ஜிப்மர் மருத்துவ கல்லூரி முதுநிலை படிப்பு நுழைவுத்தேர்வு
ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், மருத்துவ முதுநிலை படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, 69 மையங்களில், இன்று நடக்கிறது. காலையில், எம்.டி., - எம்.எஸ்., படிப்புகளுக்கு தேர்வுகள் நடக்கின்றன. இந்தியாவில், 17 நகரங்களில் அமைந்துள்ள, 69 தேர்வு மையங்களில், தேர்வு நடக்கிறது. புதுச்சேரியில், 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாலையில் நடக்கும் டி.எம்., - எம்.சி.எச்., தேர்வுகள், 9 நகரங்களில், 9 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வுக்கு புதுச்சேரியில் ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவம் எம்.டி., - எம்.எஸ்., தேர்வுகளுக்கு 26,869 நபர்களும்; டி.எம்., - எம்.சி.எச்., தேர்வுக்கு, 2,287 நபர்களும் விண்ணப்பித்து உள்ளனர். ஜிப்மரில் எம்.டி., - எம்.எஸ்., பிரிவுகளில், 102 இடங்களும், டி.எம்., - எம்.சி.எச்., பிரிவில், 18 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இரண்டு தேர்வுகளின் முடிவுகள் வரும், 18ம் தேதி வெயிடப்படும். கலந்தாய்வுகள் டிசம்பர் மாதம், 21 மற்றும் 28ம் தேதி நடக்கிறது. வகுப்புகள் ஜனவரி மாதம், 2ம் தேதி தொடங்குகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக