யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/9/16

ஆசிரியர்களை ஏணிப்படிகள் என்பார்கள். ஆசிரியர்கள் ஏணிப்படிகள் மட்டுமல்லர்; அவர்கள் கோபுர கலசங்களாகவும் உயர்ந்திட முடியும்-கலைஞர்

ஆசிரியர்களைஏணிப்படிகள் என்பார்கள். ஆசிரியர்கள் ஏணிப்படிகள் மட்டுமல்லர்; அவர்கள் கோபுர கலசங்களாகவும்உயர்ந்திட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர்டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன். அவர்ஆசிரியப் பணிபுரிந்து, அறிவாற்றலால் உயர்ந்து, தம் சான்றாண்மைக் குணங்களால்சிறந்து, குடியரசுத் தலைவராக விளங்கிப்
புகழ்படைத்தவர்! அவர் பிறந்த நாள்- செப்டம்பர் 5ஆம் நாள், “ஆசிரியர்தினம்” என ஆண்டுதோறும் எழுச்சியுடன்கொண்டாடப்படுகிறது.
இந்நன்னாளில்வருங்காலத் தலைமுறை மக்களை அறிவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டுத் திறனிலும், சீரிய பண்பாட்டு உணர்விலும்சிறந்தவர்களாக உருவாக்கிடும் திருப்பணியில் வாழ்நாள் முழுதும் தொண்டுகளாற்றிடு
ம் பெருமைக்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தப
்படுகிறது.
ஆசிரியர்சமுதாயம் மகிழும் வகையில், “நல்லாசிரியர்விருது” என வழங்கப்பட்ட அந்தவிருதின் பெயரை, 1997இல், “டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் விருது” எனப் பெயர்மாற்றம் செய்து வழங்கிட வகைசெய்தது தி.மு.க. அரசு!
அத்துடன், ஆசிரியப் பெருமக்களின் நல்வாழ்வு கருதி உயர்கல்விக்கு ஊக்கஊதியம்; ஈட்டிய விடுப்பு நாட்களைச்சரண் செய்திடும் ஆசிரியர்களுக்கு அந்நாட்களுக்கான ஊதியம்; 10 ஆண்டுகள் பணி முடித்தால் தேர்வுநிலை ஊதியம்;
20 ஆண்டுகள்பணி முடித்தால் சிறப்பு நிலை ஊதியம்; தமிழாசிரியர்களிடையே இருநிலை நீக்கம்; தமிழாசிரியர்களின்‘புலவர்’ பட்டயம் ‘பி.லிட்’ பட்டமாகமாற்றம்; தமிழாசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு; ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு மத்தியஅரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்கள்; அகவிலைப்படிகள்; தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குப்பணிப் பாதுகாப்பு; நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களாக்கியது; பதிவுமூப்பு அடிப்படையிலேயே பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்தது; தொகுப்பூதியஆசிரியர் நியமன முறையை அடியோடுரத்து செய்தது என எண்ணற்றசலுகைகளை ஆசிரியர்களுக்கு வழங்கியது தி.மு.க. அரசு!
இவைமட்டுமல்லாமல், 19 ஆண்டுகால தி.மு.க. ஆட்சிக் காலங்களில் நான்கு முறை ஊதியக்குழுக்களை அமைத்து; ஆசிரியர் சமுதாயமும், அரசு ஊழியர்களும் உயர்ந்தஊதியங்களைப் பெற்று மகிழ்ந்திடவும் ஆசிரியர்-அரசு ஊழியர் குடும்பங்களின்வாழ்க்கைத் தரம் உயர்ந்திடவும் வழிவகைசெய்ததும் தி.மு.க. அரசே என்பதனை இந்நாளில் நினைவுபடுத்திடவிரும்புகிறேன்.
ஓர் ஆசிரியருக்கு வேலை கொடுத்தால் அவர்குடும்பம் உயரும்; அவரைச் சுற்றியுள்ளஉறவினர்கள் மகிழ்வர்; அவர்கள் குடும்பத்தில் வறுமைவிரட்டப்படும்; சமுதாயம் முன்னேற்றம் காணும் என்ற அடிப்படையில்திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும்காலங்களில் எல்லாம் அதிக அளவில்ஆசிரியர் நியமனங்களைச் செய்துள்ளது.
ஆனால், ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் கழகஆட்சியில் அளிக்கப்பட்ட சலுகைகளையெல்லாம் பறித்ததுடன்; அந்தச் சலுகைகளைகளை மீண்டும்வழங்கிடக் கோரிப் போராடிய ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் நள்ளிரவு நேரத்திலும், பெண்கள் என்று பாராமலும், வீடு புகுந்து கைது செய்தும், ஏறத்தாழ1 லட்சத்து 71 ஆயிரம் ஆசிரியர்-அரசுஊழியர்களை வேலை நீக்கம் செய்தும்கொடுமை புரிந்தது இந்தியாவிலேயே அ.தி.மு.க. அரசு ஒன்றுதான்என்பதையும் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.
அத்துடன், அண்மைச் சில ஆண்டுகளாக, ‘தகுதித்தேர்வு’ என்ற ஒன்றைப் புகுத்தி, அதையும் ஆண்டுதோறும் நடத்திடாமல், ஆசிரியர் பயிற்சி பெற்ற பலர்வேலை கிடைக்காமல் ஏங்கித் தவிக்கும் நிலையைஇன்றைய அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆசிரியர் சமுதாயம் அடைந்திடும் இன்னல்களை எண்ணி வேதனைப்படாமல் இருந்திடமுடியவில்லை.

இந்நிலையில்ஆசிரியர் சமுதாயத்திற்கு எந்த நாளிலும் அரணாகவிளங்கிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்சார்பில் தமிழக ஆசிரியர் அனைவர்க்கும்எனது ‘ஆசிரியர் தின’ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துமகிழ்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக