சென்னை மாவட்ட கலெக்டர் அழகுமீனா (கூடுதல் பொறுப்பு) வெளியிட்ட செய்தி குறிப்பு: சென்னை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் விடுதிகளில் காலியாக உள்ள ஆண் மற்றும் பெண் சமையலர் பணியிடங்கள் (ஊதிய விகிதம் 4800-10,000 + தர ஊதியம் ரூ.1300) நேர்காணல் மூலம் நிரப்பப்பட உள்ளது.
சென்னை மாவட்டத்தில் வசிக்கும், 18 முதல் 35 வயதிற்குட்பட்ட, சைவ, அசைவ உணவு சமைக்க தெரிந்த, தமிழில் எழுதப்படிக்க தெரிந்த ஆதிதிராவிடர், அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர்கள் விண்ணப்பிக்கலாம்.தகுதி உள்ளவர்கள் தங்கள் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், பாலினம், பிறந்த தேதி, அஞ்சல் முகவரி, கல்வித்தகுதி, சாதி, முன்னுரிமை விவரம் (மாற்றுத்திறனாளி, விதவை, முன்னாள் ராணுவத்தினர், கலப்பு திருமணம், மொழிப்போர் தியாகி போன்றவைகள்) வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பின் அதன் பதிவு எண், குடும்ப அட்டை எண், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், இருப்பிடச்சான்று ஆகிய விவரங்கள் மற்றும் உரிய சான்றிதழ் நகல்களுடன், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம், 2 வது தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரில் அணுக வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக