யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/3/17

10-ம் வகுப்பு தேர்வு எழுத கூடுதல் நேரம் கோரியமாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்ததில் உள்நோக்கம் இல்லை: தருமபுரி மாவட்ட ஆட்சியர் விளக்கம்.

தருமபுரியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவி ஒருவர் மாவட்ட ஆட்சியர் மீது புகார் அளித் துள்ள நிலையில், ‘சம்பந்தப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோத னைக்கு அழைத்ததில் உள்நோக்கம் எதுவும் இல்லை’ என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி. இவரது மகள், தருமபுரியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பொதுத் தேர்வை அவர் எழுதி வருகிறார். இந்நிலையில், ‘தேர்வை சரிவர எழுத முடியாதபடி மாவட்ட ஆட்சியர் தனக்கு சிரமம் தருகிறார். இதற்குத் தீர்வு ஏற்படுத்த வேண்டும்’ என இந்த மாணவி தருமபுரி ‘சைல்டு லைன்’ அமைப்பிடம் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார்.இதுகுறித்து மாணவி கூறிய தாவது: பிறவியிலேயே எனக்கு வலது கை நரம்பில் பாதிப்பு இருந்ததால் இடது கையில் எழுத பழகிக் கொண்டேன். இருப்பினும் இடது கையால் மற்றவர்களைப்போல வேகமாக எழுத இயலாத தால், பொதுத் தேர்வின் போது ஒரு மணி நேரம் கூடுதல் நேர அவகாசம் வேண்டுமென முறைப்படி மருத்துவ சான்றுகளுடன் விண்ணப்பித்தேன்.இதையடுத்து அரசு தேர்வுகளுக்கான வேலூர் மண்டல இணை இயக்குநர் மூலம் எனக்கு தேர்வு எழுத 1 மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. கடந்த 23-ம் தேதி இரவு 8 மணிக்கு எனக்கு மருத்துவக் கல்லூரி மூலம் ஒரு சம்மன் அனுப்பப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலான மருத்துவ பரிசோதனைக்கு 24-ம் தேதி மருத்துவக் குழு முன்பு ஆஜராக வேண்டுமென அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேர்வு நேரம் என்பதால் என்னால் ஆஜராக முடியவில்லை. மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள் ளேன். ஆட்சியரின் உத்தரவு எனக் கூறி சிலர் தரும் சிரமங்களால் என்னால் நிம்மதியாக தேர்வு எழுத முடியவில்லை’ என கூறியுள்ளார்.இதுகுறித்து மாணவியின் தாயார் மகேஸ்வரி கூறும்போது, ‘எனது மகளுக்கு தேர்வு சமயத்தில் தேவையற்ற நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால், தேர்வில் அவரால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை. என் மகள் என்பதற்காக இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்றும் தெரியவில்லை’ என்றார்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விவேகானந்தனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தேர்வை கண்காணிக்கும் பறக்கும் படையின ருக்கு அந்த மாணவியின் எழுதும் திறனில்சில சந்தேகங்கள் ஏற்பட்டுள் ளன. அவரது கை பாதிப்பின் அளவு குறித்து சந்தேகம் நிலவுவதாக பறக்கும் படை குழுவினர் கோட் டாட்சியர் கவனத்துக்கு கொண்டு வந்தனர். அவர் மூலமாக இந்த தகவல் எனக்கு தெரியவந்தது.

தருமபுரி மாவட்டத்தில் விதிமுறை களுக்கு உட்பட்டு தேர்வை நடத்து வதோடு, முறைகேடுகள் எதுவும் பதிவாகிவிடாதபடி பொதுத் தேர்வை நடத்த வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை.அந்த வகையில் இந்த மாணவி விவகாரம் தொடர்பாக அரசு தேர்வு கள் துறை இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதேபோல, சம்பந்தப்பட்ட மாணவியின் மாற்றுத் திறன் சதவீதம் குறித்து ஆய்வு செய்து மருத்துவ அறிக்கை அளிக் கும்படி தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வருக்கும் உத்தரவிடப்பட் டது. மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தேர்வு நேரத்திலேயே சோதனைக்கு ஆஜராகும்படி கூறி சிரமப்படுத்தி விட்டதா என தெரியவில்லை.அதேநேரம், அந்த மாணவி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவல ரின்மகள் என்பது இறுதியில்தான் எனக்கு தெரியும்.

தேர்வுகள் தொடர் பான வழக்கமான நடவடிக்கை கள்தான் இந்த விவகாரத்தில் மேற் கொள்ளப்பட்டதே தவிர, இதற்கு வேறு உள்நோக்கம் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.கடந்த 23-ம் தேதி இரவு எனக்கு மருத்துவக் கல்லூரி மூலம் ஒரு சம்மன் அனுப்பப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலான மருத்துவ பரிசோதனைக்கு 24-ம் தேதி மருத்துவக் குழு முன்பு ஆஜராக வேண்டுமென அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக