யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/7/17

அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் உயர் கல்வி படிக்க தடையில்லை

அரசுபள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள், உயர் கல்வி படிக்க தடையில்லை' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 2012 முதல், 16 ஆயிரத்து, 549
ஆசிரியர்கள், மாதம், 7,000 ரூபாய் சம்பளத்தில், பகுதி நேரமாக பணியாற்று கின்றனர்.
கணினி அறிவியல், ஓவியம், இசை, தோட்டக்கலை, தையல் என, பல சிறப்பு பாடங்களுக்கு, இந்த ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இவர்கள் பணி நிரந்தரம் கோரி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், நிரந்தரம் செய்ய வாய்ப்பே இல்லை என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்கள் சிலர், 'பணியில் இருந்து கொண்டே, உயர் கல்வி படிக்கலாமா; அதற்கு அனுமதி உண்டா' என, பள்ளிக் கல்வித்துறைக்கு மனு அனுப்பி பதில் கேட்டனர்.

அதற்கு, 'உயர்கல்வி படிக்க, பகுதி நேர ஆசிரியர்களுக்கு எந்த தடையும் இல்லை' என, அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.சேலம் மாவட்ட ஆசிரியர் ஒருவர் கேட்ட தகவலுக்கு, மாநில திட்ட இயக்குனரகம் அளித்த பதிலில், 'உயர் கல்வி படிக்க, நிரந்தர பணியில் உள்ள ஆசிரியர்கள் மட்டுமே அனுமதி பெற வேண்டும். பகுதிநேர ஆசிரியர் பணி என்பது முற்றிலும் தற்காலிகமானது. எனவே, அவர்கள் விருப்பம் போல, உயர் கல்வி படிக்கலாம். அதற்கு தனியாக அனுமதி வாங்க வேண்டியதில்லை' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக