இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி வழக்கு : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்குமாறு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த இடைநிலை பணிமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் ெசய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
">ஆசிரியர் தகுதித் தேர்வு உத்தரவிற்குப் பிறகு கடந்த 2012 நவம்பர் 12ம் தேதி பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு தரப்படும் ஊதியத்திற்கும் 2009 ஜூன் 1ம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த இடை நிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்திற்கும் அதிக வித்தியாசம் உள்ளது.
இந்த முரண்பாடுகளை நீக்குமாறு தமிழக அரசுக்கு மனு கொடுத்தோம். எங்கள் மனு ஏற்கப்படவில்லை. எனவே, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களையுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் தருமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 2வது வாரத்திற்கு தள்ளிவைத்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக