யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/2/17

31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவையின் பெயர் பட்டியல் வெளியீடு

எடப்பாடி பழனிசாமி - முதலமைச்சர். 

திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை. 

செங்கோடையன் - பள்ளிக்கல்வித்துறை. 

செல்லூர் ராஜூ - கூட்டுறவுத்துறை. 

தங்கமணி - மின்சாரத்துறை 

பெஞ்சமின் - ஊரக தொழில்துறை 

நிலோபர் - தொழிலாளர் துறை 

எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்துத் துறை 

மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத்துறை. 

பாஸ்கரன் - காதித்துறை. 

ராமச்சந்திரன் - இந்து அறநிலையத்துறை. 

பெஞ்சமின் - ஊரக தொழில்துறை. 

வேலுமணி - உள்ளாட்சித்துறை. 

ஜெயக்குமார் - மீன்வளத்துறை. 

சி.வி.சண்முகம் - சட்டத்துறை. 

அன்பழகன் - உயர்கல்வித்துறை. 

சரோஜா - சமூக நலத்துறை. 

எம்.சி.சம்பத் - தொழில்துறை. 

கருப்பண்ணன் - சுற்றுச்சூழல். 

காமராஜ் - உணவுத்துறை. 

ஓ.எஸ்.மணியன் - கைத்தறி துறை. 

உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதித்துறை. 

விஜயபாஸ்கர் - நல்வாழ்வுத்துறை. 

துரைகண்ணு- வேளாண் துறை 

கடம்பூர் ராஜூ - செய்தி மற்றும் மக்கள் தொடர்பு. 

உதயகுமார் - வருவாய்துறை. 

நடராஜன் - சுற்றுலாத் துறை. 

கே.சி.வீரமணி - வணிவரித்துறை. 

ராஜேந்திரபாலாஜி - பால்வளத்துறை. 

ராஜலட்சுமி - ஆதி திராவிடர் நலத்துறை. 

எஸ்.வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை. 

பாலகிருஷ்ண ரெட்டி - கால்நடைத்துறை. 

பிளஸ் 2 ஹால்டிக்கெட் தராமல் இழுத்தடிப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான, ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்த பின்னரும், மாணவர்களுக்கு வழங்காமல், சில பள்ளிகள் தராமல் இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.


தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 2ல் துவங்குகிறது. இதற்கான அறிவியல் செய்முறை தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில், மாணவ, மாணவியருக்கான ஹால்டிக்கெட்டுகள், அரசு தேர்வுத்துறை கடந்த வாரத்தில் இணையதளம் மூலம் வெளியிட்டது. 

அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டு மூலம், ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து, சரிபார்த்து மாணவர்களிடம் வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், மாணவர்களுக்கு இதுவரை ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் கூறியதாவது

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தேர்ச்சி வீதம் அதிகரிக்க பல்வேறு தில்லுமுல்லு வேலைகளை செய்து வருகின்றனர். இவற்றில், பலவற்றுக்கு நடப்பு கல்வியாண்டில் தேர்வுத்துறை தடை விதித்துள்ளது. 

உதாரணமாக, பள்ளி வருகை பதிவேட்டில் இருந்த அனைவரும், தேர்வெழுதும் மாணவர்கள் பட்டியலில் இடம்பெற உத்தரவிட்டிருந்தது. கடந்த ஆண்டுகளில், 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில், தேர்ச்சி பெற முடியாது என, கருதும் மாணவர்களை தனித்தேர்வராக விண்ணப்பிப்பது பள்ளிகளின் வழக்கமாக இருந்தது. 

இம்முறை அதற்கான வாய்ப்புகளை தேர்வுத்துறை தடுத்துவிட்டது. இதனால், அடுத்த கட்டமாக, சராசரி மாணவர்களை தேர்வெழுத விடாமல், முழுமையாக ஆப்சென்ட் ஆகும் வகையில், பல பள்ளி நிர்வாகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இதற்காக, ஹால்டிக்கெட்டுகளை தராமல் இழுத்தடித்து வருகின்றன. இவற்றை உடனடியாக கொடுத்து, அனைத்து மாணவர்களும் தேர்வெழுதுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது

பிப்.,20க்குள் பிளஸ் 2 ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. பல பள்ளிகளில், ஹால்டிக்கெட்டுகளை வழங்கிவிட்டால், அதற்கு பின் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதில்லை. 

ரிவிஷன் முறையாக நடக்காததால், தேர்ச்சி வீதம் பாதிக்கப்படுகிறது என, மாணவர்கள் நலன்கருதி பல பள்ளிகள் ஹால்டிக்கெட்டுகளை நிறுத்தி வைத்துள்ளன. மற்றபடி, தேர்வெழுத தடுக்கும் வகையில், ஹால்டிக்கெட் தராமல் இருப்பின், அவர்கள் உடனடியாக புகார் செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாணவியரை சோதிக்க வேண்டாம்; ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு

10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்க உள்ள நிலையில், ’மாணவியரை, ஆண் தேர்வு கண்காணிப்பாளர்களாக உள்ள ஆசிரியர்கள் சோதிக்க தேவையில்லை’ என்ற உத்தரவு, ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.


ஐக்கிய ஜனதா தள தலைவர், நிதிஷ்குமார் முதல்வராக உள்ள பீஹாரில், கடந்த ஆண்டு நடந்த தேர்வில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவி, மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனைகளில், பல்வேறு மாணவர்கள், மோசடி செய்து, தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு தேர்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

’தேர்வு மையத்துக்கு கண்காணிப்பாளராக இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் தீவிரமாக சோதிக்க வேண்டும். அது தொடர்பான உறுதிமொழியையும் அவர்கள் அளிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இன்று துவங்க உள்ள, இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு தேர்வு எழுதும், 12.61 லட்சம் பேரில், 5.56 லட்சம் பேர் மாணவியர். 25 பேருக்கு ஒரு தேர்வு கண்காணிப்பாளர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள, 38 மாவட்டங்களிலும், தலா, இரண்டு முதல், நான்கு மையங்கள் மாணவியருக்காக மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

மாணவியரை சோதனை செய்வதில் தர்மசங்கடம் ஏற்படுவதுடன், தங்கள் மீது பொய் புகார்கள் தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆசிரியர்கள் கூறினர். மேலும் மாணவியர், ’பிட்’ அடித்து சிக்கினால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் உள்ளதையும் அரசுக்கு எடுத்துச் சென்றனர். 

அதைத் தொடர்ந்து, ’தேர்வு மையங்களில் கண்காணிப்பாளராக இருக்கும் ஆண் ஆசிரியர்கள், மாணவியரை சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. 

அது குறித்தும், தங்கள் உறுதிமொழியில் குறிப்பிடலாம்’ என, மாநில அரசு விலக்கு அளித்து, நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது; இது ஆண் ஆசிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதுடன், நிம்மதி பெருமூச்சையும் ஏற்படுத்தி உள்ளது.

ஓய்வு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு, ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில், திருச்செங்கோடு அண்ணாதுரை சிலை அருகில், நேற்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. 


மாவட்ட தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாநில அரசு, எட்டாவது ஊதியக்குழுவை அமைத்து, ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். 

20 ஆண்டு பணிக்காலத்திற்கு மத்திய அரசு போல மாநில அரசும் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தர வரிசையில் இடம் பெற ஆதரவு அளியுங்கள்; துணைவேந்தர்!

தேசிய தரவரிசை பட்டியலில், பெரியார் பல்கலை இடம்பெற, இணையதளம் மூலம் ஆதரவு அளியுங்கள்,” என, துணைவேந்தர் சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து, சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் பெரியார் பல்கலை மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளில், 1.50 லட்சம் பேர் படிக்கின்றனர். 

பல்கலையில், மத்திய அரசின் தேசிய தர நிர்ணய மற்றும் மதிப்பீட்டுக்குழு, 2015ல் ஆய்வு மேற்கொண்டு, ’ஏ’ கிரேடு அந்தஸ்து வழங்கியுள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை, 2016ல் வெளியிட்ட தரவரிசை பட்டியலில், பெரியார் பல்கலை, தேசிய அளவில், 46ம் இடம், மாநில அளவில், அரசு பல்கலைக்கழகங்களில், இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது. 

தற்போது, அப்பட்டியலில் மேலும் முன்னேற்றம் அடைய, பல்கலையில் படித்த மாணவ, மாணவியர், அவர்கள் பெற்றோர், பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், இப்பல்கலை குறித்து, தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதனால், http://www.nirfindia.org/perception என்ற இணையதள முகவரியில், தங்கள் மின்னஞ்சல், சுயவிபரங்களை பதிவு செய்து, பல்கலைக்கு ஆதரவு தெரிவிக்கலாம். 

இதன் மூலம், பல்கலையை, தேசிய அளவில், முதல் பத்து பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தேர்வு செய்ய வாய்ப்பாக அமையும். இன்றைக்குள் (பிப்.,15), பல்கலைக்கு ஆதரவாக ஓட்டுப்போடுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல்துறை - பசுமை தினங்கள் கொண்டாடுதல் - சுற்றுச்சூழல் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக

CPS NEWS: புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாத ஓய்வூதியம் இல்லாததால் 01.04.2003க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின் கவனத்திற்கு.....

`CPS NEWS:```

ஆளேயில்லாத கடைல டீ ஆத்துறதக் கூட பொறுத்துக்கலாம்.


ஆனா,

பால். . . டீத்தூள். . . . சுடு தண்ணீ. . . அட கிளாஸே இல்லாம டீ ஆத்துனா பொறுத்துக்க முடியுமா?

அத ஊத்தித்தரேன் குடிடானா குடிச்சுற முடியுமா?

முடியாதுல. . .

ஆனாநாம குடிப்போம்னு ஆட்சியாளர்கள் நம்புறாங்க. அதுனாலதேன் அவுக டீ ஆத்துறதா நம்பவச்சிக்கிட்டே இருக்காங்க. நாமலும் நம்பித் தொலஞ்சுக்கிட்டே இருக்கோம். . .

எப்படீங்கிறீங்களா❓

👇🏼இப்படித் தான்👇🏼

*ஓய்விற்குப் பின் சல்லிப் பைசா ஊதியமே வழங்காத* புதுமையான *ஓய்வூதியத் திட்டத்தில்*நம்மைச் சிக்க வைத்து சீரழித்து வருகின்றனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாத ஓய்வூதியம் இல்லாததால் 01.04.2003க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பின்னர்

❌ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி (ரூ.50,000) ,

❌ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (ரூ.2,00,000)

❌பணிக்கொடை,

❌தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978

ஆகியவை பொருந்தாது.


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழித் தகவல் : *திண்டுக்கல் எங்கெல்ஸ்.*

இனி 'ஆதார்' இருந்தால், 'பான் கார்டு' பெறுவது எளிது..!

ஒருவர் வங்கிகளில் ரூ.50,000 மேல் ரொக்கமாக செலுத்த,மற்றும் பெறுவதற்கும் 'பான் கார்டு' எண் குறிப்பிடவேண்டும். ரூ.2,00,000-
த்துக்கு மேல் எந்தவொரு பொருள் வாங்கும்போதும் 'பான் கார்டு' எண்ணை சொல்லவேண்டும்.
இந்நிலையில் ஒருவரிடம் 'ஆதார் கார்டு' எண் இருந்தால், அந்த ஆதாரில் இருக்கும் அடிப்படை விவரங்களின் அடிப்படையில், ஒரு சில நொடிகளில் வேண்டுவோருக்கு 'பான் கார்டு' வழங்க வருமான வரித்துறை தீர்மானித்து உள்ளது. இதன் மூலம் எளிதில் வருமான வரியை ஒருவர் கட்ட இயலும். பான் கார்டு பெறுவதில் இருக்கும் காலதாமதம் குறைக்கப்படும் என மத்திய வருவாய்த்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவை ஒரு சில மாதங்களில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

15/2/17

முதல் முறையாக வீடு வாங்க போகிறீர்களா? 20 வருடக் கடன் தவணையில் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம்!!!

உங்களுடைய மாத வருமானம் 18 லட்சம் ரூபாயாக உள்ளதா, வீடு வங்க கடன் பெறும் போது வட்டியில் இருந்து நீங்கள் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம். இப்போது இருக்கும் திட்டத்தின் படி 6 லட்சம் வரை யாருக்கெல்லாம் வருமான இருக்கின்றதோ அவர்களுக்கு மட்டும் தான் அந்தச் சலுகை இருந்து வந்தது.

இப்போது மத்திய அரசு ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்குவிக்கவும், 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு என்னும் திட்டத்தின் கீழும் புதிதாக இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளனர்.


தவனைக் காலம் அதிகரிப்பு
இந்தப் புதிய திட்டங்களினால் ஏற்கனவே வீட்டுக் கடன் தவனைச் செலுத்துவதற்கான வரம்பாக இருந்த 15 வருடத்தை 20 வருடம் வரை உயர்த்தியும் அறிவித்துள்ளனர்.

புதிய திட்டங்கள்
2016 டிசம்பர் 31-ம் தேதி பிரதமர் மோடி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்தார். ஆனால் அப்போது அதில் முழுமையான விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இப்போது அந்தத் திட்டத்திற்கான நன்மைகள் வகுக்கப்பட்டு வெளியாகியுள்ளது.
வீடு வாங்க நினைப்பவர்கள் அவர்கள் பெறும் வருமானத்தைப் பொருத்து வெவ்வேறு விதமான அளவீடுகளில் மானியம் பெற இயலும்.

6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள்
ஆண்டிற்கு 6 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள் மானியமாக 6.5 சதவீதம் வரை மானியம் பெற இயலும். அதாவது நீங்கள் கடனாகப் பெற்ற தொகை 10 லட்சம் என்றும் அதற்கு வட்டி 9 சதவீதம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 6 லட்சம் ரூபாய்க்கு 2.5 சதவீதம் மட்டும் வட்டி செலுத்தினால் போதும், மீதத் தொகையான 4 லட்சம் ரூபாய்க்கு 9 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.

12 லட்சம் வரை வருமான உள்ளவர்கள்
ஆண்டு வருமான 12 லட்சம் ரூபாயாக உள்ளவர்கள் 9 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு 4 சதவீதம் வரை மானியம் பெற முடியும். நீங்கள் கடனாகப் பெற்ற தொகை 15 லட்சம் என்றும் அதற்கு வட்டி 9 சதவீதம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 9 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் மட்டும் வட்டி செலுத்தினால் போதும், மீதத் தொகையான 6 லட்சம் ரூபாய்க்கு 9 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.

18 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்கள்
18 லட்சம் ரூபாய் வரை மாத வருமான உள்ளவர்கள் 12 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு 3 சதவீதம் வரை வட்டி செலுத்தினால் போதும். இதுவே 12 லட்சத்திற்கும் அதிகமாகக் கடன் பெறும் போது மீதத் தொகைக்கு எவ்வளவு சதவீத வட்டி விகிதத்தில் கடன் வாங்குகின்றீர்களோ அதைச் செலுத்த வேண்டும்.

மொத்த நன்மை
மேலே கூறிய மூன்று திட்டங்களிலும் 20 வருட தவணையாகக் கடன் செலுத்தும் போது 9 சதவீதம் வட்டி விகிதம் என்றால் 2.4 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம்.

வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை விட சிறு சேமிப்பு திட்டங்கள் அதிக லாபம் அளிக்கின்றன

வங்கிகளின் வைப்பு நிதி திட்டங்களில் வட்டி விகிதம் குறைந்து வந்தாலும் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் குறையாமல் அதிகமாகவே உள்ளது. அது மட்டும் இல்லாமல் சிறு சேமிப்புத் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளை அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய 2012-ம் ஆண்டு முடிவு செய்தது. அது மட்டும் இல்லாமல் 2016 ஏப்ரல் முதல் ஒவ்வொரு காலாண்டிற்கும் சிறு சேமிப்பு கணக்குகளின் வட்டியை அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது.


இருப்பினும் 2016 ஏப்ரல் மாதமும் வரை 65 முதல் 100 தசம புள்ளிகள் அதாவது .65 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை பத்திரங்களின் லாபம் குறைந்த போதிலும் சிறு சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் குறைக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

எனவே இங்கு நாம் வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை விட அதிக லாபம் அளிக்கும் சிறு சேமிப்புத் திட்டங்கள் திட்டங்கள் எவை மற்றும் வட்டி விகிதம் எவ்வளவு என்பதை இங்குப் பார்ப்போம்.

பரிந்துரைக்கப்பட்ட விகிதத்தை விட அதிக வட்டி
சிறு சேமிப்புத் திட்டங்களைப் பொருத்த வரை மத்திய அரசு பரிந்துரைத்ததை விட அதிகபட்ச வட்டியே அளிக்கப்படுகின்றது. ஆனால் வங்கிகளில் அப்படி இல்லாமல் குறைத்துள்ளன.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF - பிபிஎப்)
பொது வருங்கால வைப்பு நிதி திட்டங்களுக்கு 7.4 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை வட்டி விகிதம் பரிந்துரைத்த போதிலும் 8 சதவீதம் வரை லாபம் அளிக்கப்படுகின்றது. ஆனால் வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் 6.5 சதவீதம் மட்டுமே வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது

மூத்த குடிமக்கள் 'சேமிப்புத் திட்டம்
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்திற்கு அரசு 8.1 சதவீதம் முதல் 8.2 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்கப்பட்டு இருந்தாலும் 8.5 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படுகின்றது. இதுவே வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் 6.5 முதல் 7 சதவீதம் வரை மட்டுமே வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது.

5-வருட தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம்
என்எஸ்சி எனப்படும் 5-வருட தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீடு அரசு 7.3 சதவீதம் முதல் 7.4 சதவீதம் வரை மட்டுமே வட்டி விகிதம் அளிக்க வேண்டும் என்று இருந்தாலும் 8 சதவீதம் வரை லாபம் அளிக்கப்படுகின்றது. ஆனால் வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் 6.5 சதவீதம் மட்டுமே வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது.

5 வருட டெர்ம் டெபாசிட்
ஐந்து வருட டெர்ம் டெபாசிட் திட்டங்களுக்கு அரசு 7.3 சதவீதம் முதல் 7.4 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்க வேண்டு பரிந்துரைத்துள்ளது. ஆனால் 7.8 சதவீதம் வரை வட்டி விகிதம் லாபமாக அளிக்கப்படுகின்றது. ஆனால் வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் 6.5 சதவீதம் மட்டுமே வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது.

1 வருட டெர்ம் டெபாசிட்
ஒரு வருட டெர்ம் டெபாசிட் கணக்குகளுக்கு 7 முதல் 7.1 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது, அதற்கு ஏற்றவாறே 7 சதவீதம் வட்டி விகித லாபம் அளிக்கப்படுகின்றது. ஆனால் வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் 6.5 சதவீதம் மட்டுமே வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 20க்குள் 'ஹால் டிக்கெட்'

பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 20க்குள் ஹால் டிக்கெட் வழங்கி, படிப்பு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 2ல் நடக்கிறது. அதனால், மாணவர்களுக்கு, பிப்., 20க்குள், ஹால் டிக்கெட்டுகளை வழங்கும்படி, அரசு தேர்வுத் துறையும், பள்ளிக்கல்வித் துறையும், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

தேர்வுத் துறையின், http://www.tndge.in/ என்ற இணையதளம் மூலம், கடந்த, 7 முதல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, அனைத்து பள்ளிகளும், தங்கள் மாணவர்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, பிப்., 20க்குள் அவர்களிடம் வழங்க வேண்டும். தொடர்ந்து, தேர்வுக்கு தயாராவதற்கு, அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கு ’கோல்டன்’ வாய்ப்பு கிடைக்குமா!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 25வது பட்டமளிப்பு விழாவையொட்டி, செமஸ்டர் தேர்வுகளில் தோல்வியடைந்த அனைவருக்கும் ஒரு ’கோல்டன்’ வாய்ப்பினை அளிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


புதுச்சேரி பல்கலைக்கழகம் பாடத்திட்டங்களை வகுத்து, தனது இணைப்பு கல்லுாரிகளுக்கு செமஸ்டர் முறையில் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

பொதுவாக எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் 5 ஆண்டிற்குள் ளும், இன்ஜினியரிங் மாணவர் கள் 4 ஆண்டிலும், கலை அறிவி யல் மாணவர்கள் 3 ஆண்டிலும் படிப்பினை முடிக்க வேண்டும்.

படிப்பில் பின் தங்கிய மாணவர்கள் குறிப்பிட்ட ஆண்டிற்குள் முடிப்பதில்லை. இவர்கள் தோல்வியடைந்த பாடங்களில் வெற்றிபெற அடுத்தடுத்த சில வாய்ப்புகள் தரப்படுகின்றன. ஆனாலும் ஒரு சில மாணவர்கள் படிப்பை முழுமையாக முடிப்பதில்லை.

இது போன்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் தற்போது முழுவதுமாக வாய்ப்பு கதவை மூடிவிட்டது. தோல்வியடைந்த பாடங்களை எழுத வாய்ப்பு அளிப்பதில்லை.

2003ம் ஆண்டு முதல் பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கு முந்தைய மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு எழுதும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

திருப்புமுனை

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 300 சதவீத வளர்ச்சிக்கு வித்திட்ட துணைவேந்தர் தரீன் பதவி காலத்திலும் இதுபோன்ற பிரச்னை தலை துாக்கியது. அப்போது அகடமி கவுன்சிலை கூட்டி கருத்தினை கேட்ட துணைவேந்தர், புதுச்சேரி பல்கலைக்கழகம் ஆரம்பித்த காலத்தில் இருந்து படித்த மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதும் வகையில் ஒரு ’கோல்டன்’ வாய்ப்பினை அளித்தார்.

இதனை கெட்டியாக பிடித்துக்கொண்ட 7,500க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் புது பாடத்திட்டத்தின் படி தேர்வு எழுதி, படிப்பினை முடித்து பட்டம் பெற்றனர். வேலையில் இருந்தவர்களுக்கு இது அடுத்த கட்டத்திற்கு செல்ல பிரகாசமான வழியினை ஏற்படுத்தி கொடுத்தது.

அதுபோன்ற ஒரு ’கோல்டன்’ வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா என, தற்போது ஆயிரக்கணக்கானோர் எதிர்நோக்கியுள்ளனர். பலர் மனு கொடுத்த போதும் இது குறித்து முடிவை அறிவிக்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் மவுனம் சாதித்து வருகிறது.

எந்த வித கல்வி சூழலும் இல்லாமல் கிராமப்புறங்களில் இருந்து முதல் தலைமுறையாக படிக்க வந்துள்ள மாணவர்கள் ஓரிரு பாடங்களில் தோல்வி அடைவது இயல்பு.அதற்காக அவர்களுக்கு போதிய வாய்ப்புகள் தராமல் முழுமையாக மறுப்பது, பல ஆயிரக் கணக்கானவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிடும்.

புதுச்சேரி பல்கலைக்கழகத் தின் 25வது பட்டமளிப்பு விழா விரைவில் வர உள்ளது. இதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், புதுச்சேரி பல்கலைக்கழகம் ஆரம்பித்த காலத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கு மீண் டும் ஒரு ’பொன்னான’ வாய்ப்பு அளிக்க அகடமி கவுன்சிலை அவசரமாக கூட்டி பல்கலைக்கழக துணைவேந்தர் முடிவெடுக்க வேண்டும்.

இந்த ’கோல்டன்’ வாய்ப்பு, பல ஆயிரம் மருத்துவர்கள், இன்ஜியர்கள், கலை அறிவியல் மாணவர்கள் பலருக்கும் வாழ்வில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்துவதோடு, உயர் கல்வி வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும்.

நிதி நெருக்கடி வருமா?

புதுச்சேரி பல்கலைக்கழகம் 1985ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆண்டில் இருந்தே இந்த கடைசி வாய்ப்பினை அளிக்கலாம். புது பாட திட்டத்தின் படியே இவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்பதால் புதிதாக எந்த செலவும் இருக்கபோவதில்லை.

10ம் வகுப்புக்கு அகழாய்வு குறித்த பாடம்!

பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள, தற்கால தொல்லியல் ஆய்வுகள் என்ற பாடத்தை, தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு அழைத்து சென்று விளக்கினால், கடந்த கால வரலாற்றின் முக்கியத்துவம் குறித்து, மாணவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.


பள்ளி மாணவர்கள் மத்தியில், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், நினைவுச்சின்னங்கள், பழங்கால மக்களின் வாழ்க்கை முறை குறித்து, எடுத்துரைக்கும் நோக்கில், பல்வேறு தலைப்புகளில், பாடத்திட்ட கருத்துகள் இடம்பெற்றுள்ளன. 

பத்தாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், தற்காலக தொல்லியல் ஆய்வுகள் குறித்த, துணைப்பாடம் உள்ளது. இதில், கல்வெட்டுகள், பழங்கால நாணயங்கள், செப்பேடுகள், கட்டடங்களின் தன்மை குறித்த, பல்வேறு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, தர்மபுரி, கரூர், மதுரை மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட, தங்கம், வெள்ளி, இரும்பு உலோகத்தால் ஆன காசுகள், அதில் பொறிக்கப்பட்ட சின்னங்கள் குறித்த, சுவாரஸ்யமான வரலாற்று நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இப்பாடத்தில் இருந்து, ஐந்து மதிப்பெண்களுக்கு, அகழாய்வு குறித்த தலைப்புகளில், கேள்வி இடம்பெறும். இதில், மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெறுவதோடு, தொல்லியல் துறையின் பணிகள், அகழாய்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்க, அருங்காட்சியகத்திற்கு அழைத்து சென்று, விளக்க வேண்டியது அவசியம். இதன்மூலம், பாடத்திட்டம் சாராத பல்வேறு, கூடுதல் தகவல்களை, மாணவர்கள் அறிந்து கொள்வர்.

கோவை மாவட்டத்தில், ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் ரோட்டில், தொல்லியல் துறையின் அருங்காட்சியகமும், வ.உ.சி., பூங்கா எதிரே, அருங்காட்சியத்துறையின் அருங்காட்சியமும் உள்ளன. இங்கு, ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களை, கல்வி சுற்றுலா அழைத்து செல்ல, அதிகாரிகள் உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து, தொல்லியல் ஆர்வலர்கள் கூறியதாவது:

பல்வேறு பரிணாமங்களை கடந்து தான், நாகரிக உலகம் உருவெடுத்துள்ளது. கால்நடை வளர்ப்பு, விவசாயத்தில் காலுான்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், பழங்கால வர்த்தக பரிமாற்றம், வெளிநாட்டினரின் படையெடுப்பு, நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, தொழில், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள், ஆவணப்படுத்துவது அவசியம்.

இப்பணியை, தொல்லியல் துறை அகழாய்வு மூலம் மேற்கொண்டு வருகிறது. இதை மாணவர்களுக்கு வெறுமனே எடுத்துக்கூறுவதை விட, அருங்காட்சியத்திற்கு அழைத்து சென்று, பாடம் நடத்தலாம். 

இதன்மூலம், கோவை மாவட்டத்தின் சிறப்புகள், தொல்லியல் அகழாய்வு நடந்த இடங்கள், கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், அதன் பயன் குறித்து, பல்வேறு தகவல்களை அறிந்து கொள்வர். 

எதிர்காலத்தில், தொல்லியல் துறை படிக்க விரும்பும் மாணவர்களின் கனவுக்கும், விதை போட்டது போலாகிவிடும். இதை, பள்ளிகளில் நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் முன்வரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொதுத்தேர்வு ஆசிரியர் பணியிடம்; குலுக்கல் முறையில் நியமனம்

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை, குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகளின் போது, கண்காணிப்பு பணியில் ஆசிரியர்களை நியமிப்பதில் முறைகேடு நடக்கிறது. இதனால் தேர்வு மையங்களில் ஆள் மாறாட்டம், காப்பி அடித்தலுக்கு, அவர்கள் துணை போகின்றனர் என்ற குற்றச்சாட்டு, சமீப காலமாக வலுத்துள்ளது. 


ஒரு சில மையங்களுக்கு, ஒரே ஆசிரியர்கள் திரும்பத்திரும்ப செல்கின்றனர். எனவே, பொதுத்தேர்வு ஆசிரியர் நியமன முறையை, மாற்ற வேண்டும் என்று, ஆசிரியர்கள் மற்றும் சங்கங்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. 

இந்நிலையில் நடப்பாண்டில், பொதுத்தேர்வு மையத்துக்கான, ஆசிரியர் நியமனத்தில், குலுக்கல் முறையை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற விருப்பமுள்ள, தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அது ஏற்கப்பட்ட பின், பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்படும். அதன்பின் கலெக்டர், கல்வித்துறை இணை இயக்குனர், ஆசிரியர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில், தேர்வு மைய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். 

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், இதற்கான குலுக்கல் நடைபெறும். ஒவ்வொரு தேர்வுக்கும், குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு முன்பே, தேர்வு மையம் குறித்து தகவல் தெரிவிக்கப்படும். முறைகேடு புகாருக்கு ஆளான தேர்வு மையங்களில், முழுமையாக வீடியோ செய்யப்படும்.

10ம் வகுப்பு தேர்வுக்கு 'தத்கல்' தேதி அறிவிப்பு

நாளை முதல், இரண்டு நாட்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி செய்திக் குறிப்பு: நடப்பாண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத, தனித்தேர்வர்கள், நாளை முதல் இரு நாட்கள், 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வுத் துறை சேவை மையங்கள் மற்றும் தேர்வு விபரங்கள் இடம் பெற்றுஉள்ளன.மாவட்ட கல்வி அலுவலகங்கள், மண்டல துணை இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றிலும், விபரங்களை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசில் புதிதாக 2 லட்சத்து 83 ஆயிரம் பணி இடங்கள் உருவாக்கப்படும்

பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அவை வருமாறு:


* அடுத்த ஆண்டுக்குள் மத்திய அரசில் புதிதாக 2 லட்சத்து 83 ஆயிரம் பணி இடங்கள் உருவாக்கப்படும். இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 67 ஆயிரம் ஆக உயரும்.

* மத்திய உள்துறை அமைச்சகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 76 பேர் சேர்க்கப்படுவர். அதன்பின்னர் உள்துறை அமைச்சக பணியாளர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 778 ஆக அதிகரிக்கும்.

* போலீஸ் துறையில் 1 லட்சத்து 6 ஆயிரம் பேர் புதிதாக இணைவர். அதன்பின்னர் இந்த துறையில் பணியாளர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 13 ஆயிரத்து 689 ஆகிவிடும்.

* வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் 2 ஆயிரத்து 109 பேர் பணி அமர்த்தப்படுவார்கள்.

* புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவு துறையில் 2 ஆயிரத்து 27 பேர் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

இந்த தகவல்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

ஏப்ரல் 1 முதல் புதிய ரேஷன் கார்டு பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

வேலூர்- தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் இலவச
அரிசி, மானிய விலையில் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனடையவும், அரசின் பல்வேறு
சலுகைகளை பெறவும் ரேஷன் கார்டு மிகவும் அவசியமாகிறது. புதிய ரேஷன் கார்டு வேண்டுபவர்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

 இந்த விண்ணப்பத்தின் மீது ஆர்டிஓ மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலகம் மூலம் விசாரணை நடைபெறும். அதன்பிறகு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எல்காட் நிறுவனத்தில் ரேஷன் கார்டு அச்சடித்து விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படும். விண்ணப்பம் கொடுத்த 60 நாட்களுக்குள் கார்டு வழங்கவேண்டும் என்பது விதி.
ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் குறித்த காலத்தில் ரேஷன் கார்டு வழங்குவதில்லை என புகார்கள் உள்ளன.
இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க வரும் ஏப்ரல் 1ம்தேதி முதல் அனைத்து இசேவை மையங்களிலும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கலாம். மேலும் முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவைகளும் செய்யலாம்.

இந்தசேவைக்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் முதல் தாலுகா அலுவலகத்திற்கு சென்று ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கவேண்டிய அவசியம் இருக்காது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும். இதுகுறித்த தகவல்களை இசேவை மைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

திரைப்படத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் நிற்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

திரைப்படம், செய்திப்படம் அல்லது ஆவணப்படம் ஆகியவற்றில்
தேசிய கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
நாடுமுழுவதிலுமுள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படங்களை திரையிடுவதற்கு முன் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திரைப்படம், செய்திப்படம் அல்லது ஆவணப்படம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை. எனினும், இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டியது அவசியம். இதுதொடர்பான அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

EMIS - தற்போதைக்கு கீழே உள்ள url ஐ பயன்படுத்தவும்

தற்போதைக்கு கீழே உள்ள url ஐ பயன்படுத்தவும்
http://emis.tnschools.gov.in/accounts/login/?next=/

இதற்கு முன் பயன்படுத்திய url ல் https என இருக்கும்..
தற்போதைக்கு http மட்டும் பயன்படுத்தவும்

GO 54 dt. 29.02.2016 Guidelines to be adopted for Scribe appointment for Public examinations