சென்னை,:தமிழகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனால், ஊழியர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.தமிழகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், 2012ல் துவங்கப்பட்டது.
இதில், 300 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை; 10 மாதங்களாக செலவுப்படியும் வழங்வில்லை. இதனால், ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, திட்ட அலுவலர்கள் கூறியதாவது:ஆறு மாதங்களாக சம்பளம், செலவுப்படிகள் வழங்காததால், அலுவலக வாடகை பாக்கி, தொலைபேசி கட்டணம், குடிநீர் மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை செலுத்த முடியவில்லை. ஆறு மாதங்களாக குடும்பம் நடத்த கடும் சிரமப்படுகிறோம். தீபாவளிப் பண்டிகை நெருங்கும் இந்த நேரத்தில், சம்பள பாக்கியை வழங்கினால் உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.