ஜியோ நிறுவனம் வழங்குவதாக அறிவித்துள்ள 3 மாத 'சம்மர் சர்ப்ரைஸ்' சிறப்பு சலுகை திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது.
ஜியோ நிறுவனம், குறைந்தபட்சம் ரூ.303 ரீசார்ஜ் செய்யும் அதன் வாடிக்கையாளர்களுக்கு 3 மாதங்களுக்கு வரையறையில்லா டேட்டா மற்றும் இலவச அழைப்புகளை வழங்குவதாக அறிவித்தது. ஜியோவின் இந்த திட்டத்துக்கு இதர தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்தியில்
எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், டிராய் அமைப்பு அந்த சிறப்பு சலுகை திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று ஜியோ நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
டிராயின் இந்த முடிவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ள முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம், டிராய் அறிவுறுத்தலின்படி செயல்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தில் இதுவரை சேர்ந்தவர்களுக்கு 3 மாத சிறப்பு சலுகை திட்டம் பொருந்தும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக