பள்ளி மாணவர்களிடம் குறைந்து வரும் மேடை நாடகங்களின் ஈடுபாட்டை அதிகரிக்க கல்வித்துறை தீவிர முயற்சி எடுக்க வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெளிவான தமிழ் உச்சரிப்பு, கம்பீரமான நடை உடை, கதாபாத்திரத்திற்கேற்ப முக பாவனைகள், என அனைத்தையும் ஒருசேர கொண்டு வருவது மேடை நாடகங்கள்தான்.
அத்தகைய நாடகங்களை, பள்ளி குழந்தைகளிடம் இன்று பெரிதும் காணமுடிவதில்லை. கலை இலக்கிய போட்டிகள் என்றாலே, பாட்டு, பேச்சு, கட்டுரை, நடனம் என அதோடு முடித்துக்கொள்கின்றனர்.
இதை தவிர்க்க, கடந்தாண்டு திருப்பூர் மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. அதில், பள்ளியிலுள்ள ஓவியம், தையல் உள்ளிட்ட பாடப்பிரிவு கலை ஆசிரியர்களை இதன் பொறுப்பாளராக நியமித்து மாணவர்களுக்கு நாடகங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.
மேடை நாடகங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வியறிவின் முக்கியத்துவம், நாட்டுபற்று, சுகாதாரம் உள்ளிட்ட கருத்துகளை மையமாகக்கொண்டு மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், பொது அறிவையும், சமூக பிரச்னைகளை விளக்கும் வகையிலும் நாடகங்கள் இருத்தல் அவசியம்.
ஓரங்க நாடகங்கள், காப்பியங்களிலிருந்து ஒரு பகுதியை மையமாகக் கொண்டும் இருக்கலாம். நாடகங்களில், முகபாவனைகளுடனும், தெளிவான உச்சரிப்புகளுடன் நடிப்பதற்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நன்றாக பயிற்சியளிக்க வேண்டும்.
இவ்வாறு, கல்வித்துறையினர் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தினர். இருப்பினும், நடப்பாண்டிலும், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஓரு சில பள்ளிகள் மட்டுமே, நாடகங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, ஒவ்வொரு விழாக்களிலும், பல்வேறு நிகழ்வுகளின் போதும் பின்பற்றி வருகின்றனர்.
நடுநிலைப்பள்ளிகளில் நாடகங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் வந்தவுடன் அப்படியே முடங்குகிறது. இதனால், அந்த மாணவர்களின் கலைத்திறனும் மேம்படுவதில்லை. ஈடுபாடில்லாமை ஒருபக்கம் இருக்க, மறுபக்கம், ஆசிரியர்களுக்கு நாடகங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்பதும் வெளிப்படுகிறது.
இதனால், மாணவர்களுக்கு முழுமையான பயிற்சியளிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், ஆசிரியர்கள், நாடகக் கதாபாத்திரங்களாக மாறி, நடித்து பயிற்சியளிக்கின்றனர்.
ஆனால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இத்தகைய செயல்பாடு பின்பற்றப் படுவதில்லை. அப்படியே நாடகங்கள் நடத்தினாலும், வெறும் வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கின்றனர். நாடகங்களின் மூலம், மாணவர்களின் ஆளுமைத்திறன், கலைத்திறன், கற்பனைத்திறன் என அனைத்துமே மேம்படுகிறது.
தன்னம்பிக்கை ஏற்படுத்துவதோடு, தமிழ் உச்சரிப்புகளை நேர்த்தியாக பேசவும் நாடங்கள் மட்டுமே முழுமையாக உதவுகிறது. எனவே, முழு ஈடுபாட்டுடன், நாடகங்களை நடத்தி, மாணவர்களின் உச்சரிப்பை மேம்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக