யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/11/15

தமிழகம், புதுச்சேரியில் கனமழை; பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகம் மற்றும் பதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்துவருகிறது. 


சென்னையிலிருந்து 300 கிலோமீட்டருக்கு தொலைவில், இலங்கைக்கு அருகே நிலைகொண்டுள்ள இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 12 மணிநேரத்திற்குள், தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 25 செ.மீ. அளவிற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்குள் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று மண்டல ஆய்வு வானிலை மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்:

தென்மேற்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வுநிலையின் காரணமாக அடுத்த 24 மணி நேரங்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தில் மழையளவு 35 சதவீதமாக உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.சென்னையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு:தென்மேற்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்துவருகிறது. சென்னை உட்பட மாநிலத்தின் பலபகுதிகளில் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு பகுதிகளில் மீட்புபணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. இதற்காக, ஆந்திராவிலிருந்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் 140 பேர் சென்னை வந்துள்ளனர். இவர்கள், சென்னை, விழுப்புரம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளில் ஈடுபட உள்ளனர்.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:
கனமழை காரணமாக
01.திருச்சி
02.நாமக்கல்
03.விழுப்புரம்
04.திருவண்ணாமலை
05.கடலூர்
06.நாகப்பட்டினம
்07.காஞ்சிபுரம
்08.கன்னியாகுமரி
09. வேலூர
்10.சென்னை11. திருவள்ளூர
்12.திருவாரூர
்13. புதுக்கோட்டைமாவட்டங்களில் நாளை (16ம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம்மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

01.தர்மபுரி
02.பெரம்பலூர்
03.கரூர்
04.அரியலூர
்05.தஞ்சாவூர
்06.நீலகிரி
07.கிருஷ்ணகிரி
08.சேலம்
09. ஈரோடு
10. திருப்பூர்
மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் 34 நிவாரண மையங்கள்:

தென் மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள புயல் காரணமாக , ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி வருகிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கு 34 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு, அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் விஜயகுமார் தெரிவித்தார் . இந்த முகாம்களை அமைச்சர் சுந்தர்ராஜன் பார்வையிட்டார்.

விமான சேவை பாதிப்பு:

சென்னையில் பெய்து வரும் மழையால் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கிருந்து கோவை வரும் விமானம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதே போல் கோவை - சென்னை விமானமும் பறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் நாளை விடுமுறை:

வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்துவருகிறது. இதன்காரணமாக, மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (16ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக