யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/9/16

மக்கள் கொந்தளிச்சா.. கர்நாடக வாதத்தை தூக்கி குப்பையில் போட்ட சுப்ரீம் கோர்ட்


மக்கள் கொந்தளிச்சா.. கர்நாடக வாதத்தை தூக்கி குப்பையில் போட்ட
சுப்ரீம் கோர்ட்
டெல்லி: காவிரியில் தண்ணீர் திறக்குமாறு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடகாவில் கடந்த 9ம் தேதி வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடத்தப்பட்டது. சில விவசாயிகள் காவிரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.
.
போராட்டத்தின்போது தமிழக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சில போராட்டக்காரர்கள் உடலில் கத்தியால் கீறிக்கொண்டனர். இதையெல்லாம் காரணமாக காட்டி, மக்கள் கொந்தளிப்பதால் தண்ணீர் அளவை குறைக்க வேண்டும் என்று கர்நாடகா வாதம் முன் வைத்தது. இதைத்தான் செல்லாது.. செல்லாது என கூறிவிட்டது சுப்ரீம் கோர்ட்.

தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கடந்த 5-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, 6-ந் தேதி நள்ளிரவு முதல் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கர்நாடக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக், அரசு வழக்கறிஞர்கள் ரகுபதி, மோகன் கத்தார்கி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு உச்சநீதிமன்றத்தின் பதிவாளர் வீட்டுக்கு சென்று அவரிடம் ஒரு மனுவை அளித்தனர். உடனே விசாரிக்க கோரிக்கை அந்த மனுவில் 5-ந் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரும் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை உச்சநீதிமன்றம் உடனடியாக, ஞாயிற்றுக்கிழமை விசாரிக்க வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மீண்டும் வலியுறுத்தல் கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் நேற்று காலை பதிவாளரை சந்தித்து, திருத்தம் கோரும் மனுவை நேற்றே விசாரணைக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதுகுறித்து நேற்று மாலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இன்று விசாரணை இதன்படி திருத்தம் கோரும் கர்நாடகாவின் மனுவை இன்று காலை 10.30 மணி அளவில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் கர்நாடகா மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

நீதிபதிகள் கூறியது: மக்கள் கொந்தளிப்பான மனநிலையில் இருப்பதையெல்லாம் காரணமாக வைத்து காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா கூற முடியாது. இதெல்லாம் கோர்ட்டில் செல்லாது. உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல், சட்டம்-ஒழுங்கை தங்கள் கைகளில் எடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. இவ்வாறு நீதிபதிகள் சரமாரியாக கர்நாடகா தரப்பை கண்டித்தனர்.

காவிரியில் தண்ணீர் திறக்குமாறு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடகாவில் கடந்த 9ம் தேதி வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடத்தப்பட்டது. சில விவசாயிகள் காவிரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். போராட்டத்தின்போது தமிழக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சில போராட்டக்காரர்கள் உடலில் கத்தியால் கீறிக்கொண்டனர்.
இதையெல்லாம் காரணமாக காட்டி, மக்கள் கொந்தளிப்பதால் தண்ணீர் அளவை குறைக்க வேண்டும் என்று கர்நாடகா வாதம் முன் வைத்தது. இதைத்தான் செல்லாது.. செல்லாது என கூறிவிட்டது சுப்ரீம் கோர்ட்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக