யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/2/17

அறிவோம் அரசாணைகள் அரசாணைகள் விபரம்.*


1. அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?

அரசாணை நிலை  எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை   நாள்.17.2.89ன்படி மாநில அரசுப்பணிகளில் ஒவ்வொரு பதவியிலும் 30%மகளிர் நியமனம் செய்யப்பட வேண்டும். மீதம் உள்ள 70% பொதுவானது ஆகும்.


-----------------------

2. ஆசிரியர் வருங்கால  வைப்புநிதியில் (TPF) இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் தற்காலிக முன்பணமாக பெறலாமா?


அரசாணை நிலை  எண்.381 நிதித்துறை   நாள்.30.9.2010ன்படி ஆசிரியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும்  தற்காலிக  முன்பணமாக ரூபாய் 2,50,000,  மட்டுமே பெற முடியும்.

-----------------------

 3. அரசுப்பணியில் சேர்ந்த தகுதிகாண் பருவத்தினருக்கு ஈட்டிய விடுப்பு எவ்வாறு இருப்பு வைக்கப்படுகிறது?

அரசாணை நிலை  எண்.157,  பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை  நாள்.24.6.94ன்படி தகுதிகாண் பருவத்தினருக்கு ஒவ்வொரு முடிவுற்ற 2மாதங்களுக்கும் 2 1/2 நாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு இருப்பு வைக்கப்படுகிறது.

-------------------

4. உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பணியை துறவு செய்துவிட்டு அரசு பணியில் சேரும்போது அவருக்கு பழைய ஊதியம் கிடைகுமா?

அரசாணை நிலை எண்.536 கல்வித்துறை நாள்.13.04.1966 ன்படி உதவி பெறும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பணியை துறவு செய்து விட்டு அரசு பள்ளியில் பணியில் சேரும்போது பணியேற்கும் பதவிக்குரிய ஊதிய விகிதத்தில்  ஊதியம் வழங்கப்படும்.

-----------------------

5. தகுதிகாண் பருவத்தில் உள்ள ஆசிரியர் ஒருவருக்கு பதவி உயர்வு அளிக்கலாமா?

அடிப்படை விதிகள் 36(0) மற்றும் அரசாணை எண்.21, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 23.1.96ன் படியும் தகுதிகாண் பருவத்தினருக்கு கண்டிப்பாக பதவி உயர்வு வழங்கக்கூடாது. என்று மேற்கண்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

------------------

6. வருங்கால வைப்புநிதி மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா?

அரசாணை எண்.461, நிதித்துறை நாள்.22.9.2009ன்படி அடிப்படை ஊதியம், தர ஊதியம், சிறப்புஊதியம், தனிஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை சேர்த்து 12% தொகை குறைந்த பட்ச சந்தாவாக பிடித்தம் செய்திடவேண்டும். 12%க்கு மேலாக எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்திடலாம். மேலும் சந்தா தொகையை எந்த மாதத்திலும் உயர்த்திக் கொள்ளலாம். குறைக்க வேண்டுமெனில் மார்ச்சு மாதத்தில் குறைத்துக்கொள்ளலாம்

-----------------------

7.அரசுப்பணிகளில் பணிபுரியும் அலுவலர்கள் பணிப்பதிவேட்டை பார்வையிடலாமா?

அரசாணை நிலை  எண்.281, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை   நாள்.28.07.1993ன்படி ஊழியர்களின் அசல் பணிப் பதிவேட்டுப் பதிவுகளை 6மாதங்களுக்கு ஒருமுறை சரிபார்க்கவும், நகல் எடுத்துக்கொள்ளவும் உரிமை உண்டு.

-------------------------

8. முழு ஓய்வூதியம் பெற எத்தனை ஆண்டுகள் பணி செய்திருக்கவேண்டும்?

அரசாணை நிலை எண்.496, நிதித்துறை நாள்.1.8.2006ன்படி முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டுகள் பணி செய்திருக்கவேண்டும். இந்த அரசாணை வெளி வருவதற்கு முன்பு 33 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும் என இருந்தது.

குறிப்பு; 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இத் திட்டம் பொருந்தாது.

------------------

9. குழந்தை பிறந்த நாளிலிருந்து தான் மகப்பேறு விடுப்பு தொடங்குகிறதா??

அரசாணை நிலை எண்.237, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 29.6.93ன்படியும் மற்றும் அடிப்படை விதி101(a)ன்படியும்  மகப்பேறுக்கு முன்னரோ. (அ) மகப்பேறுக்கு பின்னரோ  விடுப்பு அளிக்கலாம். குழந்தை பிறந்த பிறகு தான் விடுப்பு அளிக்கப்படும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

குறிப்பு; அ.நி.எண்.61.பணி.நிர்.சீர் .துறை நாள்.16.6.2011ன்படி180 நாள்கள் விடுப்பு அளிக்கப்படுகிறது.

-------------------------

10. மருத்துவ விடுப்பை எத்தனை நாட்களுக்குள் மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்?

அரசாணை நிலை  எண்.460, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.21.4.1976ன்படி விடுப்பு வழங்கும் அலுவலர் தேவை ஏற்படும் போது மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றால் மூன்று நாட்களுக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

---------------------------

11. தற்செயல் விடுப்பினை பற்றி அறிவோம் !

தற்செயல் விடுப்புகள் பற்றி அறிந்து கொள்வோம்.
                                                                  தற்செயல் விடுப்பானது 16.06.1985 முதல் நாள் காட்டி ஆண்டிற்கு 12 நாட்கள் வீதம் அனுமதிக்கப்படுகிறது .அதிக பட்சமாக தொடர்ந்து பத்து நாட்கள் வரை (விடுமுறை நாட்கள் உள்பட ) அனுபவிக்கலாம் .(563 பநீசீ. 30.05.85)

சீமைக் கருவேல மரங்களை தமிழகம் முழுவதும் அகற்ற உத்தரவு : 15 நாட்களுக்கு கெடு

தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை 15 நாட்களில் அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


ம.தி.மு.க.,பொதுச் செயலாளர் வைகோ, 'சீமைக் கருவேல மரங்கள் நிலத்தடி நீர், காற்றிலுள்ள ஆக்சிஜன், ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் வெப்பம் அதிகரிக்கிறது. சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்திருந்தார். இதுபோல் திருப்புவனம் கருப்புராஜா, மதுரை முன்னாள் மேயர் பட்டுராஜன் மனு செய்திருந்தனர்.

உயர்நீதிமன்ற கிளைக்குட்பட்ட மாவட்டங்களில் 10 நாட்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஜன.,31ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது.

நீதிபதி செல்வம்: உயர்நீதிமன்றக் கிளை அருகிலுள்ள பகுதியில்கூட சீமைக் கருவேல மரங்களை

அகற்றவில்லையே?

அரசு வழக்கறிஞர்: சில பகுதிகளில் 30 முதல் 40 சதவீதம், சில பகுதிகளில் முற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அவற்றை ஏலம்விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதிபதி செல்வம்: கலிங்கப்பட்டி யில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் நீங்கள் ஈடுபட்ட செய்தியை பார்த்தோம். பிற பகுதிகளில், இப்பணியில் உங்கள் தொண்டர்களை ஈடுபடுத்தலாமே?

வைகோ: அரசியலுக்கு அப்பாற்பட்டு, அதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகிறேன். பள்ளி,

கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, நோட்டீஸ் அச்சடித்து வினியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நாளை 2 கிராமங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுவோம்.

நீதிபதி செல்வம்: பாராட்டுக்கள்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதிகள் உத்தரவு: மற்ற 19 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என வைகோ தாக்கல் செய்த கூடுதல் மனு விசாரணைக்கு ஏற்கப் படுகிறது. எனவே, தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் 15 நாட்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட முதன்மை நீதிபதிகள், முன்சீப்கள், வழக்கறிஞர் கமிஷனர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிப்.,27 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

வைகோவிற்கு அனுமதி: வழக்கில் அனைத்து தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணி, நெடுஞ்சாலை, அறநிலையத்துறை, மின்வாரியம், துறைமுகம், மத்திய பொதுப்பணித்துறை, தெற்கு ரயில்வே, விமான நிலையம் உட்பட பல்வேறு மத்திய, மாநில அரசுத்துறைகளை எதிர்மனுதாரர்களாக இணைத்துக்கொள்ள மனு செய்ய வைகோவிற்கு அனுமதியளிக்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் இம்மரங்களை அகற்ற போதிய நிதி இல்லை என கலெக்டர்

தெரிவித்துள்ளார். அம்மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றவும், ஆய்வு செய்யும் வழக்கறிஞர் கமிஷனர்களுக்கு

ஒத்துழைப்பு அளிக்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

கலெக்டர் உத்தரவாதம்: சீமைக் கருவேல மரங்களை அகற்ற போதிய ஆர்வம் செலுத்தவில்லை எனக்கூறி, நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்த அவமதிப்பு வழக்கில் ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் ஆஜரானார். அவர்,'ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களில் சீமைக் கருவேல மரங்கள்

அகற்றப்படும்,' என உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்தார். இதை ஏற்ற நீதிபதிகள், அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.

பிளஸ் 2 தேர்வுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்: சர்ச்சை இடங்களுக்கு கெடுபிடி அதிகாரிகள்

பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுக்கான, பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சர்ச்சைக்குரிய ஈரோடு, கிருஷ்ணகிரி, கடலுார் மாவட்டங்களுக்கு, மிகவும் கண்டிப்பான, கெடுபிடி காட்டக்கூடிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகள், மார்ச் 2, மற்றும், 8ல், துவங்குகின்றன. வினாத்தாள், 'அவுட்' ஆகாமல் இருக்கவும், முறைகேடின்றி தேர்வுகளை நடத்தவும், தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி சில பரிந்துரைகள் அளித்தார். அதன்படி, பொறுப்பு அதிகாரிகளை நியமித்து, பள்ளிக்கல்வி செயலர், சபிதா நேற்று உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு, ஈரோடு மாவட்டத்தில், ஒரு தனியார் பள்ளியில், ஆள் மாறாட்டம் நடந்து, ஐந்து மாணவர்களின், 'ரிசல்ட்' நிறுத்தப்பட்டது. பள்ளிக்கான, தேர்வு மைய அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டது.அப்போது, பொறுப்பு அதிகாரியாக செயல்பட்டு, முறைகேடுகளை கண்டுபிடித்த, மெட்ரிக் இயக்குனர் கருப்பசாமி, மீண்டும் ஈரோடுக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த, 2014 - 15ல், பிளஸ் 2 தேர்வின் போது, 'வாட்ஸ் - ஆப்'பில் வினாத்தாள் வெளியான, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, தேர்வுத் துறை இணை இயக்குனர், உமா நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட, 'வாட்ஸ் - ஆப்' விவகாரத்தை கண்டுபிடித்த, எஸ்.எஸ்.ஏ., இணை இயக்குனர் நாகராஜ முருகன், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கைக்கு பொறுப்பு அதிகாரியாகிறார். வெறும் மதிப்பெண்ணுக்காகவே இயங்கும் பள்ளிகள் நிறைந்த, நாமக்கல்லுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் லதா; தேர்வில் காப்பியடிப்போர் அதிகமாக பிடிபடும், கடலுார் மாவட்டத்திற்கு பாடநுால் கழக செயலர், கார்மேகம்; திருச்சிக்கு, தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவல்லியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

 பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சென்னைக்கும்; அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் ஆகியோர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பொறுப்பு அதிகாரியாக செயல்படுவர்.

மதுரைக்கு இணை இயக்குனர் நரேஷும், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா, வேலுாருக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, அனைத்து மாவட்டங்களுக்கும், தேர்வுக்கான பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

TRB :TET - தேர்வு அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது! டி.ஆர்.பி., அதிகாரிகள், நேற்று ஆலோசனை.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகிறது. தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, நடத்தப்படவில்லை.
நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதால், இத்தேர்வை நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இந்நிலையில், சி.இ.ஓ.,க்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவது தொடர்பாக, டி.ஆர்.பி., அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர். தேர்வு தொடர்பாக, அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது.

நீட் தேர்வைப் போல, பொறியியல் படிப்புகளுக்கும் வருகிறது நுழைவுத் தேர்வு!

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வைப் போல, பொறியியல் படிப்புகளுக்கும் தேசிய பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
அதன்படி, வருகின்ற 2018-19 கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு, ஒற்றை நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகளை வகுக்க, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கு (ஏ.ஐ.சி.டி.) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில், இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு, ஒரே நுழைவுத் தேர்வை நடத்த, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டலில் வாழ்க்கை சான்று சமர்ப்பிக்க பிப்., 28 கடைசி

ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற, ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர், வைப்பு நிதி அலுவலகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும், 
ஆதார் சேர்க்கை செயல்முறை முகாமில், பிப்., 28க்கு முன், தங்களது, ஆதார் எண் மற்றும் ஜீவன் பிரமாண பத்ரம் என்ற, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த சான்றிதழை, வங்கியில் சமர்ப்பிக்காத ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்புநிதி அலுவலகத்திற்கு நேரில் வந்தோ அல்லது அருகில் இருக்கும் பொது சேவை மையத்திற்கோ சென்று பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு அட்டை, பி.பி.ஓ., எண், மொபைல் எண் ஆகிய தகவல்கள் தேவைப்படும்.

வரும், 28க்குள் பதிவு செய்யாத ஓய்வூதியதாரர்களுக்கு, மார்ச் 1 முதல், ஓய்வூதியம் வங்கி கணக்கில், வரவு வைக்கப்பட மாட்டாது என, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி முதன்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

பள்ளிகளின் அங்கீகாரம், ஆசிரியர் களின் கோரிக்கை, ஓய்வூதியம் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில் போட்டால், ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' - பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை.

பள்ளிகளின் அங்கீகாரம், ஆசிரியர் களின் கோரிக்கை, ஓய்வூதியம் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில் போட்டால், ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.

தமிழக பட்ஜெட், அடுத்த மாதம் தாக்கலாக உள்ளது. அதனால், கல்வித் துறை உட்பட அனைத்து துறைகளிலும், முன்னேற்பாடுகள் துவங்கி உள்ளன. இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியம், பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பித்தல்,
அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்புதல், தேர்வு பணிகள் உள்ளிட்டவற்றில், தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களுக்கு, புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மாவட்ட கல்வி அதிகாரிகளான,
டி.இ.ஓ.,க்களும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களும், பல கோப்புகளை, மாதக் கணக்கில் கிடப்பில் போட்டுள்ளது தெரிய
வந்தது. அதுபற்றி, சி.இ.ஓ.,க்களிடம், பள்ளிக்கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.இதையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில் போட்டு, நிர்வாகத்தில் சிக்கலை ஏற்படுத்தினால்,
சம்பந்தப்பட்ட ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. அதே போல, டி.இ.ஓ., மற்றும் சி.இ.ஓ.,க்கள் புகார்களுக்கு இடமின்றி செயல்படவும், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.

விளம்பர எண் குழப்பத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறதா : போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கலக்கம்.

சீருடை பணியாளர் தேர்வாணைய குழப்பத்தால், தமிழக காவல் துறையில் 15 ஆயிரத்து 711 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் பெரும்பாலான மனுக்கள் நிராகரிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு மே 21 ல் நடக்கிறது. இரண்டாம்நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 4,615 இடங்களும், இரண்டாம்நிலை காவலர்(ஆயுதப்படை) பிரிவில் 8,568 இடங்களும், இரண்டாம்நிலை சிறை காவலர் 1,016 இடங்களும், தீயணைப்போர் 1,512 இடங்களும் என மொத்தம் 15,711 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை, தபால் அலுவலகங்களில் இளைஞர்கள், ஆர்வமுடன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஜன.,23ல் சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், விளம்பர எண் 116 என குறிப்பிடப்பட்டிருந்தது. விண்ணப்பத்தை நிரப்பும்போது, விண்ணப்பதாரர் இந்த எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்த எண்ணை விண்ணப்பத்தின் 'ஓ.எம்.ஆர்.,' சீட்டில் எப்படி குறிப்பது என்பது குறித்து தேர்வாணையம் உதாரணமும் வெளியிட்டுள்ளது.

அதில், தேர்வுக்கான விளம்பர எண்:116 என கட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை விளம்பரத்தில் தெரிவித்தவண்ணம் 117 என பாவித்து, அதற்குரிய அடைப்பு குறிக்குள் கருமையாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், விண்ணப்பத்தில் '116' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எந்த எண்ணை குறிப்பிடுவது என்ற குழப்பத்தில் விண்ணப்பத்தாரர்கள் ஆளாகியுள்ளனர். தவிர, சான்றிதழ்களின் நகல்களில் விண்ணப்பத்தாரர்கள் சுயகையொப்பமிட வேண்டும் என விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுகுறித்து விண்ணப்பத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதனால் விண்ணப்பதாரர்களில் பலர் 'கெசட்' ஆபீசர்களின் கையொப்பம் பெற்று விண்ணப்பத்தை அனுப்பி வருகின்றனர். இதன்காரணமாகவும், விளம்பர எண் குழப்பத்தாலும் விண்ணப்பதாரர்களின் மனுக்கள் நிராகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து தெளிவான விளக்கத்தை சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட வேண்டும்.

11/2/17

ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்த கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பதில் அவர்கள் நேர்முக உதவியாளர்கள் (பி.ஏ.,க்கள்) பங்கேற்க TRB உத்தரவு.

சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்த கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பதில் அவர்கள் நேர்முக
உதவியாளர்கள் (பி.ஏ.,க்கள்) பங்கேற்க டி.ஆர்.பி., உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு, ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) ஏப்., அல்லது மே மாதம் நடத்த டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.

இதையொட்டி பிப்.,13 முதல், அனைத்து மாவட்டங்களிலும் கல்வித்துறை சார்பில் டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இத்தேர்வு குறித்த, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள் ஆலோசனை கூட்டத்தை, பிப்.,3ல் நடத்த டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. ஆனால் 'பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவங்கியதால் டி.ஆர்.பி., கூட்டத்தில் சி.இ.ஓ.,க்கள் பங்கேற்க வேண்டாம்,' என கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவரின் வாய்மொழி உத்தரவால் அவர்கள் பங்கேற்கவில்லை. இதற்கு டி.ஆர்.பி., மற்றும் கல்வித்துறை அதிகாரிக்கு இடையே நிலவிய 'ஈகோ' யுத்தம் தான் காரணம் என தகவல் வெளியாகியது.

இந்நிலையில், சி.இ.ஓ.,க் களுக்கு பதில் நேர்முக உதவியாளர்களை அழைத்து கூட்டம் நடத்த டி.ஆர்.பி., முடிவு செய்தது. இதுதொடர்பான கூட்டம் சென்னையில் இன்று (பிப்.,10) நடக்கிறது. இதில் டி.ஆர்.பி., தலைவர் விபு நாயர், இயக்குனர்கள், உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "கல்வித்துறை உயர் அதிகாரி கவனமின்றி சி.இ.ஓ.,க்கள் கூட்டத்தை டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது.


இதனால் அந்த அதிகாரி அதிருப்தி அடைந்து கூட்டத்தில் பங்கேற்க சி.இ.ஓ.,க்களுக்கு மறைமுக தடை விதித்தார். இதனால் சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்களை அழைத்து டி.ஆர்.பி., இன்று கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தது," என்றார்.

ஜியோ-வின் இலவசங்கள் ஜூன் 30 வரை தொடருமாம்..குறைந்த கட்டணத்தில்

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் சேவைப் பிரிவான ஜியோ, வாடிக்கையாளர்களைப் பெறவும்,
தக்கவைத்துக்கொள்ளவும் வெல்கம் ஆஃபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆஃப்ர் ஆகியவற்றை அறிவித்துச் சுமார் 7 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் வருகிற மார்ச் 31ஆம் தேதி முதல் ஹேப்பி நியூ இயர் ஆஃபர் முடிவடைவதால், ஜூன் 30ஆம் தேதி வரையிலான புதிய இலவச திட்டத்தை வடிவமைத்துள்ளது ஜியோ.
இதன்மூலம் மார்ச் 31ஆம் தேதிக்குப் பின்னும் ஜியோ வாடிக்கையாளர்களுக்குக் கொண்டாட்டம் தான்.

TET - TRB தேர்வு அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகிறது. தமிழகத்தில், நான்கு ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு,
நடத்தப்படவில்லை. நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதால், இத்தேர்வை நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


இதற்காக, 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இந்நிலையில், சி.இ.ஓ.,க்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவது தொடர்பாக, டி.ஆர்.பி., அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர். தேர்வு தொடர்பாக, அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? Mr. Alla Baksh

தமிழ் வினாத்தாளில் முப்பது மதிப்பெண்களுக்கு வினாக்கள் அமைந்திருக்கும். செய்யுள், உரைநடை, துணைப்பாடம் ஆகிய
மூன்றிலிருந்தும் 15 மதிப்பெண்களுக்கு வினாக்கள் அமையலாம். இலக்கணத்திலிருந்து 15 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
செய்யுள் பகுதியில் நூற்குறிப்பு, ஆசிரியர் குறிப்பு, எழுதிய நூல்கள், சிறப்புப் பெயர்கள் ஆகியவற்றை முழுவதுமாகப் படித்துத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
சாகித்ய அகாதெமி, மத்திய, மாநில அரசு சார்பில் பெற்ற விருதுகள், பட்டங்கள், தபால்தலை வெளியிட்ட ஆண்டுகள், நூற்றாண்டு விழா பற்றிய தகவல்களை தெரிந்திருக்க வேண்டும்.
உரைநடைப் பாடத்தில் வரிக்கு வரி ஏதேனும் வினாக்கள் அமையும். ஆதலால் குறிப்பு எழுதிவைத்துப் படிக்கவும்.
துணைப் பாடத்தில் இடம்பெறும் சிறப்புப் பெயர்கள், வேற்றுமொழிப் பெயர்கள், வேற்று நாட்டில் - மாநிலத்தில் நடந்த செய்திகளை முக்கியமாகப் படிக்க வேண்டும்.
இலக்கணப் பகுதியில் ஒவ்வொரு பகுதியுமே இன்றியமையாத பகுதியாக நினைத்துப் படிக்கவும்.
படிப்பதைப் புரிந்துகொண்டு மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள சில எளிய உத்திகளை நீங்களே உருவாக்குங்கள்.
எ.கா: தமிழ் எண் உருக்களை நினைவில் கொள்ள
கடலைஉருண்டைய ஙவ்விச் சப்பி ருசித்து சாப்பிட்டு எடுத்து அதை கூடையில் கடாசு
வினாவிற்கு ஏற்ற விடையைத் தேர்வு செய்யும்போது தவறான விடைகள் இரண்டினைத் தேர்வு செய்து அதை மனத்திற்குள்ளே மறைத்து வைத்துவிட்டு மீதி இரண்டில் ஒரு சரியான விடையைத் தேர்வு செய்யவும். இவ்வாறு குறிக்கும்போது பெரும்பாலும் விடைகள் தவறாக இருக்காது.
இலக்கண வினாக்களைப் பொருத்தமட்டில் மரபுச் சொல், வழூஉச் சொல், இளமைப் பெயர்கள் ஆகியவற்றிலிருந்து 50 எடுத்துக்காட்டுகளைப் படித்தால் சரியான விடையைத் தேர்வு செய்து எழுத முடியும்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தமிழ்ப் பாடநூல்களையும் விட்டுவிடாது படிக்கவும். சொல்லுக்கேற்ற பொருள் விளக்கம் கேட்பதால் செய்யுள் பகுதிகளில் அமைந்துள்ள இன்றியமையாத சொல்லைக் கொடுத்துப் பொருள் கேட்பார்கள்.
பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல் போன்ற வினாக்களில் புதிதாக அமைந்துள்ள சொல்லையும் பொருளையும் தேர்வு செய்து படிக்கவும்.
எ.டு: ஈருருளி (சைக்கிள்), ஈரிருவர் (நால்வர்)

குறிஞ்சி முதலாக உள்ள ஐந்திணைகளின் முதற்பொருள் (நிலமும், பொழுதும்), உரிப்பொருள்கள் (உணர்ச்சி), கருப்பொருள்கள் ஆகிய மூன்று பொருள்களையும் ஆழ்ந்து படிக்கவும். புறப்பொருள் திணைகளையும் நன்கு படித்துக்கொள்ள வேண்டும்."

TNTET சமூக அறிவியல் பாடத்தில் 60 க்கு 60 பெறுவது எப்படி?Mr. Alla Baksh

TNTET சமூக அறிவியலில் 60 க்கு 60 எடுப்பது எப்படி

கலைபட்டய படிப்புகளான BA History, English, Tamil போன்ற படிப்புகள் படித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - II ல் பெருமளவு கேள்விகள் (60/150) சமூக அறிவியல் பாடத்திலிருந்தே
கேட்கப்படுகின்றன.
வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு இப்பகுதி மிகவும் எளிதாகப்பட்டாலும், தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற கலைத்துறை மாணவர்களுக்கு இது ஒரு சோதனையாகவே இருக்கிறது. கசப்பான மருந்தாக உள்ள சமூக அறிவியல் பாடத்தை இனிப்பாக மாற்றி வரலாறு படிக்காத பிற கலைத்துறை மாணவர்களையும் சமூக அறிவியல் பகுதியில் அதிக மதிப்பெண் பெறச்செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.
மேல்நிலைப்பள்ளியானாலும் சரி, கல்லூரிப் படிப்பானாலும் சரி பொதுவாக வரலாற்றுத்துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்களை மற்ற பிரிவு மாணவர்கள் "அசோகர் மரம் நட்டார் என்பதை படிக்க மூன்று வருடமா?" எனக் கேலி செய்வதை பார்த்திருப்பீர்கள். ஏன் இதை படிக்கும் நீங்களே உங்கள் நண்பர்களை கேலி செய்திருக்கலாம். ஆனால் இப்போது புரிந்திருப்பீர்கள் இங்கும் சில கடினமான விசயங்கள் இருக்கிறது என்று. B.A., B.Ed., ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு (+2 வில் கணிதம்-உயிரியல்) சென்ற முறை நல்ல மதிப்பெண்ணுடன் ஆசிரியர் தகுதித்தேர்வை முழுமை செய்து தற்போது வேலையில் இருக்கும் நண்பர் ஒருவருடன் சமீபத்தில் உரையாடும் போது, அவர் சில பயனுள்ள தகவல்களை தந்தார். அவற்றை கோர்வையாக சேர்ந்து இங்கே உங்களுக்கு வழங்குகிறேன்.
TNTET தேர்வுக்கு தயாராவதற்கான 6 வது முதல் 10 வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடம் கீழ்கண்ட நான்கு பிரிவுகளில் இருக்கும்.
வரலாறு (History)
புவியியல் (Geography)
குடிமையியல் (Civics or Polity)
பொருளாதாரம் (Economics)
1.இனிக்கும் வரலாறு :
"உங்கள் எதிர்காலத்தை நிங்களே தீர்மானிக்க வேண்டுமென்றால், வரலாற்றைப் படியுங்கள்" - கன்ஃபூசியஸ்
வரலாறு என்றாலே காலங்கள், நிகழ்வுகள் மற்றும் பெயர்கள் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். உண்மையும் அது தான். ஆனால் உண்மையான ஆர்வத்துடன் படித்தால் வரலாறு போல் இனிப்பது ஒன்றுமில்லை.
வரலாறு =கதை :
ஒருவரலாறு பாடப் பகுதியை படிக்க துவங்கும் முன்னர் "அதிலுள்ள வருடங்களையும், பெயர்களையும் எப்படி மனப்பாடம் செய்வது?" என்று பதட்டப்படாமல், ஒரு கதையை படிப்பது போல் படிக்கத் துவங்குங்கள்.
உதாரணமாக, 6 ஆம்வகுப்பிலுள்ள சிந்து சமவெளி நாகரிகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு நாகரிகம் இருந்தது , அந்த மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களின் உணவு முறை, நகர வாழ்க்கை, கடவுள் வழிபாடு, வணிகம் இவைதான் சாராம்சம். மொத்தமாக ஒரு முறை வாசித்து விட்டு இப்போது ஒரு முறை வாசித்தவற்றை அசை போடுங்கள். இரண்டாவது முறை வாசிக்கும் போது "லோத்தல் - துறைமுக நகரம் - தற்போது எந்த மாநிலத்தில் உள்ளது" , "காளிபங்கன் -என்ன சிறப்பு ?" என பல உண்மைகளை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். இப்படியே பல்வேறு அரசுகள், அரசர்கள், போர்கள் போன்றவற்றையும் கதையைப் போல படிக்கத்துவங்கினால். வரலாற்றில் இன்னொரு M.A., பண்ணுவதற்கு கூட ஆர்வம் வருமளவிற்கு வரலாற்றை நீங்கள் ரசித்து ருசித்து படிப்பீர்கள்.
காலக்கோடுகளின் மந்திரம்
வரலாற்றில் வரும் வருடங்களை எளிதாக நினைவு கூற "காலக்கோடு முறை" மிக சிறந்தது. ஒவ்வொரு பகுதிக்கும் தனிதனி காலக்கோடுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். கடைசியாக பார்க்கும் போது "சிந்து சமவெளி முதல் அ.தி.மு.க ஆட்சி 2017 வரை" வருடங்களை மிகவும் எளிதாக உங்களால் கூற முடியும்.
உதாரணமாக 'இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை" கீழ்க்கண்ட காலக்கோட்டின் மூலம் விளக்கலாம்.
1885 - இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம்
1905-வங்கப்பிரிவினை
1906 - முஸ்லிம் லீக் தோற்றம்
1907-சூரத் பிளவு (காங்கிரசுக்குள்)
1909-மின்டோ-மார்லி சீர்திருத்தம்
1919-மாண்டேக்-செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
1920 -கிலாபத் இயக்கம்
-- இப்படி நீங்களே ஒரு காலக்கோட்டை தயாரித்து, ஒவ்வொரு வருடத்தோடும் தொடர்புடைய நிகழ்வுகளை, பெயர்களை மிகவும் எளிதாக நினைவில் கொள்ளலாம்.
2. புதுமையாகும்புவியியல்
புவியியல் பாடப்பகுதியை பார்த்தாலே பலருக்கு கசப்பாக இருக்கும். ஆனால் சில முக்கியமான உபகரணங்களுடன் படிக்கும் போது அது மிகவும் எளிதாக மாறிவிடும். அந்த உபகரணங்கள் Atlas மற்றும் Maps தான். உதாரணமாக கண்டங்களைப் பற்றி படிக்கிறீர்கள் எனில், நிச்சயமாக ஒரு உலக வரைபடத்தை கையில் எடுத்துக்கொண்டு அமெரிக்கா, ஆசியா என ஒவ்வொரு கண்டங்களையும் நீங்களே கண்டுபிடியுங்கள். அது போல, எந்த ஒரு இடத்தின் பெயரை படிக்கும் போதும் அவற்றை உலக அல்லது இந்திய வரைபடத்தில் பாருங்கள். உலகில் உள்ள நாடுகள், நதிகள், கால நிலைகள் எல்லாமே இந்த வரைபடங்களில் உள்ளடக்கம். புவியியல் பகுதியில் நீங்கள் பெறவிருக்கும் மதிப்பெண்கள் உட்பட.
3.குடிமக்கள் அறிய வேண்டிய குடிமையியல் :
ஒருசாதாரண குடிமகன் அறிநதிருக்க வேண்டிய தகவல்களான, அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள், தேசிய சின்னங்கள், அரசியல் முறை, பாராளுமன்றம், சட்டமன்றம், குடியரசு தலைவர், பிரதமர் என அனைத்தும் ஆர்வமூட்டும் விசயங்களே இருப்பதால். குடிமையியல் பகுதிக்கு தயாராக உங்களுக்கு தனியே ஆலோசனைகள் தேவையில்லை.
4. புரிந்து படிக்க வேண்டியதுபொருளாதாரம் :
முதலில் பொருளாதாரத்தைப் பற்றிய அடிப்படை கருத்துக்களை சந்தேகமின்றி புரிந்து கொள்ளவேண்டும். உதாரணமாக Inflation, NDP, NGP, FDI போன்ற வார்த்தைகளை படிக்கும் போது சரியான புரிதல் இன்றி படிப்பீர்கள் எனில் உங்கள் மொத்த நேரமும் முயற்சியும் வீணாகி விடும். எனவே பொருளாதார பாடப்பகுதியை படிக்கும் போது அவற்றில் வரும் முக்கியமான concept ஐ புரிந்து கொண்டு படித்தாலே நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.

British council English Training !!

 DISTRICT LEVEL TRAINING*

_UPPER PRIMARY TEACHERS_

1 Day 1 & 2     

Set I            16.02.2017 &17.02.217

2 .Set II            20.02.2017&21.02.207


3.Set III            22.02.2017 &   23.02.2017


DISTRICT LEVEL TRAINING:  PRIMARY TEACHERS

1 Day 1 & 2.   Set I   27.02.2017&28.02.2017

2 .  Set II                      01.03.2017&02.03.2017

3.  Set III                      06.03.2017&07.03.2017

4. Day 3 & 4   Set I      09.03.2017&10.03.2017

5.Set II                     13.03.2017&14.03.2017


&6. Set III                     15.03.2017&16.03.2017.

வாங்கும் சம்பளத்தை விட கூடுதலாக வரி கட்ட நேர்ந்தால் challan no 280 ஐ நிரப்பி வங்கியில் செலுத்திய பின் IT Formல் இணைக்கவும்.

ஒரு ஒன்றியத்தில் பல பேருக்கு வாங்கும் சம்பளத்தை விட கூடுதலாக வரி கட்ட challan no 281 ஐ நிரப்பி வங்கியில் செலுத்திய பின் IT Formல் இணைக்கவும்.

I.T : FORM 12 BB

2/2/17

வருகிற கல்வியாண்டிலாவது கணினிக் கல்வி அரசுப்பள்ளிகளில் கொண்டுவரப்படுமா.......?CM-CELL -REPLY

No automatic alt text available.

மாத ஊதியம் பெறுவோருக்கான

ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை
வருமான வரி 10%ல் இருந்து 5% ஆக குறைப்பு*

*ரூ. 3 லட்சம் வரையிலான மாத வருமானத்துக்கு வருமான வரி
விலக்கு*

*அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க ஜேட்லி அதிரடி அறிவிப்பு*

*ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரையிலான மாத வருமானம் உள்ளவர்களுக்கு 10% கூடுதல் வரி*

*ரூ. 1 கோடிக்கு அதிகமான மாத வருவாய் மீதான 15% கூடுதல் வரி தொடரும்*

*தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை*

*வருமான வரி விகிதம் குறைப்பு:*
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 சதவீதமாகஇ ருந்த வருமான வரி தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருமான வரிச்சலுகைகளை கருத்தில் கொண்டால் ரூ.3 லட்சம் வருமானத்திற்கு வரி இருக்காது.

#ரூ.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்களுக்கு தலா ரூ.12,500 கழிவு அனுமதிக்கப்படும்.
வரிவிகித குறைப்பால் அரசுக்கு ரூ.15,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.


மேலும் ஒரே ஒரு பக்கத்தில் வருமான வரி விண்ணப்ப படிவம் வழங்கப்படும் .

IT - 12C FORM

TNPSC 2017 ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு