யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/11/17

பார் கவுன்சில் தேர்வு :1,025 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்!!!

பார் கவுன்சில் தேர்வு :1,025 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்!
அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் 
வழக்கறிஞர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,025 தமிழக வழக்கறிஞர்களை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நேற்று (நவம்பர் 8) இடைநீக்கம் செய்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜ்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வழக்கறிஞர்களாகப் பதிவு செய்பவர்கள் கண்டிப்பாக அகில இந்திய அளவில் நடைபெறும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2010ஆம் ஆண்டு அகில இந்திய பார் கவுன்சில் விதி 9 முதல் 11 வரை மற்றும் பகுதி 6, பிரிவு 6ன் கீழ் விதிகள் உருவாக்கப்பட்டன. அதன் அடிப்படையில் இதுவரை 10 தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. புதிதாக பதிவு செய்யும் வழக்கறிஞர்கள், 2 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2015 ஜூலை 3ஆம் தேதி அகில இந்திய பார் கவுன்சில் தேர்வில் குறிப்பிட்ட காலத்துக்குள் வெற்றி பெறாதவர்களை உடனடியாக பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் தகுதி தேர்வு தேர்ச்சி குறித்து ஆய்வு செய்தது. ஆனால், 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்த 1,025 பேர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.எனவே இவர்கள் அனைவரும் வழக்கறிஞர்களாக தொழில் செய்யக்கூடாது என இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை மீறி அவர்கள் நீதிமன்றங்களிலோ அல்லது தீர்ப்பாயங்களிலோ வழக்கறிஞர்களாக ஆஜராகினால் எவ்வித முன்னறிவிப்பின்றி நிரந்தரமாக அவர்களது வழக்கறிஞர் பதிவு நீக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 30% வழக்கறிஞர்கள் போலியான சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும். போலி வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இந்திய பார் கவுன்சில் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அனைத்து பார் கவுன்சில்களும் வழக்கறிஞர்களின் சான்றிதழ்களை வரும் டிசம்பர் மாதத்துக்குள் சரிபார்க்க வேண்டும். அதன்பிறகு தான் வாக்காளர் பட்டியல் தயார் செய்து பார் கவுன்சிலுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 50,000 வழக்கறிஞர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு தங்கள் சான்றிதழ்களை அனுப்பினர். சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காக 2 மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழுவை அகில இந்திய பார் கவுன்சில் அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக