவ்வாறு எந்த குளறுபடியும் இல்லைஎன்று கூறுவது ஏற்புடையது அல்ல. பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நபர்கள் நீதிமன்றங்களுக்கு சென்று நிருபிக்கும் பட்சத்தில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதிவாய்ந்த தேர்வர்களின் கருத்தாகும்.ஆகவே சிரப்பாசிரியர் நியமனத்தில் சற்று அதிக அக்கறை கொண்டு ஆராய்ந்து பார்த்து பள்ளி கல்வி அமைச்சர் என்ற முறையில் ஆரம்பம் முதல் இன்று வரையிலும் உத்தேச பட்டியல் வெளியீடு செய்து வெளியிட்டது வரை ஆசிரியர் தேர்வுவாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் என்னென்ன விதிமுறைகள் சொல்லப்படுகிறது.
எப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுகிறது போன்ற அனைத்து விதமான விஷயங்களையும் அலசி ஆராய்ந்து முடிவெடுத்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி யார் தவறு செய்திருந்தாலும் தன்டிக்கப்பட வேண்டிய வர்களே.என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சிரப்பாசிரியர் நியமனம் பொருத்தவரை சரியான தீர்வு எடுப்பார் என்று அனைவராலும் அறியப்பட்ட ஒரு செய்தி ஆகவே ஏற்கனவே தாங்கள் கூறிய போது ஆய்வக உதவியாளர் பணி போல் சற்று தாமதமாக ஆனாலும் யாரும் பாதிக்கப்படாமல் முறையாக இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளதை நினைவுகூர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதி வாய்ந்ததேர்வர் களின் கருத்தாகும்.தாங்கள் கூறியுள்ளது முன்னால் ராணுவத்தினர் விதவைகள் இட ஒதுக்கீடு கோருவர்கள் போன்றவைகள் மிகவும் அரிதாகவே உள்ளது அது முக்கிய பிரச்சினையாக ஒன்று இரண்டு இருந்தாலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் சுட்டிக் காட்டப்படாத ஓவிய ஆசிரியர் பணிக்கு தமிழ் வழி சான்றிதழ் பிரச்சினை பிரதானமாக இரண்டு மாத காலம் வரை தீர்வு காணப்படாத நிலையில் உள்ளது.ஆசிரியர் தேர்வுவாரியத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது இது வரையில் எந்தவொரு பதிலும் இல்லை.பள்ளிகல்வி அமைச்சராக இருக்கும் தங்களிடமிருந்து இப்படிப்பட்ட பதிலை இதுவரை யாருமே எதிர்பார்க்காத வகையில் அமைந்துள்ளது.இது சரியல்ல தகுந்தமுறையில் தங்களிடமிருந்து பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.
மேலும் ஒன்றுமே தவறு இல்லை இந்நிலையில் ஓய்வு பெற்ற அலுவளர் ஒருவரது குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று குறிப்பிட்டு காட்டப் பட்டுள்ளது.இதையும் தெளிவாக எடுத்துக் காட்ட வேண்டும். இந்த பதிவு தகுதிவாய்ந்த தேர்வர்கள் இணைந்து பதிவு செய்து வெளியிட்டது.உரிய பதில் அளிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதி வாய்ந்த வர்களின் பணிவான வேண்டுகோள்.

10/11/18

அரசு ஊழியர்களுக்கு 'ஐ.டி., கார்டு' கட்டாயம்

சென்னை:தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பெரும்பாலும், தங்கள் அடையாள அட்டையை அணிந்திருப்பதில்லை. இதனால், ஊழியர்கள் யார், பொதுமக்கள் யார் என, பிரித்து பார்க்க முடியவில்லை. 

இந்நிலையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும், ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்தே பணியாற்ற வேண்டும் என, இந்த ஆண்டு, ஜூலையில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. இந்த உத்தரவை பின்பற்றி, அனைத்து பள்ளி, கல்லுாரி அலுவலகங்கள் மற்றும் அரசின் பிற துறை அலுவலகங்களில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து, பணியாற்ற வேண்டும் என, அரசு சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஓய்வூதியர் வாழ்நாள் சான்று கருவூல ஆணையர் அறிவிப்பு

சென்னை:'ஓய்வூதியர்கள், தங்கள் வாழ்நாள் சான்றை, அடுத்த ஆண்டு சமர்ப் பிக்க வேண்டும்' என, கருவூல கணக்கு ஆணையர், ஜவகர் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:தமிழக அரசின் ஓய்வூதியர்களில் சிலர், கடந்த ஆண்டு வரை, வங்கிகளில் நேரடியாக ஓய்வூதியம் பெற்று வந்தனர். அவர்களுடைய சிரமங்களை குறைக்க, பொதுத்துறை வங்கி திட்டத்தின் வழியே, ஓய்வூதியம் பெற்ற, 70 ஆயிரம் பேர், இந்த ஆண்டு முதல், கருவூலத்துறை திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள், தற்போது, மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகியவற்றின் வழியே, ஓய்வூதியம் பெறுகின்றனர். பொதுத்துறை வங்கி திட்டத்தில் உள்ள, தமிழக அரசு ஓய்வூதியர்கள், கடந்த ஆண்டு, நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில், தங்கள் வாழ்நாள் சான்றை, வங்கிகளில் அளித்து வந்தனர்.தற்போது, அவர்களுடைய அனைத்து பதிவேடுகளும், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. 
எனவே, அடுத்த ஆண்டுக்கான, தங்கள் வாழ்நாள் சான்றை, தங்களது ஓய்வூதிய அலுவலகம், மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள் ஆகியவற்றில், 2019 ஏப்., 1 முதல், ஜூன், 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

அசல் சான்றிதழை வாங்கி வைக்க கல்லுாரி, பல்கலைகளுக்கு தடை

மாணவர்களின் அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்து கொள்ள, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., தடை விதித்துள்ளது.

கல்லுாரிகள் மற்றும் பல்கலை களில் இருந்து, வேறு கல்லுாரிக்கு மாறும் மாணவர்களுக்கு, உரிய அசல் சான்றிதழ்களை தருவதில்லை என்றும், முழுமையாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப வழங்குவதில்லை என்றும், புகார்கள் எழுந்துள்ளன.இதையடுத்து, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., தரப்பில், புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, யு.ஜி.சி.,யின் செயலர், ரஜினிஷ் ஜெயின் கூறியிருப்பதாவது:கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் இருந்து, வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாறும் மாணவர்களுக்கு, அவர்களுக்கு சேர வேண்டிய கட்டணத்தை, உடனடியாக வழங்க வேண்டும். கட்டணத்தை தராமல் இழுத்தடிக்க கூடாது.
அதேபோல, மாணவர் சேர்க்கையின் போது, சான்றிதழ்களை வாங்கி ஆய்வு செய்து, மீண்டும் அவர்களிடம் வழங்கி விட வேண்டும். தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன், மாணவர் களின் சுய கையொப்பம் மற்றும் உறுதி கடிதம், பெற்று கொள்ள வேண்டும். மாணவர்களின் அசல் சான்றிதழ்கள், பள்ளி படிப்புக்கான சான்றிதழ்களை வாங்கி வைத்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறினால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது, அங்கீகாரம் ரத்து உட்பட, பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

ஆராய்ச்சிகளுக்கு புதிய கண்டுபிடிப்பு கவுன்சில்

சென்னை:'கல்லுாரிகளின் ஆராய்ச்சி பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய கண்டுபிடிப்புக்கான கவுன்சில் உருவாக்கப்படும்' என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. இதில், பதிவு செய்யும்படி, கல்லுாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும், உயர்கல்வியின் தரத்தை உயர்த்தும் பணிகளில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதையொட்டி, பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., கலைக்கப்பட்டு, புதிதாக உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும் என, மத்திய அரசு, ஏற்கனவே அறிவித்துள்ளது.அதேபோல, உள்கட்டமைப்பு மற்றும் தரத்தில் சிறந்து விளங்கும், கல்வி நிறுவனங்களுக்கு, சர்வதேச அடிப்படையிலான, உயர்தர உயர்கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 
இதை தொடர்ந்து, ஆராய்ச்சி பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய கண்டுபிடிப்புக்கான கவுன்சிலான, 'இண்டியன் இன்னோவேஷன்ஸ் கவுன்சில்' என்ற, ஐ.ஐ.சி., அமைப்பு நிறுவப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கவுன்சிலில் இணைந்து, ஆராய்ச்சி பணிகளை மேம்படுத்த, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. நவ., 20க்குள், ஏ.ஐ.சி.டி.இ.,யின் இணையதளத்தில், விபரங்களை பதிவேற்ற வேண்டும் என, உயர்கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

TRB - சிறப்பாசிரியர் இறுதிப் பட்டியல் குளறுபடி - விளக்கம் அளிக்க கோரிக்கை!

வீடு கட்டுவதற்கான விதி மாற்றம்



வீடு கட்ட அனுமதிக்கப்படும் எஃப்எஸ்ஐ எனப்படும் தளப் பரப்பளவு குறியீடு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நேற்று (நவம்பர் 7) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் வீடு மற்றும் அடுக்குமாடிக் கட்டடம் கட்டுவதற்கு, தளப் பரப்பளவு குறியீடு எனப்படும் கட்டட ஒழுங்கு முறை விதி பின்பற்றப்படுகிறது. சிறப்புக் கட்டடங்கள் எனப்படும் நான்கு மாடிகளுக்கு மிகாத கட்டடங்களுக்கு, தளப் பரப்பளவு 1.5 மடங்காக இருந்தது. இதனால், 1,000 சதுர அடி நிலத்தில் 1,500 சதுர அடி பரப்புக்கு மிகாமல் மட்டுமே கட்டடத்தைக் கட்ட முடியும்.

சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில், அனைவருக்கும் இலவசமாக அனுமதிக்கப்படும் தளப் பரப்பளவு குறியீடானது 1.5இல் இருந்து 2 ஆக மாற்றியமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இது குறித்த அரசாணை, நேற்று தமிழக அரசினால் வெளியிடப்பட்டது. “1,000 சதுரடி நிலம் வைத்திருப்பவர்கள் 1,500 சதுர அடிக்குக் கட்டடம் கட்டிக்கொள்ளலாம் என்ற அனுமதியானது, தற்போது 2,000 சதுர அடி வரை மாற்றப்பட்டுள்ளது” என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை: 24.01.2019 க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் பதிவு சலுகை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது.


 திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் கடந்த 2011, 2012, 2013, 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்கள் தங்கள் பதிவினை 24.01.2019 தேதிக்குள் அரசு வேலைவாய்ப்பு இணையதளம் வாயிலாகவோ, அல்லது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவட்டையின் நகலுடன் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ, பதிவஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். 

மேலும், 25.01.2019-க்குப் பிறகு புதுப்பித்தல் கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தமிழக அரசு அறிவித்துள்ள இச்சலுகையினைப் பெற்று பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அறிவித்துள்ளார்

கலெக்டரிடம் ஆசிரியர்கள் புகார் - 2 BEO - கள் , 'சஸ்பெண்ட்'

ஆசிரியர்களுக்கு, பணப்பலன்களை பெற்று தராமல், காலதாமதம் செய்ததால், இரு வட்டார கல்வி அலுவலர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.


கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியில் இரு வட்டார கல்வி அலுவலகங்கள், மகாதானபுரம் அக்ரஹாரத்தில் செயல்படுகிறது. இங்குள்ள ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன் மற்றும் அவர்கள் கடன் வேண்டி மனு அளித்திருந்தனர். மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்காதால், பணப்பலன்களை பெற முடியாமல் ஆசிரியர்கள் தவித்தனர்.

இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், அனைத்து ஆசிரியர்கள் சார்பில், கல்வி அலுவலரை கண்டித்து கண்டன நோட்டீஸ் ஒட்டப்பட்டது.கடந்த மாதம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தங்கவேல், குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர், கபீர் ஆகியோர், ஆசிரியர்களிடம், 'சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். பணப்பலன் உட்பட அனைத்து சலுகைகளும் பெற்று தரப்படும்' என, உறுதியளித்தனர்.

இந்நிலையில் ஆசிரியர்கள் கொடுத்த புகார்படி, ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன் மற்றும் கடன் வசதி பெற்று தராமல் தாமதம் செய்ததாக, கிருஷ்ணராயபுரம் வட்டார கல்வி அலுவலர் சேகர், குமுதா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் தங்கவேல் கூறியதாவது:

கிருஷ்ணராயபுரம் தாலுகா வட்டார கல்வி அலுவலர் சேகர் மற்றும் குமுதா ஆகியோர், ஆசிரியர் களுக்கு பெற்று தர வேண்டிய பணப்பலன் மற்றும் கடன் வசதி செய்து தராமல், ஓராண்டுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. ஆசிரியர்கள் கொடுத்த புகார்படி, இரு அலுவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்

ஷாலாசித்தி' திட்டத்தில் பள்ளிகள் 'சென்டம்

மத்திய அரசின், 'ஷாலாசித்தி' இணையதளத்தில்,
அனைத்து பள்ளிகளும், தகவல்களை பதிவு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்



மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், நாடு முழுக்க, பள்ளிக்கல்வி தரத்தை மேம்படுத்த, 'ஷாலாஷித்தி' திட்டம், கடந்த 2016ல் கொண்டு வரப்பட்டது


*தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம் (நியூபா) சார்பில், திட்டத்துக்கென பிரத்யேக இணையதளம் (www.shaalasiddhi.nuebha.org) உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி சார்ந்த தகவல்களை உள்ளீடு செய்யும் பட்சத்தில், நிதியுதவி அளிக்கப்படுகிறது

*பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, தேவையான அனைத்து வகை பயிற்சிகளும், தலைமையாசிரியர்களுக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் சேர, அக்.,31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது


*கோவையில் உள்ள அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் இந்த இணையதளத்தில் தகவல்களை பதிவேற்றியுள்ளன


*பள்ளியின் பெயர், மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டமைப்பு பணிகள், கால அவகாசம் குறித்து, தெளிவாக குறிப்பிட்டு நிதி ஒதுக்குவதால், அரசுப்பள்ளிகள் இத்திட்டத்தில் பயனடைவதாக, ஒருங்கிணைந்த கல்வி உதவித்திட்ட அலுவலர் கண்ணன் தெரிவித்தார்

சென்னையில் ஜாக்டோ-ஜியோ இணைப்பு குறித்து இருபிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது !!

16.11.2018 வெள்ளிக்கிழமை பள்ளிகள்,கல்லூரிகள்,அரசு அலுவலகங்கள் அனைத்தும் உள்ளூர் விடுமுறை-நாகை மாவட்டம்