உலகில் மனிதர்களின் மோசமான உடல்நிலை மற்றும் இயலாமைக்கு முக்கியக் காரணமாக மன அழுத்தம் திகழ்கிறது என உலகச் சுகாதார அமைப்பு (WHO)
நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகசுகாதார அமைப்பான ‘கூ’ தெரிவித்துள்ள புள்ளிவரங்கள்படி உலகில் 30 கோடி மக்கள் மனத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
இதற்கு முன் உலக நாடுகளில் சுவாச பிரச்சினைதான் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. ஆனால், தற்போது மனஅழுத்தம் மிகப் பெரிய பிரச்சினை யாக உலக மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘கூ’ தெரிவித்துள்ள புள்ளிவிவரப்படி, 2006ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு களுக்கு இடையிலேயான 10 ஆண்டு கால ஆய்வின்படி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
மேலும், மனஅழுத்தத்திற்கு உரிய சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், இந்த மன அழுத்த நோய் உலகின் பொருளாதாரத்தை பாதிக்கும் சக்தி கொண்டது என்றும் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து WHO இயக்குனர் ஜெனரல் டாக்டர் மார்கரெட் சான் உலக நாடுகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,
“எல்லா நாடுகளும், மன ஆரோக்கியம் குறித்த, தங்களது அணுகுமுறைகளை மறு பரிசீலனை செய்து மன அழுத்தம் நோய்க்கு உரிய அவசரகால நடவடிக்கைகளை எடுக்க இந்தப் புதிய புள்ளி விவரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறியுள்ளது.
WHO வைச் சேர்ந்த டாக்டர் ஸ்கேகர் சக்சேனா, WHO வின் ” வாங்க பேசலாம்” பிரச்சாரம் அறிமுக நிகழ்ச்சியில் பேசும்போது, இந்த பிரச்சினை, ஒருவர் மன அழுத்தத்தில் இருப்பதை புரிந்துகொள்ள முடியாததே என்றும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் ஏற்படும் சிரமத்திற்கு காரணம் என்று கூறினார்.
மேலும், ” மன அழுத்தத்தில் இருப்பவர் தமக்கு நம்பிக்கையான ஒரு நபரிடம் மனம் திறந்து பேசுவதே , அவருக்கு மன அழுத்தத்திற்கான சிகிச்சை அளிப்பதற்கான முதல் படி” என்றும் கூறினார்.
இந்தமனஅழுத்தம் குறித்து ஆராய்ச்சி செய்துவந்த விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, உயர் வருமான முள்ள நாடுகளில் கூட மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில்ர 50சதவிகிதத்தினர்கூட உரிய சிகிச்சை பெறுவதில்லை, அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளும் பயனற்று போய்விடு கின்றன என்றும் கூறி உள்ளனர்.
மேலும், ஒவ்வொரு நாடும் தனது சுகாதார பட்ஜெட்டில் மன அழுத்த நோய்க்கு 3 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்றும், குறைந்த வருமானமுள்ள நாடுகளில் இது 1 சதவிகித மாக வும், இங்கிலாந்தின் உட்பட பல உயர் வருமான நாடுகளில் சுமார் 5% ஆக உள்ளது.
இந்தமனஅழுத்த நோய் காரணமாக உடலில் பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும், இதன் காரணமாக நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற ஆபத்தான நோய்களின் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று கூறி உள்ளது.
ஆகவேஸ்டிரெஸ் எனப்படும் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட புன்னகை எனப்படும் மகிழ்ச்சியே மிகச்சிறந்த மருந்து.
நாம்சிரிக்கும்போது நமது உடல்களில் உள்ள நரம்புகளில் அதிர்வுகள் ஏற்பட்டு. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஏற்படுவதாக க்டர் கூப்பர் ஆய்ந்து கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக