யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/8/16

நான்கு பரிமாண முறையில் அறிவியல் பாட படங்கள்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், அறிவியல் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நான்கு பரிமாண முறையில் படங்களை காட்டும், 'மொபைல் போன் ஆப்' வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் பாடங்களை எளிதில் புரிய வைக்கும் வகையில், பல புதிய முயற்சிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.



இந்த வரிசையில், நான்கு பரிமாணங்களில் படங்களை காட்டும்,மொபைல் போன் ஆப் மற்றும் காணொலி காட்சி குறுந்தகடுகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஆப், ஆண்ட்ராய்ட் போனில், tnschools live என்ற பெயரில், கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தலாம். இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் கூறியதாவது:இந்த மொபைல் போன், 'அப்ளிகேஷனை' கேமரா மொபைல் போனில் பயன்படுத்தும் போது, அந்த கேமரா மூலம் புத்தகத்தில் உள்ள அறிவியல் பாட படங்கள் நான்கு பரிமாணமாக தெரியும்.

10ம் வகுப்பில் அறிவியல், பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில், 141 படங்கள் இந்த தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம், 13 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.இது தொடர்பான, காணொலி காட்சி குறுந்தகடுகள், 6,000 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிப்பது குறித்து, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில்உபரி ஆசிரியர் இடமாறுதல்கவுன்சலிங் எப்போது?

அரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லை பள் ளி க ளில் உபரி ஆசி ரி யர் களுக்கு பணி இட மா று தல் கவுன் ச லிங் நடத்த வேண் டும் என்று ஆசி ரி யர் கள்எதிர் பார்க் கின் ற னர். அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில், தேவையான ஆசி ரி யர் க ளின் எண் ணிக் கையை விட கூடு த லாக உபரி ஆசி ரி யர் களை நியம னம் செய் வது வழக் கம்.


           
தனி யார் பள் ளி க ளு டன் ஒப் பி டு கை யில், அரசுமற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில் ஒவ் வொரு ஆண் டும் மாண வர் சேர்க்கைகுறைந்து வரு கி றது. தமி ழ கத் தில் பள்ளி மாண வர் க ளின் எண் ணிக் கைக்குஏற் றார் போல், ஒவ் வொரு ஆண் டும் உபரி ஆசி ரி யர் க ளுக்கு பணி இட மா று தல்வழங் கப் பட்டு வரு கி றது.ஆனால் அரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லைப் பள் ளி க ளில் கடந்த சிலஆண் டு க ளாக இந்த பணி இட மா று தல் வழங் கப் ப ட வில்லை. இத னால் உபரி ஆசி ரியர் கள் அந் தந்த பள் ளி க ளில், எந்த வேலை யும் செய் யா மல் சம் ப ளம் வாங்கும் நிலை உள் ளது. இதை சிலர் சாத க மாக பயன் ப டுத் திக் கொள் கின் ற னர் ஒரேசம யத் தில் இரண்டு இடங் க ளில் வேலை செய் கி றார் கள். இத னால் கோடிக் க ணக்கில் அரசு பணம் வீணா கி றது.ஆனால் பெரும் பா லான ஆசி ரி யர் கள் பணி இட மா று தலை எதிர் பார்க் கின் றனர்.

அரசு தரப் பில் இது வரை பணி யிட மாறு தல் வழங் கப் ப டா த தால் பலர்விரக்தி அடைந் துள் ள னர். வேறு பள் ளி க ளுக்கு இட மா று தல் வழங் கப்பட்டால், அரசு உதவி பெறும் பள் ளி க ளில் படிக் கும் மாண வர் க ளின் எண் ணிக்கைகூடும். அதன் மூ லம் தமி ழ கத் தில் கல் வித் த ரம் மேலும் உயர்த்த முடி யும்என்று ஆசி ரி யர் கள் தெரி விக் கின் ற னர்.

பணி விடுவிப்பு சான்றிதழ்



மருத்துவம் சார் பட்டப்படிப்பு 18,000 பேர் விண்ணப்பம்

பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் உள்ள, 7,745 இடங்களுக்கு, 18 ஆயிரத்து, 324 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில், பாரா மெடிக்கல் என்ற,
பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், மூன்று வித படிப்புகளுக்கு, 7,190 இடங்கள் என, 7,745 இடங்கள் உள்ளன. 20 ஆயிரத்து, 247 பேர் விண்ணப்பங்கள் பெற்றிருந்தனர். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க, நேற்று முன்தினம் கடைசி நாள். மொத்தம், 18 ஆயிரத்து, 324 பேர் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 'அடுத்த வாரம் தர வரிசை பட்டியல் வெளியிடப்படும்; இம்மாத இறுதியில் கலந்தாய்வு நடத்தப்படும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது

7-வது மத்திய ஊதிய ஆணையம் அளித்த பரிந்துரை- சிறப்பம்சங்கள்:

ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பயன் களுக்காக 7-வது மத்தியஊதிய ஆணையம் அளித்த பரிந்துரைகளை செயல்படுத்த மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப் பட்டது. இது 1.1.2016 முதல் அமல்படுத்தப் படுகிறது.

*கடந்த காலங்களில், 5-வது மத்திய ஊதிய ஆணையத்தின்போது, ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த ஊழியர்கள் 19 மாதங்களுக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. 6-வது மத்திய ஊதிய ஆணைய பரிந்துரைகளை செயல்படுத்த 32 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. எனினும், இந்த முறை, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள்,  அவகாசம் முடிந்து 6 மாதங்களுக்குள் அமல்படுத்தப்படுகிறது.

*ஊதிய மற்றும் ஓய்வூதியப் பலன்களின் நிலுவைகளை (அரியர்ஸ்) ஊழியர்களுக்கு நடப்பு நிதியாண்டு காலத்திலேயே (2016-17) வழங்குவது எனவும் மத்திய  அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் மூலம், ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள்  பயனடைவார்கள். இதில், 47 லட்சத் துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 53 லட்சம் ஓய்வூதிய தாரர்கள் உள்ளனர்.

சிறப்பம்சங்கள்:

*    தற்போது நடைமுறையில் உள்ள சம்பள விகிதம் மற்றும் தர ஊதியத்தை, ஆணையம் பரிந்துரைத்துள்ள புதிய ஊதிய கணக்கீட்டின்படி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஊழியரின் நிலை,  அதாவது தர ஊதியம் நிர்ணயிக்கப்படுவது என்பது, தற்போது ஊதிய கணக்கீட்டு அளவுப்படி நிர்ணயிக்கப்படும். அரசு துறையில் இருப்பவர்கள், பாதுகாப்புப் படையினர், ராணுவ செவிலிலியர் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தனித்தனியாக ஊதிய கணக்கீடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கீடுகளின் கொள்கை ஒரே மாதிரியானது.

*    நடைமுறையில் உள்ள அனைத்து அளவுகளும், புதிய கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அளவு எதுவும் உருவாக்கப்படவில்லை.அதேபோல, எந்த அளவும் நீக்கப்பட வில்லை. ஒவ்வொரு பதவியிலும் பணியில் அதிகரிக்கும் பங்களிப்பு, பொறுப்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக சீரான குறியீட்டை பின்பற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

*    குறைந்தபட்ச ஊதியம் மாதத்துக்கு ரூ.7000-லிலிருந்து ரூ.18,000-மாக உயர்த்தப் பட்டுள்ளது. புதிதாக பணியில் சேர்க்கப் படும் ஊழியரின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000-மாக இருக்கும். அதாவது, கீழ்நிலையில் முதல்முறையாக சேரும் ஊழியரைவிட, நேரடியாக தேர்வுசெய்யப்படும் முதல் வகுப்பு அதிகாரிக்கு மூன்று மடங்கு ஊதியம் கிடைக்கும்.

*    ஊதியம் மற்றும் ஓய்வூதிய மாற்றத்துக் காக, தகுதிநிலைகாரணி (fitness factor) 2.57-ஆக இருக்கும். அதாவது, ஊதியம் 2.57 மடங்காக உயரும். இது அனைத்து மட்டத்துக்கும் பொருந்தும்.

*    ஊதிய உயர்வு விகிதம், 3%-ஆக நீடிக்கும். எனினும், அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் ஊழியர்களுக்கு தற்போது கிடைப்பதைவிட 2.57 மடங்காக ஊதிய உயர்வு கிடைக்கும்.

* பாதுகாப்புத் துறையினருக்கான ஊதிய கணக்கீட்டில், கூடுதல் பிரிவுகளை சேர்க்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

*    பணிக்கொடைக்கான (Gratuity)  வரம்பு ரூ.10 லட்சத்திலிலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி50% உயரும்போதெல்லாம், பணிக்கொடையின் வரம்பு 25% அதிகரிக்கும்.

*    அரசு ஊழியர் மற்றும் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரே கட்டமாக வழங்கப்படும் நிவாரண நிதி, பல்வேறு பிரிவுகளில்தற்போதுள்ள ரூ.10 லட்சம்  ரூ.20 லட்சம் என்பது, ரூ.25 லட்சம்  ரூ.45 லட்சமாக இருக்கும்.

*    மருத்துவமனை விடுப்பு, சிறப்பு உடல்ஊன விடுப்பு, உடல்நலக் குறைபாட்டு விடுப்பு ஆகியவை ஒரே பெயரில், அதாவது, பணி தொடர்பான உடல்நலக் குறைபாடு மற்றும் காய விடுப்பு (Work Related Illness and Injury Leave) என்று அழைக்கப்படும். இந்த விடுப்பு எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அனைத்து ஊழியர்களுக்கும், மருத்துவமனையில் இருக்கும் காலம் முழுமைக்கும் முழு ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படும்.*    தொழிலாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, ஏற்கனவே நடைமுறையில் உள்ள 4 வகையான வட்டியில்லா முன்பணம் தொடரும். அதாவது, மருத்துவ சிகிச்சை,சுற்றுலா அல்லது பணிமாற்றத்துக்கான போக்குவரத்துப்படி, உயிரிழந்த ஊழியர் களின் குடும்பத்தினருக்கு போக்குவரத்துப்படி, எல்.டி.சி. ஆகியவை தொடர்ந்து வழங்கப்படும். மற்ற வட்டி இல்லாத முன்பணங்கள் அனைத்தும் நீக்கப்படுகிறது.

*    மத்திய அரசு ஊழியர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டத்தில் (CGEGIS)  ஊழியர்களின் மாதாந்திர பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற ஊதிய ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதில்லை என்று அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.

*    ஓய்வூதியம் மற்றும் அதுதொடர்பான பலன்களுக்காக ஆணையம் வழங்கியுள்ள பொதுவான பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஓய்வூதியத்தை மாற்றியமைப்பது தொடர்பாக ஆணையம் வழங்கிய அனைத்து பரிந்துரைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதனை அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் அடிப்படையில் முடிவுசெய்யப்படும்.

*    ஓய்வூதிய மாற்றம் தொடர்பான இரண்டாவது பரிந்துரையான 2.57 மடங்கு அளவுக்கு வழங்க வேண்டும் என்ற பரிந்துரை, உடனடியாக அமல் படுத்தப்படும். முதலாவது வழிமுறையை பின்பற்றுவதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க குழு அமைக்கப்படும்.

*    இந்தக் குழு தனது அறிக்கையை 4 மாதங்களில் அளிக்கும்.அதில், முதலாவது வழிமுறையை அமலாக்கும் வாய்ப்பு இருப்பது தெரியவந்தால், அது அமல்படுத்தப்படும்.

*    ஊழியர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 196 வகையான படிகளையும் ஆணையம் ஆய்வுசெய்தது. இதனை சீராக்கும் வகையில், 51 படிகளை நீக்கவும்,37 வகையான படிகளாக ஒன்றிணைக்கவும் பரிந்துரைத்து உள்ளது. இதனை அமல்படுத்துவதற்காக ஏற்கனவே உள்ள விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியிருப்பதால், படிகள் தொடர்பாக 7-வது ஊதிய ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளை விரிவாக ஆய்வுசெய்ய நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழுவை அமைக்க அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. இந்தக் குழு தனது பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, 4 மாதங்களில் அறிக்கையை தாக்கல் செய்யும்.இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, தற்போது நடைமுறையில் உள்ள படிகள் அனைத்தும், தற்போதைய அளவிலேயே வழங்கப்படும்.

*    இரண்டு தனிப்பட்ட குழுக்களை அமைக்கவும் மத்திய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. இதில், ஒன்று, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கான பரிந்துரை களை வழங்கும். இரண்டாவது, 7-வது ஊதிய ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவதால் எழும்பிரச்சினைகளை ஆராயும்.

   * ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பிறபரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன், நிர்வாக அடிப்படையில், தனிநபர் பதவி விவகாரங்களில் எழும் பிரச்சினைகளை அந்தந்த அமைச்சகங்களே ஆய்வுசெய்வது என மத்திய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. ஏனெனில், இந்த விவகாரத்தில் ஊதிய ஆணையத்தால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.

*    ஏழாவது மத்திய ஊதிய ஆணையத்தின் அனைத்து பரிந்துரைகளையும் அமல்படுத்துவதால், 2016-17-ம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.1,02,100 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2015-16-ஆம் நிதியாண்டில் இரண்டு மாதங்களுக்கு ஊதியம்மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்குவதால், ரூ.12,133 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பணி நிரவலின் போது பொறுப்பாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய விதிகள்.


தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் இயக்குநர் அறிவுறுத்தலின்படி பணி நிரவல் கட்டாயமாக செய்ய உள்ளார்கள்.

அதில்
1)மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல் கிடையாது.

2)பணி நிரவலில் பணி நிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம் இருப்பின் ஒன்றியத்திற்குள் பணி நிரவல் செய்வார்கள்.
3)பணி நிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம் இல்லை எனில் ஒன்றியம்விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்வார்கள்.
4)ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்யும் நிலை ஏற்பட்டால் அந்த ஒன்றியத்தில் மிகவும் இளையவர் எவரோ (block level service junior) அவரையே பணி நிரவலில் அதே மாவட்டத்தில் பிற ஒன்றியத்திற்கு நிரவல் செய்ய வேண்டும்.
5)ஒன்றியத்திற்குள் பணி நிரவல் எனும்போது எந்த பள்ளியில் பணி நிரவல் ஏற்படுகிறதோ அந்த பள்ளியில் பணி ஏற்றதில் யார் இளையவரோ ( station junior ) அவரே பணி நிரவல் செய்யப்பட வேண்டும்.பணி நிரவல் செய்யப்பட வேண்டியவர் மாற்று திறனாளி எனில் அவரை  விட்டுவிட்டு அந்த பள்ளியில் அவருக்குமுன் பணியில் சேர்ந்தவரை பணி நிரவல் செய்ய வேண்டும்.
6)பணி நிரவல் 30.09.2015 அன்றுஉள்ள மாணவர்கள் பதிவின் அடிப்படையில் செய்யப்பட உள்ளது.இதில் சிறு விதி தளர்வும் உள்ளது.

உதாரணமாக ஒரு பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணியில் இருந்து 30.09.2015ல் மாணவர்கள் பதிவு 55 எனில் ஒரு ஆசிரியர் பணியிடத்தினை நிரவல் செய்வார்கள்.அதே பள்ளியில் 01.08.2016ல் 61 மாணவர்கள் பதிவு உள்ளது எனில் விதி தளர்வு தந்து பணியிடத்தினை நிரவல் செய்யக்கூடாது.அது போலவே ஒரு பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணியில் இருந்து 30.09.2015ல் 61 மாணவர்கள் பதிவு இருந்து 01.08.2016ல் 55 மாணவர்கள் பதிவு உள்ளது என்றாலும் பணி நிரவல் செய்யக்கூடாது. இவற்றை நன்கு புரிநதுகொண்டு பொறுப்பாளர்கள் விழிப்போடு செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.பணி நிரவலின்போது ஏதேனும் விதி மீறல்கள் ஏற்பட்டால் உடனே சங்க பொருப்பாளர்களை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்

 பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்...நாமும் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்


1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு 

5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு

11.பள்ளி விவரப் பதிவேடு (school profile )
12.ஊதியப்பட்டியல் பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.மதிப்பெண் பதிவேடு
15.தேக்கப் பட்டியல்
16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேடு
19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம் 

21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.தற்செயல் விடுப்பு
26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.வாசிப்புத்திறன் பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு
31.தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்விக்குழு பதிவேடு
36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு
37.அன்னையர் குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்
a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்
40.கால அட்டவணை
41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.பாடத்திட்டம் ,கால �
[3:59 AM, 8/7/2016] +91 96552 99169: ட்டவணையுடன்
44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )
46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A வரவு செலவுப் பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் வரவு செலவு இரசீது பதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர் பதிவேடு

52.நலத்திட்டப் பதிவேடுகள்

1.விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு
2.விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
3.விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு
4.விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு
5.மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு
6.விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு
7.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர் பதிவேடு
8.விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கிய பதிவேடு
9.விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கிய பதிவேடு
10.விலையில்லா புவியியல் வரைபட நூல் வழங்கிய பதிவேடு
11.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த குழந்தைக்கு கல்வி உதவித்தொகை பதிவேடு
அன்பு நண்பர்களே

தொடக்க கல்வித்துறை யில் பணி நிரவல்,ஒன்றிய அளவில்  பள்ளியில் சேர்ந்த தேதியில் இளையோர் பணி நிரவல் செய்யப்பட்ட வேண்டும்.  .

இயக்குனரின் செயல்முறைகள் 024064 நாள் 22.7.2016 ந் படிதான் செய்யப்பட்ட வேண்டும்.

surplus proceeding படிதான் நடத்த வேண்டும் என வலியுறுத்துங்கள்.

7/8/16

பிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு

பிளஸ் 2 துணை தேர்வில், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல்பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூன், ஜூலையில் நடந்த துணை தேர்வின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த வர்கள், இன்று பிற்பகல், 2:00 மணிக்கு மேல், scan.tndge.in என்ற இணையதளத்தில், தங்களின் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.

இதே இணையதளம் மூலம், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். ஆக., 9 காலை, 10:00 முதல், 10ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 1,000 தலைமை ஆசிரி யர்களுக்கு, தலைமை பண்பு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், உயர்நிலை பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி, மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் திறனை வளர்த்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களின் தலைமை ஆசிரியர்கள், 1,000 பேருக்கு, சிறப்பு தலைமை பண்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் இந்த பயிற்சிக்கு, 30 தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்ட பயிற்சி துவங்கியுள்ளது.

நீட்' தேர்வு விடைத்தாள் 'ஆன்லைனில்' பார்க்கலாம்

அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வான, 'நீட்' விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, நீட் தேர்வு, மே 1 மற்றும் ஜூலை 24ல், இரு கட்டங்களாக நடந்தது; ஐந்து லட்சம் பேர் பங்கேற்றனர்.


இந்நிலையில், தேர்வரின் கணினி பயன்பாட்டு விடைத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள், இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. இன்று மாலை வரை, மாணவர்கள், தங்கள் உள்ளீட்டு எண்ணை பயன்படுத்தி, அவற்றை பார்க்கலாம். மேலும், நீட் இணையதளம் மூலம், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,க்கு கருத்துக்களை தெரிவிக்கலாம். கூடுதல் விபரங்களை, http://www.aipmt.nic.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

சித்தா, ஆயுர்வேத கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் சிக்கல்

அரசு கல்லுாரிகளுக்கு அனுமதி கிடைப்பது தாமதம் ஆவதால், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை உடனே துவங்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, சென்னை, மதுரை, பாளையங்கோட்டை என, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன. இதற்கு, 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.


எப்போது கலந்தாய்வு நடக்கும் என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர். கல்லுாரிகளை ஆய்வு செய்து, மாணவர் சேர்க்கை நடத்த, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான, 'ஆயுஷ் கவுன்சில்' அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள, இந்திய மருந்துவம் சார்ந்த, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கும், மாணவர் சேர்க்கை நடத்த, இதுவரை ஆயுஷ் கவுன்சில் அனுமதி தரவில்லை. இதனால், கலந்தாய்வு தேதி அறிவிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்க, அக்., மாதம் வரை அவகாசம் உள்ளது. ஆயுஷ் கவுன்சில் முறையான ஆய்வு நடத்தி வருகிறது; விரைவில், அனுமதி கிடைத்து விடும். குறித்த காலத்திற்கு முன்னரே, கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும்' என்றார். 

தணிக்கை - ஆசிரியர் சேம நலநிதிக் கணக்குகள் - 01.04.2014க்குப் பின்னர் அரசு தகவல் தொகுப்பு, விவர மைய அலுவலகத்திலிருந்து, மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு மாற்றம் செயதல் - 31.03.2014 வரை நிலுவை இருப்பின் நடவடிக்கை தொடர கோரி இயக்குனர் உத்தரவு Posted: 05 Aug 2016 10:55 PM PDT அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு: இலவச 'ஸ்நாக்ஸ்' கிடைக்குமா?

அரசு பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில, 'ரேங்க்' எடுக்கும் முயற்சியாக, காலை, மாலை நேரங்களில், ஒரு மணி நேரம் வரை, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சென்னை உட்பட மற்ற மாநகராட்சி பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த, பிஸ்கட், சுண்டல் போன்றவை வழங்கப்படுகின்றன.


அரசு பள்ளிகளில், சிற்றுண்டி வழங்கப்படுவது இல்லை. மேலும் காலை, 8:00 மணிக்கு சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவர்கள், வீட்டிலிருந்து, 7:00 மணிக்கே புறப்பட வேண்டும். மாலையில், சிறப்பு வகுப்பு முடித்து, 6:00 மணிக்கு தான் வீட்டுக்கு செல்ல முடிகிறது. இதனால், காலை உணவும் உண்ண முடியாமல், மாலையிலும் நீண்ட நேரம் பள்ளி யில் இருக்க வேண்டி யுள்ளதால், மாணவர்கள் மயங்கி விழும் சம்பவங்கள் நடக்கின்றன.

இதுகுறித்து, ஆசிரி யர் முன்னேற்ற சங்க தலைவர் கு.தியாகராஜன் கூறியதாவது: சிறப்பு வகுப்பு நடத்தும் முன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பிரதிநிதிகளிடம், கல்வி அதிகாரி கள் கருத்து கேட்டிருக்கலாம். மாணவர்கள் மயங்கி விழும் போது, ஆசிரியர்கள், தங்கள் பணத்தில் பிஸ்கட் வாங்கி கொடுக்கின்றனர். தனியார் பள்ளிகளில், சிறப்பு வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோர், தரமான, 'ஸ்நாக்ஸ்' கொடுத்து அனுப்புகின்றனர். பள்ளி கேன்டீனில் வாங்க, பணமும் கொடுத்து அனுப்புகின்றனர். ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இந்த வசதிகள் இல்லை. எனவே, அரசு பள்ளிகளில் நடக்கும் சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு, அரசு சிற்றுண்டி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

CPS-கருத்தரங்கம் -தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சார்பில் காஞ்சிபுரத்தில் இன்று (6.8.2016)சென்னை மண்டல பயிலரங்கில் -நடைபெற்றது .

இன்று(6.8.2016)-திரு.பிடரிக் ஏங்கல்ஸ்-திண்டுக்கல் அவர்கள் -பேசிய போது எடுத்த புகைப்படம்


தமிழ் எழுத்துக்களுக்கு இணையாக 'சைகை' முறை கண்டுபிடிப்பு : எளிதாக கற்பிக்க ஏற்பாடு

தொடக்கபள்ளிகளில் மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை எளியமுறையில் உச்சரிக்கவும், பிழையின்றி எழுதுவதற்கும் 30 வகையான புதிய 'சைகை' முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான
'சிடி'க்கள் தொகுப்பைமாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சிநிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) தயாரித்துள்ளது. தமிழில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் 'மயங்கொலிகள்' எனப்படும் 'ல, ள, ழ, ர, ற, ந, ண, ன' ஆகிய எட்டு எழுத்துக்கள்அதிகம் பயன்படுகின்றன.
ஆனால் பேச்சு வழக்கில் இந்தஎழுத்துக்களின் தன்மை குறைந்து உச்சரிப்புமருவி விடுகிறது. இதன் காரணமாக தமிழ்எழுத்துக்களை உரிய ஓசை, ஏற்றஇறக்கத்துடன் உச்சரிக்க, எழுத மாணவர்கள் சிரமப்படுகின்றனர். சைகை முறை: இதை தவிர்க்கவும், தமிழ் எழுத்துக்களை உரிய வடிவில் எழுதுவதற்கும், 30 நாட்களில் சரியான உச்சரிப்புடன் பேசவும், பிழையின்றி எழுதும் வகையில் அரசுப்பள்ளி ஆசிரியர்களால் அனைத்து உயிரெழுத்து மற்றும்மெய் எழுத்துக்களுக்கு உரிய 'சைகை' முறைகள்உருவாக்கப்பட்டு வருகின்றன.
இப்பணியில்எஸ்.சி.இ.ஆர்.டி., யின் மொழிப்புல(லாங்குவேஜ் செல்) ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 1 - 5 வகுப்பு வரை உள்ள தமிழ்பாடநுாலின் அனைத்து பாடங்களையும் 'தாயெனப்படுவதுதமிழ்' என்ற தலைப் பில்சி.டி., தொகுப்பை ஆக.,2ல் முதல்வர் ஜெயலலிதாவெளியிட்டார். இவ்வாரத்தில் பள்ளிகளுக்கு 'சிடி'க்கள் வழங்கப்படஉள்ளன. தொழில்நுட்ப இயக்குனர் அமலம் ஜெரோம் கூறியதாவது:
எஸ்.சி.இ.ஆர்.டி., உதவியுடன் காதுகேளாத, வாய் பேசாத மாணவர்களுக்குகற்பித்தல், பரத நாட்டியத்தின் முத்திரைகள், உளவியல் மற்றும் உடல் மொழிரீதியிலான 'சைகைகளை' அடிப்படையாக கொண்டு சரியான உச்சரிப்புடன்எழுத்துக்களை எளிதில் புரிய வைத்துபிழையின்றி எழுதுவதற்கு 'சைகைகளை' உருவாக்கி உள்ளோம். எழுத்துக்களை மிக துல்லியமாக புரிந்துகொள்ளபின்னணி காட்சிகள், நவீன தொழில் நுட்பஉத்திகளுடன் 'சிடி' க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, என்றார்

ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துமிடம் ஏற்பாடுகள் ,பாதுகாப்பு பற்றிய இயக்குநர் செயல்முறைகள்



தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி.

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 1,000 தலைமை ஆசிரி யர்களுக்கு, தலைமை பண்பு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், உயர்நிலை பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி, மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் திறனை வளர்த்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களின் தலைமை ஆசிரியர்கள், 1,000 பேருக்கு, சிறப்பு தலைமை பண்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் இந்த பயிற்சிக்கு, 30 தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்ட பயிற்சி துவங்கியுள்ளது.

CPS account slip 2009. முதல் பிப்ரவரி 2016 வரை பதிவிறக்கம் செய்யலாம் Posted: 06 Aug 2016 05:36 AM PDT CLICK HERE இணையதளம் சென்றதும் உங்கள் CPS no மற்றும் பிறந்தநாள் பதிவு செய்து (உதாரணமாக 20/10/1971) login செய்யவும். பின் annual account slip ல் சொடுக்கவும் பின் 2014 -15 வருடத்தை select செய்து submit செய்யவும் . ஆசிரியர் பயிற்றுநர்கள் உயர்கல்வி பின்னேற்பு -பள்ளிக்கல்வி இணை இயக்குநர் தெளிவுரை

6/8/16

பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் தொடர்பான தகவல்:

RTE 2009-ன் படி, புதிய பணியிடம் தோற்றுவிக்க 

கணக்கு / அறிவியல் = 1

ஆங்கிலம் / தமிழ் = 1

சமூக அறிவியல் = 1

அறிவியல் / கணக்கு = 1

தமிழ் / ஆங்கிலம் = 1

சமூக அறிவியல் = 1

இவ்வாறு இருத்தல் வேண்டும்.  


பணிநிரவலுக்குக் கீழிருந்து செல்ல வேண்டும்.

ஒரு சமூகஅறிவியல் பணி இருக்க வேண்டும்.

மொழிப்பாடம் ஒன்று இருக்க வேண்டும். இதில் 2 மொழி பாடம் இருந்தால் அதில் இளையவர் பணிநிரவல் செய்ய வேண்டும்.

அதே போல், அறிவியல் மற்றும் கணக்கு பாடத்தில் இளையவர் பணிநிரவல் செய்யப்படுவர்.

நடுநிலைப் பள்ளியில் 6 - 8-ம் வகுப்பு வரை 30 - 130 மாணவர்கள் வரை இருப்பின் ஆசிரியர்கள் எண்ணிக்கை 1+3.

*அரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்கள் -OBC-NON CREAMY LAYER -CERTIFICATE பெற மத்திய அரசின் தெளிவுரை கடிதம்

முக்கிய குறிப்புகள் -

1.அரசு ஊழியர்களின் ஊதியத்தை வருமானமாக கருதக்கூடாது.

2.விவசாயம் மூலம் வரும் வருமானத்தை வருமானமாக கணக்கிடக்கூடாது .

3.அரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்களாக இருந்தால் நேரடியாக இருவரும்  Grade B  நிலையில் நியமனம் 
பெற்றிருக்கக் கூடாது.

4.ஒருவர் மட்டும் பணிபுரிந்தால்   நேரடியாக  Grade A  நிலையில் நியமனம் பெற்றிருக்கக் கூடாது. அல்லது Grade B-ல் நியமனம் பெற்று 40 வயதிற்குள்    Grade A நிலைக்கு பதவி உயர்வு பெற்றிருக்கக் கூடாது.

5.பொதுத் துறைகளில் பணிபுரிவர்களுக்கு இது பொருந்தாது 

5.இந்த கடிதத்தை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள் ....**