யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/12/16

RTI பதில் - CPS ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர் குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதி

CPS எனப்படும்புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர்குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும்தேதியை பற்றியும்,
எத்தனை பக்க அறிக்கைதயார் செய்துள்ளது, சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை பற்றிய தகவல்கள் (நிதித்துறையின்) இப்பிரிவில் இல்லையென பதில் வழங்கப்பட்டுள்ளது.அதன்விவரம் பின்வருமாறு

தருமபுரிமாவட்டத்தை சேர்ந்த திரு.ஜெயப்பிரகாஷ்என்பவர் தமிழக அரசு
ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள CPS எனப்படும்புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர்குழுவின்  செயல்பாடுகளின்விவரம் பற்றி தமிழக அரசின்  நிதித்துறைக்கு 12.09.2016 நாளிட்ட மனுவில் வரிசைஎண் 1 முதல் 9 வரையான தகவல்களைகோரி   RTI 2005இன்  கீழ்கடிதம் அனுப்பினார். நிதித் துறையின் கடிதஎண்.50725/       நிதி(PGC-1)/2016 நாள்:30.09.2016. என்ற கடிததத்தில் RTI 2005இன் 2f விதியை காரணம்காட்டியும் நடைமுறையிலுள்ள கோப்புகளை பற்றி தகவல் வழங்கஇயலாது என பதில் வழங்கிஉள்ளது. (இத்த‌கவல் ஏற்கனவேநமது இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.)

    இக்குழு    பணிகளை     பதிவு       செய்யும்          போதுIncluding records, Documents, Memos, Opinions, Advices, Circulars, Orders, Reports, Papers, Samples,என்றபெயர்களின் எதேனும் ஒரு வகையில்தான், அக்குழு பதிவு செய்வதுமற்றும் தயார் செய்யும் கருத்துகள்ஆவணங்களாகஅடங்கும் என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்கிறேன். மேலே கூறியுள்ள பெயருடையஆவணங்கள் அனைத்தும் & அவற்றோடு தொடர்புடைய தகவல்களையும் RTI 2f விதியின் கீழ் வழங்கலாம் எனஇந்திய அரசின் சட்டத் துறையால், மத்திய அரசின் கெஜட்டில் 21.06.2005 அன்று வெளியிட்ட, 23 பக்கங்களை கொண்ட RTI 2005இன் விதிமுறைகள் அடங்கியதொகுப்பின் 2வது பக்கத்தில் கூறியுள்ளது.அந்த பக்கத்தின் நகலைதங்களுக்கு (நிதித் துறை) இணைத்துள்ளேன். மேலும் இத்தொகுப்பில் நடைமுறையிலுள்ள கோப்புகளை பற்றிய தகவலை வழங்ககூடாது என எந்த ஒருபக்கத்திலும் இல்லை.  அக்குழுஇன்று வரை தயார் செய்துள்ளஅறிக்கையின் பக்கங்களின் எண்ணிக்கையை தான் கேட்டுள்ளேன்.

நான் கேட்டுள்ள தகவல்கள் அனைத்தும் RTI 2005 2f இன் படி வழங்ககூடியதாகவே உள்ளது என்பதை தெரிவிக்கிறேன். என்று நிதித் துறைக்கு 25.10.2016 நாளிட்ட  மனுவில்மேல்முறையீடு செய்துள்ளார்.

அம்மேல்முறையீட்டுகடிதத்திற்கு நிதித் துறையின் கடிதஎண்.59145/நிதி (PGC-1)/2016 நாள்:30.11.2016. என்ற கடிதத்தில் இவ்வல்லுநர்குழு இன்று வரை தங்களுக்குள்ளாகவேதலைவர், உறுப்பினர்களுடன் 3 ஆலோசனை கூட்டமும், அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்திடம்3 கருத்து கேட்பு கூட்டமும், அதில்33 அரசு ஊழியர்கள் சங்கங்களும், 23ஆசிரியர்கள் சங்கங்களும் கலந்து கொண்டது என்றும், CPSயை இரத்து செய்ய வலியுறுத்தி

3097 மனுக்கள்வந்துள்ளது. என்று பதில் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக