தமிழகத்தில் விடுபட்ட 12 லட்சம் குழந்தைகள் மற்றும் சிறுவர் களுக்கு 4 நாட்களில் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி போடப்படும் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
தமிழகத்தில் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி முகாம் முடிவடைந்தது. விடுபட்டவர் களுக்கு வரும் 31-ம் தேதி வரை தடுப்பூசி போடப்படும். இதுவரை 1 கோடியே 64 லட்சம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இன்னும் 4 நாட்களில் விடுபட்ட 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிடும். அதன்பின் தேசிய தடுப்பூசி திட்டத்தில் உள்ள தட்டம்மை தடுப்பூசி நீக்கப்பட்டு, தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி சேர்க்கப்படும். 9 மாதம் முதல் 12 மாதம் மற்றும் 16 மாதம் முதல் 24 மாதம் என இருகட்டங்களாக குழந்தைகளுக்கு தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி போடப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக