யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/4/17

இசை பள்ளிகள் கல்லூரிகளுடன் இணைக்கப்படுமா : பல்கலை சான்றிதழ் எதிர்பார்க்கும் மாணவர்கள்

தமிழகத்தில் இசை பள்ளிகள் கல்லுாரிகளுடன் இணைக்கப்பட்டு, பல்கலை சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்,' என இசை ஆசிரியர்கள், மாணவர்கள் வலியுறுத்தினர்.

எல்லோரும் இசை கலையை கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நெல்லை, சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம் உட்பட 17 மாவட்டங்களில் இசை பள்ளிகள், மதுரை, திருவையாறு, கோவை, சென்னை ஆகிய நான்கு இடங்களில் இசை கல்லுாரிகள் செயல்படுகின்றன. பள்ளிகளில், குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், வயலின் உட்பட சான்றிதழ் படிப்புகளும், கல்லுாரிகளில் குரலிசை, தவில், வயலின், மிருதங்கம், நாதஸ்வரம் உட்பட டிப்ளமோ சான்றிதழ்களாகவும் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் சேர பள்ளி, கல்லுாரிகளில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி தகுதி இருந்த நிலையில், கல்லுாரிக்கு மட்டும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி என இந்தாண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டிற்கு நுாற்றுக்கும் மேற்பட்டோர் பட்டம் பெறுகின்றனர். இதன் மூலம் கோயில் அர்ச்சகர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் மற்றும் வெளிநாடுகளில் இசை இன்ஸ்டிடியூட்களில் பணி வாய்ப்பு கிடைக்கின்றன. இசை ஆசிரியர்கள் தேவை, வெளிநாடுகளில் அதிகம் உள்ளன.

ஒரே வகை பாடத்திட்டம்: இசை மற்றும் கல்லுாரி சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்பிற்கான பாடத்திட்டங்கள், ஒரே மாதிரியாக உள்ளன. பள்ளியில் வழங்கும் சான்றிதழில் எந்த உயர் அலுவலரின் கையொப்பமும் இல்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தாலும், இசையில் உயர்நிலை படித்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றன. பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களின் சம்பள விகிதத்திலும் அதிகம் மாற்றம் இல்லை. இதனால் இசைப் பள்ளிகளை, கல்லுாரிகளுடன் இணைத்து, தமிழ்நாடு அரசு கவின்கலை மற்றும் இசை பல்கலையின் உறுப்புக் கல்லுாரிகளாக இவற்றை மாற்றம் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இசை ஆசிரியர்கள், மாணவர்கள் கூறியதாவது: இசை பள்ளிகள் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., கல்லுாரிகள் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது என்பது தான் இரண்டிற்குமான வித்தியாசம். பாடத்திட்டங்கள், ஆசிரியர் சம்பள விகிதம் உட்பட பெரிய மாற்றம் ஏதும் இல்லை. இதனால் பள்ளிகள், கல்லுாரிகளுடன் இணைக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு கவின் கலை மற்றும் இசை பல்கலையின் கீழ் செயல்பட்டால் இப்படிப்புகளுக்கு இன்னும் மவுசு அதிகரிக்கும். சாதாரண சான்றிதழுக்கு பதில், பல்கலை அளவிலான சான்றிதழ் வழங்கப்படும்பட்சத்தில், இப்படிப்பிற்கான எதிர்காலம் இன்னும் சிறப்பாக இருக்கும்.

வெளிநாடுகளில் மதிப்பு அதிகரிக்கும். இப்பள்ளி, கல்லுாரிகள் கலை பண்பாட்டுத்துறை உதவி, துணை இயக்குனர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இவர்களுக்கு, இசை அறிவு என்பதை கூடுதல் தகுதியாக்க வேண்டும். தமிழக அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுத்தால் இசை படிப்புகளுக்கான எதிர்காலம் சிறக்கும், என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக