யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/11/17

காற்று மாசு: உ.பி.யில் பள்ளிகளுக்கு விடுமுறை!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காற்று மாசுபாடு காரணமாக 
நாளை (நவம்பர் 10) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு நகரங்களிலும் காற்றின் தரக் குறியீடு அபாயகரமாக மாறியுள்ளது. இது குறித்துப் பேசிய அதிகாரிகள், நொய்டாவில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். காற்றின் தரக் குறியீடு மொரதாபாத்தில் 439, நொய்டாவில் 469, லக்னோவில் 430, ஆக்ராவில் 394, காஸியாபாத்தில் 372 என்ற அளவில் அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஆஸ்துமா, இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலை நடைப் பயிற்சியைத் தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியைப் போல நொய்டாவிலும் நாளை (நவம்பர் 10) எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் காற்று மாசு காரணமாக முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாததால் கடந்த 24 மணி நேரத்தில், உத்தரப் பிரதேசத்தில் 17 பேர் சாலை விபத்துகளில் பலியாகியுள்ளனர். நேற்று (நவம்பர் 8) ஆக்ரா – நொய்டா யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் ஒரே இடத்தில், 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளாயின.

டெல்லியில் கடந்த சில தினங்களாகப் பல்வேறு பகுதிகளில் உள்ள காற்று மாசு கண்காணிப்பு மையங்களில் காற்று தரக் குறியீடு கடுமையாக அதிகரித்துள்ளது (448). காற்று மாசுபாடு அளவு மிக மோசமான நிலையை எட்டிவிட்டதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்திய மருத்துவக் கவுன்சில் டெல்லியில் சுகாதார அவசர நிலையைப் பிறப்பிக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியது. இதனால், நவம்பர் 12 வரை வரை டெல்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

டெல்லி மட்டுமின்றி பஞ்சாப், ஹரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தான் பகுதிகளில் 25 மீட்டர் தொலைவில் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் 11ஆம் தேதி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக