சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மேயர் சைதை துரைசாமி பரிசு தொகைகளை வழங்கினார். இதுகுறித்து, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: 2016ம் ஆண்டு அரசு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகித அடிப்படையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய 1,063
மாணவர்களுக்கான ரொக்கப் பரிசுத் தொகை ரூ.15 லட்சத்து 59 ஆயிரமும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய 399 மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 லட்சத்து 78 ஆயிரத்மும், மொத்தம் 1,462 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.21 லட்சத்து 37 ஆயிரத்திற்கான பரிசுத்தொகையை மேயர் சைதை துரைசாமி வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 20 வருடம் விபத்து ஏற்படுத்தாமல் ஓட்டுநராக பணியாற்றிய, பணிபுரியும் ஓட்டுநருக்கு தலா 4 கிராம் வீதம் 27 ஓட்டுநர்களுக்கு 108 கிராம் தங்க நாணயங்ளையும் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக