யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/3/17

கலெக்டர் - சி.இ.ஓ., மோதல் : பரபரப்பு பின்னணி அம்பலம்

தர்மபுரி: ''என் மகள் தேர்வு எழுதிய போது, அவருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்திய கலெக்டர் விவேகானந்தன் மீது, மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்துள்ளேன்,'' என, சி.இ.ஓ., மகேஸ்வரி கூறினார்.
தர்மபுரி மாவட்ட, முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரியின்மகள் சங்கமப்பிரியா, இலக்கியம்பட்டி அரசு மகளிர் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார்; அதே பள்ளியில், 8ம் தேதி பொதுத்தேர்வு எழுதினார். அப்போது, தேர்வு மையத்துக்கு வந்த வருவாய் துறையினர், அவரை புகைப்படம்எடுத்ததாகவும், தொடர்ந்து, 23ம் தேதி தர்மபுரி மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வரும்படி, சம்மன் அனுப்பியதாகவும் கூறினார். மேலும், தன் தாய், சி.இ.ஓ., மகேஸ்வரி மீது உள்ள வஞ்சத்தால், தன்னை கலெக்டர் பழி வாங்குவதாகவும், குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து, சி.இ.ஓ., மகேஸ்வரி கூறியதாவது: தர்மபுரி மாவட்ட சி.இ.ஓ.,வான நான், மாவட்ட தேர்வு அதிகாரியாகவும்உள்ளேன். சங்கமப்பிரியா மீது ஏற்பட்டுள்ள சந்தேகம் குறித்து, கலெக்டர் விவேகானந்தன் என்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை. இதை, துறை ரீதியாக அணுக உள்ளேன். சங்கமப்பிரியாவின் பெற்றோர் என்ற முறையில், கலெக்டர் விவேகானந்தன் மீது, மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளேன், என்றார்கல்வி துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கடந்த, 2015- 16ல், மெல்ல கற்கும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த, மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியில், தர்மபுரி மாவட்டத்துக்கு, 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்தாண்டு வழங்கிய நிதியை, கலெக்டர்விவேகானந்தன் இதுவரை வழங்கவில்லை.இந்நிலையில், 2016 - 17ம் ஆண்டுக்கும், 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், இந்த பணியின் செயல்பாடுகள்குறித்து, வீடியோ எடுத்த வகையில், 15 லட்சம் ரூபாயை வீடியோ கிராபருக்கு வழங்க, சி.இ.ஓ., மகேஸ்வரி கையெழுத்திடும்படி, கலெக்டர் விவேகானந்தன் பரிந்துரை செய்துள்ளார்.ஆனால், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை இதுவரை வழங்காததால், மகேஸ்வரி கையெழுத்து இட மறுத்து விட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த கலெக்டர் விவேகானந்தன், சி.இ.ஓ.,வை பழிவாங்க, சங்கமப்பிரியா மீதுநடவடிக்கை எடுத்துள்ளார். இதுதான் மோதலுக்கான காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலெக்டர் விவேகானந்தனை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவரது உதவியாளர், 'இது தொடர்பாக, கலெக்டர் நேற்றே நிருபர்களை சந்தித்து விட்டார். தற்போது, மீட்டிங்கில் உள்ளதால், அவரை தொடர்பு கொள்ள முடியாது' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக