யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/10/15

அண்ணா பல்கலையின் இறுதியாண்டு இன்ஜி கேம்பஸ் இன்டர்வியூல் 1,200 பேருக்கு வேலை

அண்ணா பல்கலையின் இறுதியாண்டு இன்ஜி.மாணவர்கள், 1,200 பேருக்குகேம்பஸ் இன்டர்வியூ என்ற வளாக நேர்காணல் மூலம்ஐ.டி.நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

 முதற்கட்ட நேர்காணல்கடந்த மாதம் நடந்தது. இதில், 400 பேருக்குஆண்டுக்கு, 4.5 லட்சம் ரூபாய் முதல், 25 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டாம் கட்ட நேர்காணல், 1ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடந்தது. அசெஞ்சர்காக்னிசன்ட்ஐ.பி.எம்.,இன்போசிஸ்டி.சி.எஸ்.ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம், 2,122 காலியிடங்களுக்கு நடந்த நேர்காணலுக்கு, 1,500 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். 1,200 பேருக்குஆண்டுக்கு, 3.5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

இதுகுறித்துபல்கலை துணைவேந்தர் ராஜாராம் கூறுகையில்பெரிய நிறுவனங்கள் மூலம் தமிழகம் முழுவதுமுள்ள அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில்டிசம்பரில்கேம்பஸ் இன்டர்வியூ நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்என்றார்.


பல்கலை மற்றும் தொழில் நிறுவன இணைப்பு மைய இயக்குனர் பேராசிரியர் தியாகராஜன் கூறுகையில்மூன்றாம் கட்ட நேர்காணல்விரைவில் நடத்தப்படும். இதில், 500 பேருக்கு வேலை கிடைக்கும்,என்றார். வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்குபல்கலை மூலம் நியமன கடிதம் வழங்கப்படும். படிப்பு முடிந்ததும்மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு காத்திருக்காமல்நேரடியாக வேலையில் சேரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக