யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/9/16

தேசிய தரவரிசை பட்டியல் தயாரிக்கப் பதிவு: கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: 2017-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலை தயாரிக்க, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் செப்டம்பர் 30-க்குள் பதிவு செய்யுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

  உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி, ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் "தேசிய உயர்கல்வி தரவரிசைத் திட்டம்' எனும் புதிய திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2015-இல் அறிமுகம் செய்தது.
 இதன்படி, பொறியியல், மேலாண்மைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருந்தாளுநர் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதில், சென்னை ஐஐடி முதலிடத்திலும், முதல் 50 ரேங்க்கில் தமிழகத்தைச் சேர்ந்த 11 பொறியியல் கல்வி நிறுவனங்களும் இருந்தன.
 இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடுவதற்கான நடைமுறைகளை தொடங்கப்பட்டுள்ளன. இதனால், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ), பல்கலை.  மானியக் குழு (யுஜிசி) ஆகியவற்றின் கீழ் வரும் அனைத்துக் கல்வி நிறுவனங்களும்  www.nirfindia.org  என்ற இணையதளத்தில் செப்டம்பர் 30-க்குள் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 இதுகுறித்து சென்னையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் வினைய் ஷீல் ஒப்ராய் கூறுகையில், "கடந்த முறை 3,650 கல்வி நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றன. இந்த முறை 10 ஆயிரத்துக்கும் கல்வி நிறுவனங்கள் பங்கேற்கலாம்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக