யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/11/17

சிவில் சர்வீசஸ் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு பரிசீலனை!!!

புதுடில்லி: சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகளில் மாற்றம் செய்ய பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக நடத்தப்படும், சிவில் சர்வீசஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என, பல படிநிலைகளில் வெற்றி பெறும் தேர்வாளர்களுக்கு, அதன் பின், பயிற்சி அளிக்கப்பட்டு, பணியமர்த்தப்படுகின்றனர்.
இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் மாற்றம் செய்யவும், தேர்வர்களின் வயது வரம்பில் மாற்றம் செய்யவும், பஸ்வான் கமிட்டி, ஆக., 2016ல், யு.பி.எஸ்.சி.,க்கு பரிந்துரைத்தது. இந்த அறிக்கையை ஆராய்ந்த, யு.பி.எஸ்.சி., மார்ச்சில், தன் தரப்பு பரிந்துரை அறிக்கையை, அரசுக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், பஸ்வான் கமிட்டி, யு.பி.எஸ்.சி., அறிக்கைகளின் அடிப்படையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகள் மற்றும் தேர்வர்களின் வயது வரம்பில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக