யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/9/16

பல்கலைகளில் பேராசிரியர் தேர்வு : திடீர் ரத்தால் பட்டதாரிகள் அதிர்ச்சி.

பல்கலைகளில் பேராசிரியர் தேர்வு : திடீர் ரத்தால் பட்டதாரிகள் அதிர்ச்சி.

கோவை பாரதியார், நெல்லை மனோன்மணியம் பல்கலைகளில், நேற்று நடக்க இருந்த பேராசிரியர் நியமன தேர்வு, திடீரென ரத்து செய்யப்பட்டதால், பட்டதாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நேர்முகத் தேர்வு :
கோவை பாரதியார் பல்கலையில் காலியாக உள்ள, 72 உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் இடங்களையும், 20 ஆசிரியர் இல்லாத பணி இடங்களையும் நிரப்ப, ஆக., மாதம் அறிவிப்பு வெளியானது.நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையிலும், 54 உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பும் அறிவிப்பும் வெளியானது. இந்த பணிகளுக்கு, 'நெட், செட்' தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற, பல ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

நேற்று, நேர்முகத் தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. பல ஆயிரம் பேர், இரண்டு பல்கலைகளுக்கும் விரைந்தனர்; நேர்முகத்தேர்வு நடக்காததால், கடும் அதிருப்தி அடைந்தனர். இரண்டு பல்கலைகளும், 'தவிர்க்க இயலாத காரணங்களால் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது; புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என, விண்ணப்பதார்களுக்கு, நேற்று முன்தினம் இரவு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பின.நெல்லை மனோன்மணியம் பல்கலையில், நேர்முகத் தேர்வு குழுவில் இடம்பெற்ற உறுப்பினர் வர முடியாததாலும்; நேர்முகத் தேர்வுக்கான அரசு தரப்பு உறுப்பினர் நியமிக்காததானாலும், பாரதியார் பல்கலையில், தேர்வு ரத்து செய்யப் பட்டதாக கூறப்படுகிறது.

பிரச்னை வராமல் : இந்த பதவிகளுக்கு, இடைத்தரகர்கள் நடத்திய பேரம் காரணமாகவே, நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டதாக, உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயர் கல்வியில், பல பதவிகள் நியமனத்தில் ஏற்கனவே பிரச்னை உள்ள நிலையில், மீண்டும்பிரச்னை வராமல் இருக்கவே நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழக மின் வாரியத்தில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

தமிழக மின் வாரியத்தில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

தமிழக மின் வாரியத்தில், 'ஹெல்பர், போர்மேன்' உதவிபொறியாளர் என, 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, பொறியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
துாத்துக்குடியில், தமிழக மின் பொறியாளர்கள் குழுமத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார்.செயலாளர் கந்தகுமார் வரவேற்றார். பொருளாளர் அனந்தநாராயணன் அறிக்கை சமர்ப்பித்தார். மாநில பொதுச்செயலாளர் ராஜ்குமார் பேசியதாவது: தமிழகத்தில், சீரான மின் உற்பத்தி, சீரான மின் வினியோகத்திற்கு மின் வாரிய பணியாளர்கள் திறம்படபணியாற்றி வருகின்றனர். அத்தியாவசிய தேவையான மின்சாரம் மக்களுக்கு கிடைக்க அக்கறையுடன் பணியாற்றுகின்றனர். மின் வாரிய பணியாளர்கள் தங்களுக்கான சலுகைகள், உரிமைகளுக்காக கோர்ட்டில் போராடி போராடி பெற வேண்டிய நிலை உள்ளது. தமிழக மின் வாரியத்தில், 'ஹெல்பர், போர்மேன்' உதவி பொறியாளர் உட்பட, 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன.இவற்றை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாநில துணைத்தலைவர்கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.--

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை உலக மொழிகள் மற்றும் இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழுக்காகப் பாடுபடும் அறிஞர்களுக்கும், சான்றோர்களுக்கும் எண்ணற்ற நலத்திட்டங்களையும், உதவிகளையும், சிறப்புகளையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.கடந்த 5 ஆண்டுகளில் தமிழுக்காகப் பாடுபடும் சான்றோர்களுக்கும், அறிஞர்களுக்கும், சிறப்பு செய்யும் வகையில் 55 விருதுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தமிழ் மொழியின் பெருமையை பிற நாட்டவரும் அறியும் வண்ணம், உலகப் பொதுமறையாம் திருக்குறள், சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு என் தலைமையிலான அரசால் வெளியிடப்பட்டுள்ளது.மேலும், திருக்குறள் கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும் நிலையில் உள்ளது.அதே போன்று பாரதியார் பாடல்களும், பாரதிதாசன் பாடல்களும், சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

அதிமுகவின்தேர்தல் அறிக்கையில், பண்டை தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும் என்ற வாக்குறுதிஅளிக்கப்பட்டுள்ளது.இதனை செயல்படுத்தும் வகையில், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட நூல்கள், உலக மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மனி மொழிகளிலும், இந்திய மொழிகளான மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படும்.

இப்பணிகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.இதன் மூலம், தமிழ் மொழியின் வளம் பற்றி உலக மக்கள் அறிவதற்கு மேலும் வழிவகை ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்

கால்நடை பல்கலைக்கழகத்தில் நாளை 2ம் கட்ட கவுன்சிலிங்

கால்நடை பல்கலைக்கழகத்தில் நாளை 2ம் கட்ட கவுன்சிலிங்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், இளநிலை பட்டப்படிப்பு வகுப்பில் சேருவதற்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நாளை நடைபெறுகிறது.இப்பல்கலையில், இளநிலை முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், ஜூலையில் நடந்தது; முடிவில், சில இடங்கள் காலியாக இருந்தன.

இப்பல்கலையுடன் இணைக்கப்பட்டகல்லுாரிகளில், இளநிலை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவம், 19; கோழியின உற்பத்தி மேலாண்மை, 10; உணவுத் தொழில்நுட்பம், ஆறு; பால்வள தொழில், ஒன்பது என, 44 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான கவுன்சிலிங், சென்னை, வேப்பேரியில் உள்ள, கால்நடை மருத்துவக் கல்லுாரியில், நாளை காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக பி.எஸ்.என்.எல் - வோடபோன் கைகோர்ப்பு.

ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக பி.எஸ்.என்.எல் - வோடபோன் கைகோர்ப்பு.

ரிலையன்ஸ் நிறுவனம் அண்மையில் குறைந்த விலையிலான ஜியோ 4G சேவையை அறிவித்தது. போட்டியை சமாளிக்க சில நிறுவனங்கள் தற்போது கைகோர்த்துள்ளன.

அண்மையில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ 4G சேவையை அறிமுகம் செய்து வைத்தார். அதோடு, தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் டேடா, விலையில்லா போன் அழைப்பு, ரோமிங் செலவு இல்லை என பல்வேறு திட்டத்தை அறிமுகம் செய்தார். இதனால் சந்தையில் உள்ள போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா,பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனங்கள் மிகவும் தொய்வை சந்தித்துள்ளது.

தங்களது வாடிக்கையாளர்களை இழக்காமல் இருப்பதற்காக தற்போது பி.எஸ்.என்.எல் - வோடபோன் ஆகிய நிறுவனங்கள் கைக்கோர்த்துள்ளது. இரு நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு நெரிசலுக்கு தீர்வு- சென்னையில் 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்க முடிவு

தீபாவளிக்கு நெரிசலுக்கு தீர்வு- சென்னையில் 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்க முடிவு

சென்னை: தீபாவளி பண்டிகையின்போது சென்னையின் முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வெளியூர் பேருந்துகளை வெவ்வேறு இடங்களில் இருந்து பிரித்து இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்தெந்த இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 29ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து தங்கி படிக்கும், வேலை செய்யும் லட்சக்கணக்கான மக்கள், பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்கின்றனர். 3 அல்லது 4 தினங்கள் தொடர்ந்து விடுமுறை வந்தாலே இப்போது சொந்த ஊர் செல்வதை ஏராளமானோர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசலில் திணறிப் போகிறது சென்னை மாநகரம்.
கோயம்பேடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து வடபழனி வழியாக வந்து தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியைக் கடக்கவே பல மணிநேரங்கள் ஆகிவிடும். எனவே தீபாவளி பண்டிகை தினத்தில் இதுபோன்ற போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, சென்னை மாநகரத்தை மையமாக கொண்டு தெற்கு, வடக்கு, மேற்கு என பிரித்து 3 இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கோயம்பேடு பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் பகுதியாகவும் கோயம்பேடு உள்ளது. இதனால், காலை, மாலை நேரங்களில் இப்பகுதியில் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன.
  
போக்குவரத்து நெரிசல்
கோயம்பேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மாநகரின் பல்வேறு இடங்களுக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மணிக்கணக்கில் சாலைகளில் காத்திருந்து உடல் சோர்வுடன், மனஉளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு போக்கு வரத்துக் கழகங்கள் சார்பில் தினமும் 1,500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பண்டிகை நாட்களில் சுமார் 4 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படும்.
  
ஆலோசனைக்கூட்டம்
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பண்டிகை நாட்களில் இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிடும். எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளைப் பல்வேறு இடங்களில் இருந்து பிரித்து இயக்குமாறு பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முதல்முறையாக, தீபாவளி பண்டிகைக்குச் சென்னையில் 3 முக்கிய இடங்களில் இருந்து வெளியூருக்குப் பேருந்துகள் இயக்குவதாக அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  
தென்மாவட்ட பேருந்துகள்
தென்மாவட்டங்களுக்குச் செல்லும் 40 சதவீத பேருந்துகளை வண்டலூர் அல்லது கூடுவாஞ்சேரியில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை பகுதி மற்றும் மாதவரத்தில் இருந்தும் பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும்.
  
நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை
பண்டிகை நாட்களின்போது சென்னை, புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வெளியூர் செல்பவர்கள் மட்டுமின்றி, பணி முடிந்து வீடு திரும்புபவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். வரும் தீபாவளி பண்டிகையின் போது, இவ்வாறு நேராமல் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், சென்னை மாநகரத்தை மையமாக கொண்டு தெற்கு, வடக்கு, மேற்கு என பிரித்து 3 இடங்களில் இருந்து பேருந்து களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விண்ணப்பித்த 4 நாளில் பாஸ்போர்ட் : சென்னை மண்டல அதிகாரி அறிவிப்பு

மத்தியஅரசு அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தின் கீழ்விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று சென்னை மண்டலபாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை
மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் கூறியதாவது:
பாஸ்போர்ட்கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான்கார்டு ஆகியவற்றைவிண்ணப்பத்துடன் இணைத்துக் கொடுத்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட்கிடைக்கும். பாஸ்போர்ட் கிடைத்ததும் போலீஸ் துறையின் சான்றாய்வுசெய்யப்படும் என்ற திட்டத்தை மத்தியவெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம்செய்துள்ளது. தட்கல் என்னும் துரிதபாஸ்போர்ட் திட்டத்தில் இருந்து இது முற்றிலும்மாறுபட்டது. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்குபோலீசார் விரைவாக சான்றாய்வு பெறவசதியாக மொபைல் ‘போலீஸ்-ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில்3 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகம்செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்திலும் அறிமுகம்செய்ய மாநில அரசு ஒப்புதல்வழங்கியுள்ளது. போலீஸ் ஆப் மூலம்போலீஸ் சான்றொப்பம் கிடைப்பதற்கான நேரம் வெகுவாக குறையும். இந்த திட்டத்தை சென்னை, விழுப்புரம், கடலூர்ஆகிய மாவட்டங்களில் ஒரு மாதத்தில் சோதனைஅடிப்படையில் அறிமுகம் செய்ய உள்ளோம். தமிழகத்தில்உள்ள 280 இ-சேவா மையங்களில்இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

கிராமங்களில்வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட்பெற இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறவிரும்புவோர் ரூ.155 செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு சென்னை மண்டலபாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரம்பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை3 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட்வழங்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் கேட்டு வி்ண்ணப்பிக்கும் நபர்களின்சான்றிதழ் சரிபார்ப்புக்கான கால அளவு 19 நாளில்இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் கொடுத்த மறுநாளே அவர்கள்சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு மண்டல அதிகாரிபாலமுருகன் தெரிவித்தார். 

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு -பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம்

கடைகளில் விற்பனை செய்யும் இட்லி தோசை மாவு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..!

கடந்த10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவைவிலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டேபோகிறது. இட்லி, தோசை மாவுவிற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின்வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாகமாவு விற்பனை நடைபெறுகிறது.மேலும்சிறிய மளிகைக்கடை முதல் பெரிய
ஷாப்பிங்மால் வரை இட்லி, தோசைமாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.

இந்த மாவு ஒரு உயிர்கொல்லி– ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோபலருக்கும் தெரிவதில்லை.இதன் பின் விளைவுகளைசற்று அலசிப் பார்த்தால் நம்உதிரமும் உறைந்து போகும் அளவிற்குஅதிபயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது!

1. 6 நாட்கள்வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க,நம் உடலில் ஏற்படும்காயத்திற்கும்,புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாடபயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்துவிற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

2. அதாவதுஒரு நாளைக்கு 3 – 6 மணி நேரம் அரைக்கவேண்டிய கிரைண்டர்கள், 12- 18 மணி நேரம் தொடர்ந்துஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம்கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. இதனால் சிறு நீரகத்தில் கல்உண்டாகும் அபாயம் இருக்கின்றது.

3. என்னதான்நல்ல அரிசி உளுந்து போட்டாலும்நல்ல தண்ணீரை ஊற்றி தான்மாவு அரைக்க வேண்டும். ஆனால்பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர்மற்றும் உப்பு தண்ணிரே பயன்படுத்தப்படுகின்றது.

4. நம்முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒருகை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம்ஒரு இயற்கையான நோய் நிவாரணி( ஆண்டிபயாடிக்) இது, உடம்பு உஷ்னம், வாய் நாற்றம், குடல் புண்(அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.கடைமாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை!
மேலும், பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் கானப்படும் ஈகோலி (E-COLI) எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது,( – 24 )மைனஸ் 24 டிகிரிக்குகீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும்அவ்வகை பாக்ட்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன்ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்குஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக்கொல்லும் அபாயமும் உள்ளது.
எனவே தாம் சென்னை மாநகராட்சிகடைகள்,மற்றும் மாவுஅரைக்கும் இடங்களில்பரவலாக சோதனை (ரெய்டு) நடத்திதரம் குன்றிய மாவுகளைக் கைப்பற்றி,அபராதமும் விதித்து வருகின்றது.

எனவே,நமக்கு நன்கு தெரிந்தகலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்துவிற்பனை செய்யும் இட்லி,தோசை மாவுகளைமட்டும் வாங்குவதோடு,முன்,பின் தெரியாதவர்கள்தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பதுநலம்!

Flash News:TNTET- ஆசிரியர் தகுதித்தேர்வுவழக்குகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் இன்று (14.09.2016 ) கோர்ட் எண்.13 யில் வழக்கு எண். 9 ஆவதாக நீதிபதிகள் திரு. சிவா கீர்த்தி சிங் மற்றும் திருமதி. பானுமதி அவர்களின் முன்பு விசாரணைக்கு வந்தது.

 ஆசிரியர் தகுதித்தேர்வுவழக்குகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

பல்கலைகளில் பேராசிரியர் தேர்வு : திடீர் ரத்தால் பட்டதாரிகள் அதிர்ச்சி.

கோவை பாரதியார், நெல்லை மனோன்மணியம் பல்கலைகளில், நேற்று நடக்க இருந்த பேராசிரியர் நியமன தேர்வு, திடீரென ரத்து செய்யப்பட்டதால், பட்டதாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நேர்முகத் தேர்வு : 
கோவை பாரதியார் பல்கலையில் காலியாக உள்ள, 72 உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் இடங்களையும், 20 ஆசிரியர் இல்லாத பணி இடங்களையும் நிரப்ப, ஆக., மாதம் அறிவிப்பு வெளியானது.நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையிலும், 54 உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பும் அறிவிப்பும் வெளியானது. இந்த பணிகளுக்கு, 'நெட், செட்' தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற, பல ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

நேற்று, நேர்முகத் தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. பல ஆயிரம் பேர், இரண்டு பல்கலைகளுக்கும் விரைந்தனர்; நேர்முகத்தேர்வு நடக்காததால், கடும் அதிருப்தி அடைந்தனர். இரண்டு பல்கலைகளும், 'தவிர்க்க இயலாத காரணங்களால் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது; புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என, விண்ணப்பதார்களுக்கு, நேற்று முன்தினம் இரவு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பின.நெல்லை மனோன்மணியம் பல்கலையில், நேர்முகத் தேர்வு குழுவில் இடம்பெற்ற உறுப்பினர் வர முடியாததாலும்; நேர்முகத் தேர்வுக்கான அரசு தரப்பு உறுப்பினர் நியமிக்காததானாலும், பாரதியார் பல்கலையில், தேர்வு ரத்து செய்யப் பட்டதாக கூறப்படுகிறது.

பிரச்னை வராமல் : இந்த பதவிகளுக்கு, இடைத்தரகர்கள் நடத்திய பேரம் காரணமாகவே, நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டதாக, உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயர் கல்வியில், பல பதவிகள் நியமனத்தில் ஏற்கனவே பிரச்னை உள்ள நிலையில், மீண்டும்பிரச்னை வராமல் இருக்கவே நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது

சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை : அரசாணை மட்டும் உண்டு.

சத்துணவு ஊழியர்களுக்கு அரசாணை இருந்தும், பல மாவட்டங்களில், ஆண்டு ஊதிய உயர்வு, கூடுதல் படி வழங்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், 43 ஆயிரம் சத்துணவு மையங்களில், 42 ஆயிரத்து, 423 அமைப்பாளர்; 42 ஆயிரத்து , 855 சமையலர்; ஒரு லட்சத்து, 28 ஆயிரத்து, 130 உதவியாளர் பணியிடங்கள் உள்ளன.
இதில் பல ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு அமைப்பாளர் இரண்டுக்கும் மேற்பட்டமையங்களை கவனிக்கிறார்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில், ஒரு அமைப்பாளர், ஏழு மையங்களை கவனிக்கிறார். பல மையங்களில், ஒரு சமையலர் அல்லது உதவியாளர் மட்டுமே உள்ளனர்.

கூடுதல் மையங்களை கவனிக்கும் அமைப்பாளர்களுக்கு தினமும் கூடுதல் படியாக, 20 ரூபாய் வழங்க வேண்டும். அதேபோல், ஆண்டு ஊதிய உயர்வு, 3 சதவீதம் வழங்க வேண்டும்.இதற்கான அரசாணை இருந்தும் பல ஒன்றியங்களில் வழங்கவில்லை. சிவகங்கை நகராட்சியில், பொங்கல் போனஸ் கூட இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் சத்துணவு ஊழியர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.

சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ' எங்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளும் பல இடங்களில் மறுக்கப்பட்டுள்ளன. கலெக்டர்கள் வேளை பளுவால் எங்கள் பிரச்னையை கண்டுகொள்வதில்லை. தனியாக துறை அதிகாரிகளை நியமித்தால் தான் எங்கள் பிரச்னை தீரும்' என்றார்.

தமிழக மின் வாரியத்தில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

தமிழக மின் வாரியத்தில், 'ஹெல்பர், போர்மேன்' உதவிபொறியாளர் என, 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, பொறியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
துாத்துக்குடியில், தமிழக மின் பொறியாளர்கள் குழுமத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார்.செயலாளர் கந்தகுமார் வரவேற்றார். பொருளாளர் அனந்தநாராயணன் அறிக்கை சமர்ப்பித்தார். மாநில பொதுச்செயலாளர் ராஜ்குமார் பேசியதாவது: தமிழகத்தில், சீரான மின் உற்பத்தி, சீரான மின் வினியோகத்திற்கு மின் வாரிய பணியாளர்கள் திறம்படபணியாற்றி வருகின்றனர். அத்தியாவசிய தேவையான மின்சாரம் மக்களுக்கு கிடைக்க அக்கறையுடன் பணியாற்றுகின்றனர். மின் வாரிய பணியாளர்கள் தங்களுக்கான சலுகைகள், உரிமைகளுக்காக கோர்ட்டில் போராடி போராடி பெற வேண்டிய நிலை உள்ளது. தமிழக மின் வாரியத்தில், 'ஹெல்பர், போர்மேன்' உதவி பொறியாளர் உட்பட, 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன.இவற்றை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாநில துணைத்தலைவர்கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.--

கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: பள்ளிகளில் திடீர் ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவு.

மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் பள்ளி களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள கண்காணிப்புக் குழுக்களை அமைக்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிக ளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது:
ஊராட்சி ஒன்றியம் மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் பள்ளிகளில் ஆண்டு ஆய்வு மேற்கொள்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, பள்ளிகளை முன்ன றிவிப்பின்றி திடீர் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், தங்கள் மாவட்டத்தில்உள்ள உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோரை குழுக்களாக ஒருங்கி ணைக்க வேண்டும். ஒரு குழு வுக்கு 2 பேர் வீதம் குழுக்களை பிரித்துக்கொண்டு எவ்விதமுன்ன றிவிப்பும் இன்றி பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ மாணாக்கரின் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி

உங்கள் பிள்ளைகள் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கிறார்களா? அவர்களது படிப்பை விட, ப்ராஜெக்ட்டுகளுக்காக ஏராளமான பணம் செலவழித்து சோர்ந்து விட்டீர்களா? ஆம் எனில் இனி நீங்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம்.


அதாவது, பள்ளி மாணாக்கருக்கு, வீட்டில் செய்து கொண்டு வர வேண்டும் என்று எந்த ப்ராஜெக்டுகளையும் இனி கொடுக்கக் கூடாது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

அதற்கு பதிலாக, பள்ளிகளிலேயே, வகுப்பு நேரத்திலேயே ப்ராஜெக்ட்டுகளை செய்ய வைப்பதால், மாணவர்களுக்கும் அதன் மீது ஆர்வம் ஏற்படும், அதோடு, பெற்றோர் ஏற்கனவே தயாரித்து விற்பனைக்கு வைக்கும் ப்ராஜெக்டுகளை வாங்கி பள்ளிக்கு எடுத்து வரும் நடைமுறையும் தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ இயக்குநர் கே.கே. சௌத்ரி இது குறித்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இனி ப்ராஜெக்ட்டுகள் அனைத்தும் பள்ளி வகுப்பு நேரத்தில் மாணவர்கள் குழுவாக சேர்ந்து செய்யும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உதவி தேவைப்படும் தமிழர்கள் கீழ்கண்ட கர்நாடக வாழ் தமிழ் சங்கத்தினர் எண்களை தொடர்புகொள்ள அறிவுறுத்தல்

வதந்திகளை பரப்பவேண்டாம் என வேண்டுகோள்

மைசூர் தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர்.
கு.புகழேந்தி.
94480 54831.
94489 05831.
0821 2343426.
பெங்களூர் தமிழ்ச் சங்கம்.

லேண்ட் லைன் - 080 25510062.
தலைவர், கோ.தாமோதரன் - 98450 33166.
தி.கோ.தாமோதரன் - 94494 85903. 
சிக்கமகளூர் தமிழ்ச்சங்கம்.
தலைவர், ஆறுமுகம் - 90364 74224.
துணைத் தலைவர், குமார் - 99643 58993.
ஹாசன் தமிழ்ச் சங்கம்.
தேவசேனாதிபதி - 94488 45681.
அனூர் தமிழ்ச் சங்கம்.
தலைவர், அரசப்பன் - 99720 42935.
கொள்ளேகால் தமிழ்ச் சங்கம்.
நல்லசாமி - 98869 18029.
சதாசிவம் - 97319 35325.
கந்தசாமி - 96636 77655.
குண்டல் பேட்டைத் தமிழ்ச் சங்கம்.
வீ.பாலகிருஷ்ணன் - 94801 69132.
கண்ணன்.[வேலுச்சாமி] 94491 77151.
சாமராஜ நகர் தாலுக்கா தமிழ்ச்சங்கம்.
சின்னசாமி - 94485 95956.
ஜெகதீஷ் - 94491 61772.
ஆனந்த் - 90363 94238
தங்கவேல்- 94488 71818
உன்சூர் தமிழ்ச் சங்கம்.
சின்னசாமி - 99450 46727.
வேலு - 96204 84120.
முருகன் - 94487 37069.
மணி- 94499 93229.
ஹெக்கட தேவன கோட்டை (ஹெச்டி கோட்) தமிழ்ச் சங்கம்.
நகுல்சாமி - 94495 32255.
தேவராஜன் - 94490 02205.
பழனிச்சாமி - 97410 63117.
பெரியசாமி - 99863 30781.
நஞ்சன்கூடு தமிழ்ச் சங்கம்.
தலைவர், சீனிவாசன் - 81055 17263.

13/9/16

முதுநிலை உளவியல் படிப்பு: செப்.16-இல் நுழைவுத்தேர்வு



சென்னை: சென்னை அரசு மனநல மருத்துவ நிறுவனத்தில் 2 ஆண்டு முதுநிலை மருத்துவ உளவியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்.16) நடைபெறவுள்ளது.
சென்னை அரசு மனநல மருத்துவ நிறுவனத்தில் 2016-17 கல்வியாண்டுக்கான மருத்துவ உளவியல் பாடப்பிரிவில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil Clinical Psychology)படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இது இரண்டாண்டு படிப்பாகும்.
இந்தப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு வரும் 16-ஆம் தேதி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவ நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வில் பங்கேற்கத் தகுதியானவர்களின் பட்டியல் தமிழக சுகாதாரத் துறையின் 
www.tnhealth.org திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த 4 நாளில் பாஸ்போர்ட் : சென்னை மண்டல அதிகாரி அறிவிப்பு



மத்திய அரசு  அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் கூறியதாவது: 

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான்கார்டு ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்துக்  கொடுத்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும். பாஸ்போர்ட் கிடைத்ததும் போலீஸ் துறையின் சான்றாய்வு செய்யப்படும் என்ற திட்டத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. தட்கல் என்னும்  துரித பாஸ்போர்ட் திட்டத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு போலீசார் விரைவாக சான்றாய்வு பெற வசதியாக மொபைல் ‘போலீஸ்-ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 3 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்திலும் அறிமுகம் செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. போலீஸ் ஆப் மூலம்  போலீஸ் சான்றொப்பம் கிடைப்பதற்கான நேரம் வெகுவாக குறையும். இந்த திட்டத்தை சென்னை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு மாதத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்ய உள்ளோம். தமிழகத்தில் உள்ள 280 இ-சேவா மையங்களில் இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. 

கிராமங்களில் வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெற இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் ரூ.155 செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 3 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் கேட்டு வி்ண்ணப்பிக்கும் நபர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கான கால அளவு 19 நாளில் இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் கொடுத்த மறுநாளே அவர்கள் சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு மண்டல அதிகாரி பாலமுருகன் தெரிவித்தார். 

'குரூப் - 4' தேர்வு விண்ணப்பம் விண்ணப்பிக்க நாளை கடைசி



அரசுத் துறையில், 5,451 காலியிடங்களுக்கான, 'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். தமிழக அரசுத் துறையில், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் போன்ற, ஏழு வகையான, 'குரூப் - 4' பதவிகளுக்கு, 5,451 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, செப்., 8 கடைசி நாளாக, அறிவிக்கப்பட்டு இருந்தது. கடைசி இரண்டு நாட்களில், இணையதளத்தில் பிரச்னை ஏற்பட்டதால், விண்ணப்ப பதிவுக்கான காலக்கெடு, செப்., 14 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலக்கெடு, நாளை முடிகிறது. விண்ணப்பதாரர்கள், கடைசி நேரம் வரை காத்திருக்காமல், விரைந்து விண்ணப்பிக்குமாறு, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
Related Posts Widget

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்



அக்டோபரில் நடக்கும், பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு, வரும், 15, 16ம் தேதிகளில், தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

'அக்டோபரில் நடக்க உள்ள, பிளஸ் 2 துணைத்தேர்வில் பங்கேற்க, சிறப்பு அனுமதியுள்ள, தத்கல் திட்டத்தில், செப்., 14, 15ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டது. 14ம் தேதி, ஓணம் பண்டிகைக்காக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், செப்., 15, 16ம் தேதிகளில், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்; மாவட்டந்தோறும் உள்ள, அரசு தேர்வுகள் சேவை மையத்திற்கு, நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.