யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/11/17

பொறியாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஆப்பிள்!

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் பொறியாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களாக 
இந்தியர்கள் பணிபுரிகின்றனர். ஆனால், சர்வதேச அளவில் மிக முக்கிய நிறுவனங்கள் சில இந்தியக் கல்லூரிகளுக்கு வந்து நேரடியாகப் பணிகளுக்கு இதுவரையில் ஆட்களைத் தேர்வு செய்ததில்லை.

உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான ஆப்பிள் இந்த நிலையை முதன்முறையாகத் திருத்தியமைக்கவுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி) மாணவர்களை நேர்முகத்தேர்வின் மூலம் ஆப்பிள் நிறுவனம் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஹைதராபாத் ஐஐடியின் வேலைவாய்ப்புப் பிரிவின் தலைவர் டி.வி.தேவி பிரசாத் ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “எந்தவிதமான பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் ஆட்களைத் தேர்வு செய்யப் போகிறது என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை. இது மாணவர்கள் தங்களது திறமைகளை மெய்ப்பிக்க உதவும்.

பணிகளுக்கான தேவையைப் பொறுத்தவரையில் வன்பொருள் பொறியாளர் பணிகளுக்கு இந்த ஆண்டு பல்வேறு நிறுவனங்களில் தேவை அதிகமாக உள்ளது. இன்டகிரேடட் சர்க்யூட், டிசைன் வெரிஃபிகேசன் போன்ற துறைகளில் திறமை உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. அதேபோல மொபைல் கம்யூனிகேஷனில் 2டி - 3டி கிராஃபிக்ஸ் சார்ந்த திறமை பெற்றவர்களுக்கும் சிறந்த வாய்ப்புகள் காத்திருக்கின்றன” என்றார்.

ஹைதராபாத் ஐஐடியில் டிசம்பரில் நடக்கவுள்ள வேலைவாய்ப்புத் தேர்வுக்கு அங்கு பயில்கின்ற பி.டெக்., எம்.டெக். மற்றும் எம்.எஸ்ஸி ஆராய்ச்சி மாணவர்கள் சுமார் 350 பேர் பதிவு செய்துள்ளனர். அதேபோல இந்த நேர்முகத் தேர்வில் ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி கூகுள், மைக்ரோசாஃப்ட், பிலிப்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக