யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/3/17

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு குழப்பம் இல்லை என்றும் தேர்வுக்கு தயாராக போதிய அவகாசரம் தரப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவதில் எந்த குழப்பமும் இல்லை.. பதில்
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு, தேர்வு நடத்துவதில் அவசரமோ,
குழப்பமோ இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்..
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், வேலையில்லா திண்டாட்டம் இளைஞர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிற நேரத்தில் மூன்று வருடங்களாக 'ஆசிரியர் தகுதித் தேர்வை' நடத்தாத அதிமுக அரசு, இப்போது அவசர அவசரமாக 2017ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது.'

கட்டாய கல்வியுரிமைச் சட்டத்தின்கீழ் நடத்தப்படும் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வருகிற ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கால அட்டவணையை வெளியிட்டிருக்கிற இந்த நேரத்தில், ஆசிரியர் கல்வி பயின்றவர்கள் எல்லாம் ஏகப்பட்ட குழப்பத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுஒருபுறமிருக்க, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அச்சடிக்கப்பட்ட 15 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் பிழை ஏற்பட்டு, அதற்குப் பதிலாக இப்போது புதிய விண்ணப்பங்கள் அச்சடிக்கப்படுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவதில் அவசரமோ, குழப்பமோ இல்லை என்று மு.க.ஸ்டாலினுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராவதற்காக போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், படித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பவர்களின் நலனை கருத்தில்கொண்டே, தற்போதைய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


மேலும், நீதிமன்ற ஆணையின்படியே தேர்வுக்கான தேதி ஏப். 29, 30 என அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக