விரைவில்.. ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் எடுத்து செல்ல வேண்டியதில்லை....
எல்லாமே டிஜிட்டல் மயமாகி வரும் இணைய யுகத்தில், சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, இனி கையில் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அவற்றை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்து பாதுகாப்பதுடன், டிஜிட்டல் வடிவிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான வசதியை அளிக்கிறது, மத்திய அரசின், ‘டிஜிட்டல் லாக்கர்’ திட்டம். இதற்கென, digitallocker.gov.in என்ற தனி இணையதள முகவரி உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு டிஜி லாக்கர் பிளஸ் என்ற புதிய சிஸ்டத்தை விரைவில் கொண்டுவரவுள்ளது. இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஒரிஜினல் வாகன சான்றிதழ்களை செல்லும் இடங்களுக்கு எல்லாம் எடுத்து செல்ல வேண்டியதில்லை. டிஜி லாக்கர் பிளஸ்ஸில் உங்களது டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் மற்றும் வாகன சான்றிதழ்களை ஸ்கேன் செய்து நகலெடுத்து சேமித்து வைத்துக்கொள்ளலாம் ஆதார் எண் மற்றும் உங்கள் போன் நம்பர் மூலம் இந்த டிஜி லாக்கள் பிளஸ்ஸில் கணக்கை துவங்கலாம்.
டிஜி லாக்கர் பிளஸ் அப்பை உங்கள் ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்து கொண்டு உங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்.போலீஸ் அதிகாரிகள் இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும் எளிதாக உங்களது சான்றிதழ்களை சரிபார்க்க முடியும். மேலும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு எந்த இடத்திலிருந்தும் போலீஸ் அதிகாரிகள் அபராதம் விதிக்க முடியும். டிஜி லாக்கர் பிளஸ் சிஸ்டம் முதற்கட்டமாக டெல்லி மற்றும் தெலங்கானா மாநிலத்தில் அறிமுகமாகிறது. அதன்பிறகு படிப்படியாக நாடு முழுவதும் அறிமுகமாகவுள்ளது. டிஜி லாக்கர் பிளஸ் சிஸ்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்றும் ,போலீஸார் லஞ்சம் வாங்குதை கட்டுப்படுத்த முடியும் என்றும் அதிகாரிகள் கூறினர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக