புதுச்சேரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வுபெற்று தேர்ச்சி பெற்ற 211 பேரின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என கல்வித்துறை இயக்குநர் ல.குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பள்ளிக் கல்வித்
துறை சார்பில் கடந்த 26.5.15ஆம் ஆண்டில் 425 தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்,மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டது.இதை எதிர்த்து உயர்நீதிமன்றம், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில்சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் கடந்த 10.7.15-ல் ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களை நிலுவையில் வைக்க உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.இதன் பின்னர் அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவின்படி தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேலும் பெற்ற 214 பேரின் முடிவுகள் கடந்த 25.9.15-ல் வெளியிடப்பட்டன.இதனிடையே கடந்த 9.10.15-ல் சென்னை உயர்நீதிமன்றம் தான் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீக்கியது.இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்று தேர்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 211 பேரின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இம்முடிவுகளை இணையதளத்தில் காணலாம்.மேலும் 211 பேரின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 19.10.15, 20.10.15 தேதிகளில் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி நடைபெறும் என்றார் குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக