சென்னை: ‘நிகர்நிலை பல்கலைகள் இனி, பல்கலை என்ற பெயரை, கட்டாயமாக பயன்படுத்தக் கூடாது’ என, பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.
தனியார் கல்லுாரிகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில், பல்கலைகளுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த கல்லுாரிகள் அனைத்தும், தங்கள் பெயருடன், ‘பல்கலை’ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றன. இது குறித்து, பல்வேறு புகார்கள் எழுந்ததால், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு: யு.ஜி.சி., விதிகளின்படி, தனியார் உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கு இணையான அந்தஸ்து பெற்று, தங்களை பல்கலைகளாக பிரபலப்படுத்துகின்றன. இது, விதிகளுக்கு முரணானது. எதிர்காலத்தில், அரசு நிறுவனங்களை தவிர, வேறு எந்த கல்லுாரியும் பல்கலை என, தங்களை பிரபலப்படுத்தக் கூடாது. பல்கலை என்ற பெயரை, உடனே நீக்க வேண்டும். இது குறித்து, டிச., 3க்குள், செயல்படுத்திய அறிக்கையை, யு.ஜி.சி., தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, அனைத்து மாநில உயர் கல்வித் துறைக்கும், பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., செயலர், பி.கே.தாகூர் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை: உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும், யு.ஜி.சி., விதிகளின்படி, எந்த தனியார் கல்வி நிறுவனமும், தங்கள் பெயருடன் பல்கலை என, கூறக்கூடாது. ஆனால், அடைப்புக் குறிக்குள், ‘பல்கலைக்கு இணையாக கருதப்படும்’ என்ற, வார்த்தையை பயன்படுத்தலாம். எதிர்காலத்தில், எந்த விதமான வார்த்தையை பயன்படுத்தலாம் என, நிகர்நிலை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள், யு.ஜி.சி.,க்கு கருத்து தெரிவிக்கலாம்.
அதன்பின், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஒருமித்த முடிவு எடுத்து, ஒரு வார்த்தையை அறிவிக்கும். பல்கலை என்ற வார்த்தையை நீக்கி, அதற் கான ஆதாரத்துடன், 26க்குள், யு.ஜி.சி.,க்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக