யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/8/17

ஊட்டியில் ப்ளாஸ்டிக் பை? ரூ.1000 அபராதம்!

நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை எடுத்து வந்தால் மாவட்ட எல்லைகளில் 
அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் தடுத்து நிறுத்தி, 1,000 ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உணவருந்திவிட்டு, பிளாஸ்டிக் பைகள், பொருட்களை ஆங்காங்கே வீசிவிடுகின்றனர். இதனால் ஊட்டி நகராட்சியில் குப்பைகள் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுவருகிறது.

இதனால் நீலகிரி மாவட்டத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதில் ஒரு கட்டமாக, கோவை - நீலகிரி எல்லையில், பர்லியார் சோதனைச் சாவடி பகுதியில் செயல்படும் சேகரிப்பு மையம் போன்ற மையங்கள் மாவட்டத்தின் அனைத்து எல்லைகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்தப் பகுதிகளில் ஏற்கனவே அமைந்துள்ள காவல், வனம் மற்றும் சுங்கச் சாவடிக்குச் சொந்தமான கட்டடங்களில் இந்த மையங்கள், இன்று (ஆகஸ்ட், 10) முதல் இயங்க உள்ளன.

சோதனைச் சாவடிகளில், வாகனங்கள் சோதனை செய்யப்படும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால், அவை பறிமுதல் செய்யப்படுவதுடன் குறைந்தபட்ச அபராதமாக, 1,000 ரூபாய் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இம்மாவட்டம் மலைப் பிரதேசம் என்பதால், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும், வளைவு மிகுந்த சாலைகளில், இரண்டாம் கியரைப் பயன்படுத்த வேண்டும். எரிவாயு சிலிண்டர்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஏப்ரல், மே மாதங்களான கோடை சீசனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திய சுற்றுலா பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.16 ஆயிரம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக