யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/9/16

உள்ளாட்சி தேர்தல் அதிகாரிகள் நியமனம் : கலெக்டர்களுக்கு கமிஷன் 10 கட்டளை




உள்ளாட்சி தேர்தல் பணியாளர் மற்றும் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுக்கு, 10 கட்டளைகளை, மாநில தேர்தல் கமிஷன் பிறப்பித்து உள்ளது.தமிழகத்தில், அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது.  
இத்தேர்தலில், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், ஓட்டுப்பதிவு அலுவலர்கள், ஓட்டு எண்ணும் அலுவலர்கள் நியமனம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, கலெக்டர்களுக்கு, 10 கட்டளைகளை, மாநில தேர்தல் கமிஷன்பிறப்பித்து உள்ளது.அதன் விபரம் வருமாறு:  

ஓட்டுச்சாவடி அலுவலராக நியமிக்கப்படுபவர், எந்த காரணத்தை கொண்டும் அந்த உள்ளாட்சியை சேர்ந்தவராக இருக்கக் கூடாதுதேர்தல் பணிக்கு அமர்த்தப்படுபவர்கள், அவர்கள் பணிபுரியும் அல்லது வசிக்கும் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது  

மாநகராட்சி பகுதியில், ஒரு மண்டலத்தில் பணி புரிபவர்கள் அல்லது வசிப்பவர்கள், அந்த மண்டலத்திற்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளை தவிர்த்து, மற்ற மண்டல ஓட்டுச்சாவடிகளில் மட்டுமே பணிபுரிய அனுமதிக்க வேண்டும்  

ஊராட்சி செயலர்கள் அல்லது ஊராட்சி பணியாளர்களை, அவர்கள் பணிபுரியும் இடத்திலோ அல்லது வசிக்கும் இடத்திலோ, ஓட்டுப்பதிவுஅலுவலர்களாகவோ, ஓட்டு எண்ணும் அலுவலர்களாக வோ நியமிக்கக் கூடாது  

ஏதாவது, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது வேட்பாளரின் சார்புடையவர் மற்றும் முந்தைய தேர்தல்களில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களை, ஓட்டுச்சாவடி அலுவலர்களாக தேர்வு செய்யக் கூடாதுஓட்டுச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர், அப்பகுதியில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் உறவினர் எனதெரியவரும் பட்சத்தில், கண்டிப்பாக அவரை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்  

ஓட்டுப்பதிவு அலுவலர்களை நியமனம் செய்வதில், கூடுமானவரை போலீஸ், மருத்துவம், மின்சாரம், குடிநீர் வழங்கல், பால் பண்ணை போன்ற துறைகளின் அலுவலர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும்  

பெண் வாக்காளர்கள், அதிக எண்ணிக்கையில் உள்ள ஓட்டுச்சாவடி அல்லது பர்தா அணிந்த இஸ்லாமிய பெண் வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகளில், ஒன்று அல்லது இரண்டு பெண் அலுவலர்கள் நியமனம் செய்ய வேண்டும்  

ஓட்டுப்பதிவு அலுவலர் கள், ஒரு வேட்பாளர் அல்லது ஒரு கட்சிக்கு சாதகமாக அல்லது பாதகமாக செயல்படுவதை தவிர்க்கும் வகையில், ஒரு ஓட்டுச்சாவடியில், வெவ்வேறு துறைகளை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும்  

தேர்தல் விதிகளின்படி, உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள், மாநில அல்லது மத்திய அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிவோரை, தேர்தல் அலுவலர்களாக நியமிக்க வேண்டும்.  

இவ்வாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக