யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/12/18

ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்(28.12.2018) மாலை 3 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது.



கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக இயற்றப்பட்டது.

1. 07.01.2018   அன்று அரசு வழியிலோ அல்லது உயர் நீதிமன்றம் வழியிலோ இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்காவிடில் 07.01.2018 அன்று மதுரை மாநகரில் ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழு கூடி போராட்டத்தை அறிவிக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

2. பள்ளிகள் இணைப்பு என்ற போர்வையில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை ஒன்றிணைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இத்திட்டத்திற்கு ஜாக்டோ - ஜியோ மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறது.

 25 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளில் சத்துணவு மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ள ஆணையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும்.

மேலும் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

தொலைநிலைக் கல்விக் கட்டணம்: அதிரடியாக உயர்த்த சென்னைப் பல்கலை. முடிவு


தொலைநிலைக் கல்வி நிறுவன படிப்புகளுக்கான விண்ணப்பம் மற்றும் கல்விக் கட்டணங்களை அதிரடியாக உயர்த்த சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு, பல்கலைக்கழக ஆட்சிக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது


தொலைநிலைக் கல்வி நிறுவன படிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவை இப்போது உள்ளதைக் காட்டிலும் பன்மடங்கு உயர்த்தப்பட உள்ளது


குறிப்பாக ரூ. 100க்கும் குறைவாக இருந்த கட்டணங்கள் ரூ. 500 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்


இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி கூறுகையில், மற்ற பல்கலைக்கழகங்களில் உள்ளதைப் போல, சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்றார்

29/12/18

JEE மெயின் தேர்வு 2019 - முழு விவரம் :

தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் JEE முக்கியத் தேர்வு -2019 குறித்த அடிப்படை முறைமையை அறிவித்துள்ளனர். அதில், தேர்வு நடத்தப்படும் முறை, தேர்வு முறை, கேள்விகளைக் குறிப்பிடுவது, குறிக்கோள் திட்டம் ஆகியவை பற்றி விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஜே.இ.இ. முதன்மை தேர்வு என்பது தேசிய அளவிலான தேர்வு ஆகும். இது என்ஐடி, ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படுகிறது. அதன்படி, தாள் 1 மற்றும் தாள் 2 என இரண்டு தேர்வுகள் நடத்தப்படும். JEE Main exam pattern தாள் 1 முற்றிலும் கணினி அடிப்படையிலான முறையில் நடைபெறும். தாள் 2 கம்ப்யூட்டர் அடிப்படையிலும், (கணிதம் மற்றும் திறனாய்வு சோதனை) மற்றும் பேனா மற்றும் காகித அடிப்படையில் (வரைதல் தேர்வு) நடத்தப்படும். ஜே.இ.இ.மெயின் - 2019 தேர்வு முறை - தாள் 1 (B.Tech/ B.E.)

ஜெ.இ.இ. பிரதான 2019 தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும். ஜனவரி 9 ஆம் தேதி முதல் 12ம் தேதி வரையிலும், பிறகு ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும் இந்த தேர்வு நடைபெறும். இது கம் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் என மூன்று பாகங்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் 30 கேள்விகள் இருக்கும். கேள்விகள் அப்ஜெக்டிவ் வகைகளாக இருக்கும். தேர்வுக்கு 3 மணி நேரம் ஒதுக்கப்படும். அனைத்து தேர்வு மையங்களிலும் கேள்வி தாள்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். ஒவ்வொரு கேள்வியும் 4 மதிப்பெண்கள் கொண்டவை. தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். பதிவு செய்யப்படாத கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கப்படாது. மொத்தக் கேள்விகள் 90. இயற்பியல், வேதியியல், கணிதப் பாடத்தில் இருந்து தலா 30 கேள்விகள் கேட்கப்படும். இவற்றுக்கு ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 360 மதிப்பெண்கள். JEE முதன்மை 2019 தேர்வு முறை - தாள் II (B.Arch. / B.Plan)

ஜேஇஇ தேர்வின் இரண்டாம் தாள் கணினி மற்றும் பேனா - காகித முறையில் நடத்தப்படும். தாள் II க்கான தேர்வு முறை (ஆன்லைன்) மற்றும் வரைதல் கேள்விகள் (ஆஃப்லைன்) அடங்கும். இந்த தாள் UG கட்டமைப்பு பாடநெறிகளுக்கான நுழைவாயில் ஆகும். பகுதி I கணித வகை கேள்விகள்), பகுதி II (ஜெனரல் ஆப்டியூட்) மற்றும் பகுதி III (வரைபடத்தை அடிப்படையாகக் கொண்ட கேள்விகள்) ஆகியவற்றில் இருந்து 82 கேள்விகள் கேட்கப்படும். தேர்வுக்கு 3 மணி நேரம் வழங்கப்படும். இந்த கேள்வித் தாள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். கணிதம் மற்றும் பொருந்திய பிரிவுகளின் அனைத்து கேள்விகள் ஒவ்வொன்றும் 4 மதிப்பெண்கள் கொண்டவை. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண் கழிக்கப்படும். ஜேஇஇ பிரதான வரைபட சோதனைக்கு, மாணவர்களின் திறமையின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். கணிதம் பாடத்தில் 30 கேள்விகளும், ஆப்டிடியூட்டில் 50 கேள்விகளும், வரைபடம் தொடர்பாக 2 கேள்விகள் என மொத்தம் 82 கேள்விகள் கேட்கப்படும். கணிதம் பாடத்துக்கு 120 மதிப்பெண்களும், ஆப்டிடியூட் தேர்வுக்கு 200 மதிப்பெண்களும், வரைபடத்தக்கு 70 மதிப்பெண்களும் என மொத்தம் 82 கேள்விகளுக்கு 390 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஜே.இ.இ பிரதானத் தேர்வு NTA எனப்படும் தேசிய தேர்வு முகமையால் ஒரு வருடத்தில் இருமுறை நடத்தப்படுகிறது. ஜே.இ.இ பிரதான தேர்வில், முதல் தாள் தேர்வு ஜனவரி 9, 10, 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெறும். ஜனவரி 8 ம் தேதி இரண்டு நேரங்களில் தாள் -2க்கான தேர்வு நடைபெறும், அதே சமயம் ஏப்ரல் 6 முதல் 20 வரை இரண்டாவது முறையாக ஜேஇஇ தேர்வு நடைபெறும்.

இது மொபைல் போனை விட லேசானது, வீட்டிலிருந்து எடுத்துச் செல்வோம்- விடை கொடுப்போம் நெகிழி பைகளுக்கு.

அப்படி என்ன ஊதிய முரண்பாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு?

அப்படி என்ன ஊதிய முரண்பாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு?
இதை புரிந்துக் கொள்ளுங்கள்!!!
9300 grade pay 4200 வாங்க வேண்டிய இடைநிலை ஆசிரியர்கள்
5200-2800 என்ற பத்தாம்வகுப்பு கல்வித்தகுதிக்கான ஊதிய கட்டில் வைக்கப்பட்ட தேதி

1-06-2009.
ஆனால் 2008 ல் பணிநியமனம் செய்யப்பட்டவர்களும் இதே ஊதியத்தில் வைக்கப்பட்ட போதும் அவர்களின் ஊதிய விகிதம் 1.86 ஆல் பெருக்கித்தரப்பட்டது.
இதனால் 2008 ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் ஊதியம் 9300-4200 என்ற நிலையை கடந்தது ஆனால் அவர்களின் தற்போதைய கிரேடு பேவும் 2800 தான்.
அதற்கு பிறகு பணிநியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அதாவது 2009 ஜீனில் 5200-2800 பத்தாம் வகுப்பு கல்வித்தகுதிக்கான ஊதியத்தில் வைக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டார்கள்.அவர்களின் கிரேடு பத்தாம் வகுப்புக்கான கிரேடு ஆகும்.
இதுமட்டுமின்றி 2008 ல் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம் 12000
( DA இல்லாமல்)
2009 ல் பணிநியமனம் பெற்றவர்களின் அடிப்படை ஊதியம் வெறும் 5200+2800= 8000
ஆகவே அடிப்படை ஊதியத்திலேயே இழப்பு கிட்டதட்ட
ரூ 4000...
இதற்கான அகவிலைப்படியோடு சேர்த்து 2009 இடைநிலை ஆசிரியர்களின் மொத்த ஊதிய இழப்பு அதே 2009 ல் 8000.
தற்போதைய முரண்பாடு( 2008 க்கும் 2009 க்கும் இடையே)
11000 க்கும் மேல்...
பிறகு பணிநியமனம் பெற்ற 2012 ,2014 இடைநிலை ஆசிரியர்களுக்கு 13000 ஊதிய இழப்பு.
இது தான் ஊதிய முரண்பாடு.
இந்த ஊதிய இழப்புக்கான முக்கிய காரணம்

1) டிப்ளோமா கல்வித்தகுதிக்கான 9300-4200 என்ற ஊதிய கட்டில் இடைநிலை ஆசிரியர்கள் வைக்கப்படாமல் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதிக்கான ஊதிய கட்டில் 5200-2800 வைக்கப்பட்டது
( பத்தாம் வகுப்பு கல்வித்தகுக்கான சில பணியிடங்களும் அதன் ஊதியமும்
இரண்டாம் நிலை காவலர் கிரேடு 1900, பள்ளி இரவு காவலர் 1900,இளநிலை உதவியாளர் 2400,
ஆய்வக உதவியாளர் 2400)
அப்போது பத்தாம் வகுப்பு கல்வித்தகுதிக்கு 5200-2400 வரை ஊதியம் என்றால் இடைநிலை ஆசிரியர்கள் படித்த
+2 க்கு ,டிப்ளோமாவிற்கு ஊதியம் எங்கே???
அல்லது அவர்கள் டிப்ளோமா படிக்கவே இல்லையா????
இது அரசுக்கு தெரியாதா?
தமிழ்நாட்டில் டிப்ளோமா முடித்துள்ள அனைத்து துறை ஊழியர்களுக்கும் தற்போது 9300-4200 கொடுக்கப்படுக்கிறது,
Diploma in teacher education படித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் மறுக்கப் படுகிறது!

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் விவரம் :

இடைநிலை ஆசிரியர்கள் ஜன., 7ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் : கல்வித்துறை இயக்குநர் கோரிக்கை:

ஊதிய முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி சென்னையில் 3வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட் மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் இடைநிலை ஆசிரியர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, சித்தக் குழு அறிக்கையை பொருத்தே நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் ஜன., 7ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க வலியுறுத்தியுள்ளார்.

கிராம தபால் ஊழியருக்கு விருப்ப ஓய்வு திட்டம் :

கிராம தபால் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை, தபால்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் உள்ள, 1.55 லட்சம் தபால் நிலையங்களில், 1.39 லட்சம் தபால் நிலையங்கள் புறநகரங்களில் செயல்படுகின்றன.இதில், கிராம் தபால் ஊழியர்களாக, 2.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். பணி நிரந்தரம், நிரந்தர பணியாளர்களுக்கான பணப்பயன், ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை நிறைவேற்றக்கோரி பல ஆண்டுகளாக, கிராம தபால் ஊழியர்கள் போராடி வருகின்றனர்.இந்நிலையில், கமலேஷ் சந்திரா தலைமையிலான குழு அறிக்கை அடிப்படையில், அனைத்து வகை கிராம தபால் ஊழியர்களுக்கும் விருப்ப ஓய்வு திட்டத்தை தபால்துறை அமல்படுத்தியுள்ளது.இதன்படி, 20 ஆண்டு சேவைக்காலம் முடித்த கிராம தபால் ஊழியர்கள், நிரந்தர பணியாளர்களைப் போல, விருப்ப ஓய்வில் செல்லலாம். மேலும், மருத்துவ காரணங்களால் உடல்நலம் குன்றி பணியாற்ற முடியாத ஊழியர்கள், 10 ஆண்டு சேவை முடித்திருந்தால், 'இன்வேலிடேசன்' அடிப்படையில் ஓய்வு வழங்கப்படும். விருப்பு ஓய்வு எடுக்கும் ஊழியர்களுக்கு, பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகள் எந்தப்பாதிப்பும் இல்லாமல், சேவைக் காலத்தை கணக்கிட்டு கொடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ஆதார் எண் கட்டாயமில்லை உத்தரவை திருத்த கல்வி துறை முடிவு:

பள்ளி மாணவர்களிடம், ஆதார் எண் பெறுவது கட்டாயம் என்ற உத்தரவு, மாற்றப்பட உள்ளது. ஆதார் ஆணைய உத்தரவின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.நாடு முழுவதும், பல்வேறு துறைகளில், பொதுமக்கள் மற்றும் நுகர்வோரிடம், ஆதார் எண்கள் கேட்கப்படுகின்றன.மத்திய - மாநில அரசின் திட்டங்களில் முறைகேட்டை தடுக்க, ஆதார் எண்களை பெற்று, அதன்படி பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.மேலும், வங்கிகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளும், ஆதார் எண்களை சேகரித்து வருகின்றன.இதனால், ஆதார் எண்கள் பல இடங்களில் கசிந்து, தனிநபர் பாதுகாப்புக்கு சிக்கல்ஏற்படுகிறது.இதுகுறித்து,
உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசின் திட்டங்களுக்கு மட்டும், ஆதார் எண்ணை சேகரிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.அதனால், மத்திய அரசின், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுகளுக்கு, மாணவர்களின் ஆதார் எண் கட்டாயமில்லை என, அறிவிக்கப்பட்டது.ஆனால், பள்ளி களில் மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வு பணிகள் நடக்கும் நிலையில், ஆதார் எண் கட்டாயம் வேண்டும் என, பெற்றோர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.இதுதொடர்பாக, ஆதார் ஆணையத்துக்கு, பெற்றோர் புகார் அனுப்பினர்.புகாரை விசாரித்த ஆதார் ஆணையம், பள்ளிகள், கல்லுாரிகள், மாணவர்களிடம் ஆதார் எண்ணை கேட்டு, கட்டாயப்படுத்த கூடாது என, உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழக பள்ளி களிலும், ஆதார் எண் கட்டாயம் என்ற உத்தரவு மாற்றப்பட உள்ளது. தமிழக பள்ளி கல்வியில், 'எமிஸ்' என்ற, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் சார்பில், ஆதார் எண் பெறப்படுகிறது.'அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச நல திட்டங்கள் அமல்படுத்துவதால், அதற்கு மட்டும் ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கலாம்.'மற்ற தனியார் பள்ளி மாணவர்களுக்கு, விருப்பப்பட்டால் மட்டுமே, ஆதார் எண்ணை வழங்கலாம்' என, திருத்தம் செய்யப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்ணா பல்கலை ஊழியர்கள் விரைவில் கூண்டோடு மாற்றம்:

வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், தேர்வுத் துறை ஊழியர்களை இடமாற்றம் செய்ய, பல்கலைநிர்வாகம் முடிவெடுத்து உள்ளது.அண்ணா பல்கலையில் நடந்த முறைகேடுகள், உயர் கல்வி துறைக்கும், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில், தலைசிறந்த அரசு நிறுவனமாக பெயர் எடுத்த, அண்ணா பல்கலையில், தேர்வு முறைகேடுகளும், விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடுகளும், அதன் மாணவர்களுக்குவேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்களை, அதிர்ச்சி அடையவைத்துள்ளன.அண்ணா பல்கலையின், தேர்வு கட்டுப்பாட்டு துறை நடத்திய தேர்வுகளில், மறுமதிப்பீட்டில், அதிக மதிப்பெண் வழங்கிய விவகாரம், ஏற்கனவே, லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில் உள்ளது.உயர் பொறுப்பில் உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியே, இந்த வழக்கில் சிக்கினார். டிச., 3ல் நடந்த, 'செமஸ்டர்' தேர்வில், கணித வினாத்தாள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தில் இருந்தே, லீக் ஆகியுள்ளது.இந்த முறைகேட்டை, சி.பி., -சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்ஜி., மாணவர்கள்இருவர் கைது செய்யப்பட்டனர்.தேர்வு கட்டுப்பாட்டு அலுவலக ஊழியர்,காஞ்சனா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதை இப்படியே விட்டால், அண்ணா பல்கலையின் தரமும், ஆராய்ச்சி மதிப்பும், சர்வதேச அரங்கில், பெரும் சரிவை சந்திக்கும் என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.எனவே, பல்கலையின் முக்கிய துறைகளில், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அதிகாரத்தை கையில் வைத்துள்ள சில பேராசிரியர்களால், பல்கலைக்கு இனியும் கெட்ட பெயர் ஏற்பட கூடாது என, உயர் கல்வி அதிகாரிகளும் அறிவுறுத்திஉள்ளனர்.இதையடுத்து, முதற்கட்டமாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகம் மற்றும் அதன் பிரிவு அலுவலகங்களில், ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.இதுகுறித்து, பட்டியல் எடுக்க, பல்கலைநிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தற்காலிக பணியாளர், நிரந்தர பணியாளர் ஆகிய, இரண்டு தரப்பினரையும், 'டிரான்ஸ்பர்' செய்ய வேண்டும் என, பேராசிரியர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, அண்ணா பல்கலை ஊழியர்கள் விரைவில், கூண்டோடு மாற்றப்பட உள்ளனர்.


வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், தேர்வுத் துறை ஊழியர்களை இடமாற்றம் செய்ய, பல்கலைநிர்வாகம் முடிவெடுத்து உள்ளது.அண்ணா பல்கலையில் நடந்த முறைகேடுகள், உயர் கல்வி துறைக்கும், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில், தலைசிறந்த அரசு நிறுவனமாக பெயர் எடுத்த, அண்ணா பல்கலையில், தேர்வு முறைகேடுகளும், விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடுகளும், அதன் மாணவர்களுக்குவேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்களை, அதிர்ச்சி அடையவைத்துள்ளன.அண்ணா பல்கலையின், தேர்வு கட்டுப்பாட்டு துறை நடத்திய தேர்வுகளில், மறுமதிப்பீட்டில், அதிக மதிப்பெண் வழங்கிய விவகாரம், ஏற்கனவே, லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில் உள்ளது.உயர் பொறுப்பில் உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியே, இந்த வழக்கில் சிக்கினார். டிச., 3ல் நடந்த, 'செமஸ்டர்' தேர்வில், கணித வினாத்தாள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தில் இருந்தே, லீக் ஆகியுள்ளது.இந்த முறைகேட்டை, சி.பி., -சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்ஜி., மாணவர்கள்இருவர் கைது செய்யப்பட்டனர்.தேர்வு கட்டுப்பாட்டு அலுவலக ஊழியர்,காஞ்சனா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதை இப்படியே விட்டால், அண்ணா பல்கலையின் தரமும், ஆராய்ச்சி மதிப்பும், சர்வதேச அரங்கில், பெரும் சரிவை சந்திக்கும் என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.எனவே, பல்கலையின் முக்கிய துறைகளில், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அதிகாரத்தை கையில் வைத்துள்ள சில பேராசிரியர்களால், பல்கலைக்கு இனியும் கெட்ட பெயர் ஏற்பட கூடாது என, உயர் கல்வி அதிகாரிகளும் அறிவுறுத்திஉள்ளனர்.இதையடுத்து, முதற்கட்டமாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகம் மற்றும் அதன் பிரிவு அலுவலகங்களில், ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.இதுகுறித்து, பட்டியல் எடுக்க, பல்கலைநிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தற்காலிக பணியாளர், நிரந்தர பணியாளர் ஆகிய, இரண்டு தரப்பினரையும், 'டிரான்ஸ்பர்' செய்ய வேண்டும் என, பேராசிரியர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, அண்ணா பல்கலை ஊழியர்கள் விரைவில், கூண்டோடு மாற்றப்பட உள்ளனர்.

வேலை வாய்ப்பு பதிவுகள் மாயம் புதுப்பிக்க பட்டதாரிகள் திணறல்:

வேலைவாய்ப்புக்கு பதிவு செய்தோரின் விபரங்களை, ஆன்லைனில் பதிவேற்றுவதில் நடந்துள்ள குளறுபடியால், பதிவை புதுப்பிக்க முடியாமல், பட்டதாரிகள் திணறி வருகின்றனர்.தமிழக அரசின் பல்வேறு துறைகளில், காலி பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு துறையின் வழியாக, புதிய ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். 

பெரும்பாலான துறைகளின் காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., போன்றவை வழியே, போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும், மதிப்பெண், இட ஒதுக்கீடு மட்டுமின்றி, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலும், இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதேபோல, தமிழக அரசின் வழியாக, தனியார் வேலை வாய்ப்புக்கும், இந்த பதிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, வேலை வாய்ப்புகளுக்கு, பதிவு மூப்பு முக்கிய தேவையாக உள்ளது.தற்போது, வேலை வாய்ப்பு பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் கணினி மயமாகியுள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் போன்றவற்றில், நேரடியாக புதுப்பித்தல் மற்றும் பதிவு பணிகள் நடப்பதில்லை. பட்டதாரிகள், தங்களின் பதிவு மற்றும் புதுப்பித்தலை, ஆன்லைனில் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.


தற்போது, 2011 முதல் புதுப்பிக்க விடுபட்டோருக்கு, ஜன., 24க்குள், பழைய பதிவு மூப்பின்படி புதுப்பிக்க சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கான பட்டதாரிகளால், ஆன்லைனில் புதுப்பிக்க முடியவில்லை. பலரது பதிவு விபரங்கள், ஆன்லைனில் இருந்து மாயமாகியுள்ளதே இதற்கு காரணம்.மாயமான பதிவு விபரங்களின் நிலை என்னவென, வேலை வாய்ப்பு துறைக்கு தெரியவில்லை. பல மாவட்ட அலுவலகங்களில், பதிவு எண் விபரங்களை, டிஜிட்டலில் சேர்த்த போது, பலரது விபரங்கள் விடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே, விடுபட்டோரின் விபரங்களை, மீண்டும் பதிவேற்றாவிட்டால், அவர்களின் பதிவு மூப்பு, பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. - நமது நிருபர் -

பள்ளிக்கல்வி - அரசுப்பள்ளி ஏழை மாணவர்களுக்கு மேற்படிப்பு முழு உதவி - இயக்குநர் செயல்முறைகள்




4-வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் நீர் அருந்தா உண்ணாவிரதம் : பலரது உடல்நிலை பாதிப்பு

தண்ணீர் மற்றும் உணவு இன்றி சென்னையில் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் பலரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


சமவேலைக்கு சமஊதியம் வழங்க கோரி  ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் 4-வது நாளாக இன்றும் தொடர்கிறது. உணவு, தண்ணீர் இன்றி அவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்துள்ளனர். பலரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போராட்டத்தை தொடர்வதில் ஆசிரியர்கள் உறுதியாக உள்ளனர். இது பற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கூறுகையில், தாங்கள் செய்யும் வேலைக்கு சரியான ஊதியத்தை மட்டுமே கேட்பதாகவும் மிகையாக கேட்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

தாங்கள் நியாயமான கோரிக்கையை முன்வைத்து போராடுவதால், அரசு தங்களது கோரிக்கை பரிசீலிக்குமாறு கேட்டு கொள்வதாக கூறினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஆசிரியர்கள் கூறுகையில் 4,000-க்கும் மேற்பட்ட பெண்கள் இங்கே குழுமியுள்ளதாகவும், ஆனால் இயற்கை உபாதைகள் உள்ளிட்டவற்றிற்கு மிகுந்த சிரமப்படுவதாகவும் கூறினர். இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் 4-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர். ஆனால் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் 2009ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஆறாவது ஊதியக் குழுவின் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டதில், இடைநிலை ஆசிரியர்களில் இரு வேறு ஊதிய வேறுபாடு ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக 31.5.2009க்கு முன்பு தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8370 என்றும், அதற்கு அடுத்த நாள் 1.6.2009ம் தேதி பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5200 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ஊதியத்தில் வேறுபாடு ரூ.3170 வருகிறது. இரண்டாவதாக பணி நியமனம் பெற்ற மேற்கண்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், ஒரு கல்வித்தகுதி, ஒரே வகையான பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இரு வேறு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், சம ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேட்டும் பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அரசுத் தரப்பில் இறுதி முடிவு எடுக்காத நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து, அவர்களுக்கு உரிய ஊதியத்தை நிர்ணயம் செய்ய பள்ளிக் கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை அளித்தது.

ஆனால் அரசு அதன்மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், டிசம்பர் 24ம் தேதி தொடர் உண்ணா விரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர். அரசு உடனடியாக பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.

நேற்று முன்தினம் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தததால், சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் முற்றுகையிட்டு  நீர் அருந்தா உண்ணா விரதம் மேற்கொள்ள வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்தனர். இருப்பினும், ஆசிரியர்கள் ஸ்டேடியத்துக்குள்ளே நீர் அருந்தா உண்ணா விரதம்  இருக்கின்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

200 ஆசிரியர்கள் உடல்நிலை பாதிப்பால் பதற்றத்தில் பள்ளிக்கல்வி வளாகம் நாளை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு!!


                                                

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலருக்கும் உடல்நலக் குறைவு  ற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, 175 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரும் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று திரும்பி, மீண்டும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு,  எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தங்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் உடல்நிலை பாதிப்பால் பதற்றத்தில் 
பள்ளிக்கல்வி வளாகம் நாளை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் குறைப்பு: அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தகவல்!

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குநர் இன்று தெரிவித்துள்ளார்.


வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12ம் பொதுத்தேர்வு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல், உயிரியல், வரலாறு, இயற்பியல். வணிகக்கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான நேரம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு10 முதல் 1.15 மணி வரை நடைபெற்ற தேர்வு, தற்போது 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மொத்தம் 1200 மதிப்பெண்களாக இருந்தது தற்போது 600 மதிப்பெண்களாக (6 பாடத்திற்கு தலா 100 மதிப்பெண்கள்) குறைக்கப்பட்டது குறிப்பித்தக்கது.

பத்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள, அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை,'' -பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அவர் கூறியதாவது:பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறுவது போல் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை.

10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டோம்.அடுத்த கல்வி ஆண்டில், அங்கன்வாடி மையங்களில், 50 ஆயிரம் குழந்தைகளுக்கு, எல்.கே.ஜி., - -யூ.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட உள்ளன.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு வரை, இரு வண்ணங்களில் சீருடை வழங்கப்படும்.'நீட்' தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, நிபுணர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்; உணவு, தங்குமிடம் இலவசம்.இவ்வாறு அவர் கூறினார்

3 நாட்களில் டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வுகளுக்கான திட்ட அட்டவணை

'டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வுகளுக்கான திட்ட அட்டவணையை, மூன்று நாட்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது,'' என, செயலர் நந்தகுமார் தெரிவித்தார்.

அரசு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி, லட்சக்கணக்கான தேர்வர்கள் பயிற்சி களை தொடர்ந்து வருகின்றனர். ஆண்டு தோறும் வெளியிடப்படும், ஆண்டு தேர்வு அட்டவணையை மையமாக வைத்து, பயிற்சிகளை மேற்கொள்வர். ஒவ்வொரு ஆண்டும், இந்த அட்டவணை, மார்ச் மாதமே வெளியாகி வந்தது.

இந்நிலையில், 2019ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை, புத்தாண்டு துவங்கும் முன்னரே வெளிவரவுள்ளதால், தேர்வர்கள் பயிற்சிகளின் போக்கை, முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட இயலும்.

இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் கூறுகையில், ''வரும் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை தயார் நிலையில் உள்ளது. ஒப்புதல் பெற்றதும், மூன்று நாட்களுக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்

ஜனவரி முதல் மாதிரி தேர்வு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஜனவரி முதல், தினமும் மாதிரி தேர்வு நடத்தி, பொது தேர்வுக்கு தயார்படுத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


தமிழக பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பொது தேர்வு நடத்தப்படுகிறது.மார்ச் 1ல், பொது தேர்வுகள் துவங்க உள்ளன. 25 சதவீதம்தனியார் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 பாடங்கள் முடிக்கப்பட்டு, பாடங்களின் திருப்புதல் நடந்து வருகிறது.

அரசு பள்ளிகளில், 25 சதவீத பாடங்கள் மட்டும் பாக்கி உள்ளன. புத்தாண்டு விடுமுறை முடிந்து, வரும், 2ம்தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையடுத்து, பொது தேர்வு மாணவர்களுக்கு, தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தி, சிறப்பு பயிற்சி அளிக்க, தலைமைஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுஉள்ளனர்.ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பாடத்திலும், சில பகுதிகளுக்கு தேர்வு வைத்து, அவற்றை உடனே திருத்தி, மாணவர்களின் மதிப்பெண்ணை தெரிவிக்க வேண்டும். இதன்மூலம், பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் வகையில், மாணவர்கள் கூடுதல் நேரம் படித்து, சிறப்பு பயிற்சி பெற முடியும்.

வார விடுமுறை

இந்த திட்டங்களை, தலைமை ஆசிரியர்கள், தாமாகவே முன்வந்து அமல்படுத்த வேண்டும். மேலும், வார விடுமுறை நாட்களிலும், காலை மற்றும் மாலை வேளைகளிலும் கூடுதல் வகுப்புகள் நடத்தி, மாணவர்களை தயார் செய்ய ஆலோசனை தரப்பட்டு உள்ளது. பொது தேர்வில், வெறும் தேர்ச்சி என்ற இலக்கை தாண்டி, அதிக மதிப்பெண் பெறவும் மாணவர்களை தயார் செய்ய, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி ஆசிரியர்கள் போராட்டம் 4வது நாளாக நீடிப்பு: 180 பேர் மயங்கினர் SOURCE:DINAKARAN

♦ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக இடைநிலை ஆசிரியர்கள் 4வது  நாளாக நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 180 பேர் மயக்கமடைந்து  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

♦ மருத்துவ குழுவினர் நேரடியாக  டிபிஐ வளாகத்துக்கு வந்து உதவி வரும் நிலையில் போராட்டம் இன்னும்  தீவிரமாகும் என்று ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

♦சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் 4 நாட்களாக சென்னை  டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

♦நேற்று முன்தினம் காலையில் இருந்து டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம்  இருந்துவரும் ஆசிரியர்களில் இதுவரை 180 பேர் மயக்கம் அடைந்து  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

♦இதனால்  ஆசிரியர்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

♦டிபிஐயில் இரவு  பகலாக நீர் அருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு  ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. அரசியல்  தலைவர்களும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

♦இதற்கிடையே  பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் பேச்சுவார்த்தை  நடத்தி ஜனவரி 7ம் தேதி வரை போராட்டத்தை ஒத்தி வைக்க கேட்டுக் கொண்டுள்ளார்.  அதில் சமாதானம் அடையாத ஆசிரியர்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி  உள்ளனர்.

♦இந்நிலையில், நேற்று மாலை வரை மயங்கி விழுந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை  180 ஆக உயர்ந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். போராட்டம்  நடக்கும் இடத்தில் அதிக அளவில் ஆசிரியர்கள் குவிந்துள்ளதால், 108  ஆம்புலன்ஸ் குழுவினர் நேரடியாக டிபிஐ வளாகத்துக்கு வந்து ஆசிரியர்களுக்கு  மருத்துவ உதவிகள் செய்து வருகின்றனர்.

♦இந்நிலையில், அரசு ஊதிய உயர்வு  தொடர்பாக ஆணை பிறப்பிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள்  தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை அங்கிருந்து  அப்புறப்படுத்த போலீசார் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

♦ஆனால் தமிழகம்  முழுவதும் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ரயில், பஸ்   மற்றும் வேன்களில் வந்துக் ெகாண்டே இருக்கின்றனர். இதனால் போலீசார்  ஆசிரியர்களை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

♦மேலும், டிபிஐ வளாக  கழிப்பறையை ஆசிரியர்கள் பயன்படுத்தி வருவதால், அதற்கான தண்ணீர்  சப்ளையை அரசு நிறுத்திவிட்டது. இதனால் ஆசிரியர்கள் மேலும் அவதிப்பட்டு  வருகின்றனர்.

வேலைவாய்ப்பு பதிவில் திருத்தம்: அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை, ஆன்லைன் பிரச்னை உள்ள பதிவு எண்களுக்கு, பிழைகளை திருத்தி, புதிய எண்கள் வழங்க, மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகளுக்கு, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு துறை வழியாக, புதிய ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., போன்றவை வழியாக, போட்டித் தேர்வு நடத்தப்பட்டாலும், தேர்வு மதிப்பெண், பதிவு மூப்பு பட்டியல் ஆகியவற்றையும் பரிசீலித்து, இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது.எனவே, எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடிப்பவர்கள், வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்வதும், பதிவு மூப்பை தொடர்வதும் முக்கிய தேவையாக உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு, மாணவர்களும், பட்டதாரிகளும் நேரில் அலைவதை தவிர்க்க, பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள், ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளன.இந்நிலையில், பதிவுகளை டிஜிட்டலுக்கு மாற்றியதில், சில பதிவு எண்கள் விடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. அவ்வாறு விடுபட்டவர்கள், ஆன்லைனில் பதிவை புதுப்பிக்க முடியவில்லை. இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று செய்தி வெளியானது.அதனால், அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், விடுபட்ட பதிவு எண்களை கணக்கெடுத்து, அவற்றின் பிழைகளை நீக்க, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை கமிஷனர், ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுஉள்ளார்.ஆன்லைனில், பதிவு எண் விடுபட்டிருந்தால், அவர்களுக்கு தொழில்நுட்ப பிழைகளை நீக்கி, பதிவு மூப்பு மாறாமல், புதிய எண் வழங்க வேண்டும் என, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.