யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/12/16

ஆசிரியர்களுக்கான ஊதியத்தை ஏறத்தாழ இரு மடங்கு வரை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் !!

தில்லிஅரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கெளரவ ஆசிரியர்களுக்கான ஊதியத்தைஏறத்தாழ இரு மடங்கு வரைஉயர்த்த அமைச்சரவை
ஒப்புதல் தெரிவித்துள்ளது.

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் தில்லி தலைமைச்செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய
முடிவுகள்குறித்து முதல்வர் கேஜரிவால் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் கெளரவ ஆசிரியர்களின் ஊதியத்தைஉயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

தற்போதுவரை கெளரவ ஆசிரியர்களுக்கு தினக்கூலிஅடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அவர்கள் விடுப்பு எடுக்கும்நாளில் ஊதியம் பெறாத நிலைஇருந்து வந்தது. இனி கெளரவஆசிரியர்களின் ஊதியம் மாதவாரியாக கணக்கிட்டுவழங்கப்படும். இதன்படி, மாதம் சுமார் ரூ.17,500 வரை ஊதியம் பெற்று வந்தகௌரவ ஆசிரியர், மாற்றியமைக்கப்பட்ட ஊதிய நிர்ணயத்தின்படி இனிமாதம் சுமார் ரூ.32,200 முதல்ரூ.34,100 வரை பெறுவர். மத்தியஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) முடித்தவர்கள், தேர்வு முடிக்காதவர்கள் எனஇரு வகைகளாக இருக்கும் கௌரவஆசிரியர்கள் தொடக்கப்பள்ளி உதவி ஆசிரியர், டிஜிடி(பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்), பிஜிடி (முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்), சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்குஇந்த ஊதிய உயர்வு பொருந்தும். மாற்றியமைக்கப்பட்ட சிடிஇடி ஆசிரியர்களின் புதியமாத ஊதிய விவரம் வருமாறு(அடைப்புக்குறியில் தினப்படி, பழைய மாத ஊதியம்): உதவி ஆசிரியர் - ரூ.32,200 (ரூ.700, ரூ.17,500); டிஜிடிஆசிரியர் - ரூ.33,120 (ரூ.800,ரூ.20,000); பிஜிடிஆசிரியர் - ரூ.34,100 (ரூ.900, ரூ.22,500); சிறப்புக்கல்வி ஆசிரியர் - ரூ.33,120 (ரூ.800, ரூ.22,000). சிடிஇடிதேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் புதியஊதிய விவரம் வருமாறு: உதவிஆசிரியர் - ரூ.25,000 (ரூ.700, ரூ.17,500); டிஜிடிஆசிரியர் - ரூ.26,250 (ரூ.800, ரூ.20,000); பிறஆசிரியர்கள் (ஓவியம், உடற்பயிற்சி, நூலகர்) - ரூ.26,250 (ரூ.800, ரூ.20,000). இதுவரைகெளரவ ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு அளிக்கப்படவில்லை.


இந்த நிலையை மாற்றப்பட்டு இப்போதுஆண்டுக்கு எட்டு நாள்கள் தற்செயல்விடுப்பு (கேஷ்வல் லீவ்) அளிக்கப்படவுள்ளது. மத்திய அரசு 2011-ஆம் ஆண்டில் கொண்டுவந்த அனைவருக்கும் கல்விச் சட்டத்தில் மத்தியஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும்"சிடிஇடிட தேர்வை எழுதி தகுதிபெறுவது கட்டாயமாக்கப்பட்டது. இதற்காக 5 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்தஅவகாசம் கடந்த ஜூலையுடன்  நிறைவடைந்து விட்டது. இவ்வாறு "சிடிஇடி' தேர்வை எழுதாமல் இரண்டாயிரம்கெளரவ ஆசிரியர்கள் தில்லியில் உள்ளனர். சட்டப்படி இதுபோன்ற ஆசிரியர்களைப் பணியில் இருந்து நீக்கவேண்டும். ஆனால், இந்த கௌரவஆசிரியர்கள், "சிடிஇடி' தேர்வை எழுத இருவாய்ப்புகளை வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. இரு வாய்ப்புகளுக்குள் "சிடிஇடி' தேர்வில் வெற்றி பெறாவிட்டால், அவர்களைபணியில் இருந்து விலக்குவதைத் தவிரவேறு வழி இல்லை என்றார்கேஜரிவால். பேட்டியின் போது துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ்சிசோடியா உடனிருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக