யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/7/17

தொடக்கப் பள்ளியில் குறையும் மாணவர் சேர்க்கை!

அரசுதொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால், பல பள்ளிகளில் சில மாணவர்களே படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வித் துறை உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு.

ஊத்தங்கரை ஒன்றியத்தில் 99 அரசுத் தொடக்கப் பள்ளிகள், 30 அரசு நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 129 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் உருது பள்ளியும் ஒன்று. இவற்றில் 7,532 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த கல்வியாண்டின் மாணவர் எண்ணிக்கை 8121. இந்த ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வெளியே செல்லும் மாணவர்களைவிட புதியதாகச் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. சில பள்ளிகளில் ஒற்றை இலக்க அளவிலேயே மாணவர் எண்ணிக்கை உள்ளது.

ஒற்றை இலக்க மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் நிறைய... ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் கொல்லநாய்க்கனூரில் 3 பேரும், கதிரம்பட்டியில் 4 பேரும், கே.பனமரத்துப்பட்டியில் 5 பேரும், சின்னஆனந்துசிரில் 7 பேரும், இலக்கம்பட்டி யில் 7 பேரும், நாகனூர் 7 பேரும், மண்ணாண்டியூரில் 8 பேரும், கோழிநாய்க்கம்பட்டியில் 9 பேரும், கோணப்பட்டியில் 9 பேரும் பயின்று வருகின்றனர்.
10 முதல் 20 வரை மாணவர்கள் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 16.
.
100-க்கும் மேல் மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்ட நாய்க்கனூர், பாவக்கல், காரப்பட்டு, பா. எட்டிப்பட்டி, கோவிந்தாபுரம், சென்னப்பநாய்க்கனூர், கல்லாவி, ஆண்டியூர், கதவணி, கேத்துநாய்க்கன்பட்டி, சின்னதகரப்பட்டி, புளியானூர், முசிலிக்கொட்டாய், காட்டனூர், வெப்பாலம்பட்டி, கொட்டாரப்பட்டி, ரெட்டிபடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள பல்வேறு பள்ளிகளும் அடக்கம்.
அதிகஎண்ணிக்கையில் படிக்கும் மாணவர்கள் சில பள்ளிகளில்தான்... மிட்டப்பள்ளியில் உள்ளபள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 257. இதுதான் ஊத்தங்கரை ஒன்றியத்தில் அதிகமான மாணவர்களைக் கொண்ட பள்ளியாகத் திகழ்கிறது.
சிங்காரப்பேட்டையில் 252 பேரும் , ஊத்தங்கரை 238 பேரும், பெரியதள்ளப்பாடி 207 பேரும் பயின்று வருகின்றனர். ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கடந்த ஆண்டில் 256 குழந்தைகள் படித்தனர். இதில் 5ஆ ம் வகுப்பு முடித்து 56 பேர் வெளியேறினர். புதியதாக 38 பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலவசகல்வி, உதவிகள் வழங்கியும்... அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு சீருடைகள், காலணிகள், கல்வி உபகரணங்கள், புத்தகப் பை, மதிய உணவு, விசாலாமான வகுப்பறைகள், விளையாட்டு திடல், கணினி வழி கல்வி, செயல்முறை விளக்கப் பாடங்கள் அனைத்தும் வழங்குகிறது.
ஊத்தங்கரை ஒன்றியத்தில் 20 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியும் கற்பிக்கப்படுகிறது. இருப்பினும் அரசு பள்ளிகளில் ஆரம்ப கல்வியில் குழந்தைகள் சேர்க்கை என்பது குறைந்து வருவது கல்வியாளர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.
அரசுப் பள்ளிகளில் வசதிகள் இருந்தும், போதிய விழிப்புணர்வு இல்லாததும், தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் ஆங்கில வழி கல்வியில் படிப்பதை பெற்றோர் பெருமை கொள்வதும் காரணமாகவே சொல்லப்படுகிறது.
தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு திட்டத்தில் அரசே குழந்தைகளை சேர்ப்பது அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறையவும் வாய்ப்பாக இருக்கும் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
.
இந்தநிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கல்வித் துறையும், அரசும் போதுமான கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக