யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/11/18

1 மற்றும் இரண்டாம் வகுப்புக்கு EVS பாடம் கிடையாது - NCERT Instructions

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் அறிவுரை - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை 


1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதம் பாடங்களை தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது.

3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம், சுற்றுச்சூழல் மற்றும் கணிதம் தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது.

1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது.

DECEMBER MONTH DIARY - 2018



Flash News: "நீட் தேர்வு எழுதும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஆசிரியர்களே கட்டணம் செலுத்த வேண்டும்"

நீட் தேர்வுக்கு கட்டணம் செலுத்த முடியாத அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களே கட்டணம் செலுத்த வேண்டும் என தமிழக கல்வித்துறை உத்தரவு.....

* ஒவ்வொரு அரசு பள்ளியிலும் 5 மாணவர்களை கட்டாயம் நீட் தேர்வில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு

* அனைத்து மாணவர்களையும் நீட் தேர்வில் கலந்து கொள்ள வைக்கும் முயற்சி என கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்

* நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளையும் எளிமைப்படுத்தி, விரிவுபடுத்த கல்வித்துறை திட்டம்.
                            
                                                                 
                                      
                                   

கஜா புயலால் நிவாரணம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்க ஜாக்டோ- ஜியோ முடிவு :


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளதாக ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் அறிவித்துள்ளார்.திருவள்ளூரில் ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாவட்ட மாநாடு இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளா் மற்றும் ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் பேசுகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், ஊராட்சி செயலாளர், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 21-மாத நிலுவைத் தொகையை உடனே வழங்குதல் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிச.4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளன.

இக்கூட்டம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு கூட்டம் நடத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 26-ஆம் தேதி முதல், 30-ஆம் தேதி வரையில் வேலை நிறுத்த பிரசாரம் மேற்கொள்ளவும், 30-ஆம் தேதி தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். அதற்குள் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையென்றால் டிசம்பர் 4-ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம்.

மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியும் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்கவும் இக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

நீதிக்கதை



நீ எந்தக் காகம்?

பலராம் பிழைப்பதற்கு வழியின்றித் தவித்தான். என்ன செய்வதென்று தெரியவில்லை....ஒரு நாள் அறிவுமதி என்ற அறிஞரைச் சந்தித்தான். அவரிடம் தன் கஷ்டங்கைச் சொன்னான்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார் அறிவுமதி. அவர் பலராமிடம், ""இந்த பூமி பரந்து விரிந்து கிடக்கிறது....இந்த ஊரில் உனக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் வெளியூர் சென்று வேலை தேடு...உன் முயற்சிக்கு ஏற்ப இறைவன் கூலி தருவான்...''

பலராமும் சம்மதித்துப் புறப்பட்ட மூன்றாம் நாள் ஊருக்குத் திரும்பினான்.

ஊருக்குத் திரும்பியவன், அறிவுமதியைச் சந்தித்தான்.

அவரிடம், ""தங்கள் அறிவுரைப்படி நான் கிளம்பிவிட்டேன்.....வழியில் பாலைவனம்!....ஒரே ஒரு மரம் மட்டும் தென்பட்டது....கடுமையான வெயிலில் நடந்து களைத்துப் போய் அந்த மர நிழலில் அமர்ந்தேன்....அந்த மரத்தில் சிறகொடிந்த ஒரு நொண்டிக்காகம் பசியால் துடித்துக் கொண்டிருந்தது...அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த இன்னொரு காகம், தான் கொண்டு வந்த உணவை இந்த நொண்டிக் காக்கைக்கு ஊட்டி விட்டுச் சென்றது! எங்கோ பாலைவனத்தில் பசியால் கிடந்து துடிக்கும் ஒரு நொண்டிக்காக்கைக்கு மற்றொரு காகத்தின் மூலம் உணவை அளிக்கும் இறைவன், என்னை மட்டும் கை விட்டு விடுவானா....என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது!....திரும்பி வந்து விட்டேன்!...'' என்றான்.

அறிவுமதி சிரித்துக் கொண்டே, ""அது சரி!....நீ அதில் எந்தக் காகம்?'' என்று கேட்டார்.

""ஐயா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''

""யாராவது உணவு தருவார்களா,....என்று பரிதவிக்கும் நொண்டிக் காகமா?....அல்லது .....பாடுபட்டு உணவு தேடி தானும் உண்டு பிறருக்கும் வழங்கும் வலிமை உள்ள காகமா?...நீ எந்தக் காகமாக இருக்கு விரும்புகிறாய்?''
இப்போது நம்பிக்கையோடு உற்சாகமும் பலராமுக்கு ஏற்பட்டு விட்டது.

தற்போது அவன் வறுமை நீங்கி சந்தோஷமாக இருக்கிறான்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.80 கோடி நிவாரணம் - ஜாக்டோ ஜியோ முடிவு:


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியம் 80 கோடி ரூபாய் வழங்க முடிவு
 செய்யப்பட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ மாநில செய்தி தொடர்பாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியகள் ஒருநாள் ஊதியம் 80 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ மாநில செய்தி தொடர்பாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள ஊழியர்கள் ஊதியத்தை வழங்க உள்ளதாக அவர் கூறினார்

2019ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை: அகரம் Foundation "விதை திட்டம்" இவ்வாண்டு +2 முடிக்கும் மாணவர்களை பரிந்துரை செய்யும் ஆசிரியர்கள் கவனத்திற்கு!!


                            

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு முன் ஊதிய உயர்வு : தமிழக அரசு உத்தரவு :

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நிலையில் 3 மாதங்களுக்கு முன்பே ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசுத் துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒரு ஆண்டில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் காலத்திற்கு அடுத்த நாள் ஊதிய உயர்வு வந்தால், அந்த ஊதிய உயர்வு கிடைக்காமலே ஓய்வுபெறும் நிலை இருந்து வந்தது.

இதுதொடர்பாக அரசு அலுவலர் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஓய்வுபெறும் மாதத்திற்கு அடுத்த நாள் ஊதிய உயர்வு வந்தால் முன்பே ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஊதிய உயர்வு வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை செயலாளர் சுவர்ணா வெளியிட்ட அரசாணையில் (எண்.148) கூறியிருப்பதாவது:
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் இருந்து மூன்று மாதங்களில் ஊதிய உயர்வு இருந்தாலோ, மரணம் அடைந்து விட்டாலோ அந்த அரசு ஊழியர்களுக்கு அந்த மூன்று மாத தொடக்கத்தின் முதல் நாளில் ஊதிய உயர்வு வழங்கலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்பழகன் கூறுகையில், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் இருந்து மூன்று மாதங்களில் ஊதிய உயர்வு இருந்தால், கடைசி மூன்று மாதத்தின் முதல் நாளில் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் ஊதிய உயர்வுக்கு ஓராண்டு ஆகியிருக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, ஓய்வுபெறும் ஊழியர்கள் 10வது மாதத்திலேயே ஊதிய உயர்வு பெறும் நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்’ என்றார்.

கனவு ஆசிரியர்கள்




ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள 5 புதிய ரீசார்ஜ் திட்டங்கள்.! மிஸ் பண்ணிடாதீங்க.!

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது 5 சிறப்பு புது ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்குப் பல சலுகைகளையும் பல புதிய திட்டங்களையும் அறிவித்துக்கொண்டே இருக்கிறது. ஏர்டெல் இன் புதிய ஸ்மார்ட் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.34, ரூ.64, ரூ.94, ரூ.144 மற்றும் ரூ.244 என்ற ஐந்து புதிய திட்டங்களை அதிகப்படியான 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.34:
தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ரூ.34 திட்டத்தில் 100 எம்.பி 4ஜி டேட்டா பயன்பாடு, ரூ.25.66க்கு டாக்டைம் சேவையுடன் அவுட்கோயிங் கால்களுக்கு வினாடிக்கு 2.5 பைசா என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.
ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.64:
ஏர்டெல் ப்ரீபெய்ட் ரூ.64 திட்டத்தில் 200 எம்.பி 4ஜி டேட்டா பயன்பாடு சேவை, ரூ.54க்கு டாக்டைம் சேவையுடன் அவுட்கோயிங் கால்களுக்கு வினாடிக்கு 1 பைசா என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தற்பொழுது ஏர்டெல் பயனர்களுக்கு கிடைக்கிறது.

ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.94:
ஏர்டெல் ப்ரீபெய்ட் ரூ.94 திட்டத்தில் 500 எம்.பி 4ஜி டேட்டா பயன்பாடு சேவை, ரூ.94க்கு முழு டாக்டைம் சேவையுடன் அவுட்கோயிங் கால்களுக்கு நிமிடத்திற்கு 30 பைசா என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தற்பொழுது கிடைக்கிறது.



ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.144:
ஏர்டெல் ப்ரீபெய்ட் ரூ.144 திட்டத்தில் 1 ஜிபி 4ஜி டேட்டா சேவை, ரூ.144க்கு முழு டாக்டைம் சேவையுடன் அவுட்கோயிங் கால்களுக்கு நிமிடத்திற்கு 30 பைசா என்று 42 நாட்கள் வேலிடிட்டியுடன் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.244:
ஏர்டெல் ப்ரீபெய்ட் ரூ.244 திட்டத்தில் 2 ஜிபி 4ஜி டேட்டா சேவை, ரூ.244க்கு முழு டாக்டைம் சேவையுடன் அவுட்கோயிங் கால்களுக்கு நிமிடத்திற்கு 30 பைசா என்று 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அறிவியல்-அறிவோம்: விரல் ரேகை மாறுமா-தடயஅறிவியல் அறிவோம் :

தடய அறிவியல் அல்லது தடயவியல் (Forensic Science) என்பது அறிவியலின் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகும். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை சோதனைச் சாலைகளில் ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலான சாட்சியங்களாக தடயவியல் வல்லுனர்கள் மாற்றுகின்றனர்.
ஆசியாவிலே சென்னையில் தான் முதன்முதலில் (1849-ம் ஆண்டு) தடய அறிவியல் துறை ஆரம்பிக்கப்பட்டது.

குருதி, எச்சில், மயிர், வாகனச் சக்கரங்கள் மற்றும் காலணிகளின் அச்சு, கைரேகை, காலடி தடங்கள் வெடிபொருட்கள், உடலின் பிற திரவங்கள், மதுபானங்கள் போன்றவற்றை தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து முக்கியமான துப்புகளைத் தருகின்றனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்களாக இவை அமைகின்றன. இது தவிர கையெழுத்து மோசடிகள் குறித்து ஆராய்வதும் இத்துறையில் அடங்கும். வழக்குகளை தீர்க்க உதவும் தகவல்களைச் சேகரித்து தடயவியல் வல்லுனர்கள் காவல்துறைக்கு உதவுகின்றனர்.
விரல்ரேகை மாறுமா?
தாயின் கர்ப்பப்பையில் கருவாக இருக்கும்போதே நம் விரல்களின் ரேகை உருவாகிவிடும். கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கு 17-வது வாரத்தில் கைரேகைகள் தோன்றும். இந்த ரேகை அமைப்பு தோலின் புறத் தோல் (Epidermis), அடித் தோல் (Dermis) ஆகிய தோலின் இரு அடுக்குகளிலும் பதிந்திருக்கிறது. இதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாகக்கூட மாற்ற முடியாது. அதேபோல, ஒருவருடைய விரல் ரேகை அமைப்பு, மற்றொருவருடைய விரல் ரேகை அமைப்புடன் ஒத்திருக்காது. ஒரே கருவில் உருவான இரட்டைக் குழந்தைகளுக்குக்கூட ரேகைகள் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு கைரேகையும் தனித்தன்மை கொண்டது. ஒருவரின் வாழ்நாள் முழுக்க அவருடைய ரேகையில் பெரிதாக மாற்றம் இருக்காது. வயது, கைகளைப் பயன்படுவதற்கேற்ப கைரேகையில் தேய்மானம் ஏற்படலாம்; ஆனால், மாற்றம் ஏற்படாது.
கைரேகைப் பதிவு மூலம் குற்றவாளிகளைக் கைது செய்யும் நுட்பத்தை உருவாக்கியவர் எட்வர்டு ஹென்றி. இவர் 1890-ஆம் ஆண்டு வாக்கில் வங்காளத்தில் காவல்துறைத் தலைவராக இருந்தவர்.

1901- ம் ஆண்டில் ஸ்காட்லாந்து யார்டில் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரியாக ஹென்றி நியமிக்கப்பட்டார். அங்கு அவர் முதல் முறையாக கைரேகைப் பிரிவைத் தொடங்கினார். பின்னாளில் காவல்துறை ஆணையரான அவர் 1918-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

கைரேகைகளை வகைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய மற்றொரு காவல்துறை அதிகாரி அர்ஜென்டீனாவைச் சேர்ந்த ஜூவன் வுசெட்டிக்.

ஒருவரை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு மிகவும் நம்பத்தகுந்த ஆதாரமாக கைரேகை விளங்குகிறது.

ஒரு குற்றச் சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறை தடயவியல் நிபுணர்கள் முதலில் கைரே கையைத்தான் தேடுவார்கள். பதிவான கைரேகை `பளிச்'சென்று தெரிவதில்லை. எனவே கைரேகை நிபுணர்கள், கைரேகை பதிந்திருக்கக்கூடும் என்று நினைக்கும் இடத்தில் அதற் கென உள்ள பொடியைத் தூவிப் பார்ப்பார்கள்.

கையில் இயல்பாகவே உள்ள எண்ணைப் பசையால் கைரேகைப் பதிவுகள் ஏற்படுகின்றன. பொடி தூவப் படும்போது அது எண்ணைப் பசை பகுதியில் படிவதால் கைரேகைப் பதிவு நன்றாகத் தெரிகிறது.

அந்த கைரேகைப் பதிவுகள் புகைப்படம் எடுக்கப்பட்டு, ஏற்கனவே காவல்துறையினர் வசம் இருக்கும் குற்ற வாளிகளின் கைரேகைகள் மற்றும் சந்தேகத்துக்கு இடமானவர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன.


கைரேகைகளை விட்டுவிடக்கூடாது என்பதற்காக குற்றவாளிகள் கையுறைகளை அணிவது உண்டு. ஆனால் கையுறைகளின் பதிவுகளின் மூலமும் அவை வாங்கப்பட்டு எவ்வளவு நாட்களாகின்றன, அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நூல் என்ன, தைக்கப்பட்டிருக்கும் விதம் என்ன என்பது போன்ற விவரங்களை அறியலாம்.

சந்தேகத்துக்கு இடமான ஒருவரிடம் கையுறைப் பதிவுகளுடன் ஒத்துப்போகும் கையுறை இருந்தால் அது குறிப்பிட்ட நபருக்கு எதிரான வலுவான ஆதாரமாகிவிடும்.

டிசம்பர்-3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் முன்னிட்டு சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணை:



26/11/18

கல்லுாரி அங்கீகாரத்திற்கு காத்திருக்கலாமே!'

மதுரை, மதுரை காமராஜ் பல்கலைக்கு, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, தேடல் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், 'துணைவேந்தர் பொறுப்பேற்ற பின், புதிய கல்லுாரி மற்றும் பாடத்திட்டம் இணைப்பு அங்கீகாரம் வழங்க வேண்டும்' என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
'துணைவேந்தர் பதவிக்கு தகுதியுள்ளோர், டிச., 14க்குள் விண்ணப்பிக்கலாம்' என, நாகேஸ்வரன் தலைமையிலான புதிய தேடல் குழு, நேற்று அறிவித்தது. டிசம்பருக்குள் புதிய துணைவேந்தர் நியமிக்க வாய்ப்பு உள்ளது.இந்நிலையில், 'புதிய கல்லுாரிகளுக்கான இணைப்பு அங்கீகாரம், கல்லுாரிகளில் புதிய பாடங்களுக்கான இணைப்பு அங்கீகாரம், டெண்டர் வெளியிடுவது உள்ளிட்ட பணிகளை, புதிய துணைவேந்தர் வருவதற்குள் முடித்து விடலாம்' என 'கடமை உணர்வுள்ள' சில அதிகாரிகள், 'துரித' நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:கல்லுாரி, பாடத்திட்டம் அனுமதி வழங்குவது தொடர்பாக, கல்லுாரிகளை ஆய்வு செய்ய, 30க்கும் மேற்பட்ட குழுக்கள், மாஜி துணைவேந்தர், செல்லத்துரையால் நியமிக்கப்பட்டன.

பல்கலை உயர் பதவிகளிலும், அவர் நியமித்தவர்களே உள்ளனர். குழுக்களில் அனுபவம் இல்லாத, ஜூனியர் ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளதாக, குற்றச்சாட்டு உள்ளது.டிசம்பருக்குள் துணைவேந்தர் நியமிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, 2018 -19 கல்வி ஆண்டுக்கு புதிய அங்கீகாரம், பாடத்திட்டம் இணைப்பு கேட்டு வந்துள்ள விண்ணப்பங்களை, புதிய துணைவேந்தர் பரிசீலிக்க வேண்டும். ஜூன், 16ல் தான் கல்லுாரிகள் துவங்கும். அதற்குள், புதிய துணைவேந்தரால், தகுதியுள்ள கல்லுாரிகளுக்கு இணைப்பு வழங்கி விட முடியும்.அதுவரை இதுபோன்ற அனுமதிகள், கொள்கை முடிவுகளை, இடைக்கால கன்வீனர் கமிட்டி எடுப்பதை நிறுத்த வேண்டும். இதன் மூலம் முன்பு போல முறைகேடுகள், ஊழல்கள் நடக்காமல் பல்கலை பாதுகாக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி சி.இ.ஓ., க்களுக்கு உத்தரவு

திண்டுக்கல்,:'கஜா' புயல் பாதித்த மாவட்டங்களில் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க போதிய வசதிகளை செய்து கொடுக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு 2019 மே 5ல் நடக்கிறது. இத்தேர்வுக்கு பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். மாணவர்கள் யாரும் விடுபடாமல் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதில், 'விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களை கண்டறிந்து தேவையான வசதிகளை ஆசிரியர், தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலர்கள் செய்து கொடுக்க வேண்டும். போதிய இணைய வசதியை பெற முடியாத மாணவர்கள் மற்றும் 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு முன் ஊதிய உயர்வு : தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நிலையில் 3 மாதங்களுக்கு முன்பே ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுத் துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒரு ஆண்டில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் காலத்திற்கு அடுத்த நாள் ஊதிய உயர்வு வந்தால், அந்த ஊதிய உயர்வு கிடைக்காமலே ஓய்வுபெறும் நிலை இருந்து வந்தது. இதுதொடர்பாக அரசு அலுவலர் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஓய்வுபெறும் மாதத்திற்கு அடுத்த நாள் ஊதிய உயர்வு வந்தால் முன்பே ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஊதிய உயர்வு வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை செயலாளர் சுவர்ணா வெளியிட்ட அரசாணையில் (எண்.148) கூறியிருப்பதாவது:

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் இருந்து மூன்று மாதங்களில் ஊதிய உயர்வு இருந்தாலோ, மரணம் அடைந்து விட்டாலோ அந்த அரசு ஊழியர்களுக்கு அந்த மூன்று மாத தொடக்கத்தின் முதல் நாளில் ஊதிய உயர்வு வழங்கலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்பழகன் கூறுகையில், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் இருந்து மூன்று மாதங்களில் ஊதிய உயர்வு இருந்தால், கடைசி மூன்று மாதத்தின் முதல் நாளில் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஊதிய உயர்வுக்கு ஓராண்டு ஆகியிருக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, ஓய்வுபெறும் ஊழியர்கள் 10வது மாதத்திலேயே ஊதிய உயர்வு பெறும் நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்’ என்றார்

சம வேலைக்கு " "சம ஊதியம்" என்ற கோரிக்கைகாக மூன்றே நாளில் நான்காயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரிய போராளிகளை திரட்டிய போராட்டக்குழு

                                               
                                             
சம வேலைக்கு " "சம ஊதியம்" என்ற கோரிக்கைகாக மூன்றே நாளில் நான்காயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரிய போராளிகளை திரட்டிய போராட்டக்குழு...
 இடம்-வள்ளுவர் கோட்டம்,சென்னை நாள்-25.11.2018

மீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்! வெளியான முக்கிய தகவல்!!

                   
                                     
ஜாக்டோ-ஜியோ என்பது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய கூட்டமைப்பாகும் . இந்த அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விதமாக ஆர்ப்பாட்டம், போராட்டம் என போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர்.

குறிப்பாக அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், அரசுப் பள்ளிகளை எக்காரணத்தை கொண்டும் மூடக் கூடாது என்பது குறித்து இந்த அமைப்பு தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை இதுவரை தமிழக அரசு அழைத்துப் பேசவில்லை.

இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பழைய ஓய்வூதியம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் அறிவித்துள்ளனர்

ஜனவரியில் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித்தேர்வர்கள் நவ.26 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு நவ.26-ஆம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவிவியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில்தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும்ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்வுக்கு 1.1.2019 அன்று பனிரெண்டரை வயது பூர்த்திஅடைந்த தனித் தேர்வர்கள் நவ.26-ஆம் தேதி திங்கள்கிழமை முதல்டிச.5-ஆம் தேதி புதன்கிழமை வரை www.dge.tn.gov.in என்றஇணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு (Nodal Centre) நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ பணமாக சேவை மையங்களில்நேரடியாக செலுத்தலாம்.

முதல் முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன்விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும்ஒன்றினை மட்டுமே இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவேஎட்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வியடைந்த பாடத்தைதேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள், ஏற்கெனவே பெற்ற மதிப்பெண்சான்றிதழின் நகல்களைக் கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்கவேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமேஏற்றுக் கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள்நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வுக்கான விரிவான தகவல்களைwww.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் எனதெரிவித்துள்ளார்

அலுவலக உபகரணங்களை பெறுவதற்கு - தனியார் பள்ளிகளை நாடும் மாவட்ட கல்வி அலுவலர்கள் - அரசு நிதி ஒதுக்காததால் இந்த நிலைமை :

புயல்களின் பட்டியலில் இருந்து 'கஜா, வர்தா' பெயர்கள் நீக்கம்?

பெரும் சேதங்களை ஏற்படுத்திய, 'கஜா, ஒக்கி, வர்தா' புயல்களின் பெயர்களை, புயல்களுக்கான பட்டியலில் இருந்து நீக்க, வானிலை மையம் முடிவு செய்துள்ளது.உலகம் முழுவதும், பல்வேறு நாடுகளில் ஏற்படும் புயல்களை, அதன் ஆண்டு மற்றும் நாடுகள் வழியாக தெரிந்து கொள்ள, பெயர்கள் வைக்கப்படுகின்றன. மேலும், புயல்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும், புயல்கள் வருவதை அறிவித்து, முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் எளிதாக, பெயர் வைக்கும் பழக்கம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்பட்டது.முதலில், 1900ல், புயல்களுக்கான பெயர்கள், ஆண் பாலினம் சார்ந்தே வைக்கப்பட்டன. அதன்பின், 1959ல் உலக வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில், மண்டல வாரியாக புயல் கண்காணிப்பு கமிட்டிகள் அமைக்கப்பட்டன.இந்த கமிட்டிகள் இணைந்து, நாடுகளின் புவி அமைப்பின்படி, ஒவ்வொரு மண்டலங்களாக பிரித்து, பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்த பட்டியலில், வரிசையாக பெயர்கள் அமைக்கப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக பெயர் வைக்கப்படுகிறது. இந்த பட்டியல், ஒவ்வொரு, ஆறு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.இந்தியாவில் உருவாகும் புயல்களுக்கு, வடக்கு இந்திய பெருங்கடல் புயல் கமிட்டி பெயர் வைக்கிறது. இந்த கமிட்டி, 2,000த்தில், ஓமன் நாட்டின், மஸ்கட் நகரில் கூடி, பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்தது. இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, ஓமன் மற்றும் மாலத்தீவு நாடுகள் இணைந்து, பெயர்களை வழங்கியுள்ளன.இந்த பெயர் பட்டியல் விதிகளின்படி, பேரழிவு அல்லது பெரும் வரலாற்று நிகழ்வுகளை ஏற்படுத்தும் பெயர்களை, மீண்டும், புயல்களுக்கு வைக்கக் கூடாது. அந்த பெயர்களை, புயல் பெயர் பட்டியலில் இருந்து அகற்றி விட வேண்டும்.இதன்படி, இந்திய பெருங்கடலில் உருவாகி, பெரும் சேதங்களை உருவாக்கிய 'வர்தா, தானே, ஒக்கி மற்றும் கஜா' புயல்களின் பெயர்களை, பட்டியலில் இருந்து நீக்க, வானிலை ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக, புயல்களின் பாதிப்பு குறித்த அறிக்கையை, புயல்களுக்கான பெயர் பட்டியல் கண்காணிப்பு கமிட்டி மற்றும் உலக வானிலை நிறுவனத்திடம் தாக்கல் செய்யப்படும். அந்த அமைப்பு, புயல்கள் தாக்கியதன் அளவு, அதன் விளைவுகளை ஆய்வு செய்து, எந்த பெயர்களை நீக்குவது என்பது குறித்து, முடிவு செய்யும் என, வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவித்தன