யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/12/18

ஏழாவது ஊதியக்குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட திரு.சித்திக்(IAS) தலைமையிலான குழுவின் அறிக்கை இன்றோ அல்லது நாளையோ அரசிடம் சமர்ப்பிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்!!


ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்தி அசத்திய புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்: இரா.வனஜா:

அன்னவாசல்,டிச.7: இலுப்பூர்கல்வி மாவட்டம் அன்னவாசல்  அருகே உள்ள மண்ணவேளாம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில்  ஆண்டாய்வு நடைபெற்றது..

ஆண்டாய்வின் போது புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா திடீரென 6 ஆம் வகுப்புக்குள் சென்று  அறிவியல் பாடத்தில் காற்று என்கிற தலைப்பில் பாடம் நடத்தினார்..பாடம் நடத்தும் பொழுது இடையிடையே மாணவர்களிடம் கேள்வி கேட்டு உற்சாகப்படுத்தினார்..மாணவர்களும் ஆர்வமாக பதில் அளித்தனர்..

ஆண்டாய்வின் போது முதன்மைக்கல்வி அலுவலக பணியாளர்கள் இருவர்,மாவட்ட கல்வி அலுவலக பணியாளர் ஒருவர் என மூவர் அலுவலக பதிவேடுகள் சரியாக உள்ளதா என சரிபார்ப்பார்ப்பார்கள் அதனை முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு செய்வார் .அத்துடன் மாவட்ட கல்வி அலுவலர்,பள்ளி துணைஆய்வாளர்,தலைமையாசிரியர்கள்,ஆசிரிய பயிற்றுநர்கள் அடங்கிய குழுவினர்கள்  ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை மேற்பார்வை செய்வதையும்   ஆய்வு செய்வதோடு, தலைமைஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் 11 ,12 ஆம் வகுப்பு   மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதையும் ஆய்வு செய்வார்.ஆனால் இன்று யாரும் எதிர்பாராத வகையில்  திடீரென ஆறாம்  வகுப்பிற்குள் சென்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாடம் எடுத்தது கண்டு அப்பள்ளி தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்..

 பின்னர் முதன்மைக் கல்வி அலுவலர்  பாடம் நடத்தும் முறை குறித்தும் அரசுத் தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டினை அதிகரிக்கவும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் அறிவுரை வழங்கி பள்ளி வளாகத்தில் மரக்கன்றினை நட்டுச் சென்றார்..

ஆய்வின் போது இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன்,பள்ளி துணைஆய்வாளர் கி.வேலுச்சாமி,மருதாந்தலை பள்ளி தலைமையாசிரியர் பாரதி விவேகானந்தன்,அன்னவாசல் பள்ளி தலைமையாசிரியர் சுவாமிநாதன்,மாங்குடி தலைமையாசிரியர் கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

7/12/18

School Morning Prayer Activities - 07.12.2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:




திருக்குறள் : 99

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

உரை:
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?.

பழமொழி:

Eat to live: do not live to eat

வாழ்வதற்காக சாப்பிடு; சாப்பிடுவதற்காக வாழாதே

பொன்மொழி:

பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம், குற்றம் இல்லாத நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.

- பாரதியார்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :


1) 1 ஸ்கோர் என்றால் என்ன?
20 பொருட்கள்

2) நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வருடம்?
லீப் வருடம்

நீதிக்கதை :


தங்க இறகு







பண்ணைபுரம் என்ற ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவனது வயலில் விளைச்சல் பெருகவே இல்லை. “விவசாயி கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது’ என்ற பழமொழிப்படி பல ஆண்டுகளாகப் பாடுபட்டும்கூட அவன் வறுமையிலேயே வாடிக் கொண்டிருந்தான்.

ஒருநாள் வயலில் ஏர் உழுது விட்டு வரும் போது தகதகவென ஜொலித்த பறவை ஒன்று அங்கிருந்த மரத்தில் அமர்ந்திருந்தது. அதைப் பார்த்த விவசாயி, “இந்தப் பறவை நம் வயலைக் காக்கும் தேவதையாக இருக்கக் கூடும். இத்தனை நாள் நாம் இதை வணங்காமல் போனதால்தான் நம்முடைய வயலில் விளைச்சல் பெருகவில்லை. இன்று முதல் இதை நாம் வணங்குவோம்’ என்று தீர்மானித்தான்.

“”எனது வயலைக் காத்து வரும் தேவதையே! இவ்வளவு நாட்கள் உன்னைக் கவனிக்காமல் இருந்ததற்காக என்னை மன்னித்துவிடு. உனக்கு என் வீட்டில் இருந்து பழங்கள் எடுத்து வந்துள்ளேன். சாப்பிட்டு என்னை ஆசீர்வதிப்பாயாக,” என்று கூறி பாத்திரத்தை வைத்து விட்டுச் சென்றான் விவசாயி.

மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பாத்திரத்தில் ஒரு தங்க இறகு இருந்தது. மகிழ்ச்சியுடன் அதை எடுத்துச் சென்றான் விவசாயி.

நாள்தோறும் மாலை வேளைகளில் விவசாயி பாத்திரத்தை வைத்துவிட்டு வருவான். மறுநாள் காலையில் ஒரு தங்க இறகு இருக்கும். இவ்விதம் மகிழ்ச்சியாகக் காலந்தள்ளிக் கொண்டிருந்த விவசாயி ஒருநாள் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. தனது மகனைக் கூப்பிட்டு அவனிடம் பறவைக்கு பழம் வைத்து விட்டு வருமாறு கூறினான்.

விவசாயி மகனும் தந்தை சொல்லியவாறே அன்று மாலை பழங்களை வைத்து விட்டுச் சென்றான்.

மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது அந்தப் பாத்திரத்தில் ஒரு தங்க இறகு இருந்தது. அதைப் பார்த்த விவசாயியின் மகன், “இந்தப் பறவையைப் பிடித்து தங்க இறகுகளை வேண்டிய மட்டும் பிய்த்துக் கொள்வோம். எப்படியும் பறவைக்கு தங்க இறகு முளைத்துவிடும். மீண்டும் பிய்க்கலாம்,’ என்று நினைத்து அவன் மறுநாள் ஒளிந்திருந்து பறவை பழம் சாப்பிடும் போது பிடித்துக் கொண்டான். அதன் இறகை பிய்க்க முயன்றபோது பறவை அவன் கண்களை குத்தி குருடாக்கி விட்டுச் சென்றது.


விவசாயியின் மகன் பேராசையின் காரணமாக பார்வையற்றவன் ஆனான். கிடைப்பதை கொண்டு திருப்தி அடையணும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான் 


இன்றைய செய்தி துளிகள் : 


1.மேகதாது அணை கட்ட அனுமதி அளித்ததற்கு எதிரான தீர்மானம்: சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்


2.கஜா புயலால் பாதித்த  4 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு  

3.தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நீடிக்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

4.அரசு புறம்போக்கு நிலங்களில் இருப்பவர்களுக்கு மூன்று சென்ட் இலவச வீட்டுமனைப் பட்டா - அரசாணை வெளியீடு

5.உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்தை வீழ்த்தியது ஜெர்மனி

FORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .!புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..!

வாட்ஸ்அப் மூலம் இனி பகிரப்படும் மெசேஜ்களை previewக்கான வசதிகளை வாட்ஸ் அப் அப்டேட் செய்துள்ளது. 

இது குறித்து தெரிவித்த வாட்ஸ்அப் மேசேஜ் அல்லது மீடியா பைல்களை வாட்ஸ்அப் பயன்படுத்தி ஷேர் செய்யும் போது அதனை preview பார்க்கும் வகையில் வாட்ஸ்அப் புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வசதி முதலில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் beta வெர்ஷன் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் கூடுதலாக GIF ஸ்டிக்கர்ஸ் அனுப்புவதற்காக கூடுதல் வசதியும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்காக புதியதாக அப்டேட் செய்ய வாட்ஸ்அப் தயாராகி வருகிறது.மேலும் மற்ற apps-களிலுருந்து அனுப்பப்படும் தகவல்களைப் பகிரும் போது preview வை பயனாளர்கள் பார்த்துக்கொள்ளலாம். 

android பயனாளர்கள் மற்றும் மெசேஜ் அல்லது லிங்க் என எது அனுப்பினாலும் அதனை preview பார்க்கலாம்.இந்த புதிய அப்டேட் மூலம் பயனாளர் ஒரு செய்தியை ஒரு நபர் அல்லது அதற்கு மேற்பட்டவருக்கு பகிர்ந்து கொண்டாலும் Preview பார்த்துக் கொள்ளலாம். இந்த feature ஆனது வாட்ஸ்அப் மூலம் பரவுகின்ற பொய் செய்திகளைத் தடுக்க உதவி செய்யும் என்று தெரிகிறது. தற்போது அப்பேட் ஆன இந்தப் புதிய அப்டேட் உடன் கூடிய வாட்ஸ்அப் மற்றும் Google play beta programme மூலம் இதனை பதிவிறக்கம் செய்யலாம். இதனை அடுத்து எல்லோராலும் விரும்ப்படும் GIF stickers பயன்பாட்டை எளிதாக்க கூடிய முயற்சியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது என்ற தகவல் தெரிவிக்கின்றது.

ஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி விரைவில் ஸ்மார்ட்ஃபோன் மூலம் பணம் எடுக்கும் முறையை வங்கிகள் அறிமுகம் செய்ய உள்ளன.

விரைவில் ஏடிஎம் மையங்களில் ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள QR குறியீட்டை ஸ்கான் செய்து பணம் எடுத்துக்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் சம்மந்தப்பட்ட வங்கிகளின் யூபிஐ செயலி அல்லது மொபைல் வங்கி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில் தோன்றும் QR குறியீட்டினை யூபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்து அதற்கான பாதுகாப்பு பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகி அதில் உள்ள பணத்தினை எடுத்துக்கொள்ள முடியும். வங்கிகள் இந்தப் புதிய சேவையினை அறிமுகம் செய்ய பெரிய செலவுகள் எதுவும் ஆகாது.

யூபிஐ செயலியினை உருவாக்கிய இந்திய தேசிய கொடுக்கல் நிறுவனம் (NPCI - National Payments Corporation of India) இதற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இந்த முயற்சிக்கு எப்போது அனுமதி கிடைக்கும் மற்றும் செயல்பாட்டிற்கு வரும் என்ற விவரங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

04-10-2018 அன்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்ததை உறுதி செய்துகொள்ள கருவூல கணக்கு ஆணையர் கடிதம்


நீதிக்கதை :---சிந்தனை கதைகள்

தங்க இறகு



பண்ணைபுரம் என்ற ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவனது வயலில் விளைச்சல் பெருகவே இல்லை. “விவசாயி கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது’ என்ற பழமொழிப்படி பல ஆண்டுகளாகப் பாடுபட்டும்கூட அவன் வறுமையிலேயே வாடிக் கொண்டிருந்தான்.

ஒருநாள் வயலில் ஏர் உழுது விட்டு வரும் போது தகதகவென ஜொலித்த பறவை ஒன்று அங்கிருந்த மரத்தில் அமர்ந்திருந்தது. அதைப் பார்த்த விவசாயி, “இந்தப் பறவை நம் வயலைக் காக்கும் தேவதையாக இருக்கக் கூடும். இத்தனை நாள் நாம் இதை வணங்காமல் போனதால்தான் நம்முடைய வயலில் விளைச்சல் பெருகவில்லை. இன்று முதல் இதை நாம் வணங்குவோம்’ என்று தீர்மானித்தான்.

“”எனது வயலைக் காத்து வரும் தேவதையே! இவ்வளவு நாட்கள் உன்னைக் கவனிக்காமல் இருந்ததற்காக என்னை மன்னித்துவிடு. உனக்கு என் வீட்டில் இருந்து பழங்கள் எடுத்து வந்துள்ளேன். சாப்பிட்டு என்னை ஆசீர்வதிப்பாயாக,” என்று கூறி பாத்திரத்தை வைத்து விட்டுச் சென்றான் விவசாயி.

மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பாத்திரத்தில் ஒரு தங்க இறகு இருந்தது. மகிழ்ச்சியுடன் அதை எடுத்துச் சென்றான் விவசாயி.

நாள்தோறும் மாலை வேளைகளில் விவசாயி பாத்திரத்தை வைத்துவிட்டு வருவான். மறுநாள் காலையில் ஒரு தங்க இறகு இருக்கும். இவ்விதம் மகிழ்ச்சியாகக் காலந்தள்ளிக் கொண்டிருந்த விவசாயி ஒருநாள் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. தனது மகனைக் கூப்பிட்டு அவனிடம் பறவைக்கு பழம் வைத்து விட்டு வருமாறு கூறினான்.

விவசாயி மகனும் தந்தை சொல்லியவாறே அன்று மாலை பழங்களை வைத்து விட்டுச் சென்றான்.

மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது அந்தப் பாத்திரத்தில் ஒரு தங்க இறகு இருந்தது. அதைப் பார்த்த விவசாயியின் மகன், “இந்தப் பறவையைப் பிடித்து தங்க இறகுகளை வேண்டிய மட்டும் பிய்த்துக் கொள்வோம். எப்படியும் பறவைக்கு தங்க இறகு முளைத்துவிடும். மீண்டும் பிய்க்கலாம்,’ என்று நினைத்து அவன் மறுநாள் ஒளிந்திருந்து பறவை பழம் சாப்பிடும் போது பிடித்துக் கொண்டான். அதன் இறகை பிய்க்க முயன்றபோது பறவை அவன் கண்களை குத்தி குருடாக்கி விட்டுச் சென்றது.


விவசாயியின் மகன் பேராசையின் காரணமாக பார்வையற்றவன் ஆனான். கிடைப்பதை கொண்டு திருப்தி அடையணும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான் 

வங்கக் கடலில் புதிய புயல்..?? அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் எல்லாம் அடித்து வெளுக்கப் போகுது மழை !!

கடந்த மாதம் 15 ஆம் தேதி வங்க கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டையில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி சென்றது.

இந்த புயலால் புதுச்சேரியிலும் பாதிப்பு ஏற்பட்டது. காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பினை கஜா புயல் ஏற்படுத்தி சென்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி போனது.


இந்த நிலையில் , வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதனை அடுத்து டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் அதாவது நாளையும்இ நாளை மறுநாளும் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் குமரிக்கடல் , மன்னார் வளைகுடா , தென்மேற்கு வங்க கடலுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது .


இதே போல் காற்றழுத்த தாழ்வு சுழற்சி நகர்ந்துள்ளதால் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.


இந்திய பெருங்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த சுழற்சி தற்போது, இலங்கையின் கொழும்பு அருகே நிலை கொண்டுள்ளது. அதேசமயம், தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகாவில் நிலவி வந்த மற்ற இரண்டு காற்றழுத்த சுழற்சிகள் மறைந்து விட்டன.


இதனால் வட தமிழகத்தில் நேற்று பெய்த மழை இன்று குறைந்துள்ளது. இந்த இரு சுழற்சிகள் தான் வட தமிழகம் வரை காற்றை ஈர்த்து வழங்கி வந்தது. தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்பதால் சென்னை உட்பட வட தமிழகத்துக்கு மழை குறைந்துள்ளது.

அதேசமயம், தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். இந்த மழை 6-ம் தேதி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது 8-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிகிறது எனவும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் செல்வகுமார் தெரிவித்துள்ளார்..


டிசம்பர் 12-ம் தேதியையொட்டி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. அது சற்று வலிமையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. அதன்போக்கை பொறுத்து டிசம்பர் 12-ம் தேதிக்கு பிறகு மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


இதனிடையே சென்னையில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்தது. கிண்டி, எழும்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வேளச்சேரி, திருவான்மியூர், திருவொற்றியூர், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

ஆசிரியர்களின் அசல் சான்றிதழ்கள் திருப்பி தர உத்தரவு :

தனியார் பல்கலை பேராசிரியர் ஒருவர் தற்கொலை எதிரொலியாக, அசல் சான்றிதழ்களை, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் திருப்பி தர, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.தனியார் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கல்வி தகுதிக்கான, அசல் சான்றிதழ்களை, நிர்வாகங்கள் வாங்கி வைத்து கொள்கின்றன. சென்னையைச் சேர்ந்த, தனியார் பல்கலை பேராசிரியர், அண்ணா பல்கலையின், எம்.ஐ.டி., கல்லுாரியில் பணிக்கு சேர்ந்தார். அவருக்கு, தனியார் பல்கலையில் இருந்து, அசல் சான்றி தழ் கிடைக்கவில்லை.இதனால், மனம் உடைந்த அவர், தற்கொலை செய்தார்.
இந்த பிரச்னை, நீதிமன்றத்திற்கும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,க்கும் சென்றுள்ளது.இதையடுத்து, அனைத்து பல்கலைகளும், கல்லுாரி களும், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் அசல் சான்றிதழ்களை திருப்பி தர வேண்டும் என, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ., நேற்று வெளியிட்ட அறிவிப்பு:பல பல்கலைகளும், கல்லுாரிகளும், பேராசிரி யர்கள் மற்றும் ஊழியர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்து, வேறு வேலைக்கு செல்ல முடியாமல் தடுக்கின்றன. அதனால், சிறந்த பணிகளுக்கு செல்ல முடியாமல் தடுக்கப்படுகின்றனர். சான்றிதழ் கிடைக்காத அதிர்ச்சியில், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் நடந்துள்ளது; இது, மிகவும் வருந்தத்தக்கது.எனவே, எந்த பல்கலையும், கல்லுாரியும், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின், அசல் சான்றிதழ்களை வாங்கி வைக்க கூடாது. வாங்கி வைத்திருந்தால், உடனடியாக திருப்பி தர வேண்டும். இதுகுறித்து, புகார்கள் வந்தால், கல்வி நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

வைப்புநிதி கணக்குடன் ஆதார் இணைக்க டிச.10 வரை கெடு :

மதுரை வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகத்தில் ஏப்., 2018 முதல் வைப்புநிதி வேண்டி 70 ஆயிரம் ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆதார், வங்கி கணக்கை வருங்கால வைப்புநிதி கணக்குடன் இணைத்தால் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்,'' என, மண்டல வைப்புநிதி கமிஷனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் தெரிவித்துள்ளதாவது: வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து முன் பணம், கணக்கை முடிக்க விரும்பும் சந்தாதாரர்கள் தங்கள் கே.ஒய்.சி., விவரங்களை நிறுவனம் மூலம் ஒப்புதல் அளித்திருந்தால் தாங்களே ஆன்லைனில் படிவமாக சமர்ப்பிக்கலாம். பெரும்பாலான சந்தாதாரர்கள் தங்கள் ஆதார், வங்கி கணக்கை வைப்பு நிதி கணக்கு எண்ணுடன் (யு.ஏ.என்) இணைக்கவில்லை. இதை இணைக்க www.epfindia.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று யு.ஏ.என்.,னை 'ஆக்டிவேட்' செய்யலாம்.ஆதார் விவரம் இவ்வலுவலக சந்தாதாரர் விவரங்களுடன் பொருந்தி இருக்க வேண்டும். சந்தாதாரர்களுக்கு உதவி செய்ய ஒவ்வொரு நிறுவனத்திலும் போதுமான ஏற்பாடு செய்துள்ளோம். டிச., 10க்குள் பணியாளர்களின் ஆதார் விவரங்களை இணைக்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்போர் 'யூமாங்' ஆப் பதிவிறக்கம் செய்து வைப்புநிதி சார்ந்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றார்.

எஸ்.சி., எஸ்.டி., மாணவருக்கு ஐஐஎம் நுழைவுத் தேர்வு பயிற்சி: புதிய விதிமுறைகள் வெளியீடு:

ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ-மாணவிகள் எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை அளிப்பதற்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஒட்டெம் டாய் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

ஐ.ஐ.எம்., போன்ற கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., போன்ற மேற்படிப்பு படிக்க பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெறும் வகையில் ஆண்டுக்கு 100 தகுதியுள்ள மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.
அவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு பயிற்சி அளிப்பதில் தலைசிறந்த பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படும். ஒரு மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 100 பேருக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
இந்த நிலையில், ஒரு பயிற்சி நிறுவனத்தைத் தேர்வு செய்து ஒரே இடத்தில் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமில்லாதது என ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பொது நுழைவுத் தேர்வு பயிற்சி அளிக்கும் திட்டத்துக்கான விதிகளுடன், கூடுதலாக விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதிய விதிகள் என்ன?: ஒரே நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக பல்வேறு நிறுவனங்களைத் தேர்வு செய்யலாம். பயிற்சியை ஒரே நகரத்தில் மட்டும் மேற்கொள்ளாமல், திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய நகரங்களிலும் நடத்தலாம். ஒவ்வொரு நகரத்திலும் பல்வேறு நிறுவனங்களை அங்கீகாரம் செய்யலாம். இப்போதுள்ள சந்தை விலை விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு பாடத்திட்டம், பயிற்சிக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்யலாம்.
பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சேரும் ஆதிதிராவிடர் பயிற்சியாளர்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கலாம். பயிற்சியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக தாட்கோவால் நிதி அளிக்கப்படும் மாணவ-மாணவிகள் பயிற்சி நிறுவனங்களின் வழக்கமான வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். தரமான பயிற்சியை அளிக்கும் வகையிலும், பயிற்சியாளர்களின் வருகையில் குறைபாடு ஏற்படாமல் இருக்கவும் தனி வகுப்புகளுக்கு அனுமதிக்கக் கூடாது.
மாணவர்கள் வழக்கமான வகுப்புகளில் சேர்க்கப்பட வேண்டும். இணையதளம் அல்லது விரைவாக முடிக்கும் வகுப்புகளாக இருக்கக் கூடாது. பயிற்சியின் காலம் குறைந்தபட்சம் 100 மணி நேரம் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் பயிற்சி நிறுவனத்தின் கட்டணம் அல்லது ரூ.50 ஆயிரம் ஆகியவற்றில் எது குறைவோ அந்தத் தொகை அளிக்கப்பட வேண்டும் என்று ஒட்டெம் டாய் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்

வனத்துறை தேர்வு இன்று துவக்கம் :

தமிழகத்தில், 139 மையங்களில், வனவர், வனக் காப்பாளர் பணியிடங்களுக்கான, 'ஆன்லைன்' தேர்வு, இன்று துவங்குகிறது.தமிழகத்தில், 300 வனவர் பணியிடங்களுக்கு, 1.10 லட்சம் பேரும், 878 வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு, 98 ஆயிரத்து, 801 பேரும் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தேர்வு, ஆன்லைன் முறையில் நடைபெறும் என, வனத் துறை அறிவித்துள்ளது.இதில், வனவர் பணியிடங்களுக்கான தேர்வு, 139 மையங்களில், இன்று துவங்குகிறது. வரும், 9ம் தேதி வரை, இத்தேர்வு நடைபெறும். வனக் காப்பாளர் தேர்வு, 122 மையங்களில், வரும், 10, 11 தேதிகளில் நடைபெறும்.இதற்கான விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வு வழிமுறை விபரங்கள், தனித் தனியாக அனுப்பப்பட்டு உள்ளதாக, தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.
8ம் வகுப்பு : தனி தேர்வர்களுக்கு, எட்டாம் வகுப்பு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுஉள்ளது.அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தனி தேர்வர்களாக, எட்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத விரும்புவோருக்கு, 2019 ஜன., 21 முதல், 25 வரை தேர்வு நடக்கும். தேர்வுக்கான அட்டவணை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

ஐ.ஏ.எஸ்., தேர்வான 180 பேரில் 11 பேர் தமிழகத்திற்கு ஒதுக்கீடு:

கடந்த 2017 ல் யு.பி.எஸ்.சி., தேர்வெழுதியவர்களில் 180 பேர் ஐ.ஏ.எஸ்., ஆக தேர்வானார்கள். இவர்களில் 11 பேர் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம்(அடைப்புக்குறிக்குள் சொந்த மாநிலம்):மதுபாலன் (தமிழ்நாடு), ஜோதிசர்மா (டில்லி), சிவகுருபிரபாகரன் (தமிழ்நாடு), அங்கிடமிஸ்ரா (உ.பி.,), பாலசந்தர் (தமிழ்நாடு), சிவகிருஷ்ணமூர்த்தி (தமிழ்நாடு), நிஷாந்த்கிருஷ்ணா (ஜார்கண்ட்), புனித்கெலாட் (ம.பி.,)ஆனந்தமோகன் (கேரளா), மோனிகா ராணா (உத்தரகாண்ட்) மற்றும் வர்ஷா மினா (ராஜஸ்தான்).தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன் -- ஒடிசா, நித்யா -ராஜஸ்தான், லட்சுமணபெருமாள் -மேற்கு வங்கம், உகேஷ்குமார் -கர்நாடக மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுஉள்ளனர்.

ஒரு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு, உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்த விழிப்புணர்வுக் கல்வி மற்றும் பயிற்சி!!

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சம் மாணவர்களுக்கு, உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்த விழிப்புணர்வு கல்வியை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வழங்கினர்.

முதற்கட்டமாக சத்தான உணவுகள், அவற்றை உட்கொள்ளும் விதம் குறித்து, மாணவர்களுக்கு விளக்க, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, உணவில் உள்ள கலப்படத்தை கண்டறியவும், தவிர்க்கவும் பயிற்சி வழங்கப்பட்டது.


மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில், ''தலைமை ஆசிரியர்கள், 197 பேருக்கும், ஒரு லட்சம் குழந்தைகளுக்கும், பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி தொடரும்,'' என்றார்.

தேசிய திறனாய்வு: இறுதி விடைக்குறிப்பு இன்று வெளியீடு :

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வு (என்டிஎஸ்இ) தொடர்பான இறுதி விடைக் குறிப்பு www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வியாழக்கிழமை முதல் வெளியிடப்படவுள்ளது என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை தெரிவித்துள்ளார்

ஓய்வூதியர் உயிர்வாழ்சான்றிதழ் பதியலாம் :

தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் 1995ன் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் தங்கள் மின்னணு உயிர்வாழ் சான்றிதழை ஓய்வூதியம் பெறும் வங்கிகளில் பதிவு செய்ய வேண்டும்.2019 -20ம் ஆண்டில் தொடர்ந்து ஓய்வூதியம் பெற இந்தாண்டு டிசம்பருக்குள் உயிர் வாழ் சான்றிதழை பதிவு செய்ய வேண்டும். ஓய்வூதியரின் கைரேகை பதிவில் தொழில்நுட்ப பிரச்னை இருந்தால் உயிர்வாழ் சான்றிதழை காகித வடிவில் வங்கியில் சமர்பித்து வங்கி மேலாளர் சான்றுடன் மதுரை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு 83005 81483 அலைபேசியில் அழைக்கலாம் என வருங்கால வைப்பு நிதி உதவி கமிஷனர் சுனில் தெரிவித்துள்ளார்.

தொடக்கப் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய Flying Squads உருவாக்கம் - CEO Proceedings

10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வயது வரம்பு குறித்த அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்!!

பேட்டரிக்கு பாதுகாப்பு: வாட்ஸ்ஆப்பில் வருகிறது டார்க் மோட்!!

வாட்ஸ்ஆப்பில் வரவிருக்கும் டார்க மோட்டால்
அதனை பயன்படுத்துவது எளிதாக மாற உள்ளது. மேலும் இதனால் வழக்கத்தை விட குறைவான அளவில் பேட்டரி பவர் குறையும்.

வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து பல வசதிகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவது மேலும் எளிதாகி உள்ளது.
இந்நிலையில் தற்போது புதிய வசதி ஒன்று வாட்ஸ்ஆப்பில் வர உள்ளது. டார்க் மோட் என கூறப்படும் இந்த அப்டேட்டால் வாட்ஸ்ஆப்பில் முக்கியமான வசதிகள் வர உள்ளன. இந்த வசதி தற்போது விண்டோஸ் 10 கணினி மற்றும் நோட்புக்குகளில் வந்துள்ளன. மேலும் ஐஓஎஸ் 10 கொண்ட ஐபோன்களில் இந்த வசதியை பெற முடியும்.

மற்ற டிவைஸ்களுக்கு இந்த வசதி இன்னும் வரவில்லை. டார்க் மோட்டில் வாட்ஸ்ஆப் இருக்கும் போது வழக்கத்தை விட குறைவான பவரை எடுத்துக்கொள்கிறது. மேலும் வாட்ஸ்ஆப் பேக்ரவுண்ட்டில் அடர்த்தியான வண்ணங்கள் இருப்பதால்  பார்ப்பதற்கு புது லுக்கும், கண்களுக்கு இதமாகவும் இருக்கும்

நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி?

1. பாசிட்டிவாக இருப்பவர்களோடு பழகுங்கள் :

நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம்.

எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்து கொள்ளாதீர்கள்.

"தெரியாது"  "நடக்காது" "முடியாது"  "கிடைக்காது" என சொல்பவர்களை விரட்டி விடுங்கள்

2. உற்சாகமாக இருங்கள் :


சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.

இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.

3. பவர்ஃபுல்லாக உணருங்கள் :

உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம்.

உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள்.

இதுதான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.

உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்.

4. நேசியுங்கள் :
உங்களை நீங்களே நேசியுங்கள்.

இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது.

உங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள்.

உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு புரியவையுங்கள்.

உங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

 5. பயணப்படுங்கள் :
வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது.

இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும்.

அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.

வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது.

ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ,
உங்கள்  பயணம் மகிழ்ச்சியாகவும், உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்.