யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/3/17

உயர் நீதிமன்ற உத்தரவின்படியே ஏப்ரல் இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

சென்னை உயர் நீதிமன்ற உத்தர வின் படிதான் ஏப்ரல் இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்குப் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு அவசர அவசரமாக நடத்தப்படுவதாகவும், தேர்வு நடத்துவதில் குழப்பம் உள்ளதாகவும், கடந்த 3 ஆண்டு களாக தகுதித்தேர்வு நடத்தப்பட வில்லை என்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளி யிட்டுள்ளார். தகுதித் தேர்வு தேர்ச் சிக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் கடந்த 3 ஆண்டுகளாக தகுதித்தேர்வு நடத்த இயல வில்லை.தமிழக அரசு எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. இன்னொரு வழக்கில் சென்னை உயர் நீதி்மன்றம், ஏப்ரல் மாதத்துக்குள் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று ஆணை வழங்கியது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கான அறிவிப்பு கடந்த பிப்வரி 24-ம் தேதி வெளியிடப்பட்டது. ஜுன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் காலி யிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட தேதி களில் தகுதித் தேர்வு நடத்தப்படுகி றது. இத்தேர்வுக்காக 10 லட்சம் இளைஞர்கள் தீவிரமாக படித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை குழப்பும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் இதுபோன்று அறிக்கை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக